நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

காதல் யாருக்கும் யார்மேலும் வரலாம் முறை தவறிய காதல்?

காதல் யாரிற்கு யார்மேல் எங்கே எப்பொழுது உண்டாகும் என்று சொல்லமுடியாது. இன்றைய இளைஞர்களினதும் யுவதிகளினதும் காதலையும் இணைதல்களையும் பிரிவுகளையும் கடுமையாக விமர்சிக்கும் மூத்த சந்ததியினரின் காதலும் காமமும் எப்படி இருக்கிறதென்பது விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுவது மிகவும் அரிதாகவே உள்ளது.

Wednesday

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அனைத்து அன்பு றவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். 
விசேடமாக தாயகத்தில் சோகங்கள் இழப்புக்கள் 
என துயரங்களே வாழ்வாக, அன்றாட வாழ்விற்கே 
போராடும் எம் தொப்புள்கொடி உறவுகளின் 
துயரங்கள் நீங்கி, 
இனிய வாழ்வு மலர வாழ்த்துகிறேன்.

நேசமுடன் அம்பலத்தார்.


 தாயகவலம்

Thursday

இன்றைய இலங்கையில் சாத்தியமான போராட்டம்

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை ஆட்சி செய்த எந்த ஒரு அரசுமே தமிழர்களிற்குரிய உரிமைகளைப் பகிர்ந்துகொள்வதில் இதயசுத்தியுடன் நடந்துகொள்ளவில்லை. அதுமட்டுமன்றி தமிழ், சிங்களம், இஸ்லாமிய , மலையகதமிழர் என அனைத்துத் தரப்பிலும் உள்ள நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவோ அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவோ முற்படவில்லை.

Tuesday

மாற்றங்களைத் தேடி....

வடக்கின் வசந்தம்
கிழக்கின் உதயம்
என்றெல்லாம் சிங்கள அரசு பெரிதாக பிலிம்
காட்டும்.
ஆனால் அப்பாவித் தமிழனுக்கு வாய்கரிசியும் கிடைக்காது.
பாவம் சதாரண சிங்களவன். அவனுக்கு அரசாங்கம்

Friday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 7

முன்னைய பகுதிகளை படிக்க








செல்லம், செல்லம் நில்லுமப்பா என்று கொண்டு நான் வாசலுக்குப் பாய இடையிலை நின்ற மச்சான்,
ஓகோ அக்காவுக்குக் கை நீட்டுற அளவுக்குப் போட்டுதோ, இயலுமென்றால் கை வச்சுப்பாருங்கோ, அப்போ தெரியும் இந்த மச்சான் ஆரெண்டதை என்று சொல்லிக்கொண்டு பின்னால் பாய.......
ஏ து இடியோட்டன் ( ஏ மடையருகளே) என்று ஜெனி கத்தின கத்திலைதான் நாங்கள் ஒரு நிதானத்துக்கு வந்தம்.

Tuesday

சிகரங்களைத் தொடலாம்

 எழுத்து
ஒரு தவம்
ஒரு பிரசவம்
ஒரு ஊற்று.

ஒரு சிறந்த எழுத்தாளரின் படைப்புக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அடிக்கடி என்மனம் அசைபோடும்

Thursday

சுயத்தைத் தொலைத்தவர்கள்




எனது பதிவுகளை அதிகமான உறவுகள் ஓடிவந்து படிக்கிறீர்கள்.
அம்பலத்தார் ஆள் புதிதாக இருந்தாலும் கைலாக்குக் கொடுத்து ஊக்குவிக்கும்விதத்தில் பதில் கருத்துக்களும்
மெல்ல எழுதத் தொடங்கினீர்கள்.
ஆனால் சில துணிச்சலான கருத்துக்களை முன்வைக்கத்தொடங்கியதும்
யாரிந்த அம்பலத்தார்?

Wednesday

களத்தில் எமது போராட்டத்திற்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்திய இலங்கை அரசு
அதையும் தாண்டி ஒன்றுபடும் புலம்பெயர் தமிழரையும் அவர்களது ஒருங்கிணக்கப்படும் அரசியல் நகர்வுகளையும் ஆரம்பத்திலேயே ஒடுக்குவதற்கும் சர்வதேச அளவில் மிகவும் பலமானதொரு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பாகச் செயல்படும் விடுதலைப்புலிகளின்
சர்வதேச வலைப்பின்னல் புலம்பெயர் நாடுகளில் தாயகக்கோட்பாட்டை நோக்கிய
அரசியல் நகர்வுகளைச் செய்யவிடாது தடுக்கவும்
தனது பாரிய நரித்தனமான நடவடிக்கைகளைச் செய்யுமென்பது நிச்சயம்.
ஆதலால் நடந்தவற்றை நினைத்துக் கவலைப்படுவதில் காலவிரயம் செய்யாமல் இனிச் செய்யவேண்டியதென்ன என்பதைச் சிந்தித்துச் செயலாற்றவேண்டிய நேரமிது.
எந்த வார்த்தையைக் கேட்க எம்மனம் ஏங்குகிறதோ? ஆசைப்படுகிறதோ? அதை எவர் சொல்கிறாரோ அவர் நல்லவர். எமது மனம் ஏற்க மறுக்கும் யதார்த்தமான கருத்தை முன்வைத்தால் அவன் துரோகி. இந்த இரண்டுக்கும் அப்பால் சிந்திக்கமாட்டம். இந்த இரண்டு எல்லைகளுக்கும் அப்பால் யார் சரியான செயற்பாட்டாளன்? இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? அதை நடைமுறைப்படுத்த முயல்பவர் யார் என்பதைப் பகுத்தறிந்து செயல்படுங்கோ! சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட சமுதாயமாக இராமல் தயவு செய்து தயவு செய்து ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயல்படுங்கோ!
காலனித்துவகால அரசியல,;
இரண்hடாம் உலக யுத்தத்தை அண்டியகாலம்,
இதன் தொடர்ச்சியாக யுத்தத்தையொட்டித் தோன்றிய ஐநாவின் ஆரம்பகாலம்,
உலக அரசியலில் அணிசேரா அமைப்புச் செல்வாக்குச் செலுத்திய காலம,;
பனிப்போர்க் காலம்,
சோவியத்தின் சிதைவுடன் முடிந்த பனிப்போருக்குப் பிந்திய உலக அரசியல் நகர்வுகள்,
இரட்டைக் கோபுரத் தகர்ப்பிற்குப்பிந்திய அரசியல்,
இன்றைய உலகமயமாக்கலுடன் இணைந்த காலம்.
இந்த ஒவ்வொருகாலகட்டத்திலும் பல உரிமைப்போராட்டங்கள் நடந்துள்ளன.
அவற்றின் வெற்றி தோல்விகள், உலக வல்லாதிக்க நாடுகள் இவை சம்பந்தமாக நடந்துகொண்டமுறைகள்..........................
.
இப்படியாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கு. இந்தப் பெரிய உலகத்திலை ஒருசிறு துளி இலங்கை இதிலை வாழும் ஒருசிறு துளிதான் நாங்கள்.; ஆதலால்
எமக்கு அப்பால் உள்ள இந்தப்பாரிய உலக நகர்வுகளை நாம் ஒவ்வொருவரும் சரியாக புரிந்துகொள்வது தாயகம் நோக்கிய எமது பங்களிப்பிற்கும் சாதகமான நகர்வுகளிற்கும் அவசியமானதாகும்.
வெறுமனே எதிர்கருத்துக்கள்வைப்புது மட்டுமே சிறந்ததாக அமையாது அந்தவகையில் அடுத்த நடவடிக்கைளுக்கான தேடுதல்கள் மிக அவசியமானது.
இந்தவகையில் முதலில் நாம் செய்யவேண்டிய முக்கிய பணி புலம்டிபயர் இளையோரின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதில் எம்மில் சிலர் குளிர்காயள நினைப்பதுடன், அவர்களது தாயம் நோக்கிய செயற்பாடுகளைத் திசைதிருப்பிவிடுவதைத் தடுக்கவேண்டும்.
வீடுபுகுந்து அசிட் அடிக்கும் அளவிற்கு அவர்களை சிந்திக்கமுடியாத
வெறும் இனவெறி ஊட்டப்பட்டவர்களாக மாற்றவேண்டாம்.
புலம் பெயர் நாடுகளில் நடைபெறும் இம்மாதிரியான நிகழ்வுகள்
எமக்குச் சாதகமாக அல்லாது, எதிரிக்குச் சாதகமான விளைவுகளையே தரும்.
83 ஆண்டுக்கலவர காலத்தில் பாரிஸ் நகரில்
சிங்கள இளைஞருக்கு எதிராக கத்திக்குத்துப் போன்ற வன்முறைகளில்
ஈடுபட்டதன் எதிர்விளைவுகளை அன்று இளைஞனாக இருந்து நேரில் கண்ட
அனுபவத்தில் சொல்கிறேன் புலத்தில் வன்முறைப்போராட்டம் எமக்குப் பாதகமானது.
தமிழரசுக்கட்சி அதன் பின் வந்த அனைத்துப் போராளி அமைப்பக்கள்
என யாவும் இளைஞர்களை தெளிந்த அரசியல் சிந்தனையும்
தீர்க்கதரிசனமும் கொண்டவர்களாக, போராளிகளாக உருவாக்காமல்,
இன உணர்வுகளைத் தூண்டி
தமது இலக்கு நோக்கிய தெளிவான பார்வையற்ற
வெறும் இன உணர்வுமட்டுமே ஊட்டப்பட்டு
வளர்த்ததுவும் எமது பாரிய பின்னடைவிற்கும். அதன்பின் இன்று ஏற்பட்டுள்ள
அரசியல் வெற்றிடத்திற்கும் எம்மை வழிநடத்த
அடுத்தகட்டத் தலைமைத்துவத் தகுதியுடையவர்கள்
இல்லாதுபோனதற்கும் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது
இளைஞர்கள் எமது சிந்தனைகளிலிருந்துமாறுபட்ட கோணங்களில் சிந்திக்கிறார்கள்.
மாறிவரும் உலகியல் முறைமைகளுக்கும் இன்றைய
புறச்சுhழல்களிற்கும் ஏற்ப நவீன போராட்டவடிவங்களை முன் எடுக்கமுனைகிறார்கள்.
உதாரணமாக ஜனனி ஜனநாயகம் ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்குப் போட்டியிட்டதன் மூலம்
லண்டனில் எமது வாக்கு வங்கியன் பலம் ஐம்பதாயிரத்திற்கு மேல் என எடுத்துக்கட்டடியது
வாக்கு வங்கியை நம்பி அரசியல் நடத்தும் இங்கிலாந்து அரசியல் கட்சிகளிற்கு
எம்மை நோக்கிய பார்வையை இந்தநடவடிக்கை திருப்பியிருக்கும்.
தயவுசெய்து இளையோரை அவர்கள்பாணியில் புலம்பெயர் சுhழலிற்கேற்ப அவர்கள் போராட்டங்களைத் தொடரவிடுங்கள்.
கனவுகள் காணலாம் ஆனால் பகற்கனவுகள் காண்பதில் அரத்தமில்லை.
இன்றைய உலக அரசியல் முறைமையில் வல்லரசுகள் அல்லது
வல்லரசுப் பட்டியலில் இடம்பிடிக்கத் துடிக்கும் நாடுகள் தம்மிடையே
ஒருபோதும் நேரடியாக மோதிக்கொள்ளாது அப்படி மோதிக்கொள்ள ஏனைய
வல்லரசுகளின் அரசியல்நகர்வுகள் இடம்கொடாது. ஆனால் வல்லரசுகள்
தமது பலம் பலவீனம் என்பவற்றை வேறுவழிகளில் உரசிப்பார்த்து அறிந்துகொள்ளும்.
எங்கள் பிரச்சனையையும் அமெரிக்க, ஐரோப்பிய வல்லரசுகளுக்கெதிரான
தங்கள் பலத்தை தமது எதிர்ப்பின் வீரியத்தை உரசிப்பார்க்கும் ஒருகளமாகவே
சீனாவும், இந்தியாவும் பயன்படுத்தியிருந்தன. இதில் மேற்குலகைவிட
லோக்கல் சண்டியர்களின் கை ஒங்கி இருப்பதையே இலங்கைவிடயத்தில்
எதுவும் செய்யமுடியாமலும் அதை வெளியே காட்டிக்கொள்ளவும் முடியாமலும்
கைபிசைந்து நிற்கும் மேற்குலகின் நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன.

Tuesday

வன்னிக்காற்று வீசும் செய்தி.

 
பால் இல்லையா? பழம் இல்லையா?
பருக்கையற்ற கஞ்சியேனும் தா! எனக்
கதறிடும் மழலைகள்
மழலைகள் முகம்பார்த்து வாடிடும்
மங்கையர் இதயங்கள்.

கைதாகிக் கொலையுண்ட
காளையர் கன்னியர்
வேதனைக் கண்ணீருடன் அன்னையர் தந்தையர்

கல்வித்தடையால்
கவலையுறும் பாலகர்
மருந்துத்தடையால்
அவதியுறும் பிணியாளர்
வன்னிக் காட்டின்
இன்றைய நிகழ்வுகள்
கந்தலோ கோணியோ உடையாக
காயோ கிழங்கோ உணவாக
இலையோ வேரோ மருந்தாக
மரமோ மதிற்சுவரோ வீடாக

மரணப்படுக்கையில்
கையது கொண்டு மெய்யது பொத்தி
சுருண்டுகிடந்திடும் ஒருவர்
ஈனஸ்வரத்தில் முனகிடும்
வார்த்தைகள் சில இதோ!

"வன்னிப் பாதையில்
வந்திடும் வழிப்போக்கா
நின்றிடு சிலகணம்
மூடிவிடு என் விழியை
அடக்கம் செய் என் உடலை
விலங்கும் பறவையும்
இழுத்துப்போகுமுன்

ஆயிரம் வேட்டலில் சிறந்தது
அனாதைப் பிணத்தை அடக்கம் செய்வது
இருவரும் நாங்கள் ஈழத்தமிழரடா! 
தொப்புள் கொடிச் சொந்தமடா!"

புலம் பெயர்ந்திங்குவாழ் எம் உறவுகளே
கேட்குதோ உம் காதில் வன்னிக்காற்று
எமக்கு வீசிடும் செய்தியை
தட்டுங்கள் உங்கள் மனக் கதவுகளை
திறக்கட்டும் சிறிதேனும்.

................................................................
இந்திராணி திருநாவுக்கரசு.