நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Wednesday

மாறிவரும் மேற்கத்தைய உழைக்கும் மக்களின் மனநிலை.


மேற்கத்தைய நாடுகளில் வாழும் சாதாரண மக்கள் அதிகமாக உழைத்து முன்னேறுவதற்கும் தங்கள் பொருளாதாரநிலையை உயர்த்திக்கொள்வதற்கும் உரிய வாய்ப்புக்கள் அண்மைக்காலங்களில் மிகவும் அரிதாகிக்கொண்டுவருகிறது. உலகமயமாக்கல் 
பெரும்பான்மையான தொழில்துறைகளும்,  தனியார்மயமாக்கப்படல், முழுலகினதும் பொருளாதார மந்தநிலை போன்றவை இதற்கான காரணங்களாக உள்ளன.
எவ்வளவுதான் கஸ்டப்பட்டு உழைத்தும் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் காணமுடியாமலும், அபிலாசைகளை நிறைவேற்றமுடியாமலும் சாதாரண உழைக்கும் மக்கள் விரக்திநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். 
பணக்காரர்கள் மேலும் பணக்காரராகிக்கொண்டு செல்ல உழைக்கும் வர்க்கத்தினர் நிலை மேலும் மோசமாகிச் செல்கிறது.  ஏழை பணக்கார இடைவெளி அதிகரித்துச் செல்கிறது.
இதனால் பயன் இல்லாமல் தாம் ஏன் கஸ்டப்பட்டு உழைக்க வேண்டும். உழைத்தும் கையில் ஐந்து பைசா நிலைப்பதில்லை,  இதைவிட அரசாங்க உதவித்தொகைகளையும், சலுககளையும் எடுத்துக்கொண்டு சும்மா இருப்பதே மேல் என்ற எண்ணம் இந்த உழைக்கும் மக்கள் மத்தியில் வேரூன்றிவிட்டதைக் காணக்கூடியதாக இருக்கிறது.  இதனால் சம்பாதித்து அரசிற்கு வரி செலுத்துவோர் தொகை குறைந்து  அரச க
ஜானா காலியாகிறது. கஜான காலியாக சமூகநலத்திடங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன. சமூகக்கொடுப்பனவுகள் மட்டுப்பட இம்மக்களின் சுமைகள் அதிகருக்கும்.
அரசாங்கத்தின் பொருளாதாரக்கொள்கைகள் மாற்றம் பெறாமலும், மக்கள் தாம் சும்மா இருந்துகொண்டு அரசாங்கமே சகலவசதிகளையும் செய்துதரவேண்டும்
என்ற மனநிலையிலிருந்து மீண்டு தாமும் உழைத்துச் சம்பாதித்து அரச கஜானாவை நிரப்பினால்தான்  தமக்குரியதைக் கேட்டுப்  பெற்றுக்கொள்ளலாம் என்பதை உணரவேண்டும். 
இவை நடைபெறாமல் மாற்றங்கள் ஒன்றும்தானே கூரையைப்பிய்த்துக்கொண்டு வரப்போவதில்லை. ஆனால் மாற்றங்களற்ற இதேநிலை நீடிக்கவும்முடியாது. சிலமாசங்களிற்குமுன் கிரேக்கத்திலும் தற்போது இங்கிலாந்திலும் தோன்றியுள்ள எழுச்சிகளை இடதுசாரிகளும் முற்போக்குச்சக்திகளும் சாதமாக்கிக்கொள்ளாதது துரதிஸ்டமே.
ஆனால் வலதுசாரி இங்கிலாந்து அரசாங்கமோ இந்த எழுச்சியை வெறும் சமுதாயவிரோதக் கொள்ளைச்சம்பவங்களாகவும், வந்தேறுகுடியேற்றவாசிகளின் செயல் எனவும் சாயம்பூசுகிறது. இங்கிலாந்து மக்களிற்கு பல சந்ததிகளாக அங்குவழும் ஆபிரிக்க ஆசிய மக்கள்மீது வெறுப்பை உண்டாக்கி இவ்விரு உழைக்கும்மக்களையும் பிரித்தாளும்விதமாக அரசும் ஊடகங்களும் கருத்துத் திணிப்புச் செய்கின்றன. உழைக்கும் மக்கள் இந்த மாயைகளில் சிக்காமல் விழித்துக்கொள்வார்களா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 

2 comments:

ஆமினா said...

அருமையான பதிவு

அம்பலத்தார் said...

நன்றி ஆமினா