நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

அடை

 அடை செய்யலாம் வாங்க

தேவையான பொருட்கள்.கடலைப் பருப்பு - 100 கிராம்
துவரம் பருப்பு - 100 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
வெ . உழுந்து - 100 கிராம்
ப . அரிசி - 100 கிராம்
சி. வெங்காயம் - 100 கிராம்
நற் சீரகம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - "
கறிவேப்பிலை -
செத்தல் மிளகாய்- 7, 8
இஞ்சி - 1 துண்டு
உப்பு -
பெருங்காயம் - மிகச்சிறிய அளவு.
( விரும்பினால் )
உப்பு - தேவையான அளவு
நெய்


செய்முறை
......................

ஐந்துவிதமான தானியங்களையும் ஒன்றாகக் கலந்து நன்றாக ஊற விடவும்.
சின்னவெஙகாயம், கறிவேப்பிலையைச் சிறிய துண்டுகளாக வெட்டவும். ஊறிய தானியங்கள் மற்றும் மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அருவல் நொருவலாக (பசையாக அரைக்கக் கூடாது) அரைக்கவும். பின்பு சிறிய துண்டுகளாக வெட்டிய வைங்காயம் கறிவேப்பிலையைக் கலக்கவும்.
பின்பு தோசை வார்ப்பது போல , ஆனால்ச் சிறிது மொத்தமாக வார்த்து சுற்றி எண்ணெய் அல்லது நெய் விட்டு, அளவான சூட்டில் இரு பக்கமும் சுடவும்.(ஒரு மூடியால் மூடியும் சுடலாம்.)

இதற்கு கட்டியான சம்பல் சேர்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.

ஆக்கம்: கௌரி மகேஸ்

No comments: