நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

அளவுக்குமீறிய ஆசையை வளர்த்தவங்கஎனக்கு ஒரு ஆசை எதிர்பார்ப்பு என்ரை ஒவ்வொரு பதிவுகளையும் தினமும் ஆயிரம்பேராவது படித்து ஆளுக்கு பத்து பின்னூட்டம் இடவேண்டும்.
இப்படி நான் சொன்னா என்ன சொல்லுவியள்.

கிறுக்குப்பய பிள்ளை அம்பலத்தான் எழுதுகிற திறத்தில பாவமே என்று பத்துப்பேர் பின்னூட்டம் எழுதுவதே பெரிய விசயம், அதற்குள் ஆசையைப்பார் ஆசையை, ஆசைக்கு அளவே இல்லையா? என்று திட்டாமல் விட்டியள் என்றால்
Somthing wrong என்றுதான் நினைக்கவேணும்.

Tuesday

இது தோற்றவர்களின் கதை எங்க கதை கிடையாதுஎனது இளம்பிராயத்தில் நான் கல்விகற்றது கொழும்பு றோயல் கல்லூரி எனும் மூவின மக்களும் கல்வி கற்கும் பிரபல பாடசாலையில், வசித்தது மூவினமக்களும் கலந்து குடியிருந்த கொழும்பின் புறநகர்ப்பகுதி. 

எனது வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளிக் குடியிருந்தவ சாந்தா. அவ காலையில் மடிப்பு கலையாத ஸ்கூல் யூனிபாரமும், அழகாக முகத்திற்கு பவுடர் பூசி, நெற்றியில சின்னதா ஒரு திருநீற்று குறி, நடுவில ஒரு குட்டி ஸ்டிக்கர்பொட்டு என அம்சமா வாசற்கதவை திறந்துகொண்டு தெருவில் இறங்கும்வரை காத்திருந்து நானும் புறப்படுவன்.  

Sunday

மொழுமொழு, குளுகுளு தக்காளிஸ்.... போட்ட தக்காளிசாதம்


வணக்கம் வாசகர்ஸ்.... இனிய ஞாயிறு வாழ்த்துக்கள்.

என்ன எங்க வீட்டிலிருந்து ஏதோ நல்ல வாசனையடிக்கிறதே என்று எட்டி பார்க்கிறிங்களா?

Ok Ok No problem

யன்னலை நல்லா திறந்துவைக்கிறேன்  நன்றாக பாருங்கோ.

Friday

சொன்னால் நம்பணும் என்ரை நண்பன் சிறீலங்கா இராணுவத்தில அதிகாரி.
இந்த விடயத்தை இங்கு ஜேர்மனியில் இருக்கிற என்ரை நண்பன் ராசுக்குட்டியனிற்கு சொல்லத்தொடங்க....... 

ராசுக்குட்டியன் "ஓய் அம்பலத்தார் உமக்கு என்ன கிறுக்கு பிடிச்சுட்டுதே. கொஞ்சக்காலத்துக்குமுன் போராளியாக இருந்தன் என்றதுபோல கதைவிட்டீர். இப்ப என்னடா என்றால் என்ரை பிரண்ட் சிறிலங்கா இராணுவத்தில....." என்று புதுக்கதை ஒன்றை கிளப்புகிறீர் என்று சொல்லி விழுந்து விழுந்து சிரிக்கவும்