ஸ்பெயினில் தங்கியிருந்த நாட்களில் தினமும் மாலைவேளைகளில் நாம் தங்கியிருந்த விடிதிக்கு எதிர்ப்புறமாக உள்ள நடைபாதையில் இதேகோலத்தில் இந்த இருவரும் வந்து நிற்பதை அவதானித்ததில், ஏன் அவர்கள் தினமும் இதே கோலத்தில், இதே இடத்தில் நிற்கிறார்கள் என்பதை அறியாவிட்டால் மண்டையே வெடித்துவிடும்போல இருந்தது.
சரி அவர்களிடமே நேரில் கேட்டுவிடுவதென்று எண்ணி அவர்களிடம் சென்று ...
.
.
வணக்கம்!
நீங்கள் தப்பாக நினைக்கவில்லையாயின் தாங்கள் தினமும் இதே இடத்தில், இதே நேரத்தில், இதே கோலத்தில் நிற்பதன் காரணத்தை அறிந்துகோள்ளலாமா? எனக்கேட்டதற்கு
நிச்சயமாக முதலில் இலங்கையரா என அறிந்து கொள்ளலாமா எனப் பதில்கேள்விகேட்க,
நிச்சயமாக முதலில் இலங்கையரா என அறிந்து கொள்ளலாமா எனப் பதில்கேள்விகேட்க,
.ஆம் என்று சொன்னதும்.
நாங்கள் வாழ்வின் பல படிமானங்களையும் அனுபவித்து நீண்ட நெடும் பயணத்தின்பின் இந்தநிலைக்கு வந்திருப்பதற்கு உங்களவர்கள்தான் ஒருவிதத்தில் மூலகாரணமாக இருந்தார்கள். என்று கூற
நாங்கள் வாழ்வின் பல படிமானங்களையும் அனுபவித்து நீண்ட நெடும் பயணத்தின்பின் இந்தநிலைக்கு வந்திருப்பதற்கு உங்களவர்கள்தான் ஒருவிதத்தில் மூலகாரணமாக இருந்தார்கள். என்று கூற
நான் ஒன்றும் புரியாமல் அவர்களைப் பார்த்து முழிக்கவும், பயப்படவேண்டாம் நடந்தவை எல்லாம் நன்மைக்கே நடந்தன. எங்களுடன் பேசுவதற்கு சிலமணித்துளிகள் மீதமிருந்தால் சிறிது விபரமாகப் பேசலாமே என அவர்களில் ஒருவர் கேட்க,
அவர்களுடன் பகிர்ந்துகொண்ட
அடுத்து வந்த சில மணித்துளிகளும் மிகவும் சுவாரசியமாகக் கழிந்தது.
அந்த விடயங்களை நாளை நேரம்
கிடைக்கும்போது உங்களுடன்
பகிர்ந்துகொள்கிறேன்
2 comments:
என்ன கதைத்துக்கொண்டீர்கள்.ஆவலோடு அடுத்த பதிவுக்காக !
ஹேமா உங்கள் ஆவலைத்தீர்க்க விரைவில் தொடர்கிறேன்
Post a Comment