நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Friday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 7

முன்னைய பகுதிகளை படிக்க
செல்லம், செல்லம் நில்லுமப்பா என்று கொண்டு நான் வாசலுக்குப் பாய இடையிலை நின்ற மச்சான்,
ஓகோ அக்காவுக்குக் கை நீட்டுற அளவுக்குப் போட்டுதோ, இயலுமென்றால் கை வச்சுப்பாருங்கோ, அப்போ தெரியும் இந்த மச்சான் ஆரெண்டதை என்று சொல்லிக்கொண்டு பின்னால் பாய.......
ஏ து இடியோட்டன் ( ஏ மடையருகளே) என்று ஜெனி கத்தின கத்திலைதான் நாங்கள் ஒரு நிதானத்துக்கு வந்தம்.
நான்தான் முதலிலை ஒருமாதிரியாச் சுதாகரிச்சுக்கொண்டு.......
செல்லம் இப்ப என்ன நடந்திட்டுது என்று ஆளாளுக்கு விசர் ஆட்டம் ஆடுறியள்.
அவள் பாவம் கடிபட்ட தன்ரை நாயுக்கு ஒப்பரேசன் செய்ய 500 ஈரோ கைமாத்தாக தர இயலுமோ என்று கேட்டு வந்திருக்கிறாள். நீங்கள் என்னடா என்றால்....... 
மெய்யாலுமே அப்பா, நான் என்னவோ ஏதோ என்றெல்லே பதைச்சுப்போனன். காசு வந்த குசியிலை ஆடுறியள் என்றெல்லோ நினைச்சன்.
அதுதானே அந்த நாளிலை வராத கெட்டித்தனம் உங்களுக்கு இப்பவே வரப்போகுது. அதுசரியப்பா நான் ஆசை ஆசையா வந்தால்............ அவளை எதற்கு இடையிலை இழுத்தனிங்கள்.
நான் எங்கையடி இடையைப் பிடிச்சு இழுத்தனான், அவள்தான் அழுதுகொண்டு தோளிலை சாஞ்சவள். பாவமாக் கிடந்ததாலை பாசமாத் தலையைக் கோதிவிட்டன் அவ்வளவுதான் செல்லம்.
ஓகோ! உந்தக் கண்றாவி வேற நடந்திருக்கோ? கண்டவளிலையெல்லாம் பாசம் என்று சொல்லுறதுக்கு வெட்கமாக இல்லை என்று திட்டவும்தான் எனக்கு விளங்கியது அவள் என்னத்தையோ சொல்லவர நான் எதையோ உளறிப்போட்டன் என்றது.
அது வந்து உம்முடைய அழகுக்குக்கிட்ட ஆரும் நிற்க இயலுமே, ஏதோ ஒரு பேச்சுக்கு அவளின்ரை அழகுக்கு......... என்று ராத்திரி எதோ உளறிப்போட்டன். அதைப்போய் இப்படிப் பெரிசுபடுத்துவீர் என்று கனவிலையும் நினைக்கேல்லையப்பா.
அதுதானே அண்டைக்கு உவள் ராசுக்குட்டியின்ரை மனிசி தலையிலை ஒரு வெள்ளை முடியைக் கண்டிட்டு என்ன அக்கா வயசு போட்டுது போல என்று சொல்லும்போதே நினைத்தனான் நக்கலுக்குத்தான் சொல்லுறாள் என்று என்னப்பா நான் சொல்லுறது சரிதானே?இப்பவும் அப்பபோலத்தான் இருக்கிறன் என்ன? அது சரி மத்தியானம் என்ன சாப்பிட்டனிங்கள்.
ஆசை ஆசையாக் கிட்ட வரேக்கை எந்த மனுசனாவது உப்பிடிக் கதைப்பானே? உந்தக் கதையளைக் கேட்டால் எவளுக்குத்தான் கோபம் வராது. அதுதானப்பா கோபத்திலை சமைச்சுக்கூட வைக்காமல் போட்டன். சரி சரி வாங்கோ எல்லாருமாகப்போய் ரெஸ்ருவாரண்டிலை சாப்பிடுவம் என்று ஒருபடியாக செல்லம்மா சமாதானமாக,
என்னக்கா உனக்குச் சூடு சுரணையே கிடையாதே? கண்டவளின்ரை தலையை பாசமாக் கோதுகிறவனுக்கெல்லாம் மரியாதை குடுத்துக்கொண்டு உவனோட குடித்தனம் நடத்துறதுக்கு வெட்கமா இல்லை? வா கெதியா நான் உன்னை வச்சுக் காப்பாத்துறன் என்று டயலாக் விட்டபடி செல்லம்மாவை இழுத்துக்கொண்டு மச்சான் காரடிக்குப்போக.........
நீங்கள் எத்தனைபேரடா அடுத்தவனின்ரை குடியைக் கெடுக்கிறதென்று முடிவெடுத்துக்கொண்டு இங்கை வந்திருக்கிறியள் என்று எட்டி மச்சானின்ரை சேட்டை நான் பிடிக்க.........
அவனெண்டால் அக்கா என்ரை சேட் மட்டும் கிழியட்டும் அதுக்குப் பிறகு தெரியும் மச்சானுக்கு நான் ஆரெண்டு என்று கத்த........ 
நானும் விடாமலுக்கு,
அட சும்மா விலாசம் காட்டாதை, நான் அனுப்பின காசிலை இங்கு வந்தபிறகுதானேயடா கிழியாத சேட்டையே நீ கண்டனி.
இஞ்சருங்கோ அப்பா அவன்தான் சின்னப் பெடியன் கதைக்கிறான் என்றால் நீங்களாவது பேசாமல் இருங்கோவன் என்று செல்லம்மா கெஞ்சவும், நான் இன்னும் கொஞ்சம் பந்தாவாக செல்லம் நீ இந்த வீட்டிலை இருக்கிறதெண்டால் இனி உவன் இந்த வீட்டுக்குள் கால் எடுத்து வைக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்குள் போக
ஜெனி, ஐயோ அம்பல் என்றுகொண்டு ஓடியந்து கட்டிப்பிடிச்சுக்கொண்டு அழத் தொடங்கினாள்.
நானெண்டால் எல்லாத்தையும் மறந்துபோய் ஜெனி, ஜெனி இஞ்சை பாரம்மா நீ அழக்கூடாது. அதுக்கிடையிலை இப்ப என்னாச்சுதென்று அழுகிறாய்? நான் இல்லையே உனக்கு........... என்று வழியத்தொடங்கினன்.
அவளோ போச்சு எல்லாமே போச்சு வாழ்கையே போச்சு என்று விம்மினாள். விடு ஜெனி இதுக்குப்போய் நீ ஏன் அழுகிறாய் We are Srilankan.it's normal.... நாங்கள் இலங்கைக்காரர் எங்களுக்கு இதெல்லாம் சகசம். அடிச்சுக்குவம் பிடிச்சுக்குவம் விடிஞ்சா எல்லாம் சரியாப்போகும். இது நான்
அம்பல் செல்லம்மா இல்லையெண்டால் உனக்கு ஒரு பொன்னம்மா. ஆனால் எனக்கு.............. ஜெனி விசும்பினாள். 
அவளின்ரை சொந்தப் புருசனை நீதான் ஏதோ மடக்கிப்போட்டாய் எண்டமாதிரி கொஞ்சலைப்பார். விடு அக்கா உவளை வெட்டிச் சரிச்சால்தான் என்ரை கோபம் அடங்கும் பொரிஞ்சபடி மச்சான் அடுக்களைப் பக்கம் எட்டிப்பாய எனக்கும் அப்பதான் மின்னலடிசமாதிரிக் கிடந்தது. இவள் பாவி கடைசியிலை அடிமடியிலை கை வைக்கிறாள் போலக் கிடக்குது என்று நினைத்துக்கொண்டு இஞ்சை பார் ஜெனி அந்தமாதிரி எண்ணத்திலை நான் உன்னோட பழகேல்லை......... என்று தொடங்கவும்
இதுகள் எதையும் கவனியாமல் செல்லம்மா, ஐயோ உந்தாளின்ரை கதையளை நம்பி நம்பி ஏமாந்து போனனேயடா என்று ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்
எனக்கென்றால் என்ன செய்யுறது எவரைப் பிடிக்கிறது எவரை விடுகிறதெண்டு ஒன்றுமாப் புரியேல்லை. உங்களுக்காவது புரிஞ்சால் சொல்லுங்கோவன்.


நேசமுடன் அம்பலத்தார்

  
Submitted by N.paraneetharan (not verified)  - 04:04.
வணக்கம்
அம்பல்த்தார் ஜயா எழுதினால் அது வயிறு புண்ணாகிற விடயம் என்று எல்லோரிற்கும் தெரியும். வாழ்த்துக்கள் வாழ்த்தக்கள்
எல்லோரிற்கும் இடையில்தான் பிரச்சினை. அது உங்களிற்கும் வந்திட்டுதோ கவனம் ஜயா !

நகைச்சுவை
Submitted by eshapdp jhkiur;nry;td;. (not verified)  - 06:18.
நகைச்சுவைக் கூடாக பல குடும்ப சிக்கல்களை எடுத்து சொல்லி வருகிறீர்கள். இதற் கூடாக ஆண் பெண் மனதை தெட்டத்தெளிவாக்கியும் வருகிறீர்கள். நாம் ஏதோ நினைத்துக்கொண்டு கதைக்க பலர் தப்பாக புரிந்து கொள்கின்ற நிலையால் தான் வாழ்வில் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி உள்ளது.
அதை நன்கு புலப்படுத்தி வருகிறீர்கள். எதையும் ஆற அமர்ந்து பேசிக்கொண்டால் பல சிக்கல்கள் அவிழ்க்கப்படும் என்கின்ற பெரியதொரு உண்மையை அழகாக புரிய வைக்கிறீர்கள்.
அதுசரியப்பா நான் ஆசை ஆசையா அணைக்க வந்தால்............
அவளை என்னத்துக்கு இடையிலை இழுத்தனிங்கள்.......
சரி உளறியாச்சா. ..!! அடுத்த பூகம்பம் ஆரம்பம்: முருகா முருகா
ஆனாலும் செல்லம்மா நல்லவா உங்களில் நலஇல அன்பு. உங்களை புரிந்து கொள்கின்ற பக்குவம் அவவிடம் நிறைய உள்ளது.
இடையிலை நிண்டு கத்தி தீட்டி தாறவையை ஒதுக்கி வைச்சிடுங்கோ அது தான் குடும்பத்துக்கு நல்லது.

23 comments:

கவி அழகன் said...

கோதாரி விழுந்த ஜெனியாள குடுபத்துக்க ஒரே குளப்பம்

போற இடத்தில பொத்திக்கொண்டு இருக்க முடியாது இந்த அம்பலத்தாருக்கு

பெரிய பாசமலர் சிவாஜி கணேசன் நினைப்பு

மாய உலகம் said...

உங்களுக்காவது புரிஞ்சால் சொல்லுங்கோவன்.//

ஹா ஹா சிரிப்புதான் வந்தது...

K.s.s.Rajh said...

ஒன்னுமே புரியலை சிரிப்புதான் வருது..நல்ல கதை

கோகுல் said...

தலையை கோதிவிட்டது ஒரு குத்தமா?

ஹா ஹா!ஒரெ சிரிப்பு தான் போங்க!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஹா.ஹா..

M.R said...

ஹே ஹே எனக்கும் புரியல ஹா ஹா

சீனுவாசன்.கு said...

சொல்லமாட்டேன் யாரும் கேட்டால்!புரிஞ்சாதானே!ஹி...ஹி...

இராஜராஜேஸ்வரி said...

அருமையான கதை!

ஹேமா said...

கனநாள் வரேல்ல இந்தப்பக்கம்.நிறைய எழுதியிருக்கிறியள்.சிரிக்கலாம்போல இருக்கு.எல்லாத்தையும் வாசிக்கப்போறன் இனித்தான்.நீங்கள் தொடருங்கோ !

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

குடும்பத்தில் நடக்கும் குசும்புகள் ஹா.ஹா..

அம்பலத்தார் said...

சிவாஜிகணேசன் நடிச்சா ரசிக்கிறியள் என்ரை நடிப்பைப் பார்த்தால் சிரிப்பாக்கிடக்கோ கவி அழகன்

அம்பலத்தார் said...

சிக்கலிலை மாட்டி நொந்து நூலாய்போய் நிற்கிற எனக்குத்தான் ஒன்றும் புரியேல்லை என்றால் பார்த்துக்கொண்டு நிற்கிற கனபேருக்கும் அதேகதிதானோ? யாருக்குப் புரிந்து யார்தான் என்னைக் காப்பாற்றவாறியளோ?

அம்பலத்தார் said...

தலையைக் கோதிவிடுவது குற்றமில்லை அது உங்களிற்குப் புரியுது கோகுல், ஆனால் என்ரை ஆத்துக்காரிக்கு....?

அம்பலத்தார் said...

கனகாலத்திற்குப்பின் வந்திருக்கிறியள் ஹேமா ஆறுதலாக உட்கார்ந்து படித்திட்டு பாராட்டோ குட்டோ எதோ ஒன்றைக் கொடுங்கோ.

அம்பலத்தார் said...

வணக்கம் சாருஜன். உங்கள் முதல் வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

விமலன் said...

வணக்கம் சார் நலம்தானே?நல்ல பதிவு.வாழ்த்துக்கள்/

Anonymous said...

புரியலை...புரியலை...புரியலை...கதை ...
தலையைக் கோதிவிடுவது குற்றமில்லை -:)

நிரூபன் said...

வணக்கம் ஐயா...
அவளை எதற்கு இடையிலை இழுத்தனிங்கள்.
நான் எங்கையடி இடையைப் பிடிச்சு இழுத்தனான், //

ஹே...ஹே...சிலேடை எல்லாம் பாவிச்சுக் கலக்கிறாரே ஐயா

நிரூபன் said...

சூப்பரா எழுதியிருக்கிறீங்க ஐயா.
எனக்கென்னவோ பக்கத்தில இருக்கிறதை வைச்சுக் கொண்டு, கொஞ்சம் எட்ட இருக்கிறதைப் பார்த்து ரசிக்கிறதில தப்பில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.

ஹே...ஹே...

தலை கோதி விட்டதுக்கு ஒரு ரணகளமா?
இல்ல நீங்க கனவில அவங்களைப் பற்றி நினைத்ததற்காக ரணகளமா?

அம்பலத்தார் said...

எனக்கென்னவோ பக்கத்தில இருக்கிறதை வைச்சுக் கொண்டு, கொஞ்சம் எட்ட இருக்கிறதைப் பார்த்து ரசிக்கிறதில தப்பில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.
//

வணக்கம் நிரூ இந்த டயலாக்கை கவனமாக ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். கொஞ்சக்காலத்தில் கல்யாணத்திற்கப்புறம் இதே கொள்கைதானோ என்று பார்க்கலாம்.

Anonymous said...

அதென்ன ஒரு படம் ஜெனியோட, மற்ற சிலை செல்லம்மாவோடயோ? நடத்துங்கோ!,நடத்துங்கோ!

அம்பலத்தார் said...

Anonymous said...

//அதென்ன ஒரு படம் ஜெனியோட, மற்ற சிலை செல்லம்மாவோடயோ? நடத்துங்கோ!,நடத்துங்கோ!//
அப்ப என்ரை செல்லாம்மா ஜெனியைவிட வடிவென்று சொல்லுறியள்.