ஒரு ராஜீவ்காந்தியைக் கொன்றதற்கு மூவரிற்கு மரணதண்டனையென்றால்
பல ஆயிரம் அப்பாவிப் பொதுமக்களைக் கொல்ல அனுமதிகொடுத்த ராஜீவ்காந்திக்கு ஒரு மரணதண்டனை கொஞ்சம் கம்மிதான்.
நாற்பதயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழரைக் கொன்றுபோட்டு,
இன்னமும் ஆணவத்துடன் உலாவரும் Rajapaksa & Brothers இற்கு எத்தனை மரணதண்டனை கொடுக்கவேணும் என்பதையும் சோனியா அம்மையார் சொல்லிவிட்டாரென்றால் நன்றாக இருக்கும்.
கத்திக்கு கத்தி உயிருக்கு உயிர்
இதுதான் சரியென்றால்
மனிதனிற்கு எதற்குப் பகுத்தறிவு.
வெறும் மிருகமாகவே இருந்துவிட்டுப்போகலாமே.
கொலைக்குத்தண்டனை தூக்குக்கயிறு என்றால் அந்த மரணதண்டனை இன்னும் பல கொலையாளிகளையும் உருவாக்கும் மறந்துவிடக்கூடாது.
பழிக்குப் பழி கொலைக்குக் கொலை இதைத்தான் அமெரிக்காவும் அல்கைதாவும், இஸ்ரவெலும், பாலஸ்தீனப் போராளிகளும் செய்துகொண்டிருக்கிறார்கள் முடிவு.............? அப்பாவி பொதுமக்கள் அநியாயத்திற்கு முடிவின்றி இறந்துகொண்டிருக்கிறார்கள்.
எந்த ஒரு குற்றத்திற்கான தண்டனையும் தவறு செய்தவர் திருந்த வாய்ப்புத்தருவதாகவும், மற்றுமொருவர் அதே தவறுசெய்யும் சூழலை உருவாக்காது இருப்பதாகவும் அமையவேண்டும்.
நாகரிகமான மாற்றங்களை ஒன்றுதிரண்ட மக்கள் பலத்தினால்தான் கொண்டுவரமுடியும். இன்றைய தேவையும் மூவரின் மரணதண்டனைக்கு எதிரான அனைத்துமக்களின் ஒன்றுபட்ட போராட்டமே.
அமெரிக்காவில் பொதுவாக மரணதண்டனை அமுலில் இருந்தபோதும் சில மாநிலங்கள் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் மரணதண்டனையை இல்லாது ஒழித்திருக்கிறார்கள். இதேபோல இந்திய அரசியல்சட்டத்திலுள்ள எதாவது சாதகமான அம்சத்தைப் பாவித்து தமிழ்நாட்டிலும் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் ஒட்டுமொத்தமாக மரணதண்டனையை இல்லாது ஒழிப்பாரானால் ஒட்டுமொத்த உலகத்தமிழரினால் மட்டுமன்றி மனிதநேயமிக்க அனைவராலும் போற்றப்பட்டு உலக வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார்.

துணிந்து தீர்க்கமான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தும் ஜெயலலிதா அம்மையார் இதையும் செய்து வரலாற்றில் இடம்பிடிபாரா?
மனிதனின் கொலைவெறி இயற்கையையும் விட்டுவைக்கவில்லை.
காடுகளை அழித்தல், மிருக இனங்களை அழித்தல், தேவைக்கு அதிகமான வாகனப் பாவனைமூலம் அதிக கரியமிலவாயு வெளியேற்றம் என இயற்கையையும் அநியாயத்திற்கு அழிக்கிறோம்.
இயற்கையும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இப்போ பழிக்குப் பழிவாங்க ஆரம்பித்துவிட்டது. தினமும் எதோ ஒரு இடத்தில் வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி. இவை எல்லாம் எங்குபோய் முடியப்போகிறதோ கொஞ்சமாவது புரிஞ்சுக்கோங்க Please.
4 comments:
கத்திக்கு கத்தி உயிருக்கு உயிர்
இதுதான் சரியென்றால்
மனிதனிற்கு எதற்குப் பகுத்தறிவு.
வெறும் மிருகமாகவே இருந்துவிட்டுப்போகலாமே.
ரொம்ப சரியா சொன்னீங்க.
புரியலையே லட்சுமியம்மா, ஒரு கொலைக்கு மூன்று கொலைகள்தான் தீர்வென்றால் அப்புறம் இந்த மூன்று கொலைகளிற்குத் தீர்வு இன்னமும் எத்தனை கொலைகளோ? என்று தணியும் இந்தக் கொலைவெறித்தாகம்.
இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
ரெவெரி...
வாழ்த்துக்களிற்கு நன்றி ரெவெரி
Post a Comment