நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

வன்னிக்காற்று வீசும் செய்தி.

 
பால் இல்லையா? பழம் இல்லையா?
பருக்கையற்ற கஞ்சியேனும் தா! எனக்
கதறிடும் மழலைகள்
மழலைகள் முகம்பார்த்து வாடிடும்
மங்கையர் இதயங்கள்.

கைதாகிக் கொலையுண்ட
காளையர் கன்னியர்
வேதனைக் கண்ணீருடன் அன்னையர் தந்தையர்

கல்வித்தடையால்
கவலையுறும் பாலகர்
மருந்துத்தடையால்
அவதியுறும் பிணியாளர்
வன்னிக் காட்டின்
இன்றைய நிகழ்வுகள்
கந்தலோ கோணியோ உடையாக
காயோ கிழங்கோ உணவாக
இலையோ வேரோ மருந்தாக
மரமோ மதிற்சுவரோ வீடாக

மரணப்படுக்கையில்
கையது கொண்டு மெய்யது பொத்தி
சுருண்டுகிடந்திடும் ஒருவர்
ஈனஸ்வரத்தில் முனகிடும்
வார்த்தைகள் சில இதோ!

"வன்னிப் பாதையில்
வந்திடும் வழிப்போக்கா
நின்றிடு சிலகணம்
மூடிவிடு என் விழியை
அடக்கம் செய் என் உடலை
விலங்கும் பறவையும்
இழுத்துப்போகுமுன்

ஆயிரம் வேட்டலில் சிறந்தது
அனாதைப் பிணத்தை அடக்கம் செய்வது
இருவரும் நாங்கள் ஈழத்தமிழரடா! 
தொப்புள் கொடிச் சொந்தமடா!"

புலம் பெயர்ந்திங்குவாழ் எம் உறவுகளே
கேட்குதோ உம் காதில் வன்னிக்காற்று
எமக்கு வீசிடும் செய்தியை
தட்டுங்கள் உங்கள் மனக் கதவுகளை
திறக்கட்டும் சிறிதேனும்.

................................................................
இந்திராணி திருநாவுக்கரசு.

21 comments:

SURYAJEEVA said...

கணம் நிறைந்த வார்த்தைகள்

மாய உலகம் said...

மனம் வலிக்க செய்த வரிகள்...

M.R said...

படிக்கும் பொழுதே மணம் கனக்கிறது சகோ

Unknown said...

வலி சுமந்த வரிகள்!

கவி அழகன் said...

மனசை கனக்க வைக்கும் கவிதை

Anonymous said...

உணர்வுக்கவிதை...விடிவு வெகுதொலைவில் இல்லை...

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் ஐயா,

எங்களின் கடந்த காலத்தின் துயரங்களைச் சுமந்து காட்சிப்படுத்தலாய்க் கவிதை வந்திருக்கிறது.

கோகுல் said...

"வன்னிப் பாதையில்
வந்திடும் வழிப்போக்கா
நின்றிடு சிலகணம்
மூடிவிடு என் விழியை
அடக்கம் செய் என் உடலை
விலங்கும் பறவையும்
இழுத்துப்போகுமுன்///

சொல்லால் அடித்து விட்டீர்கள்!

Unknown said...

படிக்க படிக்க மனம் வலிக்குது

காட்டான் said...

ஒரு காலத்தில் தஞ்சைபோல் நெற்களஞ்சியமாக இருந்த வன்னி இப்போது?? மனசை கணக்க வைத்த கவிதை..

காட்டான் said...

அம்பலத்தார் பக்கம் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்..

சி.பி.செந்தில்குமார் said...

>>>ஆயிரம் வேட்டலில் சிறந்தது
அனாதைப் பிணத்தை அடக்கம் செய்வது
இருவரும் நாங்கள் ஈழத்தமிழரடா!
தொப்புள் கொடிச் சொந்தமடா!"

டச்சிங்க் லைன்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

பிடித்த வாசனைகளில் என் வலைப்பூ வர நான் இன்னும் உழைக்கனும் போல!!!!

அம்பலத்தார் said...

உங்கள் அனைவரதும் மனம் நிறைந்த வலி சுமந்த வரிகளை எழுதிய மறைந்த இந்திராணி திருநாவுக்கரசு அவர்களிற்கே அனைத்துப் பாராட்டுகளும்

அம்பலத்தார் said...

அம்பலத்தார் பக்கம் அருமையாக இருப்பதற்கு உங்களிற்குத்தான் நன்றி சொல்லவேண்டும் காட்டான்

ம.தி.சுதா said...

ஃஃஃஃகல்வித்தடையால்
கவலையுறும் பாலகர்
மருந்துத்தடையால்
அவதியுறும் பிணியாளர்
வன்னிக் காட்டின்
இன்றைய நிகழ்வுகள்ஃஃஃஃ

ஐயா உங்கள் உணர்வும் வரியும் மிகவும் சரியானதே.. பலர் மீள முடியாமல் தவிக்கிறோம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கணக்குத் திருடும் Hackers இடம் இருந்து தப்புவதற்கு எனக்குத் தெரிந்த இலகு வழி

சக்தி கல்வி மையம் said...

மனதை நெகிழ வைக்கும் பதிவு..

Yaathoramani.blogspot.com said...

படிக்கவே மனம் கதறும் கவிதை
இதயத்தை கீறி காயமேற்படுத்திப் போகிறது

குறையொன்றுமில்லை. said...

கல்வித்தடையால்
கவலையுறும் பாலகர்
மருந்துத்தடையால்
அவதியுறும் பிணியாளர்
வன்னிக் காட்டின்
இன்றைய நிகழ்வுகள்
கந்தலோ கோணியோ உடையாக
காயோ கிழங்கோ உணவாக
இலையோ வேரோ மருந்தாக
மரமோ மதிற்சுவரோ வீடாக


மனம் கனக்கச்செய்த கவிதை.

அம்பலத்தார் said...

செந்தில்குமார் விரும்பிச்சுவைத்தவையில் இணைக்காதவை எல்லாம் தரம் குறைந்தவை என்பதல்ல அர்த்தம்.நான்விரும்பும் அனைத்துப்பக்கங்களையும் பட்டியலிட்டால் மிகவும் நீண்டதாக இருக்கும் என்பதால் குறிப்பிட்ட அளவு பக்கங்களை சுழற்சிமுறையில் இணைக்கிறேன். வருத்தப்படவேண்டாம் எனையவர்களிற்கும் அவ்வப்போஒது இடம்கிடைக்கும்..

J.P Josephine Baba said...

துயர்! துயர்! துயர்!!