நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

யாழ்ப்பாணத்தில் விபச்சாரம் ஏன் எதனால் எப்படி பேசாப்பொருள்பற்றி பேசுவோம்.

யாழில் அண்மைக்காலமாக விபச்சாரம் கோலோச்சுவதாக பத்திரிகைகளும் இணையத்தளங்களும் செய்தி வெளியிடுகின்றன.

உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த தொழில்களில் ஒன்று விபச்சாரம் எனப்படும் பாலியல் தொழில். எமது இலங்கை இந்தியாபோன்ற நாடுகளை பொறுத்தவரையில் பெரும்பாலும் 99% பாலியல் தொழில் என்றாலே பெண்களால் ஆண்களின் பாலியல் தேவைகளை நிவர்த்திசெய்ய நடத்தப்படுவதாகவே உள்ளது. ஆனால் மேற்குலகை பொறுத்தவரையில் பெண்களின் பாலியல் தேவைகளை பூர்த்திசெய்ய ஆண்களும் பாலியல் தொழில் செய்ய ஆரம்பித்து பலவருடங்கள் ஆகிறது.


இந்த இடத்தில் கட்டாயம் ஒருவிடயம் சொல்லவேணும். 1982- 83 ஆண்டு காலப்பகுதியிலேயே பாரிசில் வசித்த எனது நண்பர்கள் சிலர் மாலை வேளைகளில் குளித்து முழுகி அந்தமாதிரி ஸ்டைலாக வெளிக்கிட்டுக்கொண்டு சில பூங்காக்கள், வேறு சில குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வார்கள். என்ன விசயம் என்று கேட்டால் "மச்சான் அங்கை பிரஞ்சு மேடம்மாருகள் வருவாளுகள் எவளாவது ஒருத்தி மாட்டினாள் என்றால்..." என்று கூறுவார்கள். இவர்களில் எத்தனை பேருக்கு எத்தனை தடவை சீமாட்டிமார் மாட்டிச்சினம் எத்தனை சீமாட்டிமாரின்ரை ஆசையளை நிவர்த்திசெய்து எவ்வளவு சம்பாதிச்சினமோ தெரியாது. ஆனால் இந்த சம்பாசனைகள் நடந்தது உண்மை.

எதையோ எழுதத்தொடங்கி எங்கேயோ போகாமல் விசயத்திற்கு வருகிறேன். இந்த பாலியல்தொழில் ஆண்டாண்டு காலமாக நடந்ததுதானே, மேற்குலகிலெல்லாம் நடக்கிறதுதானே, என்று பாலியல் தொழிலுக்கு வக்காலத்து வாங்க வரவில்லை. ஆனால் எம்மவர்மத்தியிலும் இது எப்படி கலந்திருந்தது. இதில் எந்தவிதமாக என்ன மாற்ற்ங்களை கொண்டுவரலாம் என்பதை ஆராயவேண்டியது காலத்தின் கட்டயம்.

நாங்கள் உத்தமர்கள் எமது சமுதாயம் மிகவும் ஒழுக்கமானது என்று சொல்லிக்கொண்டு பின் கதவுவழியாக வேசை வீட்டிற்கு போய் வந்துகொண்டிருக்காமல் பேச தவிர்க்கும், பேச கூச்சப்படும், பேச பயப்படும் இந்த பேசாப்பொருள் பற்றிய திறந்த விவாதங்கள் இன்றையகாலத்தில் மிகவும் அவசியம்.
                  எழுபதாம் ஆண்டுகளின் இறுதியில் எனக்கும் மீசை அரும்பி, என்னுள்ளும் இதற்கான ஹோர்மோன்கள் சுரக்க ஆரம்பித்து, எனக்கும் ஆண்மை இருக்கோ, அதை எப்படி பரீட்சித்து பார்க்கலாம் என்று எண்ணத்தொடங்கிய காலத்தில்  யாழ்நகர மையத்தை அண்டிய பகுதிகளில் சோடாமூடி என்ற பட்டப்பெயரில் அழைக்கப்பட்ட பெண்ணும் அவரது கூட்டளிகளும் பாலியல் தொழிலுக்கு மிகவும் பிரசித்தமானவர்கள். இவர்கள் யாழ் பஸ்நிலையத்திலும் அதற்கு எதிர்த்தாற்போல இருந்த மூத்திர ஒழுங்கை என அழைக்கப்படும் சந்திலும் சுற்றித்திரிவினம். கிட்ட வந்தாலே ஒருவித கெட்டவாடையும் அழுக்கும்  வெற்றிலைக்காவிபடிந்த பற்களும் என ஒரு தரித்திரம்பிடித்த பிச்சைக்கார தோற்றத்தில் இருந்த இவர்களை பார்த்து எப்படி பல ஆண்களுக்கும் போய் காசைக்கொடுத்து இவர்களுடன் படுத்தார்கள் என்பதை இன்றுவரை என்னால் புரிந்துகொள்ளவும் ஜீரணிக்கவும் முடியவில்லை.

எங்களது ஊரின் எல்லையாக ஒரு குடும்பம் இருந்தது. ஆண்துணை இல்லாத வீடு தாய், மகள் மற்றும் ஒரு பெண்.  எமது பிரதேசத்தில் சுற்றிலும் இருந்த பல ஊர்களைச் சேர்ந்த பல ஆண்களும் இரகசியமக இந்தவீட்டுக்கதவை பலமுறை திறந்தனர். முதலீடு இல்லாத தொழிலொன்று அங்கே சிறப்புற நடந்தது.

எங்க ஊர் இரண்டு விடயங்களுக்கு பிரசித்திபெற்றது. வீட்டிற்கு ஒரு டாக்டர், பொறியியலாளராவது இருப்பார்கள் படித்தவர்கள் நிறைந்த பிரதேசம். எனது வீட்டிலும் டாக்டர், எஞ்சினியர் சகோதரங்கள் இருக்கிறார்கள் நான்மட்டும் விதிவிலக்காக தறுதலையாக...

அடுத்ததாக எங்க ஊரவர் பலரும் மலையகத்தின் பலபகுதிகள், மட்டக்களப்பு, திருகோணமலை என பல இடங்களிலும் பிரபல வியாபாரிகளாகவும் பெரும் பணக்காரர்களாகவும் இருந்தனர். முன்னையகாலத்தில் கண்டியின் பிரபல வியாபார நிறுவனங்கள் அமைந்திருந்த கொழும்புவீதி நம்மவர்களது நகைக்கடை, புத்தகக்கடை, எலக்ரோனிக்பொருள்கடை, மளிகைக்கடை, மொத்தவியாபார நிறுவனங்கள் என  எம் ஊரவர் கடைகளால் நிறைந்திருந்தது.  இப்படியாக பல ஊர்களில் தொழில் நடத்தினாலும் அவர்களது குடும்பங்கள் சொந்த ஊரிலேயே இருந்தது. இந்த முதலாளிமாரில் சிலர் தொழில்செய்யும் இடங்களில் நிரந்தரமாக சிங்கள, மலையக.... என அந்த அந்த ஊர்களைச் சேர்ந்த பெண்களை சின்னவீட்டாக வைத்திருந்தனர். சிலர் அப்பபோ தேவைப்படும்போது அதற்குரிய இடங்களுக்கு போய் வந்தனர்.

இப்படியே பல கதைகள் சொல்லிக்கொண்டுபோகலாம். ஆதலால் முன்னையகாலத்தில் எங்கள் சமுதாயம் ஒன்றும் 100% உத்தமர்களால் நிறைந்தது எனக்கூறமுடியாது.

ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் உடலில் காம உணர்வுகளைத்தூண்டும் ஹோர்மோன் சுரப்பும் இருக்கும்வரை உலகிலிருந்து பாலியல்தொழிலையும் முற்றாக அழிக்கமுடியாது. இதை எப்படிக்குறைக்கலாம், எப்படி ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம் என்பதே விவாதித்து தெளிவுபெறவேண்டியவிடயம்.

பெண்களிற்கு போதிய கல்வி அறிவும் அதிக வேலைவாய்ப்புக்களும் அதிகரித்தால் அவர்கள் வறுமையினால் இத்தொழிலிற்கு செல்வது குறையும்.

மேலை நாடுகளில் இருப்பதுபோல பெண்ணுரிமை அதிகமானால், ஒன்றாக சேர்ந்து வாழ்தல் பிடிக்காவிட்டால் விலகிக்கொள்வது, ஒருவரை விரும்பி அவருடன் இருந்தபின் வேறு ஒருவரை கட்டிக்கொள்வது போன்றவிடயங்கள் இருபாலாரினாலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டாலும்கூட இந்த பாலியல் தொழிலை அழித்துவிடமுடியாது.
அப்படி முடியுமென்றால் ஐரோப்பாவிலும் அமெரிக்கவிலும்.... மற்றும் பல நாடுகளிலும் பாலியல்தொழில் என்றோ அழிந்திருக்கவேண்டும். ஆனால் இன்றும் இந்தநாடுகளில் பாலியல்தொழில் கோடிகள் புரளும் ஒரு தொழிலாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் எவ்வளவு விழிப்புணர்வு, கற்பு எனும் மாயக்கோட்பட்டு அழிதல் சேர்ந்து வாழ்தல் அதிகரித்தாலும் ஆணோ பெண்ணோ உலகத்தில் உள்ள அத்தனை வயதிற்கு வந்தவரிற்கும் அவரது காம உணர்வு உண்டாகும் கணங்களில் அதற்கு வடிகாலாக ஒரு துணை இருக்கமுடியாது. அப்பொழுது அவர்களில் சிலர் பாலியல் தொழிலாளரை நாடிச்செல்வதும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கும்.

இது எமது நாட்டிற்கும் பொருந்தும். ஆதலால் எமதுநாட்டிலும் இதை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும். மக்கள்மத்தியில் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். அதைவிடுத்து நாங்கள் உத்தமர்கள் எம்மிடம் இந்த வழமைகள் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருந்தால் வேசைவீட்டு, வைப்பாட்டிவீட்டு, சின்னவீட்டு கதவுகளை திறப்பது ரகசியமாக நடந்துகொண்டுதான் இருக்கும்.

இப்பொழுது நான் ஊதுற சங்கை ஊதிவிட்டிருக்கிறன் சமுதாய விழிப்புணர்விலும் சமுதாயமறுமலர்ச்சியிலும் அக்கறைகொண்டவர்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து ஆரோக்கியமான மாற்றங்களுக்கான வழியை தேட முன்வாருங்கள். நாங்கள் உத்தமர்கள் என்று கோசம்போடுபவர்கள் தாராளமாக நீங்களும் இங்கு வந்து உங்கள் உள்ளக்கிடக்கைகளை கொட்டித்தீர்க்கலம். ஏனெனில் நான் பேச்சு, கருத்து சுதந்திரங்களை மதிக்கிறேன். எனது வலைப்பூவின் பின்னூட்டப்பெட்டி அனைவருக்கும் திறந்தே இருக்கும்.

நேசமுடன் அம்பலத்தார்.
 இந்தக் கிறுக்கனின் கிறுக்கலிற்கும் மதிப்பளித்து விருது வழங்கிய உப்பு மடச்சந்தி, வானம் வெளித்த பின்னும்... ஆகிய வலைப்பூக்களின் சொந்தக்காரி கவிதாயினி ஹேமாவிற்கு நன்றிகள். 

61 comments:

மதுமதி said...

பெண்களிற்கு போதிய கல்வி அறிவும் அதிக வேலைவாய்ப்புக்களும் அதிகரித்தால் அவர்கள் வறுமையினால் இத்தொழிலிற்கு செல்வது குறையும்.

தாங்கள் சொன்ன இதே கருத்தையே நானும் முன் வைக்கிறேன்..

Ideamani - The Master of All said...

ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் உடலில் காம உணர்வுகளைத்தூண்டும் ஹோர்மோன் சுரப்பும் இருக்கும்வரை உலகிலிருந்து பாலியல்தொழிலையும் முற்றாக அழிக்கமுடியாது. இதை எப்படிக்குறைக்கலாம், எப்படி ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம் என்பதே விவாதித்து தெளிவுபெறவேண்டியவிடயம். :///////

அண்ணர், முதலில் ஏன் குறைக்கணும்? ஏன் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கணும்??

Ideamani - The Master of All said...

அண்ணர், உங்களுக்கு நினைவிருக்கும் என்றூ நினைக்கிறேன், நான் முன்பு இதுபற்றி எழுதப் போக, சம்மந்தமே இல்லாமல் ஒரு குரூப் வந்து “ ஐயோ ஆபாசமாக எழுதிட்டான்” என்று ஒப்பாரி வைத்து, கத்திக் கூச்சல் போட்டது! அந்த இம்சை தாங்க முடியாமல், அந்தத் தொடரை நிறுத்தி வைத்திருந்தேன்!

இப்போது, நீங்கள் இந்த விஷயத்தைக் கையில் எடுத்திருப்பதால், மகிழ்ச்சியோடு விவாதிக்க வருகிறேன்! ஆனால் அந்த குரூப் மறுபடியும் இங்கு எண்டர் ஆனால், பிறகு நான் இங்கு பேச வரமாட்டேன்! - பயந்து அல்ல!

டார்ச்சர் தாங்க முடியாமல் இருக்கும்!
அதனால் தான்!!

நல்லதோ கெட்டதோ, அலசி ஆராய்ந்து பார்ப்பது எமது குணம்! - எதையுமே அலசாமல், ஆராயாமல் அப்படியே வாங்கி உள்ளே போடும் குணம் அவர்களுடையது!

எங்களைக் கொஞ்சம் ஆராயவிடுங்கப்பா :-))))

அம்பலத்தார் said...

மணி ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றங்கள் கட்டயம் தேவை. உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்

அம்பலத்தார் said...

சமுதாயத்தின் காவலர்களாக நடிப்பவர்களைப்பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை

Ideamani - The Master of All said...

ஓம் அண்ணர், நான் இப்ப கொஞ்ச நேரம் கழிச்சு வாறன்! ஏனைய நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் எண்டு பார்த்திட்டு!

மகேந்திரன் said...

///மக்கள்மத்தியில் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும்.///

இதுதான் என் கருத்தும்...

விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் ஐயா...பொதுவாக விபச்சாரம் அதிக சதவிகிதத்தில்
வாழ்வின் நிலைப்பாட்டிற்காய்..
வேறு வழி இல்லாது போகவே
செய்யப்படுகிறது என்ற கருத்து நிலவுகிறது..
அதற்கேற்ற அவளின் எதிர்பார்ப்புகளுக்கேற்ற
அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்தால்
இத்தொழில் குறையுமென நினைக்கிறேன்...

ஆனால் அப்படி செய்யாது அதற்கான லைசன்ஸ்
கொடுத்து சில பகுதிகளில் மட்டும் இயக்க வேண்டுமென
ஒதுக்கி வைத்தால்... எப்படி இதன் விழிப்புணர்வு பெருகும்..

மேல்தட்டு வர்க்கத்தில் இனப்பெருக்க உறுப்புகளின்
அடங்காத உணர்சிகள் காரணமாக நடத்தப்படும்
பாலியல் சம்பவங்கள் பற்றி நமக்கு கவலையில்லை..
அடித்தட்டு மக்களின் வாழ்நிலையை இது போன்ற தொழில்கள்
சீரழித்து விடக்கூடாது...
உற்ற நடவடிக்கைகளும் அதற்கான விழிப்புணர்வும்
இன்னும் மேலும் மேலும் பெருக வேண்டும்..

தனிமரம் said...

வணக்கம் அம்பலத்தார்.
சமுகவிளிப்பு உணர்வு முதலில் பரவலாக்கப்படவேண்டும் ஆரம்பத்தில் இருந்தே யாழ்,கொழும்பு,மலையகம்,அனுராதபுரம் என இந்த வறுமைக்கோட்டுக்குள் தள்ளப்பட்டும் விதிவசத்தாலும் போன பலரின் கதை நானும் அறிவேன். ஆனால் இன்று தான் யாழில் கொடிக்கட்டுவது என சில ஊடக மேட்டுக்குடி(மோட்டுக்குடி ) போடும் கூச்சல் மீது எனக்கும் அதிக கோபம் உண்டு.முதலில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலியல் கல்வி பற்றி விழிப்புணர்வைக் கொடுக்கனும் பின் பொருளாதார முன்னேற்றப்பாதை காட்டனும் அப்போது தான் இதனைக் குறைக்கமுடியும் ஆனால் நிறுத்த முடியாது இது  மாதவியை நாடிப்போன கோவலன் காலம் என்றாலும்  குஸ்ரரோகம் வந்த கணவனைத் தூக்கிச் சென்ற நாளயினி காலம் என்றாலும் இன்றை தாய்லாந்து மலேசிய எல்லைக்கிராமம் ஹச்சாய் என்றாலும் மதவாச்சி என்றாலும்  தொடரத் தான் செய்யும்.

தனிமரம் said...

விரிவாக வேலைமுடிந்து வாரன் அம்பலத்தார்.முதலில் கூப்பாடு போடும் கூட்டங்கள்  வரலாற்றைத் தெரிந்து கொள்ளனும் வேசம் போடுவதை நிறுத்திவிட்டு! வருவேன் சில ...

மாலதி said...

இப்பொழுது நான் ஊதுற சங்கை ஊதிவிட்டிருக்கிறன் சமுதாய விழிப்புணர்விலும் சமுதாயமறுமலர்ச்சியிலும் அக்கறைகொண்டவர்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து ஆரோக்கியமான மாற்றங்களுக்கான வழியை தேட முன்வாருங்கள். mmmmm

Anonymous said...

கடந்த வாரம் ஒபாமா காவலர்களில் அநேகம் பேர் 'அவர்களை' கொலம்பியாவில் அதிகாரபூர்வமாய் விஜயம் செய்ததாய் செய்தி...
இதற்க்கு யாரும் விதிவிலக்கில்லை போலிருக்கு...

Anonymous said...

நுகர்வோர் கோணத்தில் இருந்து பார்த்தால்...குற்றம் முழுவதும் ஆண்வர்க்கம் மேல் தான்...(Just stop paying for sex...)

ஹேமா said...

ஐரோப்பிய நாடுகளில் வரி வசூலிப்பு இருந்தாலும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் வரி கட்டுவதற்காக இயந்திரம் நிறுவப்பட்டு அங்கு பாலியல் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது.

தினசரி மாலை 8 மணிமுதல் காலை 6 மணிவரை டிக்கட் பெற்றுக்கொள்ளமுடியும்.டிக்கட் இல்லாதவர்களுக்கு கடுமையான அபராதமும் கிடைக்கும்.

சட்டபூர்வமாக இணைக்கப்படாத ஆண்பெண் உறவுமுறை பலகாலமாகவே நம்நாடுகளில் மறைமுகமாக இருக்கத்தான் செய்கிறது.வேசி,தாசி,விபச்சாரி என மனம் நோகிற வார்த்தைகளை விட்டு அதை அங்கீகாரத்தோடு நாகரீகமாக முறையில் மேலைதேய நாடுகளில் ”பாலியல் தொழிலாளி” என்கிறார்கள்.

இதனால் நன்மையே தவிரக் கெடுதல் ஏதுமில்லை.ஆனால் பக்குவம், பாதுகாப்பு அவசியம்.பாதுகாப்புக் கருதியே கலாசாரத்துக்குள் ஆண் பெண் உறவைத் திணித்து நம்மவர்கள் ஒருத்தனுக்கு ஒருத்தி என்றார்கள்.இதனால் நோய்களைக் குறைத்தோமே தவிர மன அழுத்தங்களையும் வன்முறைகளையும் குறைத்தோமா என்பது கேள்வி.எனவே வயிற்றுக்குப் பசிப்பது போலானதே உடலின் பசியும்.அதற்கான வழிமுறைகளோடு அணுகுவது தப்பில்லையென்றே நினைக்கிறேன் !

அகதியாய் வெளிநாடுகளுக்குத் தள்ளப்பட்டாலும் பகுத்தறிவால் வெளிநாடுகளில் முன்னேறியிருக்கிறோம்.பாலியல் தொழிலாளிகளை இங்கு யாரும் ஒதுக்கி வைத்திருப்பதாக நான் காணவில்லை.அதற்காக நாம் அப்படி வாழலாம்-வாழ்கிறோம் என்றில்லை.

விபச்சாரி என்கிற பேர் விடுத்து ஒரு தொழிலாக விரும்பினால்,தேவையேற்பட்டால் அதன் அங்கீகாரத்தோடு வாழவும் அசிங்கமில்லாமல் வாழவும் வழிவிடுங்கள் என்பேன்.

நம் சமூகம்???!!!

Anonymous said...

இந்த பாலியல் தொழிலாளர்களை விட மோசமானது திருமணதிற்கு முன் ஏகப்பட்ட ஆட்களுடன் உறவு வைக்கும் மேற்கத்திய கலாச்சாரம்...


நல்ல தலைப்பு...சான்றோர் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் அம்பலத்தாரே...

Anonymous said...

இந்த பாலியல் தொழிலாளர்களை விட மோசமானது திருமணதிற்கு முன் ஏகப்பட்ட ஆட்களுடன் உறவு வைக்கும் மேற்கத்திய கலாச்சாரம்...


நல்ல தலைப்பு...சான்றோர் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் அம்பலத்தாரே...

ஹாலிவுட்ரசிகன் said...

வலுக்கட்டாயமாக, பிடிப்பு இல்லாமல் இருவருக்கு இடையில் உறவு நடக்காமல் இருக்கும் வரை எதுவுமே தப்பில்லை. காசு இருக்குறவன் போறான். காசு தேவையானவள் வாங்குகிறாள்.

ஆனால் அந்த இருவருக்கும் பாலியல் தொடர்பான அறிவு மிகவும் அவசியம். இல்லாமல் வெறும் சுகத்திற்கான பாதுகாப்பற்ற உறவு பின்னர் சமுதாயத்திற்குள் பலதரப்பட்ட பாதிப்புக்களை ஏற்படுத்தவல்லது. இதற்காகத் தானே நம்மவர்கள் ஒருத்தனுக்கு ஒருத்தியென்று ஒரு வரையறை வகுத்தார்கள்? ஆனால் இந்தச் சிந்தனை நம் சமூகத்திற்குள் புகுந்து, அடிப்படை பாலியல் அறிவு வளர இன்னுமொரு சந்ததி செல்லும்.

ஆனால் பெரும்பாலும் யாரும் இந்த சாக்கடைக்குள் விரும்பி வருவதில்லை. யாராவது ஒருவனை நம்பி வீட்டை விட்டு ஓடுவது, பின்னர் அவன் இல்லாதவிடத்து நடுத்தெருவில் நிற்க இயலாமல் இதற்குள் நுழைவது. அல்லது ஒரு தனித்த ஒரு பெண்ணாக இயங்கமுடியாத பொருளாதாரச் சிக்கல் என்பவையே எம் சமூகத்தில் இந்தத் தொழிலுக்கான காரணங்கள். இதை அரசாங்கமோ, அல்லது ஏதாவது சமூகத் தொண்டு நிறுவனங்களோ இவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தால் இது பெருமளவு குறையும்.

நீங்கள் சொன்னது போல “ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் உடலில் காம உணர்வுகளைத்தூண்டும் ஹோர்மோன் சுரப்பும் இருக்கும்வரை உலகிலிருந்து பாலியல்தொழிலையும் முற்றாக அழிக்கமுடியாது.”

அம்பலத்தார் said...

மகேந்திரன் said...

மேல்தட்டு வர்க்கத்தில் இனப்பெருக்க உறுப்புகளின்
அடங்காத உணர்சிகள் காரணமாக நடத்தப்படும்
பாலியல் சம்பவங்கள் பற்றி நமக்கு கவலையில்லை..
அடித்தட்டு மக்களின் வாழ்நிலையை இது போன்ற தொழில்கள்
சீரழித்து விடக்கூடாது...
உற்ற நடவடிக்கைகளும் அதற்கான விழிப்புணர்வும்
இன்னும் மேலும் மேலும் பெருக வேண்டும்..//
ஆம் மகேந்திரன் மேற்தட்டினர்மத்தியில் இது மிகவும் ஆடம்பரமாக நடை பெற்றாலும் அங்கு இருபகுதினருக்கும் பெரிய பாதிப்புக்கள் எதுவும் இல்லை. எழைப்பாலியல்தொழிலாளர், கட்டாயத்தின்பேரில் பாலியல்தொழில் நடக்கும் விடுதிகளில் மாட்டுப்பட்டவர்களின் நிலைதான் மிகவும் மோசமானது.

அம்பலத்தார் said...

Blogger மதுமதி said...

தாங்கள் சொன்ன இதே கருத்தையே நானும் முன் வைக்கிறேன்..//
வணக்கம் மதுமதி, உங்கள் வருகைக்கும் தங்கள் நிலைப்பாட்டை கூறியதற்கும் நன்றிகள்.

அம்பலத்தார் said...

Ideamani - The Master of All said...

அண்ணர், முதலில் ஏன் குறைக்கணும்? ஏன் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கணும்??//
மணி நான் கட்டுப்பாட்டிற்குள் என்றுகூறியது. இத்தொழில் செய்வோருக்குரிய மருத்துவக்காப்புறுதிகள், வயோதிபகாலத்திற்குரிய ஓய்வூதிய வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும். இந்த விடுதிகளை நடத்தும் முதலாளிகளால் இவர்களது வருமானத்தின் பெரும்பகுதி சுரண்டப்படுவது நிறுத்தப்படவேண்டும் உரிய மருத்துவ பரிசோதனைகளிற்குரிய வழிமுறைகள் செய்யப்படவேண்டும் இதற்கான சட்டவரைவாக்கம் அவசியம். மேற்குறிப்பிட்ட விடயங்களில் இவர்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு மிகமுக்கியம்

அம்பலத்தார் said...

தனிமரம் said...

வணக்கம் அம்பலத்தார்.
சமுகவிளிப்பு உணர்வு முதலில் பரவலாக்கப்படவேண்டும் ஆரம்பத்தில் இருந்தே யாழ்,கொழும்பு,மலையகம்,அனுராதபுரம் என இந்த வறுமைக்கோட்டுக்குள் தள்ளப்பட்டும் விதிவசத்தாலும் போன பலரின் கதை நானும் அறிவேன்.....//
வணக்கம் நேசன் கோவலன் மாதவி, நளாயினி காலத்திலுருந்து அண்மையகாலம்வரையான ஆதாரங்களுடன் ஆணித்தரமான உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

அம்பலத்தார் said...

Blogger தனிமரம் said...

விரிவாக வேலைமுடிந்து வாரன் அம்பலத்தார்.முதலில் கூப்பாடு போடும் கூட்டங்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்ளனும் வேசம் போடுவதை நிறுத்திவிட்டு! வருவேன் சில ...//
நேசன் நீங்கள் ஆறுதலாக உங்கள் வேலையைமுடித்துவந்து உங்கள் விரிவான ஆணித்தரமான கருத்துக்களை முன்வையுங்கள்.

அம்பலத்தார் said...

மாலதி said...

mmmmm//
மாலதி உங்கள் வருகைக்கு முதலில் நன்றிகள். தயக்கமின்றி நீங்களும் இங்கு உங்கள் கருத்துக்களை முன்வைக்கலாமே. இங்கு பின்னூட்டம் இடுபவர்கள் பொதுவெளியில் வாதிடும்போதுள்ள வரைமுறைகளை உணர்ந்தவர்கள். கௌரவமான வார்தைகளில் விவாதிப்பவர்கள் நீங்கள் தயங்கவேண்டியதில்லை.

அம்பலத்தார் said...

ரெவெரி said...

கடந்த வாரம் ஒபாமா காவலர்களில் அநேகம் பேர் 'அவர்களை' கொலம்பியாவில் அதிகாரபூர்வமாய் விஜயம் செய்ததாய் செய்தி...
இதற்க்கு யாரும் விதிவிலக்கில்லை போலிருக்கு...//
ரெவரி காமமும் கலவியும் உலகில் உயிரினங்கள் அனைத்துக்கும் உண்டு. உயிரினங்களின் இருப்பின் அவசியத்தை உணர்ந்து இயற்கை செய்த வழிமுறை இது.

அம்பலத்தார் said...

ரெவெரி said...

நுகர்வோர் கோணத்தில் இருந்து பார்த்தால்...குற்றம் முழுவதும் ஆண்வர்க்கம் மேல் தான்...(Just stop paying for sex...)//
ஒருவனுக்கு பசித்தால் உண்வை வாங்குவான். தாகமெடுத்தால் எதோ ஒரு பானத்தை வாங்கலாம். இப்படியாக ஒவ்வொருவருக்கும் தேவையான எல்லாவறையும் தனிப்பட்டமுறையில் கிடைக்காவிட்டல் வெளியே வாங்கலாம். அதுபோலத்தான் காமத்துக்கு வடிகாலாக மனைவியோ காதலியோ கணவனோ, இணைந்துவாழும் நட்போ அத்தனை பேரிற்கும் இருப்பது சாத்தியம் இல்லைத்தானே. அப்படியான ஒருவருக்கு காம உணர்வு உண்டாகும்போது பணங்கொடுத்தாவது ஒரு துணையை நாடவே முயற்சிப்பர் ஆதலால் பாலியல் தொழிலை முற்றாக ஒழிக்க முடியாது

அம்பலத்தார் said...

ஹேமா said...

இதனால் நன்மையே தவிரக் கெடுதல் ஏதுமில்லை.ஆனால் பக்குவம், பாதுகாப்பு அவசியம்.பாதுகாப்புக் கருதியே கலாசாரத்துக்குள் ஆண் பெண் உறவைத் திணித்து நம்மவர்கள் ஒருத்தனுக்கு ஒருத்தி என்றார்கள்.இதனால் நோய்களைக் குறைத்தோமே தவிர மன அழுத்தங்களையும் வன்முறைகளையும் குறைத்தோமா என்பது கேள்வி.//
ஹேமா மிகவும் சரியாக கூறினீர்கள். சமுதாயத்திற்கு அஞ்சியும், உறவுகளின் கேலிப்பேச்சுக்களை தவிர்க்கவும் போலிக்கு இணைந்து வாழ்ந்துகொண்டு மிகப்பெரிய மன அழுத்தத்தில் எம்மவர் எத்தனையோபேர் தவிக்கிறார்கள்.

அம்பலத்தார் said...

ஹேமா said...

வயிற்றுக்குப் பசிப்பது போலானதே உடலின் பசியும்.அதற்கான வழிமுறைகளோடு அணுகுவது தப்பில்லையென்றே நினைக்கிறேன் !//
ஆண்களே ஏற்கத்தயங்கும் இந்தக்கருத்தை ஒரு பெண்ணாக இருந்துகொண்டு நீங்கள் துணிந்து தெரிவிப்பது பாராட்டிற்குரியது ஹேமா

அம்பலத்தார் said...

ஹேமா said...
விபச்சாரி என்கிற பேர் விடுத்து ஒரு தொழிலாக விரும்பினால்,தேவையேற்பட்டால் அதன் அங்கீகாரத்தோடு வாழவும் அசிங்கமில்லாமல் வாழவும் வழிவிடுங்கள் என்பேன்.

நம் சமூகம்???!!!//
யார் இந்த நம் சமூகம்... நாங்கள் எல்லோரும் சேர்ந்ததுதானே அது. நாங்கள் ஒவ்வொருவரும் மனதுவைத்தால் எமது சமுதாயத்திலும் ஆரோகியமான மாற்றங்கள் சாத்தியமே!

அம்பலத்தார் said...

ரெவெரி said...

நல்ல தலைப்பு...சான்றோர் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் அம்பலத்தாரே...//
ரெவெரி, சான்றோர்கள்மட்டும்தான் கருத்துச்சொல்லவேண்டும் எனக்காத்திருக்கவேண்டியதில்லை. சமூக அக்கறையுள்ள அனைவரும் சிந்திக்கவேணும் கருத்துக்களை முன்வைக்கவேண்டும், செயற்படவேண்டும், அப்பொழுதுதான் மற்றவர்களும் மாறுவார்கள்.

Yoga.S.FR said...

மாலை வணக்கம்,அம்பலத்தார்!

Yoga.S.FR said...

ஏன் வணக்கத்துடன் நிறுத்தி விட்டீர்கள்,சொல்லுங்கள்,யோகா சொல்லுங்கள்? என்று நீங்கள் கூவுவது கேட்கிறது,அம்பலத்தார்!நானும் உங்களைப் போல் தான்.டாக்டர்,இஞ்சினியர் என்று எங்கள் வீட்டிலும் உண்டு.நான் தான் தறுதலை!என் சார்பில் என் மூத்த பெண் பேசியிருக்கிறார்!!!!!

கலைவிழி said...

வடக்கைப் பொறுத்தவரை வறுமையினால் பெண்கள் இந்த தொழிலுக்கு செல்வது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. யுத்தத்தினால் குடும்ப சுமையை சுமக்க வேண்டிய ஆண்களை இழந்து, தொழில் வாய்ப்பின்றி செய்வதறியாது இந்த நரகத்திற்குள் நுழைகிறார்கள்.

நடந்ததைப் பற்றியே வாய்கிழிய பேசிக் கொண்டிருப்பவர்கள் தீர்வு பற்றி சிந்திக்க தயாரகவில்லை. ஏனெனில் அவர்களும் பின்வாசல் பக்கம் போகிறார்கள்..

குடும்பப் பெண்கள் தமது பிள்ளைகளை வளர்த் தெடுப்பதற்காக இத்தொழிலிற்கு போகிறார்களே..... வளர்ந்து பெரியவர்களான அந்த பிள்ளைகளுக்கு சமூகம் எதிர்காலம் வழங்குமா?

யாழில் விபச்சாரம் பெரிய பிரச்சினை என்கிறீர்களே அதற்கு முடிவு கட்டுங்கள் என்று நானும் கூறிப்பார்த்து விட்டேன்......... ஒரு கல்லும் அசையவில்லை

மாறாக கடவுள்களுக்கு தான் மாளிகைகள் கட்டப்படுகின்றன...

துஷ்யந்தன் said...

பெரியவாங்க எல்லாம் பேசுறீங்க.... நான் கருத்து சொல்லலாமோ இதற்க்கு என்று தெரில்ல.....

என்னை பொறுத்தவரை விபச்சாரத்தை ஒலிக்கவே தேவையில்லை.... சொல்லபோனால் அதை அங்கீகரிக்கலாம்...

பிரான்சில் வெயில் காலம் தொடங்கினால் ரோட்டோரம் நிறைய பெண்கள் விபச்சாரம் செய்ய வாடிக்கையாளர்களுக்காக நிப்பார்கள்... அவர்கள் யாரையும் தொல்லை படுத்துவது இல்லை.... விரும்பியவன் மட்டும் அவர்களுடன் போகிறார்கள்.... ஏன் இங்கே ஆண் விபச்சாரர்களும் அதிகம் இருக்கிறார்கள். இவர்களால் யாருக்கும் எந்த தீமையும் இல்லை... சொல்ல போனால் நன்மையே உண்டு நிறைய வழிகளில்...

ஹேமா அக்காச்சின் கருத்து ஒரு ஆச்சரிய சந்தோசம்....மிக மிக தெளிவான சரியான கருத்து.

thequickfox said...

ஹேமா கருத்துக்கள் மிக அருமையானவை.

ஸ்ரீராம். said...

வேசியாக்கப்பட வேண்டுமென்று
நான் எந்தக் கடவுளிடமும்
மனு கொடுத்ததில்லை

என்ற தமிழச்சியின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன.
ஹேமா அருமையாகச் சொல்லியிருக்கிறார். ஆதி காலத்திலிருந்தே இருப்பதுதானே...முற்றும் தடை செய்வது சாத்தியமில்லை. சட்ட பூர்வமாக்கலாம்.

தனிமரம் said...

பாலியல் கல்வியை பரிந்துரைக்க வேண்டியஊடகம்கள் எல்லாம் பணம் உழைக்க இப்படி பரிதவிக்கும் மக்கள் பாலியல் தொழில் செய்கின்றார்கள் என்று சொல்லிச் சொல்லியே வாசகர்களிடம் அதிகம் சுரண்டலைச் செய்கின்றார்கள்.ஊடகம் எல்லாம் இந்த உடல்விற்கும் மனிதர்களின் மனக்குமுறலைப்பதிவு செய்யுமாஎன்றாள்?????

தனிமரம் said...

சமுகத்தில் இதுவும் ஒரு தொழில் என்று ஏற்றுக்கொண்டால் சில சட்டவிரோதம் என்று சொல்லியே இவர்களிடம் பணம் பறிக்கும் பலர் இவர்களை இம்சை செய்ய மாட்டார்கள் .பாலியல் தொழில் செய்வோருக்கு தகுந்த அடிப்படை அறிவைக்கொண்டுத்து விட்டால் அவர்களும் முதலீடு இல்லாமல் முன்னேறுவார்கள் சும்மா சும்மா முகாரி வாசிக்கக் கூடாது யாழ் எப்போதும் கட்டுக்கோப்பான சமுகம் என்று சொல்லி!

Ideamani - The Master of All said...

இந்தப் பதிவுகுறித்து நான் என்ன சொல்ல நினைத்தேனோ, அதனை மிகச் சிறப்பாகவும், அழகாகவும் ஹேமா சொல்லியிருக்கிறார்! அவருக்கு வாழ்த்துக்கள்!

எமது சமூகத்தில் பெண்களால் இந்தளவுக்குக் கருத்துக் கூற முடிகிறதென்றால், அனைத்துவிதமான பிறபோக்குத் தனங்களில் இருந்தும் விடுபட்டு, நாம் முன்னேறி வருகிறோம் என்றுதான் அர்த்தம்!

மேலும் எமது சமூகப் பெண்கள் எந்தளவு தூரம் முன்னேறியிருக்கிறார்கள் என்பதுவும் ஆச்சரியமானதும், மகிழ்ச்சியானதுமான விஷயமும் கூட!

இது குறித்து ஹேமாவிடம் வினவிய போது, அவர் சொன்னது,

“ ஆண்களாகிய நீங்கள் - இந்தளவுக்கு எம்மைப் புரிந்து கொண்டு, பேச அனுமதித்ததால் தான் எம்மால் இப்படிப் பேச முடிகிறது! எங்கே நீங்கள், இப்படியெல்லாம் நீ சொல்லக் கூடாது! இது தப்பு என்று சொல்லிப் பாருங்கள்! அதன் பின்னர் நாங்கள் வாயே திறக்க மாட்டோம்! ஆகவே, எம்மை பேச அனுமதித்த, எங்கள் கருத்துக்களுக்கு மதிப்புத் தரும் ஆண்களாகிய உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!” என்றார்!

உண்மைதானே?

பெண்களின் சுதந்திரங்களைப் பறித்து, அவர்களைப் பேசாப் பொருளாக்குவது, ஆண்களாகிய நாம் தானே???

Yoga.S.FR said...

காலை வணக்கம் அம்பலத்தார்!நேற்றிரவு கொஞ்சம் ஒற்றைத் தலைவலி(இப்போதும் தொடர்கிறது)அதனால் நீங்கள் நேசன்,ஹேமா வீடு வந்தபோது பேச முடியவில்லை.

அம்பலத்தார் said...

ஹாலிவுட்ரசிகன் said...

ஆனால் அந்த இருவருக்கும் பாலியல் தொடர்பான அறிவு மிகவும் அவசியம். இல்லாமல் வெறும் சுகத்திற்கான பாதுகாப்பற்ற உறவு பின்னர் சமுதாயத்திற்குள் பலதரப்பட்ட பாதிப்புக்களை ஏற்படுத்தவல்லது. இதற்காகத் தானே நம்மவர்கள் ஒருத்தனுக்கு ஒருத்தியென்று ஒரு வரையறை வகுத்தார்கள்? ஆனால் இந்தச் சிந்தனை நம் சமூகத்திற்குள் புகுந்து, அடிப்படை பாலியல் அறிவு வளர இன்னுமொரு சந்ததி செல்லும்.//
வணக்கம் ஹாலிவுட்ரசிகன் விரிவான தீர்க்கமான கருத்துக்களை முன்வைத்ததற்கு நன்றி. நீங்கள் சொல்வதுபோல இந்தச்சிந்தனைகளை சீக்கிரம் போக்கிவிடமுடியாதுதான் ஆயினும் விபரம்புரிந்தவர்கள் தொடர்ந்து இதற்காக குரல்கொடுப்பதுடன் ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் எடுத்தால்தான் மாற்றங்களிற்கான ஆரம்பம் உண்டாகும்.

அம்பலத்தார் said...

Yoga.S.FR said...

காலை வணக்கம் அம்பலத்தார்!நேற்றிரவு கொஞ்சம் ஒற்றைத் தலைவலி(இப்போதும் தொடர்கிறது)அதனால் நீங்கள் நேசன்,ஹேமா வீடு வந்தபோது பேச முடியவில்லை.//
வணக்கம் யோகா, தலைவலி எப்படி இருக்கிறது போய்விட்டதா? என்ன அடிக்கடி தலைவலி என்று கூறுகிறீர்கள். முறையான வைத்திய பரிசோதனைகள் செய்தீர்கள? எனது மனைவிக்கும் சிலவருடங்களிற்குமுன் அடிக்கடி இதுபோன்ற தலைவலி வந்தது. அதற்கு சீன அக்கியூபங்சர் வைத்தியம் செய்ததில் மிகவும் குறைந்துவிட்டது. ஆனால் இதில் ஒரு சிக்கல் இந்த வைத்தியத்திற்கு மருத்துவக்காப்புறுதியிலிருந்து முழுமையாக பணம் கட்டமாட்டார்கள் அண்ணளவாக பாதிச் செலவு நாங்கள் செய்யவேண்டும்

அம்பலத்தார் said...

Yoga.S.FR said...

ஏன் வணக்கத்துடன் நிறுத்தி விட்டீர்கள்,சொல்லுங்கள்,யோகா சொல்லுங்கள்? என்று நீங்கள் கூவுவது கேட்கிறது,அம்பலத்தார்!நானும் உங்களைப் போல் தான்.டாக்டர்,இஞ்சினியர் என்று எங்கள் வீட்டிலும் உண்டு.நான் தான் தறுதலை!என் சார்பில் என் மூத்த பெண் பேசியிருக்கிறார்!!!!!//
ஆம் நான் சொல்லவருவதை நீங்களே சொல்லிவிட்டு தப்பித்துவிடமுடியாது.தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு என்பார்கள். உங்கள் கருத்தையும் சொல்லுங்கோ.
ஹேமா மிகவும் தீர்க்கமான பதில் கொடுத்திருந்தார் ஒவ்வொரு பெண்களும் இதுபோல துணிவும் சீரிய சிந்தனையும்கொள்வது அவசியம்.

அம்பலத்தார் said...

கலை, மிகவும் தெளிவாக இன்றைய தாயகத்தின் நிலைமையை சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். உங்களைப்போன்று இன்றைய இளம்பெண்கள் பலரும் சமூக அக்கறையும், விழிப்ப்புணர்வும், துணிவும்கொள்வது சந்தோசமளிக்கிறது.

அம்பலத்தார் said...

கலைவிழி said...

யாழில் விபச்சாரம் பெரிய பிரச்சினை என்கிறீர்களே அதற்கு முடிவு கட்டுங்கள் என்று நானும் கூறிப்பார்த்து விட்டேன்......... ஒரு கல்லும் அசையவில்லை

மாறாக கடவுள்களுக்கு தான் மாளிகைகள் கட்டப்படுகின்றன...//

ஆம் கலை, சென்றவருடம் நான் தாயகம் வந்திருந்தபோது நேரில் பார்த்தேன். கோயில்களைக் கட்டுவதில் மிகுந்த பணம் செலவுசெய்யப்படுகிறது. திருவிழாக்கள் மிகவும் ஆடம்பரமாக நடக்கிறது. இவற்றிற்கு செலவிடப்படும் பணத்தில் ஒரு சிறுபகுதியையாவது பாதிக்கப்பட்டவர்களின் நலன்களிற்கு, சுய வேலைவாய்ப்புத்திட்டங்களிற்கு, கணவனை இழந்த குடும்பங்களிற்கு, பெற்றொர் இல்லாத குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு செலவுசெய்யலாம்.

அம்பலத்தார் said...

துஷ்யந்தன் said...

பெரியவாங்க எல்லாம் பேசுறீங்க.... நான் கருத்து சொல்லலாமோ இதற்க்கு என்று தெரில்ல..//
என்ன துஷி இப்படித்தயக்கம். யார் பெரியவர். வயதுமட்டும் ஒருவரிற்கு பெரியவர் என்ற அந்தஸ்த்தை கொடுப்பதில்லை. நல்ல பண்புகளும் சீரிய சிந்தனையும், சரியான செயற்பாடுகளும்கொண்ட அனைவரும் பெரியவர்தான். உங்களிற்கும் இது பொருந்தும்.

அம்பலத்தார் said...

துஷ்யந்தன் said...

என்னை பொறுத்தவரை விபச்சாரத்தை ஒலிக்கவே தேவையில்லை.... சொல்லபோனால் அதை அங்கீகரிக்கலாம்...

.... ஏன் இங்கே ஆண் விபச்சாரர்களும் அதிகம் இருக்கிறார்கள். இவர்களால் யாருக்கும் எந்த தீமையும் இல்லை... சொல்ல போனால் நன்மையே உண்டு நிறைய வழிகளில்...//
நிச்சயமாக இதை அழிக்கவேண்டியதில்லை துஷி, அழிக்கமுற்பட்டால் இன்னும் அதிக பாதிப்புக்களே உண்டு. சரியான நெறிமுறைப்படுத்தலில் இயங்க விடுவதேசரி.

பராசக்தி said...

அரசர் காலத்திலிருந்து மட்டுமல்ல அம்பலத்தார் குறிப்பிட்ட காலக்கட்டங்கள் வரை நடந்து வந்த விபச்சாரம், அதில் ஈடுபட்டவர்களை உடல் உணர்வாலோ உள்ளத்து ஆவலாலோ அல்லது பொருளாதார ரீதியிலோ திருப்திப்படுத்தியிருக்கலாம். ஆனால் அண்மைக்காலத்தில், போருக்குப்பின் நடக்கும் விபச்சாரம் பெண்களின் மனதையும் உடலையும் சிதைக்கும் வண்ணமாக, கட்டாய பாலியல் தொழிலுக்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள், போரின் பின்பாக 89,000 விதவைகள் இருக்கின்றார்கள். அனைவருமே இளம் வயதினராக 40 வயத்திற்கு கீழே இருக்கின்ற பெண்களாக, ஆண் துணை இல்லாதவர்களாக, தன்னந்தனியாக விடப்பட்டவர்களாக, அனாதைகளாக, பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது Global Tamil Media Network இனால் தரப்பட்ட புள்ளிவிபரம். இதனால் யாழ்பாணத்தில் விபச்சராம் "போருக்குப்பின்" என்ற நிலையில் கருத்துகள் விமர்சனகள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அம்பலத்தார் சொல்ல்வது போல பாலியல் தொழிலை அழிக்க முடியாது. ஆனால் பாலியல் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப் படுவோரின் நிலைமைதான் என்ன?

பராசக்தி said...

அரசர் காலத்திலிருந்து மட்டுமல்ல அம்பலத்தார் குறிப்பிட்ட காலக்கட்டங்கள் வரை நடந்து வந்த விபச்சாரம், அதில் ஈடுபட்டவர்களை உடல் உணர்வாலோ உள்ளத்து ஆவலாலோ அல்லது பொருளாதார ரீதியிலோ திருப்திப்படுத்தியிருக்கலாம். ஆனால் அண்மைக்காலத்தில், போருக்குப்பின் நடக்கும் விபச்சாரம் பெண்களின் மனதையும் உடலையும் சிதைக்கும் வண்ணமாக, கட்டாய பாலியல் தொழிலுக்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள், போரின் பின்பாக 89,000 விதவைகள் இருக்கின்றார்கள். அனைவருமே இளம் வயதினராக 40 வயத்திற்கு கீழே இருக்கின்ற பெண்களாக, ஆண் துணை இல்லாதவர்களாக, தன்னந்தனியாக விடப்பட்டவர்களாக, அனாதைகளாக, பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது Global Tamil Media Network இனால் தரப்பட்ட புள்ளிவிபரம். இதனால் யாழ்பாணத்தில் விபச்சராம் "போருக்குப்பின்" என்ற நிலையில் கருத்துகள் விமர்சனகள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அம்பலத்தார் சொல்ல்வது போல பாலியல் தொழிலை அழிக்க முடியாது. ஆனால் பாலியல் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப் படுவோரின் நிலைமைதான் என்ன?

அம்பலத்தார் said...

thequickfox said...

ஹேமா கருத்துக்கள் மிக அருமையானவை.//
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே

அம்பலத்தார் said...

ஸ்ரீராம். said...

வேசியாக்கப்பட வேண்டுமென்று
நான் எந்தக் கடவுளிடமும்
மனு கொடுத்ததில்லை

என்ற தமிழச்சியின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன.....//
உங்கள் வருகைக்கும் ஆக்கபூர்வமான கருத்திற்கும் நன்றி நண்பரே

அம்பலத்தார் said...

தனிமரம் said...

பாலியல் கல்வியை பரிந்துரைக்க வேண்டியஊடகம்கள் எல்லாம் பணம் உழைக்க இப்படி பரிதவிக்கும் மக்கள் பாலியல் தொழில் செய்கின்றார்கள் என்று சொல்லிச் சொல்லியே வாசகர்களிடம் அதிகம் சுரண்டலைச் செய்கின்றார்கள்......//
ஆம் நேசன் பல ஊடகங்களும் விசேடமாக இணையத்தள ஊடகங்கள் ஊடகதர்மமும் சமுதாயமீதான அக்கறையுமற்றவிதத்தில் செயற்படுவது வேதனைகலந்த உண்மை.

அம்பலத்தார் said...

தனிமரம் said...

சமுகத்தில் இதுவும் ஒரு தொழில் என்று ஏற்றுக்கொண்டால் சில சட்டவிரோதம் என்று சொல்லியே இவர்களிடம் பணம் பறிக்கும் பலர் இவர்களை இம்சை செய்ய மாட்டார்கள் //ஆம் அங்கீகரித்து சட்டரீதியாக அனுமதித்துவிட்டால் பணம்பறிக்கும் இடைத்தரகர்கள் பாதாள உலக கும்பல்கள் போன்றவற்றால், கஸ்டத்தில் இத்தொழிலிற்குச்செல்லும் ஏழைகள் சுரண்டப்படுவது குறையும்.

அம்பலத்தார் said...

பராசக்தி said...
....ஆனால் அண்மைக்காலத்தில், போருக்குப்பின் நடக்கும் விபச்சாரம் பெண்களின் மனதையும் உடலையும் சிதைக்கும் வண்ணமாக, கட்டாய பாலியல் தொழிலுக்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள்,....//
வணக்கம் பரா இதுவரை கருத்துக்கூறிய யாரும் முன்வைக்காத ஒரு முக்கிய கருத்தை முன்வைத்திருக்கிறியள். இது மிகவும் மோசமானதொரு குற்றச்செயல் இவ்வாறு பெண்களை நிர்ப்பந்திப்பவர்களுக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்களும் எமது மக்களின் நலனில் அக்கறைகொண்ட நாம் எல்லோரும் குரல்கொடுக்கவேண்டும். நடவடிக்கைகள் எடுக்க அரசை நிர்ப்பந்திக்கவேண்டும். ஆனால் இதில் இருக்கும் ஒரு நடைமுறைச் சிக்கல் என்னவென்றால் இவ்வாறு பெண்களை வற்புறுத்துபவர்கள் பெரும்பாலும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாகவும் அரசுடன் சேர்ந்து இயங்குபவர்களாகவும் இருப்பதால் இவர்களை எதிர்க்க மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள் பயப்படுகிறார்கள். இந்தக்கும்பல்களிற்கு இலங்கை இராணுவமும் காவற்துறையும் மறைமுக ஒத்துழைப்பும் வழங்குகிறது.

அம்பலத்தார் said...

பரா, போரினால் விதவைகளாக்கப்பட்ட வருமானம் அற்ற இந்தப்பெரும் தொகைப் பெண்களிற்கும் தொழில்வாய்ப்புக்கள் ஏற்படுத்த புலம்பெயர் நாங்கள் ஒவ்வொருவரும் எங்களால் முடிந்த வழிகளில் உதவவேண்டும்.

அம்பலத்தார் said...

Ideamani - The Master of All said...

எமது சமூகத்தில் பெண்களால் இந்தளவுக்குக் கருத்துக் கூற முடிகிறதென்றால், அனைத்துவிதமான பிறபோக்குத் தனங்களில் இருந்தும் விடுபட்டு, நாம் முன்னேறி வருகிறோம் என்றுதான் அர்த்தம்! //
சரியாக சொன்னீர்கள் மணி, ஹேமா, கலை விழி, பராசக்தி என பெண்கள் இங்கு தமது தீர்க்கமான கருத்துக்களை தெளிவாக முன்வைத்திருப்பதிலிருந்து இந்தப்போக்கை புரிந்துகொள்ளமுடிகிறது.

அம்பலத்தார் said...

Ideamani - The Master of All said...

“ ஆண்களாகிய நீங்கள் - இந்தளவுக்கு எம்மைப் புரிந்து கொண்டு, பேச அனுமதித்ததால் தான் எம்மால் இப்படிப் பேச முடிகிறது! எங்கே நீங்கள், இப்படியெல்லாம் நீ சொல்லக் கூடாது! இது தப்பு என்று சொல்லிப் பாருங்கள்! அதன் பின்னர் நாங்கள் வாயே திறக்க மாட்டோம்! ஆகவே, எம்மை பேச அனுமதித்த, எங்கள் கருத்துக்களுக்கு மதிப்புத் தரும் ஆண்களாகிய உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!” என்றார்!//
ஆண், பெண் என இருபகுதியினரிலும் நல்ல சிந்தனை மாற்றம் தென்படுவது உண்மைதான்.

பராசக்தி said...

ஈழவயலில் "நான் வளர்த்த பச்சைக்கிளி" என்ற தலைப்பில் தாங்கள் எழுதியதற்கு தடவை பின்னூட்டம் போட்டும் வலையேறவில்லை, அதனால் இந்த பகுதியில் சொல்ல வருவதை பதிவிடலாமா?
பறவைகள் என்றாலும் நெருங்கி பழகி, பிரிவதில் கவலை உண்மைதான் அம்பலத்தார் , பறவைகளை வீட்டில் கூட்டில் அடைத்து வளர்த்து அவைகளின் சுதந்திரத்தை தட்டிப் பறிக்காமல், காட்டுக்கிளிகள் வந்து பசியாறி போகுமாறு தண்ணி தானியம் போன்றவற்றை தோட்டத்தின் நடுவே அமைக்கலாம். இந்த வகையில் ஒவ்வொருநாளும் ஒரே நேரத்தில் வந்து தமக்கான உணவை எடுக்கும் பறவைகளில் முதலிடம் பெறுவது Rainbow lorikeet, மற்றும் Pink Galah, Sulpfur crested cockatoo. Rosella, King parrot போன்றவையும் வரத்தவறுவதில்லை. அவற்றின் வண்ணம் கண்ணைப் பறிக்கும் அழகு. தானியம் போட தாமதமானால், உரிமையோடு கதவைத் தட்டி, கையிலேயே வாங்கி உண்ணும் அளவிற்கு நெருக்கமான கிளிகள் Sydney backyard இல் இருக்கின்றன.

பராசக்தி said...

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பொருளாதார உதவி மட்டும் போதாது. அவர்களின் மன உளைச்சலுக்கும் தகுந்த மன நல மருத்துவரின் ஆலோசனை (கவுன்சிலிங்) வழங்க வேண்டும்.

Anonymous said...

கலை, மிகவும் தெளிவாக இன்றைய தாயகத்தின் நிலைமையை சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். உங்களைப்போன்று இன்றைய இளம்பெண்கள் பலரும் சமூக அக்கறையும், விழிப்ப்புணர்வும், துணிவும்கொள்வது சந்தோசமளிக்கிறது.//

மிக்க நன்றி அங்கிள் !!!ஹ ஹா ஹா

பி.அமல்ராஜ் said...

அருமையான பதிவு அம்பலத்தார்... உங்கள் பல விடயங்கள் எனது கருத்துக்களோடு ஒட்டிப்போவது ஆச்சரியம் அளிக்கிறது. யாழ்ப்பாணத்தைக் கடந்து கொஞ்சம் முல்லைத்திவு பக்கம் வந்தால், அதிகமான விதவைகள் 20 இருந்து 25 வயது வரையானவர்கள். இவர்கள் இந்த ஒழுங்கற்ற பாலியல் பழக்கவழக்கங்களில் ஈடுபடுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று, வருமானம். இரண்டு, பொதுவான பாலியல் உணர்ச்சி. இவர்கள் மிகவும் இளம் பெண்கள். எம் அனைவரிற்கும் இருக்கும் அனைத்து பாலியல் சார்ந்த உணர்ச்சிகளும் அவர்களுக்கும் இருக்கவே செய்யும். அதை அவர்கள் நிவர்த்தி செய்து கொள்வதற்காய் இவ்வாறான விடயங்களில் ஈடுபடுகிறார்கள். என்னைப்பொறுத்த வரையில், இந்த வயதில், கணவன் இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு பணத்தைவிட, பாலியல் தேவையே அதிகமாக இருக்கும்.

புலவர் சா இராமாநுசம் said...

அன்பரே!சங்க இல்கியத்திலேயே
பரத்தையர் பிரிவு என்ற ஒருபிரிவு தலைவனுக்கு உண்டே! மனிதன் தோன்றிய காலம் தொட்டே இது தொடர் கதைதான்!இதை ஒழித்தல் என்பது முயல்கொம்பே!
புலவர் சா இராமாநுசம்

thequickfox said...

இரு சவுதிஅரேபிய இஸ்லாமியர்கள் 17 வயது பெண்ணை இலங்கையில் ஹோட்டலில் வைத்து பாலியல் வல்லுறவு செய்ததாக செய்திகள் இன்று வந்திருக்கு. இவை சவுதிஅரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகள் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டிய அவசிய தேவையை தெரிவிக்கின்றன. இதன் மூலம் பெண்கள் பாதுகாக்கபடுவார்கள்.