நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Sunday

இங்கிலீசு படும்பாடு

நீங்கமட்டுமா நாங்களும் பேசுவம்ல

Saturday

ஒரு நாள் ஆட்டம்


வழமைபோல எங்கட கூத்தாடி குரூப்பின் ஒரு நாள் ஆட்டத்தையும் ஆட்டுவித்தது (நெறிப்ப்படுத்தியது)
என் ஆத்துக்காரி செல்லம்தான்.

Wednesday

செல்லம் சொல்லிப்போட்டா நடிக்காமல் விடமாட்டன்

கூத்தாடி குரூப்ஸ் இன் மற்றுமொரு நாடகம்.

Tuesday

நாங்களும் எங்கட விலாசங்களும் படுகிறபாடு (பகுதி 2)



நண்பர் சொன்னதுபோல போனால் ....

மக்டொனால்ஸ் வந்தது ..

அப்புறம் ஆ.. அப்படியே கொஞ்சத்தூரம்  ஓட....

அப்படா ஒரு  சுப்பமார்க்கட் வந்தது ..

எல்லாம் சரியாகத்தான்  இருக்கே என்று இறங்கி அவன் சொன்னதுபோல பின்பக்கமாக  நடந்தால்...

ஒரு நீலக்கட்டிடடமும்   காணோம் !

Friday

நாங்களும் எங்கட விலாசங்களும் படுகிறபாடு.


எங்களது ஆட்கள் எதாவது ஒரு நிகழ்வு நடைபெறும் மண்டபம் ஒரு வீடு ஒரு கடை என எந்த ஒரு இடத்தின் முகவரியை சொல்லுறதென்றாலும் ரொம்பவும் விபரமாக சொல்லிடுவாங்க.

 என்ன ஒரு சோகமென்றால் அவங்க சொல்லுறபடி அந்த இடத்தை தேடிப்பிடித்து போகிற வல்லமை எனக்கில்லை. இப்படி நான் விலாசம் தேடின கதையளை உங்களுக்கெல்லாம் சொல்லி ஒருவாட்டி ஓவென்று அழுதால்தான் என்ரை மனசு ஆறும்.

Saturday

ஓலைக்குடிசை



தமிழாலய பாடசாலை பொங்கல்விழாவில் மாணவர்கள்
கார்த்திகா, சுகன்யா, சௌம்யா, அஜந்தா, தினேஸ், சிந்துஜன் ஆகியோருடன் நானும் நடிச்சது இந்த நாடகம்

Friday

பயோடேட்டா புலம்பெயர் தமிழர்கள்





பெயர்                                  :புலம்பெயர்தமிழர்கள்
இயற்பெயர்                       :இலங்கைத்தமிழர்
நிரந்தர தலைவர்             :வேலுப்பிள்ளை பிரபாகரன்
துணைத் தலைவர்கள்    :உருத்திரகுமார், நெடியவன்
இணைத் தலைவர்கள்    :வை.கோ, சீமான் போன்ற தமிழக தலைவர்கள்
வயது                                   : ஓய்வு எடுக்கும் வயது

Thursday

அது அளவுக்குமிஞ்சி வளர்ந்தவன் 18+ கலாட்டாக்கதை

ஜெகாவிற்கு கொழும்பு வந்ததில் செம சந்தோசம். இருக்காதா என்ன வாழ்நாள் கனவாச்சே. நாட்டிலை இடம்பெற்ற போரினால் வன்னிக்கு அப்பால் வேறு எந்த ஊருக்கும் இதுவரை அவனால் போகமுடியவில்லை. இப்ப சண்டை முடிஞ்சதுக்கு அப்புறம் Friends  எல்லோரும் பல இடங்கள் சுத்தி வாறதை பார்க்க ஜெகாவுக்கும் ஆசை அதிகமாகி அப்பாவிடம் கேட்க பயத்திலை, அம்மாவை நச்சரித்துக்கொண்டே இருந்தான். அம்மாவும் இந்த சாட்டுடனாவது ஒருதடவை கொழும்பு பார்க்கலாம் என்ற நப்பாசையிலை அப்பாவுக்கு கொடுத்த அலுப்பிலை, அப்பாவும் பெரிய மனதுபண்ணி, ஜெகா 10 ம் வகுப்பு பாஸ்பண்ணினால் கொழும்பு கூட்டிப்போவதாக ஒத்துக்கொண்டார். 

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 9



முன்னைய பகுதிகளை படிக்க
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 8
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 7
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 6
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 5
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 4
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 3
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 2 
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 1


 சொல்லாதே யாரும் கேட்டால் .......... 9


"இஞ்சருங்கோ என்ன அதுக்குள்ள............... நான் பக்கத்திலை வந்ததுகூடத் தெரியாமலுக்கு......."

"காலமை எழும்பினதிலையிருந்து அரக்கப்பரக்க வேலை செய்த அலுப்பிலை ஒரு ஐஞ்சு நிமிசம் கண் அயரமுதல் இப்ப என்ன நடந்ததென்று உந்த உலுப்பு உலுப்புறீர்."

"அது வந்தப்பா ..... நானும் என்ரை ஆசையளை உங்களிட்டைச் சொல்லாமல் வேற யாரட்டைத்தான் சொல்லுறது......" என்று செல்லம்மா தொடங்க

"அட உம்முடைய ஆசையெண்டால் அது என்ரை ஆசைமாதிரித்தானே" என்று கொண்டு கன்னத்திலை ஆசை ஆசையாக ஒன்றுகுடுக்க

"ஒரு சொல்லுச் சொல்ல முந்தி இப்படி வழிஞ்சுகொண்டு வாற உங்களோட யாரும் கதைக்க இயலுமே" என்று மனுசி செல்லமாக சிணுங்க..................


Wednesday

அம்பலத்தானெல்லாம் ஒரு கலைஞனென்று.....


இந்தப் புலம்பெயர் நாடுகளிலை இடம்பெறும் கலை நிகழ்வுகளிற்குப் போனால் பெரும்பாலும் எனக்கு எரிச்சலை உண்டாக்குகிற ஒரு விடயத்தைப்பற்றி உங்களுக்க் சொல்லாவிட்டால் எனக்கு மண்டையே வெடிச்சிடும்போலகிடக்கு சொல்லுறன் கேளுங்கோ.

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 8




முன்னைய பகுதிகளை படிக்க 

சொல்லாதே யாரும் கேட்டால்...........7 



சொல்லாதே யாரும் கேட்டால் .......... 8

"உங்கட சண்டைகளாலை கடைசியிலை என்ரை நாயைக் கொன்றுபோட்டியளே!" என்று ஜெனி கத்தவும்தான் விளங்கியது, உவள் பாவி இவ்வளவு நேரமாக நாய் செத்த கவலையிலைதான் அழுதிருக்கிறாள் என்று. கடவுளே இப்பவாவது புரிஞ்சுதே. இனி மனிசியை வழிக்குக் கொண்டுவாற வழியைப் பார்ப்பம் என்ற எண்ணத்திலை.
"இப்ப விளங்குதே செல்லம். கிளியோ குரங்கோ என்ரை மனசில நீர்தானப்பா அடுத்வள்யாருக்கும் இடமில்லை. சும்மா எதுக்குக் கத்தி ஊரைக் கூட்டுறீர்." வார்த்தையை நான் முடிக்க முதலே.

Friday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 7

முன்னைய பகுதிகளை படிக்க








செல்லம், செல்லம் நில்லுமப்பா என்று கொண்டு நான் வாசலுக்குப் பாய இடையிலை நின்ற மச்சான்,
ஓகோ அக்காவுக்குக் கை நீட்டுற அளவுக்குப் போட்டுதோ, இயலுமென்றால் கை வச்சுப்பாருங்கோ, அப்போ தெரியும் இந்த மச்சான் ஆரெண்டதை என்று சொல்லிக்கொண்டு பின்னால் பாய.......
ஏ து இடியோட்டன் ( ஏ மடையருகளே) என்று ஜெனி கத்தின கத்திலைதான் நாங்கள் ஒரு நிதானத்துக்கு வந்தம்.

Tuesday

சிகரங்களைத் தொடலாம்

 எழுத்து
ஒரு தவம்
ஒரு பிரசவம்
ஒரு ஊற்று.

ஒரு சிறந்த எழுத்தாளரின் படைப்புக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அடிக்கடி என்மனம் அசைபோடும்

Friday

வாழ்க கூகிள். ஜாலிதான் நான் கடலைபோடுற குட்டியளின்ரை விபரமெல்லாம்.........



இஞ்சருங்கோ சொல்ல மறந்துபோனன் புறோக்கர் தொலைபேசினவரப்பா,

உவள் எங்கட மூத்தவளுக்குப் பேசின மாப்பிளைவீடடுக்காரர் ஊரில வடிவா விசாரிக்கவேணுமென்று உங்கட பேரன் பேத்தியின்ரை பெயர் ஊர் மற்ற விபரமெல்லாம் கேட்கினமாம்.

என்னது ஊரிலை விசாரிக்க வேணுமாமோ?

ஓமப்பா பொன்னர், அம்பலத்தார் என்று உங்கட பெயரைப்ப் பார்க்க நாங்கள் தங்கட சாதி ஆக்களில்லையோ என்று யோசிக்கினமாம்

Thursday

நான் போகாத சாமத்தியச்சடங்கு

இன்றைக்குப்போல கிடக்கு எழுபதுகளின் ஆரம்பத்திலை கொழும்பு ரொறிங்ரன் அரசாங்க தொடர்மாடிக் குடியிருப்புக்களில் வாழ்ந்த காலம். எத்தனையோ நாடுகளிலை அடுக்குமாடிக் குடியிருப்புக்களைப் பாத்திருக்கிறன் ஆனால் இந்தமாதிரி ஒரு அமைப்பை நான் பாத்ததே இல்லை. சுற்றிவர வீடுகள் நடுவிலை ஒரு மைதானம் அத்தனை வீடுகளின்ரை பல்க்கனியிலை நின்றும் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கலாம்.
சாயங்காலமானால் மைதானம் களைகட்டும். கிரிக்கற், உதைபந்தாட்டம் வொலிபோல். சின்னவயசுக்காரர், விடலையள், பெரியவை என பல குழுக்களாக மைதானம் நிறையும். இதைவிட அங்கங்கை சிறுசிறு கொத்துக்களாக இளவட்டப் பெண்கள் கூட்டம். மைதானத்தின் ஓரமா இருந்த கிளப்பிலை பெரிசுகளின்ரை சீட்டாட்டம், பியர் அடி என ஒரே கலகலப்பா இருக்கும்.

Friday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 4

ஐயோ! இதென்ன கடவுளே நிலமெல்லாம் ஒரே ரத்தம், கட்டிலெல்லாம் தோஞ்சுபோய்கிடக்கு.

எவன் எவளைக் கொண்டானோ, நான் பாவி வசமா வந்து மாட்டுப்பட்டிட்டனே, கடைசியிலை ஒன்றையும் அனுபவிக்காமலுக்கு இப்பிடி அற்ப ஆயுசிலை ஜெயிலுக்கை போய்க் கிடக்கவேணுமே என்று பதறத்தொடங்கினன்.

Wednesday

மதம் பிடிச்சு அலையுறமா?


இந்த வயதுபோன காலத்திலையும் அம்பலத்தாரின் லொள்ளைப் பாருங்கோ! எப்பபார் விவஸ்த்தை இல்லாமல் அந்தமாதிரிக் கசமுசா கதைகளாக எழுதிக்கொண்டு என கொஞ்சச்சனங்கள் கிசுகிசுப்பது எனது காதிலையும் விழுந்தது. அதுதான் இன்று கொஞ்சம் வித்தியாசமான ஒரு விடயத்தைப்பற்றிச் சொல்லவாறன்

Tuesday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 3



தலைவிதியை நொந்துகொண்டு வேலைக்குப் போனால் ........ வாசலிலை உவள் ஜெனி ஏதோ பேருக்கு போடவேணுமெண்டதுக்காக ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு அசத்தலாய் நிண்டாள். அட இண்டைக்குப் பொழுது வெய்யிலும் வெக்கையுமாக அந்தமாதிரித்தான் விடிஞ்சிருக்கு என்று புளுகமாக் கிடந்தது, உங்களுக்கும் உவள் ஜெனியைப் பற்றிச் சொல்லுறதுக்கு நிறையக் கிடக்கு ஆனால் இப்ப இல்லை,

Monday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 2



வளுமோ விடாமல் உங்கட ஆசையளுக்குக் குறுக்காலை நான் எப்பவாவதுநின்றிருக்கிறனே என்று கொஞ்சலாகக் கிசுகிசுத்தாள். இதுபோதுமே பிறகென்ன ஐயா வழமைபோல.........................  அதுக்கடையிலை ரெலிபோன் வேற கிணுகிணுக்கத் தொடங்கிச்சுது.ஆரடா இது சிவபூசையுக்கை கரடி பூந்த மாதிரி ஏமசாமத்திலை என்று எரிச்சலாப் போனை எடுத்தால்.

சொல்லாதே யாரும் கேட்டால் ..........



விழுந்திடிச்சு! விழுந்திடிச்சு!
செல்லம் ஏ! செல்லம்மா தண்டத்துக்கு வெட்டாதையுங்கோ! விழாது விழாது எண்டு கரிச்சுக் கொட்டினாய் இஞ்சை பார் ஐயாவுக்குப் பம்பரே விழுந்திட்டுது.
உங்கட புளுகு தெரியாதாக்கும் 10 ருபாக்கு வெட்டி 5 ருபா விழுந்தாலே ஊரைக் கூட்டுறனிங்கள்; இண்டைக்குப் 10க்கு வெட்டி 20 விழுந்திட்டுதாக்கும்.