இந்தப் புலம்பெயர் நாடுகளிலை இடம்பெறும் கலை நிகழ்வுகளிற்குப் போனால் பெரும்பாலும் எனக்கு எரிச்சலை உண்டாக்குகிற ஒரு விடயத்தைப்பற்றி உங்களுக்க் சொல்லாவிட்டால் எனக்கு மண்டையே வெடிச்சிடும்போலகிடக்கு சொல்லுறன் கேளுங்கோ.
இந்த நிகழ்ச்சிகளிலை மேடையேறும் பெரும்பாலான நாடகங்களைப் பார்த்தால் எனக்கு அழுகை அழுகையாக வரும். ஒரு கதையோ நடிப்போ வேறெதுவும் சுவாரசியமான விடயமோ இல்லாமல் ஏன் தான் இதையெல்லாம் மேடையேற்றுகிறாங்களோ என்று எரிச்சல் எரிச்சலாக வரும். ஒரு நிகழ்ச்சியை எப்படி எப்படியெல்லாம் சொதப்பலாம் என்பதற்கு உதாரணமாக, எப்படியெல்லாம் படம் எடுக்கக்கூடாதென்பதற்கு உதாரணமான சாம் அன்டர்சனின் படம்போல இருக்கும். இதுகளையெல்லாம் பார்த்த இந்தக்கடுப்பிலை எழுதி மேடையேற்றின நகைச்சுவை நாடகமொன்றைத்தான் இன்று பதிவிடுகிறேன். படைப்புலகின் காவலாளிகள் எனப்படுவோரால் திட்டித்தீர்க்கப்பட்டாலும் இது பார்வையாளரால் மிகவும் ரசிக்கப்பட்டது என்பது வேறுவிசயம். அனைத்து நாடகக்கலைஞரையும் நான் குறை கூறவில்லை. பாலேந்திரா, ஐயா தாசீசியஸ் போன்றவர்கள் ஈழத்து நாடக உலகின் ஆணிவேர்கள்.
ஒரு பன்முகத் திறமையுடைய கலைஞன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு தாசீசியஸ் ஐயா ஒரு உதாரணம். ஒரு நாடகத்தையோ அல்லது நாட்டுக்கூத்தையோ மட்டுமன்றி வானொலியில் ஒடு சமையல்கலை நிகழ்ச்சியைக்கூட அவரால் சுவாரசியமாக நடத்தமுடியும். I.B.C. வானொலி ஐயா பெற்றெடுத்த பிள்ளை. இவ்வளவு திறமைகளும் கொண்ட தாசீசியஸ் ஐயா நம்மவர்களால் உரியமுறையில் கௌரவிக்கப்படாதது வேதனைக்குரிய விடயம். ஐயா தாசீசியஸ் நீங்கள் வாழும் திசை நோக்கி உங்கள் கால்பற்றி வணங்குகிறேன். ஐயா நீங்கள் எங்கிருந்தாலும் நலமுடன் வாழுங்கள்.
இவனெல்லாம் ஒரு கலைஞன்
தமிழர் முன்னேற்றக் கழகத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றக்கொண்டு இருக்கிறது. மண்டபம் நிறைந்த மக்களுடன் பல கலைநிகழ்வுகளும் நடந்தேறிய நிலையில் நேரம் இரவு 10 மணியை அண்மிக்கிறது.
அறிவிப்பாளர்: எமது விழாவின் பிரதமவிருந்தினர் வரும் வழியில் ஔடொபக்ன் விரைவுப்பாதையில் இல் ச்டௌ வாகன நெரிச்சலில் மாட்டிக்கொண்டதால் சிறிது தாமதமேற்படுகிறது அவரும் அவருடன் வரும் கதாகலட்சேபக்குயில் சண்முகம் அவர்களும் சில நிமிடங்களில் வந்துவிடுவார்கள் என்பதை அறியத்தருகிறோம்.
பார்வையாளர்: எமாத்தாதை (விசிலடி, கரகோச ஒலிகள்)
அறிவிப்பாளர்: அன்பான மண்டம் நிறைந்த பார்வையாளர்களே தயவு செய்து இன்னும் சிறிது நேரம் பொறுமையாக இருந்து இன்னும் சில நிமிடங்களில் வருகை தர இருக்கும் கதாகாலட்சேபக்குயில் அண்ணன் சண்முகம் அவர்களின் கதாகாலட்சேபத்தைக் கண்டு இன்புறுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
பார்வையாளர்: இன்னும் எத்தனை தடவைதான் உதையே சொல்லி ஏமாத்தப்போறியள்.
(மீண்டும் பலத்த விசிலடி, கரகோசம், கூக்குரல் ஒலிகள்.)
ரகு:அண்ணை இப்ப என்ன செய்யுறது. சனம் குழம்பத் தொடங்குது. வருகினம் வருகினம் எண்டு சொல்லிச் சொல்லியே எல்லா நிகழ்ச்சியளையும் விட்டாச்சு இனி நன்றியுரை ஒன்றுதான் பாக்கி.
மன்றத் தலைவர்: பொறு பொறு எனக்கு ஒரு யோசனை வருகுது. உங்கை உங்க பார் அம்பலத்தார் முன்வரிசையிலை மனிசி, பிள்ளையளோட இருந்து பார்க்கிறவடிவை. உந்தாள் ஒரு கோயில் மாடுதானே எந்த நிகழ்ச்சியிலை எண்டாலும் அண்ணை நீதான் எண்டு சொன்னால் காணும் மேடையிலை வந்து தலையாட்டிக்கொண்டு நிக்கும். ஆளைப் போய் பிடிச்சுப் பாப்பம்.(மேடையை விட்டிறங்கிக் கீழே போய்)
தலை:அண்ணை அம்பலண்ணை வணக்கம். எங்களுக்கு ஒரு சின்ன உதவி செய்ய வேணும். பிரதம விருந்தினரும் கதாகாலட்சேபக்காரரும் வாறவரை நீங்கள்தான் ஒரு எதாவது ஒரு சின்ன நிகழ்ச்சி கொடுக்க வேணும்.
பக்கத்தில் இருந்த அம்பலத்தாரின் மகள்: அப்பா நீங்கள் என்ன அவசரப் பொலிஸ் 112 ஓ ?
அம்: என்னடி சொல்லுறாய்?
மகள்: அப்பா சனங்கள் என்னத்துக்கு 112 போன் பண்ணுறவை......... ரெலிபோன் அடிச்ச உடனை ஓடிவாறமாதிரி................... நீங்களும்............
அம்: (மகளைப் பார்த்து) சரி சரி
அம்: (தலைவரைப் பார்த்து அசடு வழிந்தபடி ஆனால் பந்தாவாக) தம்பி எனக்கு வேற ஒரு அலுவல் இருக்கு வெள்ளனப் போக வேணுமெண்டு இருந்தனான் ஆனால் இப்ப உங்கட நிலமையைப் பாக்க..... பாவமாத்தான் இருக்கு. சரி சரி வாறன்.
அறிவிப்பாளர்: இதோ உங்கள் அபிமான பல்கலை விற்பனர் அம்பலத்தார் ஒரு சிறப்பு நிகழ்ச்சி தர இருக்கிறார்.
அம்: என் அன்பிற்கினிய தாய்மாரே, சகோதரிமாரே, சகோதரங்களே இனிய மாலை வந்தனங்கள். சென்றவாரம் இந்த மன்றத்தின் தலைவர் அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு அண்ணா! நீங்கள்தான் வரும் எமது கலை நிகழ்ச்சிக்குச் சிறப்பு நிகழ்ச்சியொன்று தரவேண்டுமென்று பணிவாகக் கேட்டுக்கொண்டார். தம்பியின் அன்புத் தொல்லை மறுக்க முடியாமல் இன்று ரொரன்ரோவில் நான் பங்கு பற்ற வேண்டிய கதா காலட்சேப நிகழ்ச்சியையும் ஒத்தி வைத்துவிட்டு இதோ உங்கள் முன் வந்திருக்கிறேன்.
நான் வெற்றிகரமாக பல தடவைகள் மேடையேற்றிய "உள்ளத்தைக் கிள்ளித்தா" கதாகாலட்சேபத்திலிருந்து சில பகுதிகளைச் தனி நடிப்பாக செய்து காட்டலாம் என எண்ணியுள்ளேன்.
( தொண்டையைச் செருமி பந்தாவாக குரலைச் சரி செய்தபின் மைக்கைத் தட்டிச் சரிசெய்து கதாகாலட்சேபத்தைத் தொடங்குகிறார்.)
ஈழத்திலே தமிழ் ஈழத்திலே
பால் வெளி ஓரத்திலே
பனைமரக் காட்டுக்குள்ளே
(பாடுவதை நிறுத்திவிட்டு)
இந்த உள்ளத்தைக் கிள்ளித்தா. நான் எழுதிய 128 ஆவது இல்லை இல்லை 134 ஆவது வெற்றிச் சித்திரம். இந்தக் காலட்சேபம். இலங்கை, இந்தியா, கனடா, அமெரிக்கா மற்றும் ஈ.B.C, T.B.C., தீபம் ஐங்கரன், T.ற்.T..என்று 348 தடவைகள் மேடையேறிய அற்புதமானதொரு காதல் காவியம். இதோ........
ஈழத்திலே தமிழ் ஈழத்திலே
பால் வெளி ஓரத்திலே
பனைமரக் காட்டுக்குள்ளே
(பாடுவதை நிறுத்திவிட்டு)
பேசிக் கொண்டிருக்கும்போது எனது எண்ணக்குதிரை எங்கோ தாவிப்பாய்கிறது. ஈழத்தில் நாம் வாழ்ந்த காலத்திலே இன்றைய இவ்விழாவிற்கு வருகை தரவிருக்கும் இந்தக் கதாகாலட்சேபக் குயில் சண்முகம் அடிக்கடி என்னிடம் வந்து அண்ணா என்னையும் உங்கள் குழுவில் சேர்த்துக் கொள்ளுங்கள் எனக் கொடுத்த தொல்லைகள் தாங்கமுடியாமல் ( சண்முகம் தூரத்தில் வருகிறார்.) அவருக்கு எனது ஒருசில காலட்சேபங்களில் இடம் கொடுத்தேன்.
(சண்முகம் மேடையில் அருகே வந்து தொண்டையைச் செருமித் தனது வருகையைத் தெரியப்படுத்திக்கொண்டு தனது ஆசனத்தில் அமருகிறார். .........)
அம்: (அசடு வழிந்தபடி தொடருகிறார்) இப்படி நான் சொல்வேன் என நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் அண்ணன் சண்முகம்தான் எனக்குத் தனது காலட்சேபங்களில் இடம் கொடுத்தார் என்பதைச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
(அம்பலத்தார் இடுப்பிலிருந்த தன் சால்வையை உருவியபடி) எனது குரு அண்ணன் கதாகாலட்சேபக்குயில் சண்முகம் அவர்களுக்கு இந்தச் சிற்றாடையைப் பொன்னாடையாகப் போர்த்துவதில் நான் பெருமைகொள்கிறேன்.
சண்முகம் பெருமிதமாகப் புன்சிரிப்புடன் கௌரவத்தை ஏற்றுக்கொண்டு பாசமிகு என் தம்பி அம்பலத்தைப் பற்றி ஒரு சிலவார்த்தைகள் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். தம்பி சிறுவனாக எனது குழுவில் வந்து சேர்ந்தபோதே அவனது திறமையை நான் புரிந்துகொண்டேன். அவன் வழங்கும் இந்தக் காலட்சேபம் நான் எழுதித் தயாரித்த 113ஆவது காலட்சேபம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதமடைகிறேன். இதோ தம்பி உங்களுக்காக ...................... எனது அந்தக் கதாகாலட்சேபத்தைத் தொடர்வான்.
அம்: ஈழத்திலே தமிழ் ஈழத்திலே
பால் வெளி ஓரத்திலே
பனைமரக் காட்டுக்குள்ளே
ஒரு சின்ன வீடு........ பாடுவதை நிறுத்தி
அந்தச் சின்ன வீட்டுக்குள்ளே...... ஆ! இந்தக் கதை........ ஒரு அற்புதமான காதல் காவியம் . அதன் நாயகி சங்கவி அழகிற்கே அழகூட்டும் அற்புத அழகி..... அவள்.......
ஈழத்திலே தமிழ் ஈழத்திலே
பால் வெளி ஓரத்திலே
பனைமரக் காட்டுக்குள்ளே
ஒரு சின்ன வீடு
(பாடுவதை நிறுத்திவிட்டு மீண்டும் தொண்டையைச் செருமி குரலைச் சரி செய்தபடி மேடை ஓரமாகப் பார்த்து தம்பி சோடா சோடா சைகை காட்டிடுகிறார். வந்த சோடாவைச் சிறிது குடித்துவிட்டு மீண்டும் பழையபடி)
ஈழத்திலே தமிழ் ஈழத்திலே
பால் வெளி ஓரத்திலே
பனைமரக் காட்டுக்குள்ளே
சண்: (அம்பலத்தைப் பார்த்து மெதுவாக) அறுக்காமல் கெதியா விசயத்துக்குவா
அம் : (குழைவாக அவரைப் பார்த்து) சரி சரியண்ணா என்றபடி மீண்டும்
ஈழத்திலே தமிழ் ஈழத்திலே
பால் வெளி ஓரத்திலே
பனைமரக் காட்டுக்குள்ளே
அதோ உங்கள் கதாநாயகி சங்கவி. அவள்......... அவள்........
ஈழத்திலே தமிழ் ஈழத்திலே
பால் வெளி ஓரத்திலே
பனைமரக் காட்டுக்குள்ளே...........
(பாடலை நிறுத்தி மீண்டும் மேடை ஓரமாகப் நின்ற மன்றத்தலைவரை பார்த்து மெதுவாக) தம்பி உங்கட இசைக் குழுவிலையிருந்து இரண்டுபேரை எனக்குக் கொஞ்சம் பக்கவாத்திய இசை குடுக்கச் சொன்னியள் என்றால்ல் இன்னும் கொஞ்சம் எடுப்பாக இருக்கும்.
கீபோட், மற்றுமொரு இசைக் கருவியுடன் இருவர் வந்து பின்னணி இசை கொடுக்கத் தயாராகின்றனர்.
அம்: கீபொட் தம்பி நீர் ரெடியோ? ( மற்றவரைப் பார்த்து) தம்பி நீர்....... அப்ப ஆரம்பிக்கலாமே
ஈழத்திலே தமிழ் ஈழத்திலே
பால் வெளி ஓரத்திலே
பனைமரக் காட்டுக்குள்ளே........... (பாட்டை நிறுத்தி கீபோட்காரரைப் பார்த்து ) நீர் கொஞ்சம் வேகமான மியுழூசிக் கொடுக்க வேணும். அப்பத்தான் எடுப்பாயிருக்கும்.
மன்றத் தலைவர் மேடைக்கு வந்து ரகசியமான குரலில்: அண்ணை கொஞ்சம் சுருக்கமா உங்கட நிகழ்ச்சியை முடியுங்கோ அண்ணன் சண்முகம் பேசவேணும் நேரமாகுது.
அம்: (பம்மியபடி) சரிதம்பி சரி. அப்படியே செய்யலாம்.
(சனங்களைப் பார்த்து) தலைவர் சொல்லுகிறார். அண்ணா உங்கள் நிகழ்ச்சி அற்புதமாகப்போகிறது. நீங்க் தேவையான நேரத்தை எடுத்துச் சிறப்பாகச் செய்யுங்கோ என்று ஆனால் எனது குருவை காக்கவைப்பதில் எனக்குச் சங்கடமாக இருப்பதால் எனது நிகழ்ச்சியைச் சீக்கிரம் நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன்.
(தொண்டையைச் சரி செய்தபடி)
ஈழத்திலே தமிழ் ஈழத்திலே
பால் வெளி ஓரத்திலே
பனைமரக் காட்டுக்குள்ளே...........
பாட்டை நிறுத்தி
எங்கள் கதையின் நாயகி சங்கவி அவள் அழகு......
சண்முகம்: அடே அல்ப்பம் சங்கவியை எங்களுக்குத் தெரியும் மானத்தை வாங்காமல் கதையைச் சொல்லு.
அம்: இதோ...........
(உச்சஸ்தாயியல் )
ஈழத்திலே தமிழ் ஈழத்திலே
பால் வெளி ஓரத்திலே
பனைமரக் காட்டுக்குள்ளே...........
பாடுவதை நிறுத்தி, நான் இன்று இவ்விழாவிற்கு வருவதற்குக் காரை ஸ்ராட் செய்தபோது , எனது மனைவி சொன்னாள். அத்தான் காருக்குக் குறுக்காக ஒரு பூனை ஓடுகிறது. சகுனம் சரியில்லைப் போலத் தெரியுது ஒருக்கால் காரை நிறுத்திப்போட்டு வீடடுக்கைபோய் சொஞ்சம் தண்ணி குடித்துவிட்டு வாங்கோ என்று. அதற்கு நான் சொன்னேன். அடியே செல்லம்மா உந்தச் சகுனங்கள் எல்லாம் இந்த அம்பலத்தானிட்டைப் பலிக்காது என்று....... ஆனால் இப்போ எனக்கு அதில் சிறிது சந்தேகமாக இருக்கிறது.
மன்றத்தலைவர் வந்து: அம்பலத்தான் இனியும் இழுத்தாயெண்டால் என்ரை வாய் கதைக்காது. கைதான் கதைக்கும் கெதியாக் கீழை இறங்கு.
அம்: (பதட்டமாக)
ஈழத்திலே தமிழ் ஈழத்திலே
பால் வெளி ஓரத்திலே
பனைமரக் காட்டுக்குள்ளே...........
சண்: (கோபமாக எழும்பியபடி) மேலை பாடப்போறியோ இல்லையோ? பாடடா........
தலை: (மேடை ஓரத்தில் நின்றபடி) இறங்கு கீழை இறங்கடா
அம்: ஈழத்திலே தமிழ் ஈழத்திலே
பால் வெளி ஓரத்திலே
பனைமரக் காட்டுக்குள்ளே...........
சண்: கையை ஓங்கியபடி கிட்டவர
அம் : ஐயோ அண்ணா மிச்சம் மறந்துபோச்சு என்றபடி சண்முகத்தின்ரை கால்லை விழுகிறார்.
முற்றும்.
நேசமுடன் அம்பலத்தார்.
43 comments:
வணக்கம் ஐயா,
நல்லா இருக்கிறீங்களா?
உங்கள் பதிவுகளையும் திரட்டிகளில் இணைக்கலாமே..
இன்னும் அதிக வாசகர்களைச் சென்று சேரும்.
திரட்டிகளின் ஓட்டுப் பட்டையினைப் பெற இந்த இணைப்பில் கிளிக் செய்து பாருங்கள்.
http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html
ஐயா நீங்கள் பெரிய விண்ணன் தான்...ஒரு பாடலின் சில வரிகளையும், சங்கவி எனும் பெயரையும் வைத்து சும்மா அந்த மாதிரி நிகழ்ச்சியைப் படைத்து நேரத்தை சேமித்திருக்கிறீங்க;-))
ஐயா நிகழ்ச்சி முடியும் நேரம் மண்டபத்தில இருந்த யாராச்சும் ஆசுப்பத்திரிக்குப் போனவையே அறுவை தாங்காமல்?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வணக்கம் அம்பலத்தார்!
நல்லாதான் அறுத்திருக்கீங்க... பாவம் பார்வையாளர்கள்..!!??)) இப்பிடிதான் கலை ஞானம் கிலோ என்ன விலை என்று கேட்போர் மேடை ஏறி படுத்தும் பாடு இருக்கே தாங்க முடியாது.. ஆர்வம் மட்டும் போதாது அதுக்குரிய பயிற்சி வேண்டாமா..? உங்களை வைத்தே நன்றாக சொல்லி இருக்கிறீங்க.. வாழ்த்துக்கள்.
தாசீசியஸ் மற்றும் நாடகம் பற்றிய தகவல்களுக்கு நன்றி.
உங்களையே உதாரணப்படுத்தியிருக்கிறீர்..சிறப்பு..
தாசீசியஸ்,பாலேந்திரா போன்றோர் ஈழத்து நாடக ஆணிவேர் என்பதை தெரியப்படுத்தியதற்கு நன்றி..
பாஸ் முகத்தில் அடித்தால் போல் உண்மையை சொல்லுறீங்க... நிஜமாவே பிரான்ஸிலும் இப்படி நிறைய அனுபவம் இருக்கு எனக்கு... என் தம்பி தங்கச்சி ஆக்கள் இங்கே தமிழ் பள்ளியில் படிப்பதால் இப்படியான விழாவுக்கு என்னையும் தூக்கிட்டு (அவ்வ) போயிருவாங்க.... அங்க போனா நீங்க சொன்னது போல் தான் அறுவை..... இப்போ கிட்டடியில் கூட தமிழ்சோலை விழாவுக்கு பாடகி சைந்தவி வந்தாங்க.... அவங்க வாரத்துக்குள்லேயே எங்களுக்குள்ள சைத்தான் வந்துட்டுது என்றா பாருங்களேன்..... ஆனாலும் அந்த பொண்ணு வந்து கலக்கிச்சு... ஹே ஹே
அதைவிட டம்மி பீசுக்கேல்லாம் ஓவரா பிலடப் கொடுக்கிறதும் சகிக்க முடியிறது இல்ல
தேய்ந்த ரெக்கோடரை முழுங்கிட்டு மேடை ஏறினால் இப்படித் தான்... திருப்பித் திருப்பி பாடணும்...
என்ன இளவடா இது அதுக்குள்ள சோடா வேறை வாரும் வாரும் உமக்கு இருக்குது...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)
நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record
சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்
வணக்கம் அம்பலத்தார்!
நலமா ?
தனிநபர் ஓரங்க நாடகத்தை ஞாபகப்படுத்தும் ஒரு பதிவுடன் வந்து நம்மவர் கலைஞர்களை மீளப்பார்க்கும் என்னத்தை தந்து விட்டது. .பாலேந்திராவுடன் பின்னாலில் மெளனகுரு,குழந்தை மா.சண்முகலிங்கம் கைலாசபதி,அப்புக்குட்டி சனா.என பலருடன் சிரிதர் பிச்சையப்பா மற்றும்,அவைக்காற்றுக்கழகம்,திருமறைக்கலாமன்றம் என்பனவும் நம் கலைகளை வளர்க்கவும் மெருகூட்டவும் அதிகம் சேவையாற்றியவை வடமோடி தென்மோடிக் கூத்தினையும் பலரிடம் சேர்த்தவர் மெளனகுரு என்றாலும் நம் படைப்புக்கள் ஒரு வட்டத்துக்குள் யுத்தம் வரையறுத்துவிட்டது. என்றாலும் மீளவும் ஒரு காலம் நம்மவர் முகத்தார் வீடு போல (இலங்கை வானொலியின் தயாரிப்பு ) பல நாடகங்கள் வெளிவரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஈழ்த்திலே பனைமர காட்டுக்குள் பொற்றோல் மாச் விளக்கு வெளிச்சத்தில் பார்த்த இராவனேஸ்வரன் நாடகம் மீள்வும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள் ஐயா!
மேடைக் கூச்சத்தைப் போக்க அன்நாட்களில் வாசிக சாலையில்,இளைஞர் சேவை மன்றம்(மகரகம) டவர் மண்டபம்(மரதானையில்) பலர் குழுவாக சேர்ந்து பல நாடகங்களை மேடை ஏற்றினார்கள் இன்று சின்னத்திரை அரக்கன் அந்த கலைஞர்களை சோம்போறிகளாகவும் முகவரி தொலைந்த ஈழத்தவனாகவும் பரணில் தூங்க வழி செய்து விட்டான் .காலத்தின் கோலம் என்பதா? எத்தனை அன்நாவிமாரை நம்மவர்கள் இன்று ஞாபகப்படுத்துவார்கள்???
இப்படியான காத்திரமான பதிவுகளை ஐயாவிடம் அதிகம் எதிர்பார்க்கின்றேன். சில வார இடைவெளியின் பின் தொடர்ந்து வருவேன் ஐயா!
வணக்கம் அம்பலத்தார் பயனுள்ள விடையங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்
நிரூபன் said...
//வணக்கம் ஐயா,
நல்லா இருக்கிறீங்களா?
உங்கள் பதிவுகளையும் திரட்டிகளில் இணைக்கலாமே..
இன்னும் அதிக வாசகர்களைச் சென்று சேரும்.
திரட்டிகளின் ஓட்டுப் பட்டையினைப் பெற இந்த இணைப்பில் கிளிக் செய்து பாருங்கள்.//
நலமாக இருக்கிறேன் நிரூ. உபயாகமான தகவலிற்கு நன்றி
நிரூபன் said...
//ஐயா நிகழ்ச்சி முடியும் நேரம் மண்டபத்தில இருந்த யாராச்சும் ஆசுப்பத்திரிக்குப் போனவையே அறுவை தாங்காமல்?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
ஓம் போனது... நான் தான். ஜனங்க அடி பின்னிட்டாங்க
காட்டான் said...
//நல்லாதான் அறுத்திருக்கீங்க... பாவம் பார்வையாளர்கள்..!!??)) இப்பிடிதான் கலை ஞானம் கிலோ என்ன விலை என்று கேட்போர் மேடை ஏறி படுத்தும் பாடு இருக்கே தாங்க முடியாது.. ஆர்வம் மட்டும் போதாது அதுக்குரிய பயிற்சி வேண்டாமா..? உங்களை வைத்தே நன்றாக சொல்லி இருக்கிறீங்க.. வாழ்த்துக்கள்.//
எனது ஆதங்கம் உங்களிடமும் இருப்பது புரிகிறது.
Blogger Muruganandan M.K. said...
// தாசீசியஸ் மற்றும் நாடகம் பற்றிய தகவல்களுக்கு நன்றிதங்கள்//
வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி டாக்டர். முன்னொருகாலத்தில் நீங்களும் இலங்கை வானொலி நடிகரல்லவா
சூப்பர் பாஸ்! விழா மேடைகளில் நடக்கும் கூத்துகளுக்கு ஒரு பதிவே போடலாம்! :-)
மதுமதி said...
//உங்களையே உதாரணப்படுத்தியிருக்கிறீர்..சிறப்பு.
தாசீசியஸ்,பாலேந்திரா போன்றோர் ஈழத்து நாடக ஆணிவேர் என்பதை தெரியப்படுத்தியதற்கு நன்றி..//
தங்கள் வரவிற்கும் ஊக்கம்தரும் வார்த்தைகளிற்கும் நன்றி.
பலரின் வேண்டுகோளுக்கு இணங்க , உங்கள் மூளையை கசக்கி பிழிந்து தந்த இந்த நகைச்சுவை விருந்து திகட்டுகிறது. இந்த ஜென்மத்திலேயே உங்களால் முடியும் அம்பலத்தார்! பழைய கள்ளை புதிய மொந்தையில் ஊற்றிதாருங்கள்!
அம்பலத்தார்...நீங்க கடைசி வரைக்கும் அந்தப் பாட்டை முடிக்கவேயில்லையே.உங்களை முடிக்காம விட்டிச்சினமே.இனி அந்த மேடைப் பக்கம் போற நினைப்பும் இருக்கோ !
தாசீசியஸ் மாஸ்டரை ஞாபகப்படுத்தினீங்க.அவர் தொடக்கிவிட்ட ஐ.பி.சி க்கும் இப்ப ஐ.பி.சி க்கு எவ்வளவு வித்தியாசம்.அவரும் ஏதோ ஒரு வானொலியோ (தமிழ்க் குடில்)அல்லது இணையமோ நடாத்துவதாக அறிந்தேன்.சரியாகச் சொல்லத் தெரியவில்லை !
துஷ்யந்தன் said...
//பாஸ் முகத்தில் அடித்தால் போல் உண்மையை சொல்லுறீங்க...//
துஷி, உண்மையை சொல்வதற்கு ஏன் பயப்படவேண்டும். ஒருவன் திறமையில்லாது இருப்பது அவனது தவறல்ல. ஆனால் திறமையற்றவன் தான் திறமைசாலியென வேசம்போடுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
நன்றாக வறுத்துத்தான் எடுத்திருக்கிறீர்கள்.
: இதோ உங்கள் அபிமான் பல்கலை விற்பனர் அம்பலத்தார் ஒரு சிறப்பு நிகழ்ச்சி தர இருக்கிறார்./
அருமையான திறமையான நிகழ்ச்சி பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...
Blogger துஷ்யந்தன் said...
/...என் தம்பி தங்கச்சி ஆக்கள் இங்கே தமிழ் பள்ளியில் படிப்பதால் இப்படியான விழாவுக்கு என்னையும் தூக்கிட்டு (அவ்வ) போயிருவாங்க.... அங்க போனா நீங்க சொன்னது போல் தான் அறுவை..... இப்போ கிட்டடியில் கூட தமிழ்சோலை விழாவுக்கு பாடகி சைந்தவி வந்தாங்க.... //
துஷி சும்மா ரீல்விடாதையுங்கோ சகோதரங்களுக்காக என்றுசொல்லிக்கொண்டு ஏன் போனனிங்கள் என்று புரிகிறது... ஹாஹா
♔ம.தி.சுதா♔ said...
//...என்ன இளவடா இது அதுக்குள்ள சோடா வேறை வாரும் வாரும் உமக்கு இருக்குது...//
ஹாஹா என்ன மதி உங்களையெல்லாம் நம்பித்தானே மேடை ஏறினது. நீங்களே இப்படிச் சொன்னால்....தாங்காதப்பா.
தனிமரம் said...
//...தனிநபர் ஓரங்க நாடகத்தை ஞாபகப்படுத்தும் ஒரு பதிவுடன் வந்து நம்மவர் கலைஞர்களை மீளப்பார்க்கும் என்னத்தை தந்து விட்டது. .பாலேந்திராவுடன் பின்னாலில் மெளனகுரு,குழந்தை மா.சண்முகலிங்கம் கைலாசபதி,அப்புக்குட்டி சனா.என பலருடன் சிரிதர் பிச்சையப்பா....//
வணக்கம் தனிமரம்,
நிறைய விபரங்கள் எழுதியிருக்கிறதைப் பார்த்தால் நீங்களும் நாடகக்கலையில் ஈடுபாடுள்ளவர்போலத் தெரிகிறது.
தனிமரம் said...
//...மேடைக் கூச்சத்தைப் போக்க அன்நாட்களில் வாசிக சாலையில்,இளைஞர் சேவை மன்றம்(மகரகம) டவர் மண்டபம்(மரதானையில்) பலர் குழுவாக சேர்ந்து பல நாடகங்களை...//
தனிமரம், நீங்க சொல்பவற்றைப் பார்த்தால் உங்கள் இளமைக்காலங்களும் கொழும்பில்தான் போலத் தெரிகிறதே!
தனிமரம் said...
//இப்படியான காத்திரமான பதிவுகளை ஐயாவிடம் அதிகம் எதிர்பார்க்கின்றேன். சில வார இடைவெளியின் பின் தொடர்ந்து வருவேன் ஐயா!//
இது போன்ற ஆதரவுக்குரல்கள்தான் என்னை எழுதத்தூண்டுகிறது. முடிந்தவரை உங்களைப்போன்றவர்களின் எதிர்பார்ப்புக்களை நிவர்த்திசெய்ய முயற்சிக்கிறேன். வசதியான நேரங்களில் தொடர்ந்தும் வந்து உங்கள் காத்திரமான கருத்துக்களை பகிருங்கள். உங்கள் நட்புக்கிடைத்ததில் மகிழ்ச்சி.
வணக்கம் கோமகன் உங்கள் வரவிற்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றிகள்.
ஜீ... said...
//சூப்பர் பாஸ்! விழா மேடைகளில் நடக்கும் கூத்துகளுக்கு ஒரு பதிவே போடலாம்! :-)//
நீங்களே ஒரு பதிவு போட்டிடுங்க ஜீ
பராசக்தி said...
//பலரின் வேண்டுகோளுக்கு இணங்க , உங்கள் மூளையை கசக்கி பிழிந்து தந்த இந்த நகைச்சுவை விருந்து திகட்டுகிறது. இந்த ஜென்மத்திலேயே உங்களால் முடியும் அம்பலத்தார்! பழைய கள்ளை புதிய மொந்தையில் ஊற்றிதாருங்கள்!//
பாராட்டுக்களிற்கும் உற்சாகம் தரும் வார்த்தைகளுக்கும் நன்றி பராசக்தி.
.....கசக்கிப் பிழிந்ததில் தலையிலிருந்த கொஞ்சமுடியும் அம்பேல்.
ஹேமா said...
//அம்பலத்தார்...நீங்க கடைசி வரைக்கும் அந்தப் பாட்டை முடிக்கவேயில்லையே.உங்களை முடிக்காம விட்டிச்சினமே.இனி அந்த மேடைப் பக்கம் போற நினைப்பும் இருக்கோ !//
இனிமேல் அந்தப்பக்கம் போறதாவது....நல்லவேளை தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் .
//தாசீசியஸ் மாஸ்டரை ஞாபகப்படுத்தினீங்க.அவர் தொடக்கிவிட்ட ஐ.பி.சி க்கும் இப்ப ஐ.பி.சி க்கு எவ்வளவு வித்தியாசம்.அவரும் ஏதோ ஒரு வானொலியோ (தமிழ்க் குடில்)அல்லது இணையமோ நடாத்துவதாக அறிந்தேன்.சரியாகச் சொல்லத் தெரியவில்லை !//
ஆம் ஹேமா தாசீசியஸ் ஐயா இல்லாத தற்போதைய I.B.C.வானொலி எனக்கு ஈர்ப்புத்தரவில்லை. அவரதுகாலத்தில் நாவரசனது பிரசவகளம், ஐயாவின் அட்டில்கூடம்,பராவின் பாடலும் தேடலும், ராஜமனோகரனது அறிவியல் அரங்கம்..... என அனைத்து நிகழ்ச்சிகளிற்கும் எங்கள் வீட்டிலிருந்து ஆக்கங்கள் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கும். அது ஒரு கனாக்காலம். பசுமையான நினைவுகள்.
ஆமா ஐயா முன்பு தமிழ்க்குடி என ஒரு இணையத்தளவானொலி நடத்தினார். நீண்டகாலமாக அவருடன் தொடர்புகள் எதுவும் இல்லை.
முதன்முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன். அருமையான பதிவு. விரும்பிப் படித்தேன். நன்றி ஐயா!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"
உங்கள் பதிவைப் பார்க்கும் போது எமக்கும் பல நினைவுகளைத் திருப்புகின்றது . சுவாரஷ்யமாகவும் நகைச் சுவையாகவும் எழுதிச் செல்லுகின்றீர்கள். தொடருங்கள். வாழ்த்துகள்
எஸ் சக்திவேல் said...
//நன்றாக வறுத்துத்தான் எடுத்திருக்கிறீர்கள்.//
உங்க வரவிற்கும் சுவாரசியமான பின்னூட்டத்திற்கும் நன்றி.
இராஜராஜேஸ்வரி said...
//...அருமையான திறமையான நிகழ்ச்சி பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...//
நன்றி இராஜராஜேஸ்வரி
கடைசி வரைக்கும் பாட்டை முடிக்கவில்லையே நண்பரே
எஸ் சக்திவேல் said...
//நன்றாக வறுத்துத்தான் எடுத்திருக்கிறீர்கள்.//
உங்க வரவிற்கும் சுவாரசியமான பின்னூட்டத்திற்கும் நன்றி.
கோவிக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன் :-)
திண்டுக்கல் தனபாலன் said...
//முதன்முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன். அருமையான பதிவு. விரும்பிப் படித்தேன். நன்றி ஐயா!..//
வணக்கம் உங்க வரவிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள். நிச்சயமாக உங்க வலைப்பூவின் பக்கம் அடிக்கடி வருவேன்.
சந்திரகௌரி said...
//உங்கள் பதிவைப் பார்க்கும் போது எமக்கும் பல நினைவுகளைத் திருப்புகின்றது . சுவாரஷ்யமாகவும் நகைச் சுவையாகவும் எழுதிச் செல்லுகின்றீர்கள்...//
எனது பதிவுகள் உங்களது பழைய ஞாபகங்களை இரைமீட்டு உங்களுக்கு மகிழ்வுதருவதில் மகிழ்ச்சி.
Blogger M.R said...
//கடைசி வரைக்கும் பாட்டை முடிக்கவில்லையே நண்பரே//
அந்தச் சோகக்கதையை ஏன் கேட்கிறிங்க சார்.
எஸ் சக்திவேல் said...
//கோவிக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன் :-)//
சக்திவேல் ஏன் வீண் பயம் .நான் எதற்கு கோவிக்கணும். நீங்க கூறும் உற்சாகமான வார்த்தைகள் சந்தோசத்தையல்லவா தருகிறது.தொடர்ந்தும் உங்க வரவையும் பின்னூட்டங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ஹா ......ஹா ........ஹா ..ஹாம்மாடியோ
Post a Comment