நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Sunday

ஆண்மைக்கு அழகு


நாங்க பலரும் கல்யாணம்கட்டி 1,2,3...... என்று பிள்ளையும் பெத்துக்கிறம்.
நல்லதொரு தம்பதிகள் என்று சுற்றியுள்ளவங்க பேசுறதைகேட்டு பெருமைப்பட்டுக்கொள்ளுகிறம்.
ஆனால் அதைத்தாண்டி உள்மன மகிழ்ச்சி, கலவியெங்கிற விசயங்களில எத்தினைபேர் மகிழ்ச்சியும் திருப்தியுமா இருக்கினம் என்றுகேட்டால்

ஆண்மைக்கு அழகு

நாங்க பலரும் கல்யாணம்கட்டி 1,2,3...... என்று பிள்ளையும் பெத்துக்கிறம்.
நல்லதொரு தம்பதிகள் என்று சுற்றியுள்ளவங்க பேசுறதைகேட்டு பெருமைப்பட்டுக்கொள்ளுகிறம்.
ஆனால் அதைத்தாண்டி உள்மன மகிழ்ச்சி, கலவியெங்கிற விசயங்களில எத்தினைபேர் மகிழ்ச்சியும் திருப்தியுமா இருக்கினம் என்றுகேட்டால்
பெரும்பாலான ஆம்பிளைங்களும் அதிலென்ன குறைச்சல் எல்லாம் நல்லபடியத்தான் போகுது ஜாலியாத்தான் இருக்கிறம் என்றுதான் சொல்லுவினம்.
ஏனென்றால் பெரும்பாலான பெண்களும் புருசன் எள் என்றுசொல்ல முன்னம் எண்ணையா நிக்கிறாங்க.
புருசன் பெருமை பேசாத நாளே இருக்காது,
புருசன்ரை விருப்பு வெறுப்புகளை தன்ரை விருப்புவெறுப்புகளா நினைத்து செயல்படுறா,
விதம் விதமா சமைச்சுப்போடுறா,
வீட்டுவேலையளையெல்லாம் ஓடி ஓடி செய்யிறா,
கட்டில்ல எப்ப பெண்டாட்டியை தேடினாலும் சலித்துக்கொள்ளாமல் ஒத்துழைக்கிறா
ஆனபடியால் நாங்க ஆம்பிளைங்கபாடு ஜாலிதான்.
ஆனால் இதையே கொஞ்சம் மற்றப்பக்கமாக புரட்டிப்போட்டால்.
தங்க மனதுக்குள்ள இருக்கிற எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் எரிச்சலையும்கூட வெளியே சொல்லமுடியாமல் சம்பிரதாயத்துக்கு நாங்களும் நல்லாத்தான் இருக்கிறம் என்று சொல்லிக்கொண்டு எத்தனை பெண்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறாங்க.
என்னதான் வாய்க்குருசியா சமைச்சுவச்சாலும் வந்து நல்லா ஒரு பிடிபிடிச்சுட்டு கம்மென்றுவாயை மூடிட்டு அடுத்த அலுவலுக்கு போயிடுவம்.
ஒரு சின்னப் பாராட்டு, கன்னத்தில ஆசையா ஒரு முத்தம் இதையெல்லாம் செஞ்சா நம்ம ஆண்மைக்கே இழுக்கெங்கிறமாதிரி பேசாம இருந்திடுவம்.
பெண்டாட்டியோட சின்னச்சின்ன ஆசைகள் விருப்பு வெறுப்புகள் எதிர்பார்ப்புகள் பற்றி அறிஞ்சுகொள்ளணும், அவதானிக்கணும் என்று நம்மளுக்கு தோன்றவும் மாட்டுது அதுக்கு நேரமும் பொறுமையும் வேற இருக்காது.
இராத்திரி எங்களுக்கு ஆசைவந்திட்டாப்போதும் பெண்டாட்டியோட விருப்பத்தை கணக்கிலெடுக்கவேமாட்டம்.
சிலசமயம் அவ அதிக வேலைசெஞ்ச அலுப்பில இருப்பா,
மாதத்தின்ரை அந்த மூன்றுநாளைத்தாண்டி இரண்டுநாள்தான் ஆகியிருக்கும் சற்று பெலயீனமா இருப்பா.
இல்லை வேறு எதோ காரணத்தினால அன்று ஈடுபாடில்லாம இருப்பா
ஆனால் அதையெல்லாம் தெரிஞ்சுக்கிற எண்ணமே எங்களுக்கு வராது அவளுக்கும் அதை சொல்லுற தைரியமும் வராது.
பக்கத்திலபோற பேட்டை பாய்ஞ்சுபிடிச்சு தன்ரை காரியத்தை முடிச்சுக்கிற சேவலைப்போல நாங்களும் சட்டுப்புட்டென்று காரியத்தை முடிச்சிட்டு இழுத்துப்போர்த்துக்கொண்டு படுத்து குறட்டைவிட்டு தூங்கிடுவம்.
அவளுக்கு இன்னும் கொஞ்சநேரம் இன்பமாய் இருக்கலாம் என்று தோன்றலாம்
அல்லது புருசன் தோளில் தலைசாய்த்துப்படுத்து அந்த இனிய கணத்தை இன்பமாய் இரைமீட்கும் எண்ணம் வரலாம்
அல்லது கணவனது கணகணப்பான அரவணைப்பில் கண்மூடி தூங்க நினைக்கலாம்.
ஆனால் பெரும்பாலும் இதுக்கெல்லாம் சான்சே இருக்காது.
பெண்ட்டாட்டிக்கும் உறவு மகிழ்ச்சியையும் திருத்தியையும் கொடுத்ததோ என்ற சிந்தனையே எங்களுக்கு வராது ஏன்னா நம்பபக்கம் எல்லாம் திருத்தியா அமைஞ்சிருக்கும்.
அதோட எங்களைப்பொறுத்தவரை அவ எங்க ஆசைகளை தேவைகளை நிவர்த்திசெய்கிற ஆசா பாசமற்ற பொம்மையாச்சே.
சிந்தியுங்க நண்பா பெண்ணுக்கும் மனசிருக்கு அதிலையும் விருப்பு வெறுப்புகள் இருக்கு.
பெரும்பாலும் ஆண்களின்ரை காதல் காமத்தை அடித்தளமாக வைத்தே கட்டியமைக்கப்படும் இது இனவிருத்திக்காக இயற்கை செய்த விதி.
ஆனால் பெண்களின் காதல் பெரும்பாலும் அன்பினாலும் தனது சுக துக்கங்களில் தனக்கொரு துணையாக பாதுகாப்பாக இருப்பானென்ற நம்பிக்கையிலுமே கட்டமைக்கப்படுகிறது.
இவ்வளவுநேரமா நான் சொன்ன சின்னச்சின்ன விசயங்களை புரிந்துகொண்டு ஆம்பிளைங்க நடந்தால்......
பெண்களின் வாழ்க்கைமட்டுமில்லை எங்கட வாழ்க்கையும் இறுதிநாள்வரை இன்பமாய் அமையும்.
ஆண்மைக்கு அழகு பெண்களை அடிமைப்படுத்தி ஆள்வதல்ல
பெண்களை அரவணைத்து அன்புசெய்து வாழ்வதே ஆண்மைக்கு அழகு.
இந்த இடத்தில இன்னுமொரு விசயத்தையும் சொல்லவேணும்.
இப்பொழுதெல்லாம் பெண்ணுரிமை பெண்விடுதலை என்ற விசயம் அதிகமாக பேசப்பட விவாதிக்கப்பட பெண்விடுதலையென்பது ஆண்களை அடிமைப்படுத்துதல் என்றதொரு தப்பான கருத்தியலை உருவாக்குதோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
ஒன்றின் விடுதலையென்பது இன்னொன்றின் அடிமைப்படுத்தலாக அமைந்துவிடக்கூடாது.
விடுதலை அடிமைப்படுதல் என்பதை ஒருபுறம் வைத்துவிட்டு
பெண்மையின் குணாம்சங்களை ஆண்களும்
ஆண்மையின் குணாம்சங்களை பெண்களும் புரிந்துகொள்ள முயல்வதே ஆரோக்கியமான மாற்றமாக இருக்கும்.
இப்படியெல்லம் சொல்லுறதாலை நான் எதோ உத்தமபுருசனென்று நினைக்காதையுங்கோ. நானும் மாறிக்கொள்ள முயற்சிக்கிற மனிதம் பாதி மிருகம்பாதி கலந்த கலவைதான்.
மாறுவோம் மாற முயற்சிப்போம்.
என்ரை இந்த பதிவு ஆணாதிக்க சிந்தனையாளருக்கும், பெண் அடிமைத்தனத்தில் மூழ்கிக்கிடப்பவர்களுக்கும், சமூகக் காவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கும் BP ஐ ஏற்றியிருந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை.

ஹர ஹர மகா தேவ கி...

..
காலங்காத்தால இளவட்டப்பெடியனொருத்தன் ரெலிபோனெடுத்தவன் கதைச்சுக்கொண்டிருக்கேக்கை பேச்சுவாக்கில என்னடா இண்டைக்கு வேலைக்கு போகேல்லையோ என்று கேட்டத்துக்கு.
அங்கிள் இந்த கொட்டு கொட்டுற பனியுக்கை கஸ்டப்பட்டுபோய் வேலையை செய்யுறதுக்கு பரிசும் பதக்கமுமே கொடுக்கப்போறான் என்ரை முதலாளி.
அதுதான் இண்டைக்கு வேலைக்கு கட் அடிச்சிட்டு ஜாலியா பெண்டாட்டியோட உக்கார்ந்து

Wednesday

மாற வேண்டியது நாங்கள்தான்


ஒருசில சலுகைகளுக்காகவும் வாய்ப்புகளுக்காகவும் சுயகௌரவத்தையும் உரிமையையுமே இழக்கத் தயாராகிப்போனவர்கள் வாழும் ஒரு சமூகத்தில் புரட்சியும் மாற்றங்களும் எப்படி வெற்றியடையும்?


Monday

நட்பு & புரிந்துணர்வு





விடுதலைப்போராட்டங்களை உரிமைப்போராட்டங்களை ஆதரிக்கும் எந்த ஒரு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை வளர்த்துக்கொள்ளாதது.
எதிரிக்கு எதிரி நண்பன் என்றாவது சிங்களதேசத்திற்கு எதிரான நாடுகளுடன்

Saturday

ஒரு நாள் ஆட்டம்


வழமைபோல எங்கட கூத்தாடி குரூப்பின் ஒரு நாள் ஆட்டத்தையும் ஆட்டுவித்தது (நெறிப்ப்படுத்தியது)
என் ஆத்துக்காரி செல்லம்தான்.

Monday

செல்லத்தின் புருசன்

செல்லத்தின் புருசன் எங்கிற அம்பலத்தார் ஆகிய நான்.
என்ரை செல்லத்துக்கு தன்னை அடையாளபடுத்திக்கொள்ளுறதுக்கு அம்பலத்தார் பெண்டாட்டி என்ற அடைமொழி எப்பொழுதும் தேவைப்படேல்லை. எனக்குத்தான் அப்பப்ப செல்லத்தின் புருசன் Chellam´s Husband என்கிற அடையாளப்படுத்தல் தேவைப்படுகிறது.

Tuesday

வேள்விக்கு வச்சிட்டம் ஆப்பு

கோயில்களிலை ஆடு, கோழியை பலிகொடுக்கிற வேள்வியை தடை செஞ்சதாலை எங்கடைபாரம்பரியமே அழியப்போகுது மதமே அழிஞ்சிடும் என்கிறமாதிரி ஒப்பாரி வைக்கிறவங்களே!

Wednesday

மாற்றுச்சிந்தனையாளனின் வலிகள்


காலாகாலமாக எமது மரபணுக்களில் விதைத்துவிடப்பட்டிருக்கும்
மூடச்சித்தாந்தங்கள், கோட்பாடுகள், வாழ்வியல் வழிமுறைகள்

என்பவற்றில் இருந்து விடுபடமாட்டோம் என

Wednesday

செல்லம் சொல்லிப்போட்டா நடிக்காமல் விடமாட்டன்

கூத்தாடி குரூப்ஸ் இன் மற்றுமொரு நாடகம்.