இதைவிட்டா இப்பிடியொரு சான்ஸ் இனிவராது. இவளோடையே வீட்டிலையிருந்தே கூட வந்தமாதிரி பந்தாவா கதைச்சுக்கொண்டு உள்ளை போனால் எனக்குக் கொஞ்சம் மவுசு ஏறும். அவளைப் பார்த்து ஜொள்ளு விடுகிற வெள்ளையனெல்லாம் ஏக்கமாப் பார்பானுகள் என்ற நினைப்பிலை.
ஹாய் ஜெனி குடன் மோர்கன் ( காலை வந்தனங்கள்) என்றன்.
மோர்கன் எல்லாம் கிடக்கட்டும் கொஞ்சம் நில்லு மேன் அம்பல், நானும் கொஞ்சநாளாப் பர்க்கிறன், வேலைக்கும் ஒழுங்கா வாறதில்லை. அந்தமாதிரிப் பூசிப்பிணத்திக் கொண்டு ஜாலியாத் திரியிறீர். கலரா எதாவது மாட்டீட்டுதோ? என்றாள் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு.
சும்மா வெறுப்பேத்தாதை. ஒருத்தியைக் கட்டிக்கொண்டு நான் படுகிறபாடு போதாதெண்டு உந்தச் சிலுப்பியளிட்டை வேற மாட்டினனெண்டால்..............
ரொம்பவும்தான் அலுத்துக்காதை, கிட்டவாயேன் அம்பல் ஒரு விசயம் சொல்லுறன்.
ம் சொல்லு
அவள் கிட்ட வந்து களுத்தைச் சுத்திக் கையைப் போட்டுக் கொண்டு இன்றைக்கு சாயங்காலம்............. என்று ஏதோ காதுக்கை கிசுகிசுக்கத் தொடங்கினாள்.
உள்ளுக்கை சற்றுக் குசியா இருந்தாலும்
சீ போ, ஆரும் பார்த்தால்................. என்று விலகப்பார்தன்.
அவளெண்டால், இப்ப என்னத்தைச் செய்துபோட்டன் என்று இந்த எகிறு எகிறுகிறாய், போனால் போகுது பாவமே என்று உனக்கு அந்த விசயத்தைச் சொல்ல வந்தால்....... சரிதான் போ உன்னை விட்டால் வேற ஆளே இல்லை என்று சிணுங்கினாள்.
அது வந்து............ இந்தக் கோலத்திலை எங்களைக் கண்டவன் எவனாவது என்ரை செல்லத்திட்டை போட்டுக் குடுத்திட்டானென்றால் பிறகு எனக்கு வீட்டிலை ஒருகிழமைக்குச் சோறு தண்ணி கிடையாது.............. அதுதான் என்று வழிஞ்சன்.
திரும்பக் கழுத்தைக் கட்டிக்கொண்டு இன்றைக்கு இரவு நானும் ............................. என்று கிசுகிசுத்தாள். எனக்கெண்டால் அவள் சொன்னதிலை பாதியைக் கேட்டதிலையே ............ மிச்சமெதுவும் காதிலை ஏறேல்லை.
சட்டென்று செல்லம் ரத்தக் காட்டேரியா கண்ணுக்கு முன்னாலை வந்து
உங்களுக்கு எப்படியப்பா இதுக்கு மனசு வந்தது என்று கழுத்தைப்பிடிச்சு உலுக்கத் தொடங்கினாள்.
இந்தக் காட்சியோட வந்த ஆசையெல்லாம் பொசுக்கெண்டு அடங்கி,
இல்லை ஜெனி இண்டைக்கு எனக்கு...................... என்று தொடங்க முதலே
வா மேன் இதைவிட முக்கியமான வேலை என்ன வந்திட்டிது. சாயங்காலம் பத்து மணிக்கெல்லாம் வீட்டை போயிடலாம்.
சரி சரி ஓகே. என்றிட்டன்.
அண்டைக்கு அதுக்குப் பிறகு நான் என்ன வேலை செய்தன் எப்பிடிச் செய்தன் என்று எனக்கே தெரியேல்லை எதோ காத்திலை பறக்கிற மாதிரி எல்லாத்தையும் முடிச்சுக் கொண்டு எப்படா சாயங்காலமாகும், எப்படா அங்கை போகலாம் என்று யோசிச்சுக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தன்.
சாயங்காலமாக, செல்லம்மா வேலை செய்யிற இடத்திலை ஒருநாளும் சொல்லாத ஒருத்தன் தன்ரை வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறான், ஒரு நடை போட்டு வரவேணும்
ஆரும் ஜேர்மன்காரனோ? அவனுகள் இப்பிடி சுடுகிது மடியைப் பிடியெண்டமாதிரி கடைசி நேரத்திலை சோல்லமாட்டானுகளே. என்றாள் சந்தேகமாக
நானுமெண்டால் அது வந்து செல்லம் அவன் போன கிழமையே சொன்னவன் நான்தான் மறந்திட்டன். அவன் என்னோட நல்லமாதிரியப்பா, நல்ல உதவியும் அதுதான்.........
அது ஆரப்பா இத்தனை நாளா இல்லாமலுக்கு இப்ப புதுசா ஒருத்தன்.
உனக்கு எப்ப பார் ஒரே சந்தேகந்தான் என்று எரிஞ்சு விழவும் செல்லம்மா எதோ முணுமுணுத்துக்கொண்டு சமையல் கட்டுக்கை பூந்திட்டாள்.
நானும் அந்தமாதிரிக் குளிச்சு முழுகி கலியாணத்துக்கு வாங்கின கோட்டு சூட்டையும் எடுத்து மாட்டிக்கொண்டு பந்தாவா நடையைக் கட்டினன்.
ஒருமாதிரியா ஜெனி சொன்ன விலாசத்தைத் தேடிப் பிடிச்சுப் போய் அழைப்பு மணியை அடிச்சா, கதவு திறக்கக் காணம் நானும் விடாமலுக்கு விடாக்கண்டனாய் அடி அடியெண்டு அடிச்சும் ஆரும் திறக்காத ஆத்திரத்திலை கொஞ்சம் பலமாகவே கதவைத் தள்ளினால், மெல்லத்திறந்தது கதவு.
Jeny, Hai Jeny
வரச் சொல்லிட்டு எங்கதான் போய்த் தொலைஞ்சாளோ? என்று முணுமுணுத்தபடி உள்ளபோனால் ஆரையும் காணம் அப்படியே இன்னும் நாலு எட்டு எடுத்து வைக்க
உள்ளை கண்ட காட்சியிலை அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு ஐயோ செல்லம்மா என்று குளறினன்............
விசயத்தை யாருக்கும் சொல்லிப்போடாதையுங்கோ!
படு சிக்கலாகப்போயிட்டிருக்கு..........
அப்புறமா வந்து மிகுதிக்கதையை சொல்லுறன்
ஆக்கம்: அம்பலத்தார்
முதலிலேயே நினைத்தன் ஏதோ வில்லங்கம் வரத்தான் போகின்றது. செல்லம்மா அக்காவிற்கு சொல்லாமல் கொள்ளாமல் போனால் இப்படித்தான்.
நன்றி
அம்பலத்தார்