நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 3



தலைவிதியை நொந்துகொண்டு வேலைக்குப் போனால் ........ வாசலிலை உவள் ஜெனி ஏதோ பேருக்கு போடவேணுமெண்டதுக்காக ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு அசத்தலாய் நிண்டாள். அட இண்டைக்குப் பொழுது வெய்யிலும் வெக்கையுமாக அந்தமாதிரித்தான் விடிஞ்சிருக்கு என்று புளுகமாக் கிடந்தது, உங்களுக்கும் உவள் ஜெனியைப் பற்றிச் சொல்லுறதுக்கு நிறையக் கிடக்கு ஆனால் இப்ப இல்லை,
இதைவிட்டா இப்பிடியொரு சான்ஸ் இனிவராது. இவளோடையே வீட்டிலையிருந்தே கூட வந்தமாதிரி பந்தாவா கதைச்சுக்கொண்டு உள்ளை போனால் எனக்குக் கொஞ்சம் மவுசு ஏறும். அவளைப் பார்த்து ஜொள்ளு விடுகிற வெள்ளையனெல்லாம் ஏக்கமாப் பார்பானுகள் என்ற நினைப்பிலை.
ஹாய் ஜெனி குடன் மோர்கன் ( காலை வந்தனங்கள்) என்றன்.
மோர்கன் எல்லாம் கிடக்கட்டும் கொஞ்சம் நில்லு மேன் அம்பல், நானும் கொஞ்சநாளாப் பர்க்கிறன், வேலைக்கும் ஒழுங்கா வாறதில்லை. அந்தமாதிரிப் பூசிப்பிணத்திக் கொண்டு ஜாலியாத் திரியிறீர். கலரா எதாவது மாட்டீட்டுதோ? என்றாள் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு.
சும்மா வெறுப்பேத்தாதை. ஒருத்தியைக் கட்டிக்கொண்டு நான் படுகிறபாடு போதாதெண்டு உந்தச் சிலுப்பியளிட்டை வேற மாட்டினனெண்டால்..............
ரொம்பவும்தான் அலுத்துக்காதை, கிட்டவாயேன் அம்பல் ஒரு விசயம் சொல்லுறன்.
ம் சொல்லு
அவள் கிட்ட வந்து களுத்தைச் சுத்திக் கையைப் போட்டுக் கொண்டு இன்றைக்கு சாயங்காலம்............. என்று ஏதோ காதுக்கை கிசுகிசுக்கத் தொடங்கினாள்.
உள்ளுக்கை சற்றுக் குசியா இருந்தாலும்
சீ போ, ஆரும் பார்த்தால்................. என்று விலகப்பார்தன்.
அவளெண்டால், இப்ப என்னத்தைச் செய்துபோட்டன் என்று இந்த எகிறு எகிறுகிறாய், போனால் போகுது பாவமே என்று உனக்கு அந்த விசயத்தைச் சொல்ல வந்தால்....... சரிதான் போ உன்னை விட்டால் வேற ஆளே இல்லை என்று சிணுங்கினாள்.
அது வந்து............ இந்தக் கோலத்திலை எங்களைக் கண்டவன் எவனாவது என்ரை செல்லத்திட்டை போட்டுக் குடுத்திட்டானென்றால் பிறகு எனக்கு வீட்டிலை ஒருகிழமைக்குச் சோறு தண்ணி கிடையாது.............. அதுதான் என்று வழிஞ்சன்.
திரும்பக் கழுத்தைக் கட்டிக்கொண்டு இன்றைக்கு இரவு நானும் ............................. என்று கிசுகிசுத்தாள். எனக்கெண்டால் அவள் சொன்னதிலை பாதியைக் கேட்டதிலையே ............ மிச்சமெதுவும் காதிலை ஏறேல்லை.
சட்டென்று செல்லம் ரத்தக் காட்டேரியா கண்ணுக்கு முன்னாலை வந்து
உங்களுக்கு எப்படியப்பா இதுக்கு மனசு வந்தது என்று கழுத்தைப்பிடிச்சு உலுக்கத் தொடங்கினாள்.
இந்தக் காட்சியோட வந்த ஆசையெல்லாம் பொசுக்கெண்டு அடங்கி,
இல்லை ஜெனி இண்டைக்கு எனக்கு...................... என்று தொடங்க முதலே
வா மேன் இதைவிட முக்கியமான வேலை என்ன வந்திட்டிது. சாயங்காலம் பத்து மணிக்கெல்லாம் வீட்டை போயிடலாம்.
சரி சரி ஓகே. என்றிட்டன்.
அண்டைக்கு அதுக்குப் பிறகு நான் என்ன வேலை செய்தன் எப்பிடிச் செய்தன் என்று எனக்கே தெரியேல்லை எதோ காத்திலை பறக்கிற மாதிரி எல்லாத்தையும் முடிச்சுக் கொண்டு எப்படா சாயங்காலமாகும், எப்படா அங்கை போகலாம் என்று யோசிச்சுக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தன்.
சாயங்காலமாக, செல்லம்மா வேலை செய்யிற இடத்திலை ஒருநாளும் சொல்லாத ஒருத்தன் தன்ரை வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறான், ஒரு நடை போட்டு வரவேணும்
ஆரும் ஜேர்மன்காரனோ? அவனுகள் இப்பிடி சுடுகிது மடியைப் பிடியெண்டமாதிரி கடைசி நேரத்திலை சோல்லமாட்டானுகளே. என்றாள் சந்தேகமாக
நானுமெண்டால் அது வந்து செல்லம் அவன் போன கிழமையே சொன்னவன் நான்தான் மறந்திட்டன். அவன் என்னோட நல்லமாதிரியப்பா, நல்ல உதவியும் அதுதான்.........
அது ஆரப்பா இத்தனை நாளா இல்லாமலுக்கு இப்ப புதுசா ஒருத்தன்.
உனக்கு எப்ப பார் ஒரே சந்தேகந்தான் என்று எரிஞ்சு விழவும் செல்லம்மா எதோ முணுமுணுத்துக்கொண்டு சமையல் கட்டுக்கை பூந்திட்டாள்.
நானும் அந்தமாதிரிக் குளிச்சு முழுகி கலியாணத்துக்கு வாங்கின கோட்டு சூட்டையும் எடுத்து மாட்டிக்கொண்டு பந்தாவா நடையைக் கட்டினன்.
ஒருமாதிரியா ஜெனி சொன்ன விலாசத்தைத் தேடிப் பிடிச்சுப் போய் அழைப்பு மணியை அடிச்சா, கதவு திறக்கக் காணம் நானும் விடாமலுக்கு விடாக்கண்டனாய் அடி அடியெண்டு அடிச்சும் ஆரும் திறக்காத ஆத்திரத்திலை கொஞ்சம் பலமாகவே கதவைத் தள்ளினால், மெல்லத்திறந்தது கதவு.
Jeny, Hai Jeny
வரச் சொல்லிட்டு எங்கதான் போய்த் தொலைஞ்சாளோ? என்று முணுமுணுத்தபடி உள்ளபோனால் ஆரையும் காணம் அப்படியே இன்னும் நாலு எட்டு எடுத்து வைக்க
உள்ளை கண்ட காட்சியிலை அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு ஐயோ செல்லம்மா என்று குளறினன்............

 விசயத்தை யாருக்கும் சொல்லிப்போடாதையுங்கோ! 
படு சிக்கலாகப்போயிட்டிருக்கு..........
 அப்புறமா வந்து மிகுதிக்கதையை சொல்லுறன்


ஆக்கம்: அம்பலத்தார்


அருமை
முதலிலேயே நினைத்தன் ஏதோ வில்லங்கம் வரத்தான் போகின்றது. செல்லம்மா அக்காவிற்கு சொல்லாமல் கொள்ளாமல் போனால் இப்படித்தான்.
விமர்சனங்களை எழுதுகிறவையள் எல்லாருக்கும் நன்றி. நீங்கள் கூறுகிற ஒவ்வொரு வார்த்தையும்தான் எழுதவேணுமெண்டு நினைக்கிற எங்களுக்கெல்லாம் ரொனிக்மாதிரி. தயவு செய்து ஒரேயடியாப் பப்பாசியிலை ஏத்திவிடாமல் குறையளையும் சொல்லுங்கோ.அது எழுதுகிறவையின்ரை வளர்ச்சிக்கு உரஞ்சேர்க்கும்.
நன்றி
அம்பலத்தார்

என்னை மிகவும் பிலத்து சிரிக்க வைத்தது வசனம்.ஆரும் ஜேர்மன்காரனோ? அவனுகள் இப்பிடி சுடுகிது மடியைப் பிடியெண்டமாதிரி கடைசி நேரத்திலை சோல்லமாட்டானுகளே. என்றாள் சந்தேகமாக ஆகா மாட்டினியள்.அம்பல்

14 comments:

கோகுல் said...

சத்தியமா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்!

அம்பலத்தார் said...

பேச்சுப் பேச்சாக இருக்கணும் கோகுல் இல்லையின்னா அப்புறம் வம்பாயிடும்.

சென்னை பித்தன் said...

என்னதான் சிக்கல்?

அம்பலத்தார் said...

அதுதானே சார் சிக்கல்.அதை இப்ப சொல்லுறதிலைதானே சிக்கல். சிக்கலோ சிக்கல் இடியப்பச் சிக்கல் சார்

Anonymous said...

மிகுதிக்கதை எப்பம்...?

நிரூபன் said...

ஊர் மொழி நடையில் அருமையான ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க.

வாயுள்ளோர் பிழைப்பார்கள் என்பதற்கு ஜெனியும் ஒரு உதாரணம் தானே.

நிரூபன் said...

சஸ்பென்ஸ் வைச்சு முடிச்சிருக்கிறீங்க,
ஊர் மொழி நடை, அந்தமாதிரி முதலிய சொற்கள் எல்லாம் பதிவில் இழையோடுகிறது.

அம்பலத்தார் said...

பயத்திலை மிகுதிக்கதை ஞாபகத்திற்கு வராதாம். ஞாபகம் வந்தால் சொல்லுகிறேன். வரும் ஆனால் இப்போதைக்கு வராது என்று ரெவெரி முணுமுணுப்பது கேட்கிறது

அம்பலத்தார் said...

எங்கள் ஊர் மொழி நடையில் உள்ள இனிமை ஏனைய தமிழ்ச் சமூகத்தினரிடையேயும் சென்றடைய வேண்டுமென்பது எனது அவா. உந்த வயதிலை அந்தமாதிக் கதையளெல்லாம் தேவையோ எனத்திட்டாமல் உற்சாகம்தரும் வார்த்தைகள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் நிரூபன்.

அம்பலத்தார் said...

அட முதலில் கவனிக்க மறந்திட்டன். நம்ம ரெவெரிக்கும் எங்கட தமிழ் கொஞ்சம் தொத்திவிட்டது.
அதுபோக சஸ்பென்ஸ் இல்லாத வாழ்க்கை சப்பென்று இருக்காதோ அதுதான் நிரூபன் கதையிலும் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறேன்.

நிலாமதி said...

புதினம் கேட்க் வெகு ஆவல் மீதியும் உடனடியாக தந்துபோடவேனும் என்று அன்புக் கட்டளை இடுகிறேன்

அம்பலத்தார் said...

நிலாம்மா, அடுத்ததாக யாரங்கே காவலா அம்பலத்தாரை இழுத்துவந்து தூக்கில் போடுங்கள் என்று கட்டளை போட்டுவிடுவீர்களோ என்ற பயத்தில் உங்கள் அன்புக்கட்டளை நிறைவெற்றப்பட்டுள்ளது.

பராசக்தி said...

பள்ளி நாட்களில் இலங்கை வானொலியில் கேட்ட "முகத்தார் வீடு" நிகழ்ச்சியின் பின்பு, எங்கட பேச்சு வழக்கு சொல்லாதே யாரும் கேட்டால் .... தொடராக
இப்ப வாசிக்க நல்லாயிருக்கு. வாசிக்கும் போது சம்பவங்கள் யாவும் நிழலாய் மனதில் நிற்கிறது.

அம்பலத்தார் said...

பராசக்தி said...
//பள்ளி நாட்களில் இலங்கை வானொலியில் கேட்ட "முகத்தார் வீடு" நிகழ்ச்சியின் பின்பு,எங்கட பேச்சு வழக்கு சொல்லாதே யாரும் கேட்டால் .... தொடராக
இப்ப வாசிக்க நல்லாயிருக்கு. வாசிக்கும் போது சம்பவங்கள் யாவும் நிழலாய் மனதில் நிற்கிறது.//

உங்களுக்கும் எமது பேச்சுவழக்கில் எழுதுவது மகிழ்வுதருவது, எனக்கும் சந்தோசமே.