நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Sunday

நட்பொன்று உருவானநேரம்

  • இணையத்தள நட்புகள் எப்படியெல்லாம் உருவாகிறது.  சிலகாலங்களிற்குமுன் முகப்புத்தகத்தில் எனக்கு  ஒரு நட்புக்கோரிக்கை வந்தது அந்த நாட்களில் நடைபெற்ற சுவாரசியமான தொடர்பாடல் இது
  • அம்பலத்தார்03 செப்டம்பர் 2010
    • அம்மா தாயே தங்களை யாரென்று புரியவில்லையே? பரித்தித்துறை பெரிய ஊராச்சே. உங்களை அறிமுகப்படுத்துங்களேன்.
  • 12 செப்டம்பர் 2010
    • I am really sorry. I thought it was my friend Mahen. I just realised it's not him. Sorry for the inconvenience.
  • பனனர அமபலததர12 செப்டம்பர் 2010
    • it`s OK.don`t worry take it easy.But I know one Mahen Gunawardene from Colombo

Saturday

மீண்டும் எட்டப்படும் புதிய சமநிலைகள்

 கடுமையான அடக்குமுறை மற்றும் இராணுவத்தின் அளவிற்குமீறிய பிரசன்னமும் தலையீடுகளும், ஒட்டுக்குழுக்களின் அராஜகம் எனப் பலதும்  நிறைந்துள்ள ஓரிடத்தில் ஆளும் அரச கூட்டணிக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடபகுதியில் ஈட்டியுள்ள வெற்றி, எல்லாவற்றுக்கும் மேலாகத் தெரிவிக்கும் கருத்து,

தாயகவலம்




Wednesday

இவர்களின் கதை சுவாரசியமானது.




 ஸ்பெயினில் தங்கியிருந்த நாட்களில் தினமும் மாலைவேளைகளில் நாம் தங்கியிருந்த விடிதிக்கு எதிர்ப்புறமாக உள்ள நடைபாதையில் இதேகோலத்தில் இந்த இருவரும் வந்து நிற்பதை அவதானித்ததில், ஏன் அவர்கள் தினமும் இதே கோலத்தில், இதே இடத்தில் நிற்கிறார்கள் என்பதை அறியாவிட்டால் மண்டையே வெடித்துவிடும்போல இருந்தது. 
சரி அவர்களிடமே நேரில்  கேட்டுவிடுவதென்று எண்ணி அவர்களிடம் சென்று ...
.
வணக்கம்! 
நீங்கள் தப்பாக நினைக்கவில்லையாயின் தாங்கள் தினமும் இதே இடத்தில், இதே நேரத்தில், இதே கோலத்தில் நிற்பதன் காரணத்தை அறிந்துகோள்ளலாமா? எனக்கேட்டதற்கு
நிச்சயமாக முதலில் இலங்கையரா என அறிந்து கொள்ளலாமா எனப் பதில்கேள்விகேட்க,
.ஆம் என்று சொன்னதும்.
நாங்கள் வாழ்வின் பல படிமானங்களையும் அனுபவித்து நீண்ட நெடும் பயணத்தின்பின் இந்தநிலைக்கு வந்திருப்பதற்கு உங்களவர்கள்தான் ஒருவிதத்தில் மூலகாரணமாக இருந்தார்கள். என்று கூற
நான் ஒன்றும் புரியாமல் அவர்களைப் பார்த்து முழிக்கவும், பயப்படவேண்டாம் நடந்தவை எல்லாம்  நன்மைக்கே நடந்தன. எங்களுடன் பேசுவதற்கு சிலமணித்துளிகள் மீதமிருந்தால் சிறிது விபரமாகப் பேசலாமே என அவர்களில் ஒருவர் கேட்க, 



 



அவர்களுடன் பகிர்ந்துகொண்ட 
அடுத்து வந்த சில மணித்துளிகளும் மிகவும் சுவாரசியமாகக் கழிந்தது.  
அந்த விடயங்களை நாளை நேரம் 
கிடைக்கும்போது உங்களுடன் 
பகிர்ந்துகொள்கிறேன்

Tuesday

பெண்களின் உலகத்தில் கைப்பையும் காலணியும்





பெண்களின் உலகத்தில் காலணிகளிற்கும் 
கைப்பைகளிற்கும் என்றும் தனி இடம் உண்டு. 
அவர்களிற்கு எவர்மீதோ அல்லது 
வேறெதன்மீதோ தோன்றிய காதல் மறையலாம். 
ஆனால் காலணிகள்மீதும் கைப்பைகள்மீதும் 
உள்ள காதல் மறையவேமறையாது.



எனது மகளிடமும் முப்பதிற்கு மேற்பட்ட கைப்பைகளும் இருபத்தைந்து சோடிகளிற்குக் குறையாத காலணிகளும் உண்டு.ஆனாலும் ஒவ்வொருதடவை கடைத்தெருவிற்குச் சென்றாலும் ஒரு சோடி செருப்போ அன்றி ஒரு கைப்பையோ வாங்காமல் விடுவதில்லை.






மகளின்
சேகரிப்பிலுள்ளவற்றில்
சில




 







இந்தக்கோடையில் பெரும்பாலான கால்களை
அலங்கரித்த காலணிவகைகள்




















கீழே உள்ளவை பின் இரவு நேரத்தில் விவகாரமான தொழிலிற்காகத் தெருவோரம் நின்ற பெண்களின் கால்களை அலங்கரிக்கும் காலணிகள்


Sunday

வாயிற்கு ருசியாக காய்கறி பஜ்ஜி

 


குண்டுமிளகாய் கோவா காரட் வெங்காயம் சுகினி போன்ற காய்கறிவகைகளை சிறிதாக அரிந்து  தேவையான அளவு உப்புச் சேர்த்து மைதாமாவில் பிசைந்து பொரித்து எடுக்கப்படும் இந்தச் சிற்றுண்டி மிகவும் சுவையானது குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்

Thursday

வெற்றி நாயகன்





எங்கட கூத்தாடி குரூப் தயாரிச்ச  நாடகங்களிலையே எனக்கு பிடிச்ச நாடகங்களிலை ஒன்று.
என்ரை செல்லம் இந்த நாடகத்துக்காக என்னையும் பாலா அண்ணையையும் பெண்டுநிமித்தினதுபோல வாழ்க்கையிலையே வேர எதுக்கும் செய்யேல்லை.

பயணம்.... பயணம்...... பயணம்.................... 2

 பயணம்.... பயணம்........ பயணம்....................... 2
குடிவரவுத்துறை அதிகாரி பேச்சுமூச்சில்லாமல் விசாவைக்குத்தி உள்ளேபோக அனுமதித்தார். அப்பாடா என்று மெல்ல நடந்து, அடுத்து வந்த சுங்கப் பரிசோதனைக்கான் வரிசையில் போய் நின்றன். எனது முறை வந்ததும் சுங்க அதிகாரியின்முன் போய் நின்றால். 
என்னை மேலும் கீழும் பார்த்த அவர் அந்தப்பக்கமாக ஓரமாக நில் என்றார். நானுமோ நிற்கிறன் நிற்கிறன் நின்றுகொண்டே இருக்கிறன். வரிசையிலை நின்றவனெல்லாம் போய்க்கொண்டே இருக்கிறான். எனக்கெண்டால் பயமாகவும்கிடக்கு, அப்பப்ப ஏக்கமா அந்த அதிகாரியைப் பார்த்தால் 
ஒரு முறாய்ப்பு, 
இடையிடையே மெதுவா சார்... சார்...... என்று கூப்பிட்டாலும் மனுசன் மசியிறதாய் இல்லை அதற்குமொரு முறாய்ப்புத்தான். 
இப்படியே வரிசையிலை நின்றவனெல்லாம் போய்முடிஞ்சுது. 
நான் பேசாமல் அதிகாரியின்முன்னாலை போய் நின்றன்.
என்ன?
சார் நான் போகலாமோ?
என்ன வச்சிருக்கிறாய்?
கையிலை வெற்றிலை, பையிலை உடுப்பு.
வெற்றிலை கொண்டுவர அனுமதியில்லை.
சார்....  என்று நான் மெதுவா தொடங்கமுன்னம்
அவர் கோபமா வெற்றிலையை இங்கை ஒப்படைச்சிட்டு பாஸ்போட்டிலை எழுதி வாங்கிக்கொண்டுபோ. நாட்டைவிட்டுத்திரும்பும்போது பாஸ்போட்டைக் காட்டி வெற்றிலையை திரும்பப் பெற்றுகொண்டு போகலாம்.
சார்  சார்... அது வந்து நான் சாப்பிடக் கொண்டு வந்தது.
பல்லைப் பார்த்தால் அப்படித்தெரியேல்லை.
சார்..
வச்சிட்டுப்போ.
போடாமல் இருக்க ஏலாது சார்.
ஓ அப்படியே?
வேறென்ன வச்
சிருக்கிறாய்?
வேறு... வேறு ....   பையிலை இரண்டுபோத்தல் விஸ்கி.
ஓ அது வேறையோ, வேறென்ன வைச்சிருக்கிறாய்.
ஒன்றும் இல்லை
நன்றாக யோசித்துச்சொல்.
இல்லை.
அப்ப திரும்பி நில்! சோதனைபண்ணவேண்டும் என்றார் அதட்டலாக.
பயத்திலை அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுச் சட்டென்று திரும்பி நின்றன்.
மெதுவாகப் பின்புறமாகத் தடவிக்கொண்டுவந்தவர்,
சட்டென்று இது என்ன என்றார்.
மணிப்பர்ஸ்
எடு வெளியிலை.
எடுத்தன்
உள்ளே என்ன இருக்கிறது காட்டு பார்க்கலாம்
அப்போதான் எனக்குப் புரிந்தது. ஓகோ! இதுதான் விசயமோ என்று நினைத்துக்கொண்டு பர்ஸ்சைக் கொஞ்சமாத்திறந்து ஒரு பத்து ரூபா நோட்டை எடுத்து நீட்டினன்.
No Rupee என்றார்.
ஒற்றை டாலர் நோட்டொன்றை எடுக்கவும் சட்டென்று பிடுங்கிச் சட்டைப் பையிலை போட்டவர் வெற்றிலைக்கட்டிற்காலை இரண்டு வெற்றிலையை உருவி வாயிலை திணிச்சுக்கொண்டு கவனம் வாசலிலை நிற்கிற கண்டவனிட்டையும் கொடுத்து ஏமாந்திடாமல் பத்திரமாக விடுதிக்குப் போய்ச்சேர் என்றார் நட்போடு.
இனிமேல்தான் பெரிய சோதனைகள் காத்திருக்கிறதென்று தெரியாமல் அப்பாடா வாழ்க்கையிலை முதல் முதலாக ஒரு விடயம் வெற்றிகரமாக முடிச்சிட்டன் என்ற பூரிப்போட மெதுவாக வெழியே நடந்தன்

 




பயணம் தொடரும்.............


பயணம்.... பயணம்...... பயணம்.................... 1

பயணம்.... பயணம்........ பயணம்....................... 1

வாழ்க்கையில் கடந்த முப்பது ஆண்டுகளில் இருபது நாடுகளிற்குமேல் பயணம் செய்ததில் கற்றதுவும் பெற்றதுவும்தான்  மிகமிக அதிகம்.  பலமுறை குப்புற விழுந்ததுவும் உச்சங்களைத்தொட்டதுவும் அற்புதமான அனுபவங்கள். அவை உங்களிற்கும் சுவாரசியமாக இருந்தால் தொடர்ந்து படியுங்கோ.                  
1982 ம் ஆண்டு அடிமை வாழ்க்கையைவிட அகதி வாழ்க்கை மேல் என்ற தப்பான எண்ணத்திலை ஒருசில ஆயிரம் ரூபாய் பணத்துடன் புறப்பட்டு பம்பாய் போய்ச்சேர்ந்தேன். கொஞ்சக்காலம் அங்கு  சுற்றித்திரிந்தபின் அப்படியே பாகிஸ்தான் போகலாம் என்று புறப்பட ஆயுத்தமாகும்போது கேள்விப்பட்டன் பாகிஸ்தானிற்கு வெற்றிலை கொண்டுபோறது தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் கொண்டுபோய்விட்டம்மென்றால் நல்ல விலைக்கு விற்கலாம் என்று, சரி என்னதான் நடக்கிறதென்று பார்ப்பம் என்ற நப்பாசையிலை இரண்டு கையிலையும் காய்ந்த வாழையிலையில் சுற்றிக்கட்டின பெரிய வெற்றிலைப் பொட்டலங்கள். ஒவ்வொன்றிலையும் ஆயிரம் ஆயிரம் வெற்றிலை.  முதுகிலை ஒருசிறு பையில் ஒருசில உடுப்புக்களிற்கு இடையிலை இரண்டு விஸ்கிப்போத்தல்கள் காலில் ஒருசோடி தேய்ந்த ரப்பர் செருப்பு என ஒரு தினுசான கோலத்தில் பாகிஸ்தான் விமானநிலையத்தில் போய் இறங்கினால் .................
அங்கு என்ன நடந்தது என்பதை............
வேலையிற்குப்போய் வந்து சொல்கிறேன். அதுவரை கொஞ்சம் பொறுத்திருக்கத்தான் வேண்டும்......................


அம்பலத்தார்

மயக்கும் மட்றிற் - ஸ்பெயின்


 
ஒருவாரகாலச் சுற்றுப்பயணமாக ஸ்பெயின்
நாட்டிற்குச் சென்றிருந்தபோது தெருவோரம் 
கிளிக்செய்ததில் கிடைத்த இளசுகளின் கோடைகால உடைகளின் அணிவகுப்பு.









 எத்தனை அழகு கொட்டிக்கிடக்கிறது 
இந்த அழகுமலர்களின் ஊர்வலத்தில்





 காற்றில் பறக்கவிட்ட கூந்தலும்
கருப்புக்கண்ணாடியும்கூட அழகுதான்

 














 
இளைஞர்களின் அபிமான உடையாக என்றுமே
 சாதாரண T Shirt நீண்ட அரைக்காற்சட்டையுமே உள்ளது.