ஒருசில சலுகைகளுக்காகவும் வாய்ப்புகளுக்காகவும் சுயகௌரவத்தையும் உரிமையையுமே இழக்கத் தயாராகிப்போனவர்கள் வாழும் ஒரு சமூகத்தில் புரட்சியும் மாற்றங்களும் எப்படி வெற்றியடையும்?
சிங்கள, தமிழ், இஸ்லாமிய என அனைத்து சமூகங்களும் அயோக்கியன், சுயநலவாதி, தொலைநோக்கு இல்லாதவன் சிறந்த ராஜதந்திரமற்றவன் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் அதே சீழ்பிடித்த அரசியல்வாதிகளை அற்பலாபங்களுக்காக அரியணை ஏற்றத்துடிக்கும் ஒரு தேசத்தில் மாற்றம் அப்படி சாத்தியமாகும்?
எத்தனை கொடுமைகள் இழைத்தாலும் அதனையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் மீண்டும் சின்னங்களை மட்டுமே தேடி வாக்களிக்கும் ஒரு தேசத்தில் மாற்றம் எப்படி நடக்கும்?
படித்தவனும், பெருமுதலாளிகளும், அரசியல்வாதிகளும் இன மொழி மத பேதங்களை தாண்டி ஒன்றிணைந்து அப்பாவி பாமரமக்களை சுரண்டி வாழும் சமூகத்தில் வறியவனும் சாதாரண அப்பாவி மக்களும் எப்படித்தான் முன்னேறமுடியும்?
என் அப்பா அந்தக் கட்சி... என் தாத்தா அந்தக்கட்சி ...
நாங்கள் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப்போடுவோம் என்று அரசியல் சூதுவாதுகள் புரியாமல் கொடிபிடிக்கும் மக்கள் வாழும் நாட்டில் மாற்றம் எப்படி சாத்தியம்?
நாங்கள் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப்போடுவோம் என்று அரசியல் சூதுவாதுகள் புரியாமல் கொடிபிடிக்கும் மக்கள் வாழும் நாட்டில் மாற்றம் எப்படி சாத்தியம்?
அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லாத படித்தவங்களும் இளைய தலைமுறையும் வாழும் தேசத்தில் மாற்றம் எப்படி உருவாகும்?
அரசியல் நமக்கு வேண்டாம் என ஒதுங்கியிருக்கும் ஒரு சமூகம் எப்படி மாற்றம்பெறமுடியும்?
குறுகிய தற்காலிக சுகங்களிலும் வசதிகளிலும் திருப்திப்படுபவர்களாக நாங்கள் இருக்கும் வரையிலும் நிரந்தர தீர்வுகளும் மாற்றங்களும் எட்டப்படுவது சாத்தியமில்லை.
ஆதலால்
முதலில் மாற வேண்டியது மக்களாகிய நாங்கள்தான்.
முதலில் மாற வேண்டியது மக்களாகிய நாங்கள்தான்.
எம்மில் தோன்றும் மாற்றங்கள் அரசியல்வாதிகளை மாற்றம்பெறவைக்கும்.
ஆதலால் மாறுவோம் மாற்றுவோம்
மாறத்தொடங்குவோம்.......
வரும் உள்ளூராட்சிமண்ர தேர்தலில் ஒவ்வொரு பிரதேச மக்களும் தமது பிரதேசத்தைசேர்ந்த சிறந்த ஒருவரை இனங்கண்டு அவ்ரையே தமது இடத்துக்கான வேட்பாளராக களமிறக்கவேண்டும் எனவும் அவரை முன்னிறுத்தினால்தன் தாம் வாக்களிப்போம் எனவும் பிரதானகட்சிகளை வற்புறுத்தி சரியான வேட்பாளரை பதவியில் அமர்த்த முயற்சிப்பது இன்றைய காலத்தின் அவசியம். .

No comments:
Post a Comment