பிள்ளையளுக்கு தங்கட பிள்ளையளை வடிவா வளர்க்கத்தெரியவில்லையென்ற முணுமுணுப்பு அடிக்கடி பல வீடுகளிலையும் கேட்டுக்கொண்டுதான் இருக்குது.
இது ஒன்றும் புதுசில்லை
இது ஒன்றும் புதுசில்லை
எங்கட தாத்தா பாட்டியும் எங்கட அப்பா அம்மாவை பார்த்து இப்பிடித்தான் முணுமுணுத்தவை.
அதையும் தாண்டி எங்கட பெற்றார் எங்களை நல்லபடியாத்தானே வளர்த்தவை.
பெரும்பாலும் இளைய தலைமுறையினர் தங்கட பிள்ளையளை குழந்தைகள் உளவியல், நவீன மருத்துவம், சுற்றுச்சூழல்.... என பலவிசயங்களையும் கவனத்தில்கொண்டு எங்க தலைமுறையைவிட இன்னும் நல்லப்படியாகத்தான் வளர்க்கினம். ஆனாலும் அதை பெரியவங்களால புரிந்துகொள்ளமுடியவில்லையோ ஏற்றுக்கொள்ளமுடியவில்லையோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும் நல்லமாற்றங்களை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான் எமக்கும் நல்லது எதிர்கால சந்ததிகளுக்கும் நல்லது.
No comments:
Post a Comment