நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

வேள்விக்கு வச்சிட்டம் ஆப்பு

கோயில்களிலை ஆடு, கோழியை பலிகொடுக்கிற வேள்வியை தடை செஞ்சதாலை எங்கடைபாரம்பரியமே அழியப்போகுது மதமே அழிஞ்சிடும் என்கிறமாதிரி ஒப்பாரி வைக்கிறவங்களே!


முந்தியொருகாலத்தில புருசன் இறந்தால் பெண்டாட்டி உடன்கட்டை ஏறவேணுமென்று அவனோட சேர்த்து கொளுத்தினம்.
பிறகொருகாலத்திலை அது கொடுமை என்று தெரிஞ்சதும் புருசனை பறிகொடுத்த பெண்ணுக்கு வெள்ளை சீலையை உடுத்தி பூவையும் பொட்டையும் பறித்து சமூகத்தில இருந்து கொஞ்சம் ஒதுக்கி வைத்தம்.
இப்போ அதுவும் தவறென உணர்ந்து கைம்பெண்களையும் ஏனைய பெண்களைப்போல வாழவேணும் என்று சொல்லுறம்.
இப்படி சைவ சமயம் அவ்வப்போது தன்னை கேள்விக்குட்படுத்தி தவறுகளை திருத்திக்கொண்டுவருவதால்தான் சைவ சமயம் நலிந்து அழிந்துபோகாமல் பலயுகங்களாக செழிப்புடனும் வளமுடன் நிலைத்திருக்கிறது.
ஆனபடியால் வேள்வி ஒழிப்புக்கு எதிராக நீங்களெல்லாம் மதத்துக்காக மதம்பிடித்தயானைகளாக மாறவேண்டாம். வேள்வித்தடையும் உங்களது இந்த சலசலப்புகளையெல்லாம் தாண்டி எம்மதத்துக்கு வலுச்சேர்த்து சிறப்புற வளப்படுத்தும்.

No comments: