நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Sunday

எல்லை காக்கும் தெய்வங்கள்


எம் தாயகமெங்கும் எமது இருப்பே கெள்விக்குறியாக்கப்பட்டுவரும் இன்றையகாலத்தில்
உரிமைப்போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தாயகபிரதேச எல்லைகள் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவருவதை முதலில் தடுக்கிற வழிகளை பார்க்கவேணும் சுவரிருந்தால் சித்திரம் வரையமுடியும். எமது இருப்பை பாதுகாத்துக்கொண்டால்தானே உரிமைக்காக போராடமுடியும். சிங்கள அரசியல்வாதிகளுக்கோ பாமர சிங்களமக்களுக்கோ தமிழர்மீது இருக்கும் பயத்தைவிட தமிழ்கடவுள்கள்மீதிருக்கும் பயம் அதிகம். போராட்டங்களின் வெற்றிக்கு வீரம்மட்டும் போதாது சாணக்கியமும் தேவை. இதையும்கூட நாங்கள் எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவேணும்.
இலங்கையில் தமிழர் எம் இருப்பென்பது சைவத்தின் இருப்பில் தங்கியுள்ளது என்பதை மறுக்க இயலாது. திருகோணமலை பிரதேசத்தின் எல்லைகாக்கும் தெய்வமாக கோணேசர் ஆலயம் ஒரு அரணாக நின்று அந்த பிரதேசத்தில் எம்மவர் இருப்புக்கு பெரும் பங்காற்றுது. திருகோணமலை பிரதேசத்தின் கிராமங்கள், எல்லைப்புற கிராமங்களிலும் காணாப்படும் நலிவடைந்த பாழடைந்த சிறுகோயில்களையெல்லாம் தேடிக்கண்டுபிடித்து திருத்தவேலைகளை செய்து பூஜை ஒழுங்குகளை செய்வது ஆயிரத்துக்குமேற்பட்ட வறிய சிறார்களின் கல்விக்கான தேவைகளை பூர்த்திசெய்யிறதென்று அங்கு எம்மவர் இருப்புக்கான உதவிகளை செய்யிறதிலை முன்னிற்குது.
நாங்கள் இந்த யாழ் குடாநாட்டுக்காரர்
குடாநாட்டுக்கை நல்ல நிலையில் இருக்கிற கோயிலுகளிலை இருக்கிற மண்டபம் போதாதென்று புதுசா கட்டுறது
பிறகு கோயிலை சனமில்லை என்று புலம்புறது,
இருக்கிற தேர் போதாதென்று புதிய தேர் கட்டிப்போட்டு பிறகு பழைய தேர் பாவிக்காமல் சும்மா கிடக்குதே என்று சனம் திட்டுமே தேரை கொத்தி விறகாக்கி அடுப்பில போடவும் முடியாது அதை எவன்ரை தலையில் கட்டலாம் என்று மண்டையை பிச்சுக்கொள்ளறதையும் ஊருக்கு நாலுகோயிலை பெரிசாக்கட்டிப்போட்டு பூசைக்கு ஐயரில்லை
விளக்குவைக்க ஆளில்லை
திருவிழாவுக்குக்கூட சனமில்லை என்று புலம்புறதுகளைவிட்டிட்டு
கோயிலுக்கும் சாமிக்கும் செலவுசெய்யவேண்டும், சேவை செய்யவேண்டுமென நினைக்கிறவை வன்னியின்ரை, திருகோணமலையின்ரை, மட்டக்களப்பின்ரை எல்லைப்புற கிராமங்களிலை இருக்கிற நலிவடைந்த கோயில்களை தேடி தத்தெடுத்து சிறப்பாக இயங்கச்செய்யுங்க்கோ. அந்த பிரதேசங்களில் இப்ப மிஞ்சியிருக்கும் எம்மவர் அங்கு தம் இருப்பை நிலைநிறுத்த இதுவும் ஒரு பங்களிப்பாக இருக்கும்.
என்னடா இது நாத்திகன் ஆத்திகம் பேசுகிறானே என நினைப்பியள் மதத்துக்காக மதம்பிடித்து மனிதம் தொலைத்து மிருகங்களாய் மாறுவதுதான் தப்பு.
மதத்தை சமூக மேம்பாட்டுக்கும் மானிடமேன்மைக்குமான ஒரு கருவியாக நல்லமுறையில் பயன்படுத்துவதில் தப்பே இல்லை.
வாழ்த்துக்கு இணைத்த இந்த படத்தை தம்பி சேந்தனின்ரை முகப்புத்தகத்திலதான் திருடினனான். இச்சிறுகோயில்கூட திருகோணமலையில் பராமரிப்பின்றி பாதி அழிந்துகிடந்து கோணேசர் கோயில் பரிபாலனசபையின் கண்களில் பட்டதால் புனருத்தாரணத்துக்கு தயாராகிறது. Kanagasabai senthan Shanmugaraja Jeevakhan மற்றும் நான் உங்கு வந்தபோது சந்தித்தும் பெயர்மறந்த கோணாசர் ஆலய பரிபாலனத்தினூடாக சேவைகள் செய்யும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் விசேடமாக எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். நீங்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழவும் உங்கள் பணிதொடரவும் வாழ்த்துகிறேன்.

No comments: