நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

பயணம்.... பயணம்...... பயணம்.................... 1

பயணம்.... பயணம்........ பயணம்....................... 1

வாழ்க்கையில் கடந்த முப்பது ஆண்டுகளில் இருபது நாடுகளிற்குமேல் பயணம் செய்ததில் கற்றதுவும் பெற்றதுவும்தான்  மிகமிக அதிகம்.  பலமுறை குப்புற விழுந்ததுவும் உச்சங்களைத்தொட்டதுவும் அற்புதமான அனுபவங்கள். அவை உங்களிற்கும் சுவாரசியமாக இருந்தால் தொடர்ந்து படியுங்கோ.                  
1982 ம் ஆண்டு அடிமை வாழ்க்கையைவிட அகதி வாழ்க்கை மேல் என்ற தப்பான எண்ணத்திலை ஒருசில ஆயிரம் ரூபாய் பணத்துடன் புறப்பட்டு பம்பாய் போய்ச்சேர்ந்தேன். கொஞ்சக்காலம் அங்கு  சுற்றித்திரிந்தபின் அப்படியே பாகிஸ்தான் போகலாம் என்று புறப்பட ஆயுத்தமாகும்போது கேள்விப்பட்டன் பாகிஸ்தானிற்கு வெற்றிலை கொண்டுபோறது தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் கொண்டுபோய்விட்டம்மென்றால் நல்ல விலைக்கு விற்கலாம் என்று, சரி என்னதான் நடக்கிறதென்று பார்ப்பம் என்ற நப்பாசையிலை இரண்டு கையிலையும் காய்ந்த வாழையிலையில் சுற்றிக்கட்டின பெரிய வெற்றிலைப் பொட்டலங்கள். ஒவ்வொன்றிலையும் ஆயிரம் ஆயிரம் வெற்றிலை.  முதுகிலை ஒருசிறு பையில் ஒருசில உடுப்புக்களிற்கு இடையிலை இரண்டு விஸ்கிப்போத்தல்கள் காலில் ஒருசோடி தேய்ந்த ரப்பர் செருப்பு என ஒரு தினுசான கோலத்தில் பாகிஸ்தான் விமானநிலையத்தில் போய் இறங்கினால் .................
அங்கு என்ன நடந்தது என்பதை............
வேலையிற்குப்போய் வந்து சொல்கிறேன். அதுவரை கொஞ்சம் பொறுத்திருக்கத்தான் வேண்டும்......................


அம்பலத்தார்

2 comments:

நிலாமதி said...

காத்திருக்கிறோம் தொடருங்கள்.

பராசக்தி said...

இதேபோல வெற்றிலையோடு Sydney யில் வந்திறங்கினால் வெற்றிலை போகுமிடம் குப்பைதொட்டி! Fruit and vegetable growers in Australia are under constant threat from fruit fly. 19 பயணக்கட்டுரைகள் வருமென எதிர்பார்க்கிறோம்.