நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

என்ன படிக்கலாம்? ரொம்பவும்தான் முடியைப் பிச்சுக்கவேண்டாம்.


மொக்கைப் பதிவுகளால் நிரப்பப்படும் பதிவுலகில் அப்பப்போ இந்தமாதிரிச் சில நல்ல பதிவுகளையும் காணக்கிடைப்பது சந்தோசமாக உள்ளது. பாடசாலைக் கல்வியைமுடித்துவிட்டு அடுத்து என்ன மேற்படிப்புப் படிக்கலாம் என்று யோசிக்கும் இளைஞரின் முதல் தெரிவாக இருப்பது தகவல்தொழில்நுட்பத்துறைதான்.
ஆனால் அதையும்தாண்டி வேறும்பல நல்ல நல்ல துறைகள் உள்ளன.
நண்பர் செங்கோவியும் மூன்றாம் கோணம் ராஜேஸ்குமாரும் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பொறியியல்துறைபற்றி அருமையான விளக்கங்களை எழுதியிருக்கிறார்கள். பொதுவாக இந்தமாதிரியான பதிவுகளைப் படிக்கும்போது அவை நமது பொறுமையைச் சோதிப்பதாக ரொம்ப போரடிக்கும். ஆனால் இவர்கள் ரொம்பச் சுவாரசியமாகவே எழுதியிருக்கிறார்கள். என்ன படிக்கலாம் என முடியைபிச்சுக்கிட்டிருக்கும் இளைஞரும். தங்கள் பிள்ளைகளை எந்ந்தத்துறையில் படிக்கவைக்கலாம் எனக்குழம்பிப்போயிருக்கும் பெற்றோரும் இந்தப் பதிவுகளைக் கொஞ்சம் படித்துப்பாருங்கள் தீர்வுகிட்டலாம்.
செங்கோவி
 
http://sengovi.blogspot.com/2011/02/blog-post_09.html

மூன்றாம் கோணம்

http://anglethree.blogspot.com/2011/08/1.html 

இளைஞர் படித்துமுடித்தால் கையில காசு வாயில தோசை என்பதுபோல உடனடியாக வெளிநாட்டுக் கம்பனிகளில் வேலை, சீக்கிரமே ஜாலியான வாழ்க்கை, அழகான குட்டியாகப் பார்த்துக் கட்டினமா சந்தோசமாகக் காலத்தை ஓட்டிடலாம்  என்று நினைச்சுக்கிறாங்க. அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கு இவ்வளவு பொருளாதாரப்பிரச்சனைகளிற்கு மத்தியிலும் இன்னமும் இங்கு ஐரோப்பிய நாடுகளில் திறமைமிக்க தகவல்துறைசார் வல்லுனர்களிற்கான தேவையும் வேலைவாய்ப்புக்களும் குறையவில்லை.
என்னோட மச்சினன் மெக்கானிக்கல் எஞ்சினியரிங்தான் படித்தான். உனக்குக் காயலான்கடையிலதான் வேலைகிடைக்கும் என்று கிண்டல்பண்ணிட்டிருந்தேன். அவன் படித்துமுடித்த அப்புறம் ஜப்பான் கம்பனி ஒன்றில் வேலையில் சேர்ந்தான். 
10 வருடங்களிற்குள்ளேயே Project Manager ஆகி ஐரோப்பா,அமெரிக்கா, கொங்கொங்  என்று உலகம்பூரா பறந்து பறந்து சம்பாதிச்சிட்டிருக்கிறான். சாதிக்கத்துடிக்கிறவனிற்கு இதுபோல ஆயிரம் கதவுகள் திறந்திருக்கு.
பத்து வருடங்களிற்கு முன்புவரை நா
ன் கனவில்கூட நினத்ததில்லை புராதனப்பொருள் விற்பனையில் இறங்கிச் சம்பாதிப்பேன் என. எனக்கும் எனது மனைவியிற்கும் புராதனப்பொருட்கள்மீதிருந்த காதலால் கல்யாணம் கட்டியகாலத்திலிருந்து அவற்றின்மீது எமக்கிருந்த தேடுதல் அதிகமாகவே இருந்தது. ஒரு பகுதிநேரத் தொழிலாக புராதன தளபாடங்கள், கைவினைப்பொருட்களை விற்பனைசெய்யலாமே என்ற மனைவியின் விருப்பத்தில் தொடங்கிய தொழில் இன்று நாமிருவரும் ஏற்கெனவே செய்துகொண்டிருந்த தொழில்களை விட்டுவிட்டு முழுநேரமாக இந்தத் தொழில் ஈடுபடுமளவிற்கு வந்திருக்கிறதென்றால் பாருங்களேன். நான் வாழும் ஜேர்மன் நாட்டில் இந்தத் தொழில்துறையில் வெற்றிகரமாக ஈடுபட்டிருக்கும் ஒரே ஆசியன் நாங்களாகத்தான் இருக்கும் என எண்ணுகிறேன். தமக்கே தெரியாத தமது நாட்டின் புராதனவிடயங்களை விரிவாக தெரிந்துகொண்டு இப்படியொரு தொழிலைச் செய்கிறிர்களே என இந்தநாட்டவரே பாராட்டும்போது ஆனந்தமாக இருக்கும். ஆதலால் எந்தத்தொழிலிலும் பூரண ஈடுபாட்டுடன் அயராது உழைத்தால் உச்சங்களைத் தொடலாம்.
இந்த மேசை கதிரைகளிற்கு வயது ஏறத்தாள 140 வருடங்கள் தற்போதைய பெறுமதியோ அண்ணளவாக இரண்டாயிரம் ஒயிரோக்கள்.

அடடா! இன்று ராஜபக்ச அவசரகாலச் சட்டத்தை பூரணமாக நீக்குவதாகப் பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.சபாஸ் ராஜபக்ஸ கடைசியில சர்வதேச அழுத்தங்களிற்கு கொஞ்சம் அடிபணிஞ்சிட்டிங்களா?
ஈழத்திலும் நம்மவர்  உன்னால் நான் கெட்டேன் என்னால் நீ கெட்டாய் என ஆளாளிற்கு குற்றம் சொல்வதைவிட்டுவிட்டு தொழில்துறையிலும் தேசிய பொருளாதாரத்திலும் தீவிர கவனம் செலுத்தி, இலங்கையின் பொருளாதாரத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள்ளும் ஆளுமைக்குள்ளும் கொண்டுவருவார்களேயானால் அவர்கள் தமது  அரசியல் அபிலாசைகளை எட்டுவது சுலபம்.
பல்தேசிய இனங்கள் வாழும் எந்த ஒரு நாட்டிலும் அந்த நாட்டின் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை எந்த இனம் தனது கைகளில் வைத்து இருக்கிறதோ,
அந்த மக்கள் அந்த நாட்டின் தேசிய அரசியலையும் தமது ஆளுமக்குள் வைத்திருப்பார்கள்.
இலங்கையிற்குச் சுதந்திரம் கிடைத்ததிலிருந்து பல வழிகளிலும் போராடிப் பார்த்தாயிற்று இதையும்தான் ஒருதடவை முயற்சித்துப்பார்க்கலாமே

4 comments:

மதுரை சரவணன் said...

arumaiyaana idukaikal parri sodakkikal.. vaalththukkal

அம்பலத்தார் said...

பாராட்டுகளிற்கு நன்றி சரவணன் சார் . உங்க பக்கங்களையும் புரட்டிப்பார்த்தேன் சும்மா சொல்லப்படாது ரொம்ப நல்லாவே எழுதிறீங்க. அப்புறம் விவரமாக அங்கு பின்னூட்டம் இடுகிறேன்

தமிழ்வாசி பிரகாஷ் said...

உங்கள் அனுபவத்தையும் சொல்லி இருக்கீங்க...

அம்பலத்தார் said...

தமிழ்... அனுபவம்தானே சிறந்த ஆசான்!