நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Monday

நட்பு & புரிந்துணர்வு





விடுதலைப்போராட்டங்களை உரிமைப்போராட்டங்களை ஆதரிக்கும் எந்த ஒரு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை வளர்த்துக்கொள்ளாதது.
எதிரிக்கு எதிரி நண்பன் என்றாவது சிங்களதேசத்திற்கு எதிரான நாடுகளுடன்
உறவுகளை பேணமுயற்சிக்காதது என போராளிகளும் நாங்களும் மற்றைய எல்லோரையும் எல்லாவற்றையுமே வேண்டத்தகாதவைகளாகவும் விரோதிகளாகவும் பார்த்தது எமது போராட்டத்தின் பின்னடைவுக்கு மிக முக்கியமானதொரு காரணமாகும்.

அதனால்தான் இறுதிக்கட்ட போராட்டத்தின்போது உலகமெங்கும் புலம்பெயர் எம்மவர் ரயில்மறிப்பு வீதிமறிப்பு என பலவித போராட்டங்களையும் மிக தீவிரமாக செய்தபோதும், எமது தலைமை உலகநாடுகளின் உதவியை எதிர்பார்த்துநின்றபோதும் எம்முடன் சேர்ந்து எமக்காக குரல்கொடுக்க, அதரவளிக்க, உதவிக்கரம் நீட்ட வேறெந்த சக்திகளும் முன்வராமல்போனது.

மீண்டும் இப்பொழுது சம்பந்தன் துரோகி சுமந்திரன் துரோகி. சீமான் நீ உன் நாட்டு அரசியலைப்பார் நாங்க எங்க போராட்டத்தை பார்த்துக்கிறோம். திருமுருகன்காந்தியும் வேண்டாம் கஜேந்திரன் கள்ளன் என அனைவரையும் விரோதிகளாக பார்க்கும் நிலைப்பாடு உருவாகுவதை காணமுடிகிறது.
ஈழத்தமிழினமே பட்ட அனுபவங்களிலிருந்தாவது நீ உன்னை திருத்திக்கொள்ளவேமாட்டாயா? வீட்டில் புருசன் பெண்டாட்டி பிள்ளைகளுக்கிடையிலேயே 100% கருத்தொற்றுமையை காணமுடியாது ஆனாலும் பெரும்பாலும் குடும்பக்கட்டமைப்பு பாதுகாக்கப்படுகிறது அதுபோல குறைந்தபட்ச வேலைத்திட்ட அடிப்படையில் இணைந்துபோகும் செயற்திட்டங்களில் இணைந்து போராடக்கற்றுக்கொள் அப்படியல்லாமல்
இதே போக்கில் நீ பயணித்தால் உன் விடுதலைக்கு முதல் எதிரி நீயேதான்.
ஒரு இனத்தின் தாகத்தை போராளிகள் ஏன் தமது தாகமாக மட்டுப்படுத்திக்கொண்டனரோ தெரியவில்லை.

No comments: