நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Wednesday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 8
முன்னைய பகுதிகளை படிக்க 

சொல்லாதே யாரும் கேட்டால்...........7 சொல்லாதே யாரும் கேட்டால் .......... 8

"உங்கட சண்டைகளாலை கடைசியிலை என்ரை நாயைக் கொன்றுபோட்டியளே!" என்று ஜெனி கத்தவும்தான் விளங்கியது, உவள் பாவி இவ்வளவு நேரமாக நாய் செத்த கவலையிலைதான் அழுதிருக்கிறாள் என்று. கடவுளே இப்பவாவது புரிஞ்சுதே. இனி மனிசியை வழிக்குக் கொண்டுவாற வழியைப் பார்ப்பம் என்ற எண்ணத்திலை.
"இப்ப விளங்குதே செல்லம். கிளியோ குரங்கோ என்ரை மனசில நீர்தானப்பா அடுத்வள்யாருக்கும் இடமில்லை. சும்மா எதுக்குக் கத்தி ஊரைக் கூட்டுறீர்." வார்த்தையை நான் முடிக்க முதலே.


"பார்த்தியளே பார்த்தியளே உதுதானே எனக்குப் பத்திக்கொண்டு வாறது. உண்மையிலேயே உங்கட மனசிலை நானிருந்தால் குரங்கோ என்று சொல்லுவியளே. காசு வந்ததிலையிருந்து நானும் பார்க்கிறன் உங்கட மனசிலை நானில்லை." என்றபடி விக்கிவிக்கி அழத்தொடங்கினாள்.

"அது வந்து செல்லம் எங்கேயோ படிச்ச வசனம் எதுவோ சட்டென்று ஞாபகத்துக்கு வந்ததிலை சொல்லிப்போட்டன். எனக்கு உம்மைவிட்டால் யார் இருக்கினம் சொல்லும்பார்ப்பம்." அப்பிடி இப்பிடியெண்டு பூசி மெழுகி ஒருமாதிரியா அவளைச் சமாதானப்படுத்திப்போட்டன்.

ச்சானுக்கென்டால் இன்னமும் மூஞ்சை நீண்டபடிதான். ஒருவழியாக எல்லாருமாப் போய் கடையிலை சாப்பிட்டிட்டு தியட்டருக்குப் போனம். சட்டென்று நான் காராலை இறங்கி விலாசமா எட்டி முன்னாலை போய் ரிக்கற்றை வாங்கிக்கொண்டு அப்பபடியே பக்கத்திலை கன்ரீனிலை தம்பி மூன்று பீடாவும் ஆறு வடையும் என்று வாங்கவும் மச்சானும் மனிசி பிள்ளையளும் வந்து சேரவும் சரியா இருந்தது.

எட்டத்திலையே செல்லம்மா, என்னப்பா உது கையிலை பொட்டலம் என்று தொடங்கவும்,
அக்கா, படம் தொடங்கிவிட்டுது கெதியா வாங்கோ என்று கன்ரீனிலை நின்ற பெடியன் சொல்லவும் ஓடிப்பதைச்சுப்போய் தியட்டருக்கை உட்கார்ந்தம்.
கால்மணி நேரம் போயிருக்கும் செல்லம்மா மெதுவா, "என்னப்பா சூரியா படம் என்று சொன்னியள், அவனை இன்னமும் காணவில்லை." என்று கிசுகிசுத்தாள்.
செல்லம் இருந்து பாருமன் அவன் பிந்தி வந்தாலும் பிச்சு உதறிப்போடுவான் என்றன் விலாசமா.

"அவனுக்கும் என்ன வீட்டிலை மனிசியோட சண்டையே பிந்திவாறதுக்கு...." என்றாள் நக்கலா செல்லம்மா.
இப்படியே ஒரு பத்து நிமிசமாச்சு மனிசி திரும்பவும் "என்னப்பா ஒருவேளை ஏழாம் அறிவு பட ரீல் வந்து சேராததிலை வேறபடத்ததைப் போட்டிட்டானுகளோ?"

"நல்ல கதையாக்கிடக்கு உந்த வேலையள் எல்லாம் என்னட்டை வாய்க்காது. இப்பவே போய் உவனுகளை இரண்டிலை ஒன்று கேட்டிட்டுவாறன்" என்றபடி இருட்டிலை தட்டுத்தடுமாறி வெளியிலை போய் அதட்டலாக,

என்ன தம்பிமார் சூரியா படம் என்று பம்மாத்துக் காட்டுறியளே.
ஏன் என்ன அண்ணை ஏழாம் அறிவு படம்தானே ஓடுது.
சூரியா எப்ப
விஜய் ஆனவன் என்று நான் கத்த அண்ணை உதுகூடத் தெரியாமலுக்கு கதைக்க வந்திட்டியளே. நீங்கள் எங்கை இருந்து பார்த்தனிங்கள்.
சீற்றிலைதான் வேற எங்கை உட்கார்றது என்றன் நக்கலா.
அது எங்களுக்கும் தெரியுமண்ணை மேலையோ கீழையோ இருந்தனிங்கள்.

தம்பி மேலையிருந்தியோ கீழை இருந்தியோ சாஞ்சோ நிமிர்ந்தோ இருந்தனி என்கிற சடையிற கதையளை விட்டிட்டு ஒழுங்காப் பதில் சொல்லும்.
சொல்ல விட்டால்தானே. அண்ணை இண்டைக்கு இரண்டு படம் போட்டிருக்கிறம்.  கீழை
வேலாயுதம்   படம். மாடியிலை ஏழாம் அறிவு  படம்.
அந்தப் பதிலோட அய்யா பதுங்கிச் சுருண்டு எப்படிப் போய் கதிரையிலை இருந்தனோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

அதுக்கிடையிலை மனிசியெண்டால் என்னப்பா நாக்கைப் பிடுங்கிறமாதிரி நாலு கேள்வி கேட்டியளோ? ரிக்கற் காசைத் திருப்பித் தந்திட்டாங்களோ என்ன? என்று தொணதொணக்கத் தொடங்கினாள்.
அது வந்து செல்லம் அவங்கள் பெடியள் அவசரத்திலை மாறி சூரியா படத்தை மேல்மாடியிலை போட்டிட்டாங்களாம்.
அவங்கள் ஏன் மாறிப் போடுறாங்கள். நீங்கள் எதிலை எதைப் போட்டிருக்கிறாங்கள் என்று கேட்காமல் ரிக்கற் எடுத்திட்டன் என்று சொல்லுங்கோ.
அதைவிடு செல்லம் நான் வடை வேண்டுற அவசரத்திலை கேட்க்க மறந்திட்டன். இதுக்கொண்டும் இப்ப கவலைப்படத் தேவையில்லை நாளைக்கும் திரும்பிப் போடுறாங்களாம் பார்த்தால் போச்சு.
ஒருவழியா அடுத்தநாள் வேளைக்கே புறப்பட்டுப்போய் கடைசி லைனிலை இடம்பிடிச்சு உட்கார்ந்திட்டம். நேரமெண்டால் போகாதாம். ஒரு மாதிரியா அதை இதை வாங்கிக் கொறிச்சு நேரத்தை ஓட்டினம். கடைசியிலை ஒருவழியா படம் தொடங்கி ஒரு நிமிசமாகேல்லை,

செல்லம்மா அலறி அடிச்சுக்கொண்டு எழும்பியே நின்றிட்டாள்.
நான் பதறியடிச்சுக்கொண்டு "என்ன? என்ன? செல்லம் பின் சீட்டிலை இருக்கிற முட்டைக்கண்ணன் சேட்டைவிட்டவனே. அப்பவே பார்த்தனான் அவன்ரை பார்வை அவ்வளவு நல்லதாப்படேல்லை." என்று சொல்ல,
மனுசி பதில் சொல்லமுந்தியே பின்னாலையிருந்து,
"அண்ணை தேவையில்லாமலுக்கு உங்கட குடும்பப் பிரச்சனையளுக்கு இடையிலை என்னை இழுத்தியளெண்றால் மரியாதை கெட்டுப்போகும்." என்றொரு குரல் காட்டுக்கத்தலாக வந்தது.
நானும் விடாமலுக்கு செய்யுறதையும் செய்துபோட்டு மிரட்டல் வேறையோ என்று கத்தினன். மனுசியென்றால் சும்மா மல்லுக்கு நிற்கிறதைவிட்டிட்டு என்ன ஓடுது எண்டு வடிவாப் பாருங்கோ என்று அதட்டவும்.
என்ன எலியோ என்றன்.

என்ன மனுசனோ ஒருநாள் ஒருவிசயமெண்டாலும் ஒழுங்காப் புரியாமலுக்கு............ செல்லம்மா சலிச்சுக்கொள்ளவும்தான் எதோ விசயம் பிழைச்சுப்போட்டுதுபோல என்று முன்னாலை திரும்பினால் திரையிலை இன்றும் விஜய் . என்னடா இது இழவாப்போச்சுது என்றபடி வாசலுக்குப்போக......

கன்ரீன்காரப் பெடியன் என்ன அண்ணை இன்றைக்கும் எதுவும் பிரச்சினையே....என்று நக்கலாக் கேட்கவும்.
சோகமா நான், ஓமடா தம்பி இன்றைக்காவது ஏழாம் அறிவு படத்தைப் பார்ப்பம் என்று வந்தால் இப்படிப் பண்ணிப்போட்டியளே.
அப்ப இண்டைக்கும் ஏமாந்துபோனியளே, நேற்று மேலை பெரிய தியட்டரிலை
சூரியா படத்தைப்போட்டனாங்கள். இண்டைக்கு அவ்வளவுக்குச் சனம் வராது என்று கீழை சின்னத்தியட்டரிலை மாத்திப்போட்டனாங்கள் என்றான் சர்வசாதாரணமாக.

இந்தப் பதிலோட உள்ளைபோனால் எப்படித்தான் சமாளிக்கப்போறனோ என்ற பயத்திலை எவ்வளவு நேரந்தான் வாசலிலையே நின்றன் என்றதே மறந்துபோச்சு முதலிலை செல்லம்மாவைச் சமாளிச்சுப்போட்டு பிறகு உங்களிட்டை வாறன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்கோ.

ஆக்கம். அம்பலத்தார்

42 comments:

நிரூபன் said...

வணக்கம் ஐயா,
நலமா இருக்கிறீங்களா?

வீட்டில மனைவியோட இடக்கு முடக்கான பிரச்சினை என்று தொடங்கிய பதிவு படம் பார்க்கப் போயும் பிரச்சினையென்றல்லவா சொல்லி நிற்கிறது.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

படத்தை தியேட்டர் மாத்திப் போட்டாலும் கூட்டத்தை கூட்டிடலாம் எல்லே..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

உம்மைவிட்டால் யார் இருக்கினம் சொல்லும்பார்ப்பம்//

அவ்வ்வ்வ்வ்வ்


இது முந்தி நாங்கள் வன்னியிலிருந்த போது வந்த உங்களை விட்டால் எமக்கார் உதவி என்பதைத் தானே ஞாபகப்படுத்துகிறது.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

வணக்கம் ஜயா
////அண்ணை தேவையில்லாமலுக்கு உங்கட குடும்பப் பிரச்சனையளுக்கு இடையிலை என்னை இழுத்தியளெண்றால் மரியாதை கெட்டுப்போகும்." என்றொரு குரல் காட்டுக்கத்தலாக வந்தது.
நானும் விடாமலுக்கு செய்யுறதையும் செய்துபோட்டு மிரட்டல் வேறையோ என்று கத்தினன். மனுசியென்றால் சும்மா மல்லுக்கு நிற்கிறதைவிட்டிட்டு என்ன ஓடுது எண்டு வடிவாப் பாருங்கோ என்று அதட்டவும். ////

ஹா.ஹா.ஹா.ஹா. சுவாரஸ்யமாக இருக்கு அனைத்துப்பகுதிகளையும் நேரம் கிடைக்கும் போது முழுமையாக முதலில் இருந்து வாசித்துப்பாக்கின்றேன்

தனிமரம் said...

முட்டைகண்ணன் என்றால் எனக்கு ராஜாவில் மூட்டைக்கடியுடன் படம்பார்த்த ஞாபகம் இப்படித்தான் பூப்பூவாப் பூத்திருக்கு பார்க்கப் போய் மாறி மனிதன் பட ஞாபகத்தை உங்க சண்டை மீள அசைபோடு அம்பலத்தார்!

Anonymous said...

திருமதி செல்லமமாட்ட சமாளிபிகாசன் அறிய ஆவலாய் இருக்கிறேன்...

shanmugavel said...

சுவாரஸ்யமாக செல்கிறது.தொடருங்கள்.

காட்டான் said...

வணக்கம் அம்பலத்தார்.. இப்பதான் உங்களுக்கு விளங்கீச்சோ அவள் நாய் செத்ததுக்குதான் அழுகிறாள்ன்னு.. இஞ்ச நாய்க்கு குடுக்கும் மரியாதையே தனிதானே..

காட்டான் said...

ஆஹா ஏழாம் அறிவுக்கும் ஆப்பா உங்களுக்குதானே “சின்னது” பிடிக்கும் நேரா சின்ன தியேட்டருக்கு போகவேண்டியதுதானே.. அக்காவும் நிம்மதியா படம் பார்த்திருப்பா... நீங்களும் ஏழாம் அறிவை பாத்திட்டு நெஞ்ச நிமித்திக்கொண்டு வந்திருக்கலாம்.. இப்படி ஒருத்தருக்கு அக்காவ கட்டிக்கொடுத்த என்ர அப்பன நினச்சு பாக்கிறன்..???

ஹேமா said...

ஐயோ....ஐயோ அம்பலத்தார்.பாவம் நீங்கள்.ஏழாம் அறிவு படம் பாக்கப்போனகதை.அப்போ இப்ப கிட்டடியில மாட்டிக்கொண்ட சங்கதி !

Webpics said...

உங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா ? உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் .

மகேந்திரன் said...

கொடும கொடும னு கோவிலுக்கு போனா
அங்கே ரெண்டு கொடும பெல் அடிச்சிகிட்டு
நின்னுச்சாம்....

சீனுவாசன்.கு said...

சரிங்கோ!

Lakshmi said...

சுவாரசியமா இருக்கு. தொடருங்க ஐயா.

இராஜராஜேஸ்வரி said...

எப்படித்தான் சமாளிக்கப்போறனோ என்ற பயத்திலை எவ்வளவு நேரந்தான் வாசலிலையே நின்றன் என்றதே மறந்துபோச்சு முதலிலை செல்லம்மாவைச் சமாளிச்சுப்போட்டு பிறகு உங்களிட்டை வாறன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்கோ.


சீக்கிரம் வாங்குங்க பல்பு!

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

Anonymous said...

//அவனுக்கும் என்ன வீட்டிலை மனிசியோட சண்டையே பிந்திவாறதுக்கு...." என்றாள் நக்கலா செல்லம்மா.//
அம்பலத்தாரே, உமக்கு மட்டுமல்ல செல்லம்மாவுக்கும் குசும்பு ஜாஸ்தி,அதற்காக இப்படி ஒரு தண்டனையா? பிடிக்காத படத்தை கடைசி வரைக்கும் பார்க்கவைத்து விட்டீரே!
வேலாயுதம் படம் பார்த்தது ஆயுள் தண்டனைக்கு சமம். இனியொரு தரம் தண்டனை தர நேர்ந்தால், செல்லம்மாவுக்காக நாங்க கொடி பிடிக்கவும் ரெடி.

அம்பலத்தார் said...

நிரூபன் said...

//படத்தை தியேட்டர் மாத்திப் போட்டாலும் கூட்டத்தை கூட்டிடலாம் எல்லே..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வணக்கம் நிரூ,
ஆமா பணம்பண்ண இதுவும் ஒரு நல்லா idea தான்

அம்பலத்தார் said...

நிரூபன் said...

//....இது முந்தி நாங்கள் வன்னியிலிருந்த போது வந்த உங்களை விட்டால் எமக்கார் உதவி என்பதைத் தானே ஞாபகப்படுத்துகிறது.//

ஆம் இதைச் சொல்லியே வன்னிமக்களின் காதிலை பூவச்சம். இப்ப அவலப்படும் அதே வன்னி மக்கள் எங்களுக்கு ஆர் உதவி என்று அழ அவர்களுக்கு கைகொடுத்து உதவ யாரும் இல்லை

அம்பலத்தார் said...

K.s.s.Rajh said...

//ஹா.ஹா.ஹா.ஹா. சுவாரஸ்யமாக இருக்கு அனைத்துப்பகுதிகளையும் நேரம் கிடைக்கும் போது முழுமையாக முதலில் இருந்து வாசித்துப்பாக்கின்றேன்//

ஆறுதலாக அனைத்தையும் படித்துவிட்டு வாங்கோ.

அம்பலத்தார் said...

ரெவெரி said...

//திருமதி செல்லமமாட்ட சமாளிபிகாசன் அறிய ஆவலாய் இருக்கிறேன்...//

ஏற்கெனவே சமாளிப்பு செய்யப்போய்த்தான் இந்தப்பாடு இனி இதை எப்படி....

அம்பலத்தார் said...

தனிமரம் said...

//முட்டைகண்ணன் என்றால் எனக்கு ராஜாவில் மூட்டைக்கடியுடன் படம்பார்த்த ஞாபகம் இப்படித்தான் பூப்பூவாப் பூத்திருக்கு பார்க்கப் போய் மாறி மனிதன் பட ஞாபகத்தை உங்க சண்டை மீள அசைபோடு அம்பலத்தார்!//

அட அப்படியா சங்கதி வீட்டிற்கு வீடு வாசப்படிதான்போல

அம்பலத்தார் said...

shanmugavel said...
//சுவாரஸ்யமாக செல்கிறது.தொடருங்கள்.//
நன்றி

அம்பலத்தார் said...

காட்டான் said...
//வணக்கம் அம்பலத்தார்.. இப்பதான் உங்களுக்கு விளங்கீச்சோ அவள் நாய் செத்ததுக்குதான் அழுகிறாள்ன்னு.. இஞ்ச நாய்க்கு குடுக்கும் மரியாதையே தனிதானே..//

அப்படியென்றால் "நாய்க்கு மரியாதை" என்று ஒரு படம் எடுப்பமோ?

அம்பலத்தார் said...

காட்டான் said...
//ஆஹா ஏழாம் அறிவுக்கும் ஆப்பா உங்களுக்குதானே “சின்னது” பிடிக்கும் நேரா சின்ன தியேட்டருக்கு போகவேண்டியதுதானே.. அக்காவும் நிம்மதியா படம் பார்த்திருப்பா... நீங்களும் ஏழாம் அறிவை பாத்திட்டு நெஞ்ச நிமித்திக்கொண்டு வந்திருக்கலாம்.. இப்படி ஒருத்தருக்கு அக்காவ கட்டிக்கொடுத்த என்ர அப்பன நினச்சு பாக்கிறன்..???//

சின்னதைப் பிடிச்சுத்தானே இந்தப்பாடுபடுகிறன்.

சீ சீ மச்சான் காட்டான் கவலைப்படாதையும் சின்னதெல்லாம் சும்மா அப்பப்ப தொட்டுக்கத்தான். உங்க அக்காவை ஒருநாளும் கைவிடமாட்டன். ஆவின்ரை சமையல்பக்குவம் அந்தமாதிரி. அவவைமாதிரி வேற ஒருத்தியும் சமைச்சுப்போடமாட்டமாட்டினம்.

அம்பலத்தார் said...

ஹேமா said...

// ஐயோ....ஐயோ அம்பலத்தார்.பாவம் நீங்கள்.ஏழாம் அறிவு படம் பாக்கப்போனகதை.அப்போ இப்ப கிட்டடியில மாட்டிக்கொண்ட சங்கதி !//

மாட்டுறதிலை கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் வித்தியாசமே இல்லை. எப்பவுமே ஐயா மாட்டுப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறன்

நிலாமதி said...

உங்கள் மனப் பாரத்தை நகைச்சுவையுடன் பகிர ஒரு தளம் கிடைத்திருக்கு.வீடுக்குவீடு வாசல் படி .சிரிக்க வைத்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

ரைட்டு

அம்பலத்தார் said...

தகவலிற்கு நன்றி நண்ப Webpics

அம்பலத்தார் said...

மகேந்திரன் said...
//கொடும கொடும னு கோவிலுக்கு போனா
அங்கே....//
அட பாவமே!

அம்பலத்தார் said...

சீனுவாசன்.கு said...

//சரிங்கோ!//

சரிங்க

அம்பலத்தார் said...

Lakshmi, உற்சாகம் தரும் வார்த்தைகளிற்கு நன்றிகள்.

அம்பலத்தார் said...

இராஜராஜேஸ்வரி said...
//சீக்கிரம் வாங்குங்க பல்பு!//

என்ன இராஜராஜேஸ்வரி நீங்களும் பல்புடனா?

அம்பலத்தார் said...

Anonymous said...
//வேலாயுதம் படம் பார்த்தது ஆயுள் தண்டனைக்கு சமம். இனியொரு தரம் தண்டனை தர நேர்ந்தால், செல்லம்மாவுக்காக நாங்க கொடி பிடிக்கவும் ரெடி.//
ஏற்கெனவே செல்லம்மா ஆடுகிற சதிராட்டங்களையே சமாளிக்க இயலாமல் நொந்துபோயிருக்கிறன். இதற்கிடையிலை நீங்கள் வேற கொடிபிடிக்கிறன் என்று கிலிகிளப்பிறியள். கட்டாயம் தூக்கத்தான் வேணுமென்றால் வெள்ளைக்கொடியை தூக்குங்கோ.

அம்பலத்தார் said...

//சிரிக்க வைத்த உங்களுக்கு பாராட்டுக்கள்.//
நிலாம்மா, இதுதானே லொள்ளூ என்கிறது என்ரை சோகக்கதையை கேட்டு ஆறுதல் சொல்லுவியள் என்று நினத்தால் இப்படிச் சொல்லுறியள்.

திருமகள் said...

ஏற்கனவே எட்டாம் அறிவை எட்டிய அம்பலதாரிற்கு
7 ஆம் அறிவு பாக்க போய் இப்படி ஒரு சிக்கலா ??

அம்பலத்தார் said...

சி.பி...
என்னங்க ரைட்டு. அதுதான் செல்லம்மா லெப்ரு ரைற்று எல்லாப்பக்கமும் போடுபோடென்று போட்டிட்டாங்க.

அம்பலத்தார் said...

வணக்கம் திருமகள், உங்கள் முதல் வரவிற்கும் பின்னூட்டத்திற்கும்.
திருமகள் said...
//ஏற்கனவே எட்டாம் அறிவை எட்டிய அம்பலதாரிற்கு
7 ஆம் அறிவு பாக்க போய் இப்படி ஒரு சிக்கலா ??//
முந்தியொருகாலத்திலை 7,8 என்று எல்லாத்தையும் எட்டிப்பிடித்தனான்தான். ஆனால் செல்லம்மாவைக்கட்டினதோட உள்ள அறிவெல்லாம் போட்டுது.

அம்பாளடியாள் said...

"உங்கட சண்டைகளாலை கடைசியிலை என்ரை நாயைக் கொன்றுபோட்டியளே!" என்று ஜெனி கத்தவும்தான் விளங்கியது, உவள் பாவி இவ்வளவு நேரமாக நாய் செத்த கவலையிலைதான் அழுதிருக்கிறாள் என்று. கடவுளே இப்பவாவது புரிஞ்சுதே. இனி மனிசியை வழிக்குக் கொண்டுவாற வழியைப் பார்ப்பம் என்ற எண்ணத்திலை.

தாங்க முடியவில்லை உங்கள் நகைச்சுவை கலந்த எளிமையான வாழ்க்கைச் சித்திரம் மிக அழகாக சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் தொடர் அருமை !...வாழ்த்துக்கள் தொடருங்கள் அரைகுறையாக
பார்த்துவிட்டுப் போகின்றேன் நிட்சயம் ஆரம்பப் பகிர்வில் இருந்து பார்க்கவேண்டும்போல் உள்ளது .பார்த்துவிட்டுப் பின் கருத்திடுகின்றேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .......

Parasakthy said...

செல்லம்மா அம்பலத்தார் தம்பதிகளுக்கு பிடித்த நிறம் நீலம் தானே, புதிதாய் எல்லாம் சாயம் போட்டது நல்லாயிருக்கு,

சொல்லாதே யாரும் கேட்டால் ..........தொடரில் அடுத்து என்ன வருமென ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

அம்பலத்தார் said...

Parasakthy
நீல நிறம் வானுக்கும் நிலவுக்கும் நீலநிறம் உன்.... என்று வாத்தியார் பாட்டை பாடித்தானே செல்லம்மாவின்ரை இதயத்தில் குடிபுகுந்தது.
சொல்லிப்போடாதையுங்கோ யாரும் கேட்டால்."சொல்லாதே யாரும் கேட்டால் ..........தொடரில் அடுத்து என்ன வருமென எனக்கே இன்னமும் தெரியாது."

திருமகள் said...

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்...
என்றுதான் வாத்தியார் பாட்டு கேள்விப்பட்டு இருக்கிறம்
எப்ப தொடக்கம் நிலவுக்கும் நீலநிறம் வந்தது?
பாவம் செல்லம்மா .....எப்படித்தான் சமாளிக்கிறாவோ தெரியவில்லை!!!!!

அம்பலத்தார் said...

திருமகள் said...

//நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்...
என்றுதான் வாத்தியார் பாட்டு கேள்விப்பட்டு இருக்கிறம்
எப்ப தொடக்கம் நிலவுக்கும் நீலநிறம் வந்தது?
பாவம் செல்லம்மா .....எப்படித்தான் சமாளிக்கிறாவோ தெரியவில்லை!!!!!//
எத்தனைபேர் shorttime memory யுடன் இருக்கிறாங்களென்று ஒரு test செய்தால் சட்டென்று திருமகள் வந்து அசத்திட்டிங்க. வாழ்த்துக்கள்.