நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Monday

செல்லத்தின் புருசன்

செல்லத்தின் புருசன் எங்கிற அம்பலத்தார் ஆகிய நான்.
என்ரை செல்லத்துக்கு தன்னை அடையாளபடுத்திக்கொள்ளுறதுக்கு அம்பலத்தார் பெண்டாட்டி என்ற அடைமொழி எப்பொழுதும் தேவைப்படேல்லை. எனக்குத்தான் அப்பப்ப செல்லத்தின் புருசன் Chellam´s Husband என்கிற அடையாளப்படுத்தல் தேவைப்படுகிறது.

ஒரு ஆணாதிக்க சமூகத்தில அவ அந்த இடத்தை அடையிறதுக்கு எவ்வளவு சாதனையளை, சோதனையளை வேதனையளை தாண்டி வந்திருக்கவேணும்.
I love you da Chellam.


என்ரை வீட்டில என்ரை செல்லம் என்னைவிட திறமையும் ஆளுமையும் மிக்கவராக இருக்கிறா என்ரை வேலையிடத்தில மேலதிகாரியாக ஒரு பெண் (வேறயார் அங்கையும் என்ரை செல்ல பெண்டாட்டிதான்) என்னைவிட திறமையும் ஆளுமையும் மிக்கவராக இருக்கிறா.
இனிவாறன் விசயத்துக்கு.
எந்த ஒரு ஆணாலையும் தன்ரை அம்மாவின் திறமைகளையும், ஆளுமையையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவும் புகழ்ந்து பேசவும் முடியும்.
மகளின் பெருமைகளை பேசாத நாளே இருக்கமுடியாது.
இவ்வளவும் ஏன் - நண்பனின் பெண்டாட்டியின், பக்கத்துவீட்டு பெண்ணின் திறமைகளைக்கூட ஏற்றுக்கொள்ளவும் புகழ்ந்து பேசவும் முடியும்.
ஆனால் வீட்டில் தன் மனைவி தன்னைவிட திறமையானவராகவோ, ஆளுமைமிக்கவராகவோ இருப்பதையோ அல்லது
வேலையிடத்தில் தனது மேலதிகாரியாக ஒரு திறமைமிக்க பெண் இருப்பதையோ பெரும்பாலான ஆண்களாலையும் ஏற்றுக்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ முடியாத காரியமாக இருக்கிறது.
இந்த இரு பெண்களையும் மதிப்பதுவும் அவர்கள் திறமைகளை ஒப்புக்கொள்வதுவும் தமது ஆண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் இழுக்காகவுமே கருதுகிறார்கள்.
தாயோ, மகளோ மற்றைய பெண்களோ திறமையானவர்களாக இருப்பதால் சம்பந்தப்பட்ட ஆண்களின் ஆணாதிக்க சிந்தனைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் பெரும்பாலும் இடையூறுவருவதில்லை. மனைவியோ பெண் மேலதிகாரியோ ஆளுமைமிக்கவர்களாக இருக்கும்போது சம்பந்தப்பட்ட ஆண்களின் ஆணாதிக்க சிந்தனைகள் பலசமயங்களில் தகர்க்கபடுவதே இந்த நிலமைக்கு காரணமாகும்.
எந்த ஒரு ஆணால் தன்ரை மனைவியினதும் பெண் மேலதிகாரியினதும் திறமைகளை ஏற்றுக்கொள்ளவும் மதிக்கவும் முடிகிறதோ
அந்த ஆணால் உலகத்திலுள்ள அத்தனை பெண்களையும் மதிக்கவும் போற்றி மகிழவும் முடியும்.
ஆணாதிக்க சிந்தனை மாற்றத்துக்கான தொடக்கப்புள்ளி எதுவென்று புரியவேண்டியவங்களுக்கெல்லாம் இப்ப புரிஞ்சிருக்குமென நினைக்கிறன்.
இந்தபதிவிலை நான் சொன்னதிலை நான் எந்தவகை ஆம்பிளை என்ற ரகசியம் எம் பெண்டாட்டி செல்லத்துக்குமட்டுந்தான் தெரியும். இப்ப இதை படிச்ச உங்க எல்லாரையும் கெஞ்சிக்கேட்கிறன் அவவிட்டை அந்த ரகசியத்தை எப்படியாவது கேட்டறிஞ்சு எனக்கும் ஒருக்கால் சொல்லிப்போட்டுபோங்கோ.
பெண்டாட்டி என்ற அடைமொழி எப்பொழுதும் தேவைப்படேல்லை. எனக்குத்தான் அப்பப்ப செல்லத்தின்ரை புருசன், Chellam´s husband என்கிற அடையாளப்படுத்தல் தேவைப்படுகிறது. ஒரு ஆணாதிக்க சமூகத்தில அவ அந்த இடத்தை அடையிறதுக்கு எவ்வளவு சாதனையளை சோதனையளை வேதனையளை தாண்டி வந்திருக்கவேணும்.

No comments: