நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Monday

ஸ்ரீரங்கத்து தேவதை பெற்றெடுத்த சுஜாதா





இன்று எழுத்தின் சிகரம் சுஜாதாவின் நினைவு நாள்.
மண்ணுலகைவிட்டு நீங்கியது ( 27-02-008).
சுஜாதா நான்கு வருடங்களின்முன் தன் உடலால் இவ்வுலகைவிட்டு மறைந்துபோனார். ஆனாலும் இப்புவி உள்ளவரை தமிழ் உள்ளவரை அவரது படைப்புக்களினூடாக வாழ்ந்துகொண்டே இருப்பார்.
என்னையும் எழுதத்தூண்டிய, எனது எழுத்துக்களின் முன்மாதிரி, ரோல் மாடல் எழுத்தாளர் சுஜதா என்று சொல்லிக்கொள்வதில் என்றும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது நினைவாக....

Tuesday

காதல் சிட்டுக்கள் பெத்த முத்துக்கள்.




தமிழகத்து தமிழ் சிட்டுக்கள் இரண்டு சில காலங்களின் முன் எங்கள் வீட்டருகே கூடொன்றில் குடிவந்தன. தமிழகத்திலிருந்து பட்டமேற்படிப்பிற்காய் இங்கு வந்த அவர்கள். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து, திட்டமிட்டு படிப்பை முடித்து, வேலையாகி..... 
சில நாட்களின்முன் அவர்களின் கூட்டில் குடியிருக்க சின்னஞ்சிறு சிட்டொன்றும் குடிவந்துவிட்டது. அண்மையில் பிறந்த அந்த குட்டிப்பாப்பாவை பார்க்க சென்றபோது படிக்க தந்த அவர்கள் காதல் டைரியின் சில பக்கங்களை அவர்கள் அனுமதியுடன் உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்.

Sunday

சிங்கிளாய் வந்த முதுபெரும் சிங்கம்.



கணனியின் பழைய கோப்புக்களில் ஏதோ தேவைக்காய் தேடிக்கொண்டிருந்தபோது ஏறக்குறைய எட்டு, ஒன்பது வருடங்களின்முன் தமிழின் முதுபெரும் சிங்கமொன்று ஜேர்மனி வந்திருந்தபோது அவரை சந்தித்ததுபற்றி அன்று நான் எழுதிய குறிப்பொன்று கண்ணில் பட்டது அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Friday

கருணாகரமூர்த்தி சொல்லிய ஒரு அகதி உருவாகும் நேரம்

இந்தியாவிற்கு போயிருந்த நேரம் புத்தகக் கடையில கருணாகரமூர்த்தியின் ஒரு அகதி உருவாகும் நேரம் புத்தகத்துக்கு ஜெயமோகன் எழுதியிருந்த முகவுரையை நுனிப்புல் மேஞ்சதிலை அந்த முகவுரையை வடிவாகப் படிக்க வேண்டும் என்ற ஆதங்கத்திலைதான் அந்தப் புத்தகத்தை வாங்கினேன். மறந்துபோய் நீண்டகாலமாக அந்தப் புத்தகம் ஒரு ஓரத்திலை கிடந்திட்டுது. பலகாலத்தின்பின் ஞாபகம் வந்து எடுத்துப் படித்தேன். உண்மையிலேயே அற்புதமான படைப்புக்களின் தொகுப்பு அது.

Wednesday

அல்கைத்தாவுடன் கைகோர்க்க தயாராகும் அமெரிக்கா.



தனது நலன்களுக்காக அமெரிக்கா எதையும் செய்யும் என்பதற்கு இப்பொழுது சிரியாவில் இடம்பெறும் நிகழ்வுகளும் மற்றும் ஒரு உதாரணம். சிரிய அரசுக்கு எதிராக அண்மையில் இடம்பெற்றுவரும் கிளர்ச்சிக்கு அல்கைத்தா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவும் சிரிய கிளர்ச்சிக்காரர்களை ஆதரிக்கிறது.

இந்து, புத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதம் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா?



இந்த அம்பலத்தாரின் லொள்ளைப் பாருங்கோ! கொஞ்சக்காலமாக விவஸ்த்தை இல்லாமல் அந்தமாதிரிக் கசமுசா கதைகளாக எழுதிக்கொண்டு என ஒருசிலர் கிசுகிசுப்பது எனது காதிலையும் விழுந்தது. இன்று கொஞ்சம் வித்தியாசமான ஒரு விடயத்தைப்பற்றிச் சொல்லவாறன்.

Saturday

ஆகா கிடைச்சிடிச்சு.





களுகங்கையில் குளிக்கிற சுதுநோனா நயினாதீவு நாகவிகாரை செல்ல சுதந்திரம்

காலி பஸ்நிலையத்தில் பிச்சை எடுக்கும் புஞ்சிமண்டா யாழ்ப்பாண பஸ்நிலையத்திலும் பிச்சை எடுக்க சுந்திரம்.

கொழும்பு காமினி தெமிழ படு காண்ட யாப்பண யண்ட (காமினிக்கு தமிழ்
சரக்கடிக்க யாழ். செல்ல) சுதந்திரம்

மட்டக்களப்பு மரிக்கார் மருதனாமடச் சந்தியிலை கடை வைக்க சுதந்திரம்