நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Sunday

எல்லை காக்கும் தெய்வங்கள்


எம் தாயகமெங்கும் எமது இருப்பே கெள்விக்குறியாக்கப்பட்டுவரும் இன்றையகாலத்தில்

Monday

நட்பு & புரிந்துணர்வு





விடுதலைப்போராட்டங்களை உரிமைப்போராட்டங்களை ஆதரிக்கும் எந்த ஒரு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை வளர்த்துக்கொள்ளாதது.
எதிரிக்கு எதிரி நண்பன் என்றாவது சிங்களதேசத்திற்கு எதிரான நாடுகளுடன்

Tuesday

வேள்விக்கு வச்சிட்டம் ஆப்பு

கோயில்களிலை ஆடு, கோழியை பலிகொடுக்கிற வேள்வியை தடை செஞ்சதாலை எங்கடைபாரம்பரியமே அழியப்போகுது மதமே அழிஞ்சிடும் என்கிறமாதிரி ஒப்பாரி வைக்கிறவங்களே!

Monday

மாணவர் போராட்டக்களத்தில் ஜெயா அம்மாவினது காய்நகர்த்தல்



கலைஞர் இந்த மாணவர் போராட்டத்தை கையிலெடுத்து ஆப்பு இழுத்த குரங்காக வேண்டும். மாணவர்கள் போராட்டட்த்தை சற்றே விஸ்வரூபம் எடுக்கவைத்து அதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்திவிட வேண்டும் என்பதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டமாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது.

Saturday

இலங்கையில் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகும் இனவாத அரசியல் சக்திகள்.



தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி முடக்கிவிட்டோம். விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக மார்தட்டிக்கொண்டாயிற்று.
ஆனால் இன்னமும் சாதாரண மக்களின் பிரச்சனைகள் தீரவில்லை. ஆயினும் அரசுக்கு இதற்கெல்லாம் காரணம் புலிப்பயங்கரவாதமே என்று இனியும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாத நிலை.
அடுத்தது என்ன?

Thursday

ஈழத்தில் இந்திய அமைதிப் படை செய்த கொடுமைகளும் ஜெயமோகனின் அரைவேக்காட்டுப் பிசத்தல்களும்


அண்மையில் ஜெயமோகன் எழுதிய இரு பதிவுகள் என்னை இதை எழுதத்தூண்டியது. முதலாவது பதிவு இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை மனித நேய சேவைகளே செய்தது என்ற கருத்தை விதைக்க எழுதப்பட்டது. இதற்கு சாட்சியாக ஜெயமோகன் அமைதிகாக்கும் படையில் இருந்த சிப்பாய்களின் கூற்றையே ஆதாரமாக வைக்கிறார்.

Tuesday

யாழ்ப்பாணத்தில் விபச்சாரம் ஏன் எதனால் எப்படி பேசாப்பொருள்பற்றி பேசுவோம்.

யாழில் அண்மைக்காலமாக விபச்சாரம் கோலோச்சுவதாக பத்திரிகைகளும் இணையத்தளங்களும் செய்தி வெளியிடுகின்றன.

உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த தொழில்களில் ஒன்று விபச்சாரம் எனப்படும் பாலியல் தொழில். எமது இலங்கை இந்தியாபோன்ற நாடுகளை பொறுத்தவரையில் பெரும்பாலும் 99% பாலியல் தொழில் என்றாலே பெண்களால் ஆண்களின் பாலியல் தேவைகளை நிவர்த்திசெய்ய நடத்தப்படுவதாகவே உள்ளது. ஆனால் மேற்குலகை பொறுத்தவரையில் பெண்களின் பாலியல் தேவைகளை பூர்த்திசெய்ய ஆண்களும் பாலியல் தொழில் செய்ய ஆரம்பித்து பலவருடங்கள் ஆகிறது.

Friday

பயோடேட்டா புலம்பெயர் தமிழர்கள்





பெயர்                                  :புலம்பெயர்தமிழர்கள்
இயற்பெயர்                       :இலங்கைத்தமிழர்
நிரந்தர தலைவர்             :வேலுப்பிள்ளை பிரபாகரன்
துணைத் தலைவர்கள்    :உருத்திரகுமார், நெடியவன்
இணைத் தலைவர்கள்    :வை.கோ, சீமான் போன்ற தமிழக தலைவர்கள்
வயது                                   : ஓய்வு எடுக்கும் வயது

Tuesday

இது தோற்றவர்களின் கதை எங்க கதை கிடையாது 2..களம் காணாமலே கைதான JVP தலைவர்

 1971 மார்ச் மாதம். தெலுந்தனியாவில் உள்ள மறைவிடம் ஒன்று.
 தோழர்களே நான் தலைவர் றோகணவை சந்திக்க அம்பாந்தோட்டை செல்கிறேன். நான் வரும்வரை தோழர் சகோதரி பிரேமாவதி இந்த முகாமிற்கு பொறுப்பாக இருப்பார் அவர் கூறும் கட்டளைகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டு செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கிளர்ச்சிக்குரிய நாள் குறிக்கப்பட்டுவிட்டது. உங்களால் முடிந்தவரை அதிகளவான வெடிபொருட்களை தயார் செய்யுங்கள். மேலதிக விபரங்களை பிரேமாவதியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். 

தலைவர் வாழ்க சேயின் பாதையில் புரட்சி ஓங்குக.

Sunday

சிங்கிளாய் வந்த முதுபெரும் சிங்கம்.



கணனியின் பழைய கோப்புக்களில் ஏதோ தேவைக்காய் தேடிக்கொண்டிருந்தபோது ஏறக்குறைய எட்டு, ஒன்பது வருடங்களின்முன் தமிழின் முதுபெரும் சிங்கமொன்று ஜேர்மனி வந்திருந்தபோது அவரை சந்தித்ததுபற்றி அன்று நான் எழுதிய குறிப்பொன்று கண்ணில் பட்டது அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Saturday

ஆகா கிடைச்சிடிச்சு.





களுகங்கையில் குளிக்கிற சுதுநோனா நயினாதீவு நாகவிகாரை செல்ல சுதந்திரம்

காலி பஸ்நிலையத்தில் பிச்சை எடுக்கும் புஞ்சிமண்டா யாழ்ப்பாண பஸ்நிலையத்திலும் பிச்சை எடுக்க சுந்திரம்.

கொழும்பு காமினி தெமிழ படு காண்ட யாப்பண யண்ட (காமினிக்கு தமிழ்
சரக்கடிக்க யாழ். செல்ல) சுதந்திரம்

மட்டக்களப்பு மரிக்கார் மருதனாமடச் சந்தியிலை கடை வைக்க சுதந்திரம்