நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

எங்க சமுதாயமும் பாலியல் அத்துமீறல்களும்

என்னதான் நான் எழுதக்கூடாது
பேசக்கூடாதென்று இருந்தாலும்
சுற்றுமுற்றும் நடக்கிற, கேள்விப்படுகிற விடயங்கள் என்னை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவிடுகுதில்லைஎனது வார்த்தைகள் சற்று காட்டமா எல்லைதாண்டினாலோ, ஆபாசமா இருந்தாலோ

மன்னித்துக்கொள்ளவும்.
நாற்பது ஐம்பது வயசை தாண்டின எங்க கிழட்டுச்சிங்கங்கள் சில..
தங்கள் நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக்கு அடிக்கடி எதோ ஒருகாரணத்தை தேடிக்கொண்டு போறது
அங்கு நண்பரின் மனைவியோ, தங்கையோ தனியே இருந்தால் சற்றே எல்லை தாண்டிய காமக்கதைகள், இரட்டை அர்த்த விசயங்களா பேசுவது.
நண்பர்கள், மனைவியின் நண்பிகள் வீடுகளுக்கு தேவையில்லாமல் தொலைபேசி எடுப்பது
நண்பன் பெண்டாட்டியோ, மனைவியின் நண்பியோ தொலை பேசியில் அகப்பட்டால் செக்ஸ் கதையளா பேசுவது
எதாவது விழாக்களுக்கோ, கொண்டாட்டங்களுக்கோ போனால் எதிர்த்தாப்போல இருக்கிற பெண்ணின் காலை தங்க காலால சொறியிறதென்று ரொம்பவும் மட்டமான காரியங்களா செய்யிறாங்க.
அந்தப்பெண்கள் பயத்தில எதிர்ப்பை தெரிவிக்கவில்லையென்றால் அவ எதோ தங்க பேச்சில மயங்கிட்டா என்று பெருமையா நினைச்சுக்கிறாங்க. அவங்களுக்கு தெரியவில்லை அந்தப்பெண்கள் பெரும்பாலும் தங்கள் நம்பிக்கையான நண்பிகள் நண்பர்கள்மட்டதில சோல்லி சொல்லி இவங்கள கழுவிக் கழுவி ஊத்திக்கொண்டுதானிருக்கிறாங்க என்பது.
பெண்களே உங்களுக்கும் இதுபோன்ற சம்பவம் இடம்பெற்றால் தயங்காதையுங்கோ பயப்படாதையுங்கோ உடனடியாகவே எதிர்ப்பை தெரிவியுங்கோ. பெரும்பாலும் அவங்க எதிர்பார்க்காத உங்க காட்டமான எதிர்க்குரலே அவங்கள அடக்கிவச்சிடும். அல்லது உங்கள் நம்பிக்கைக்குரியவங்களிடம் விடயத்தை சொல்லி ஆலோசனை கேளுங்கோ.
இதை படிக்கிறவங்களில எவனாவது இதுமாதிரி காரியங்களை செய்துகொண்டிருக்கிறியள் என்றால் உங்களுக்குத்தான் சொல்லுறன்
உங்க பெண்டாட்டி முன்புமாதிரி இப்ப உங்களுடன் சந்தோசமாக இருக்க மறுக்கிறாளா?
பாவம் உங்க பெண்டாட்டி உங்களை கட்டினநாள்முதல் அலுக்காமல் சலிக்காமல் மறுக்காமல் விரும்பியோ விரும்பாமலோ உங்கள் ஆசைக்கிணங்கி இரண்டோ மூன்றோ பிள்ளைகளப்பெத்து வளர்த்து குடும்பபொறுப்புகளை தலைமேல சுமந்து, உங்களுக்கு முன்னாடியே அவ உடலாலும் மனதாலும் சோர்ந்திருக்கலாம் அல்லது menopause எனப்படும் மாதவிடாய்ப்பிரச்சனையால் உடலியல் மற்றும் மனவியல்ரீதியாக சிரமப்பட்டுக்கொண்டிருக்கலாம்.
ஆனாலும் உங்களால் இவ்வுணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் முதலில் உங்கள் மனைவியுடன் மனம்விட்டு கதையுங்கோ. இருவரும் சேர்ந்து இச்சிக்கலான சில ஆண்டுகளை தாண்ட முயற்சியுங்கோ, இல்லையோ இத்துறைசார் மருத்துவ வல்லுனரின் ஆலோசனையை பெறுங்கோ. அவர்கள் உங்களுக்குத் தகுந்த மருத்துவ ரீதியான தீர்வை கண்டிப்பாகத் தருவார்கள்.
அதுவும் சரிப்பட்டுவரலையோ?
அநேகமான நாங்க வாழுகிற மேலை நாடுகளிலையெல்லாம் பாலியல் தொழில் சட்டரீதியா வரைமுறைப்படுத்தப்பட்டு பகிரங்கம்மாவே நடந்துகொண்டிருக்கு, கொஞ்சம் காசை விட்டெறிஞ்சால் ஆபிரிக்காகாரி முதல் வெள்ளைக்காரியள்வரை யாரையும் நீங்கள் உங்கள் உணர்ச்சிகளுக்கு வடிகால் தேட தெரிவுசெய்யலாம் . ஆனால் என்ன ஒருகுறையென்றால் உங்க பெண்டாட்டிமாதிரி மனம் விரும்பி உங்களை மகிழ்விக்க மாட்டாள். இதோ அடுத்ததொரு மிருகம் தன்னை கடித்துக்குதற வருகிதென்று மனதுக்கை நினைச்சுக்கொண்டாலும் குடுத்த காசுக்கேற்பா அங்க தொடாத, இங்க தொடாதை, அதை செய்யாதை, இதை செய்யாதை வந்த காரியத்தை சட்டென்று முடிச்சிட்டு இடத்தை காலிபண்ணென்று வழி அனுப்பிவச்சிடுவா என்பதையும் மறந்திடாதைங்கோ .
இது வேண்டாமென்றால் பத்திரிகையிலோ நெற்றிலையோ பார்த்தியளென்றால் விளம்பரங்கள் இருக்கும் அதிலை உள்ள இலக்கத்துக்குத் தொலைபேசி எடுத்தால் மறுமுனையில் வருபவள் வாயால ஜொள்ளுக்கதை பேசியே உங்களை சொர்க்கத்துக்கு அழைச்சுப்போவாள். என்ன ஒருசில நிமிடங்கள் அவகதையை கேட்டதிலை உங்க தொலைபேசிக்கட்டணத்தில 5 , 10 ஏஉரொ ஏறியிருக்கும் .
மற்றவர்களுக்குப் பாதிப்பு வராதவகையில் வடிகால்தேட எத்தனையோ வழிகளிருக்கு.
இதைவிட்டிட்டு உங்க காம இச்சைக்கு நண்பர் உறவினர் தெரிஞ்சவங்களில வடிகால் தேட விரும்பினால் உங்களைப்போன்ற பெரியவர்களின் இதுபோன்ற செயற்பாடுகளை பார்த்து வளரும் சமுதாயத்தில் உங்க தங்கையையோ, மகளையோ , மனைவியையோ கண்ணாலையோ பேச்சாலையோ உடலாலையோ கற்பழிக்க வேறொருவன் அலைஞ்சிட்டு இருப்பான் என்றதை மறந்திடாதையுங்கோ. இனிமேலாவது உங்களை திருத்திக்கொள்ளுங்கோ.
No comments: