நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Wednesday

சமுதாயச் சீர்கேடுகளும், சந்ததி இடைவெளிகளும்
சமீபகாலமாக பிறந்த குழந்தையைக்கிணற்றில் வீசிய தாய், அதிகரிக்கும் இளவயதுக் கர்ப்பங்கள்,யாழில் கருக்கலைப்புவிகிதம் அதிகரிப்பு, என்ற செய்திகளும் நமது கலாச்சாரமே பாழாகிறது என்ற கோசங்களும் எமது செய்தி ஊடகங்களில் இடம்பெறாத நாளே இல்லை எனலாம்.

உண்மையிலேயே நமது சமூகம் பாழ்பட்டுப்போகிறதா?

இந்த நிகழ்வுகளின் புறக்காரணங்கள் என்ன?
எங்கே தவறுகிறோம்?
தீர்வுதான் என்ன என ஆராயாமல் வெறுமனே  சமுதாயத்தின் காவலரே தாம்தான் எனும் எண்ணதில் கூக்குரலிடுவதுமட்டுமே தீர்வாகிவிடுமா?
வருடந்தோறும் பலபல வைத்தியர்கள், பொறியலாளர்கள், கணக்கியலாளர்கள்............... எனத்துறைசார் வல்லுணர்கள் பலர் பட்டப்படிப்புகளை முடித்துக்கொண்டு வெளிவந்துகொண்டிருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் எமது தாயகத்தமிழ் சமூகம் கல்வியறிவில் முன்னணியில் இருக்கிறது.
ஆனால் பாலியல் அறிவிலும் அதுசார்ந்த விழிப்புணர்விலும் நம்மவர் மிகவும் பின்தங்கியே இருக்கிறார்கள்.
பண்டையகாலத்தில் ஆண் பெண் கலவியையும் ஒரு கலையாகப்போற்றி அவற்றைச் சிற்பங்களாகவும், சித்திரங்களாகவும் கோவில்களிலும் குகைகளிலும் வடிவமைத்து மகிழ்ந்தோம்.
உலகின் முதல் கலவியியல்துறைசார் நூலான கொக்கோகவிளக்கத்தை  கொக்கோகமுனிவரே எழுதினார்.
இப்படியாகக் கலவியையும் ஒரு கலையாக அனுபவித்து மகிழ்ந்த நாங்கள் எங்கோ எப்படியோ தடம்புரண்டு இதை பேசாப்பொருளாக மாற்றிவிட்டோம்.
ஆண் பெண் ஈர்ப்பும் பாலியல் உணர்வும் அனைத்து உயிர்களிற்கும் அவை தம்மை மீள்விருத்தி செய்துகொள்ள இயற்கையால் கொடுக்கப்பட்ட கொடை. எதையும் மூடி மறைக்கும்போதுதான் அதன்மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். இது இளவயதில் ஏற்படும் ஒரு சாதாரண் உணர்வுதான் என்பதை ஏற்றுக்கொண்டு அதுபற்றிய சாதக பாதகங்களை இளவயதினருக்குப் புரியவைப்பதன்மூலமே இந்தப்பிரச்சனைக்குத் தீர்வுகாணமுடியும். பாடசாலையில்தான் இவற்றைப் போதிக்கவேண்டும் என்பதற்கப்பால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அவர்களின் அந்த அந்த வயதிற்கு ஏற்றவிடயங்களை மனந்திறந்து பேசப்பழக வேண்டும்.
நானும் எனது மனைவியும் எங்கள் பிள்ளைகளுடன் அனைத்துவிடயங்களையும் மனம்விட்டுப்பேசுவோம். அதேபோல பிள்ளைகளும் தயக்கமோ பயமோ இன்றி தமது குறை நிறைகளையும் எம்முடன் கலந்தாலோசிப்பார்கள். இதனால் பிள்ளைகள் ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்தாலும் இன்றுவரை எமக்கும் பிள்ளகளிற்குமிடையில் நல்லதொரு புரிந்துணர்வு காணப்படுகிறது.
எந்த ஒரு பிள்ளைக்கு தெரிந்தோ தெரியாமலோ தான் செய்த ஒரு தவறிலிருந்து மீள்வதற்குச் சரியான வழிகாட்டக்கூடியவர்கள் தமது பெற்றோரே என்ற எண்ணம் தோன்றுகிறதோ அந்தப்பிளை ஒரு சமுதாயச்சீர்கேடாக ஒருநாளும் மாறாது.
இப்படியெல்லாம் அட்வைஸ் சொல்லுவதால் நான் எதோ பிறவியிலேயே உத்தமன் என்று கற்பனைபண்ணிவிடாதீர்கள். நான் எனது இளவதில் செய்த பல தவறுகளில் இருந்து மீள்வத்ற்கு எனக்கும் எனது குடும்ப உறவுகளிற்கிடையேயும் இருந்த புரிதலே காரணமாக இருந்திருக்கிறது. அதேபோல எனது திருமணதிற்கப்புறம் நான் செய்த தவறுகளில் இருந்து மீள்வதற்கு எனக்கு மனைவிமீதிருந்த புரிதலைவிட மனைவிக்கு என்மீதிருந்த மிக அதிகமான புரிதலே காரணமாக இருந்திருக்கிறது.
ஒவ்வொருவரும் தனது உறவுகளையும் தனது சமுதாயத்தையும் புரிந்துகொள்ளமுயல்வோம்.

3 comments:

mohan said...

அற்புதமான நிகய்வுகள் சகோ நன்றி

அம்பலத்தார் said...

நன்றி நண்பரே

காட்டான் said...

வணக்கம் அம்பலத்தார்!

அருமையான பதிவு..
உங்கள் வழிதான் என் தந்தை வழியும் நான் அவரிடம் மனம் விட்டு பேசாத விடயங்களே இல்லை..!!

சில நண்பர்கள் இவர்தான் எனது தந்தை என்று அறிமுகப்படுத்தினால் நம்ப மறுப்பார்கள்..!!(அப்படி ஒரு நற்பு எங்களுக்கு இடையில்..)அத்தோடு தங்கள் பெற்றோரும் இப்படி நண்பர்களை போல் பழகவில்லையே என்னும் ஆதங்கத்தை பார்த்திருக்கிறேன்...

அதிக கண்டிப்பு இன்னும் தவறுகள் செய்ய தூண்டுமே தவிர அதனால் வேறு நன்மையில்லை..

எல்லாவற்றையும் விட கட்டாயம் செக்ஸ் கல்வி பள்ளிகளில் வேண்டும்.. இப்போது இணையங்களும் வேறு நவீன வசதிகளும் நமது சந்ததியை தவரான பதைக்கு அழைத்து செல்ல முன்னர் நாம் விளித்தெழ வேண்டும்..