நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Sunday

ஹர ஹர மகா தேவ கி...

..
காலங்காத்தால இளவட்டப்பெடியனொருத்தன் ரெலிபோனெடுத்தவன் கதைச்சுக்கொண்டிருக்கேக்கை பேச்சுவாக்கில என்னடா இண்டைக்கு வேலைக்கு போகேல்லையோ என்று கேட்டத்துக்கு.
அங்கிள் இந்த கொட்டு கொட்டுற பனியுக்கை கஸ்டப்பட்டுபோய் வேலையை செய்யுறதுக்கு பரிசும் பதக்கமுமே கொடுக்கப்போறான் என்ரை முதலாளி.
அதுதான் இண்டைக்கு வேலைக்கு கட் அடிச்சிட்டு ஜாலியா பெண்டாட்டியோட உக்கார்ந்து

ஹர ஹர மகா தேவ கி..... பார்க்கலாம் என்றிருக்கிறன் என்றுசொன்னான்.
அதென்னடா பெயரே கேள்விப்படேல்லை ஓடாத படமே உது எப்ப வந்தது என்றுகேட்டதுக்கு
அங்கிள் முதல்ல படத்தை பார்த்துப்போட்டு பிறகு கதையுங்கோ என்றான்.
அட பெடியன்ரை ஐடியாவும் நல்லாத்தான்கிடக்குதென்று நினைச்சுக்கொண்டு ஒரு கப் காப்பியை போட்டு எடுத்துக்கொண்டுவந்து TVக்குமுன்னாலை உக்கார்ந்து அந்த படத்தை தேடிப்பிடிச்சு போட சத்தம் கேட்டு வந்து எட்டிப்பார்த்த செல்லம்
இப்ப உந்த படம் பார்க்கிற வயசே உங்களுக்கு நிப்பாட்டிப்போட்டு போய் தொழிலை கவனியுங்கோ என்று விரட்டினா...
நானும் விளங்காக்ததுபோல இஞ்சை வாரும் பக்கத்தில வந்து உக்கார்ந்து எந்ததொழிலையென்று சொல்லும் என்று கேட்க
இத்தனை வயசாகியும் உந்த குறுக்கால போற குரங்குப்புத்திமட்டும் மாறாது இப்ப பேசாமல் போய் கடையை திறவுங்கோ சாயங்காலமா படத்தை பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டு செல்லம் கண்ணைசிமிட்ட

ஹர ஹர மகா தேவ சீக்கிரமா கடையை பூட்டுற நேரம் வரப்பண்ணிடு என்று வேண்டுதல் வைச்சிட்டு
இப்ப நான் வாலைச்சுருட்டிக்கொண்டு கடைக்கு போய்க்கொண்டிருக்கிறன்.

No comments: