நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

சிகரங்களைத் தொடலாம்

 எழுத்து
ஒரு தவம்
ஒரு பிரசவம்
ஒரு ஊற்று.

ஒரு சிறந்த எழுத்தாளரின் படைப்புக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அடிக்கடி என்மனம் அசைபோடும்


ஒரு எழுத்தாளனது படைப்பு எப்படி இருக்க வேண்டுமென்றால்................

அவனது ஆக்கமொன்றை வாசகன் படிக்கத் தொடங்கினால் படிப்பவனது சிந்தனை அந்தப்பக்கம் இந்தப் பக்கம் போகக்கூடாது!

அதைப் படித்து முடிக்காமல் புத்தகத்தை மூட மனம் வரக்கூடாது!
படித்து முடிச்சிட்டால் அந்தப்படைப்பு அடிக்கடி ஞாபகத்தக்கு வந்து மனசு அதைப்பற்றி அசை போட வேணும்!
இனி இந்த எழுத்தாளரின் அடுத்த படைப்பை எப்போ படிப்பேன் என்றதொரு தவிப்பு இருக்க வேண்டும்!
படைப்புக்குப் படைப்பு வித்தியாசமானதாய் இருக்க வேணும்!
அதோட ஒரு சின்னச் செய்தியாவது தொட்டுச் செல்லப்பட்டிருந்தால் இன்னமும் நல்லது!
இப்படி எல்லாம் இருக்கிறமாதிரி எவனொருத்தனாலை எழுத முடியுதோ என்னைப் பொறுத்தளவிலை அவன் சிறந்த எழுத்தாளன் என்று சொல்லுவேன்.

நடிப்பின் சிகரம் சிவாஜி என்றால்
எழுத்தின் சிகரம் சுஜாதா என்பேன்.
நடிப்பில் சிவாஜி ஏற்காத பாத்திங்கள் இல்லையென்பதுபோல
எழுத்தில் சுஜாதாவின் கை படாத துறைகள் இல்லையென்பேன்

சிறுகதை, நாவல், விஞ்ஞானக்கதைகள், நாடகங்கள், அறிவியல் கட்டுரைகள், திரைக்கதைவசனம், சங்ககால இலக்கியங்கள்............. என அந்தச் சிகரம் தொட்டுச் செல்லாத விசயம் இல்லை.

தள்ளாதவயதில் இறக்கும்வரையிலும் யவானிக்கா எனவும், கற்றதும் பெற்றதும் எனவும் இளமைததும்பும் சினிமாக் கதை வசனம் என்றும் எழுத அந்த வயோதிப இளைஞன் ஒருவனால்தான் முடியும் என்பேன்.

இதெல்லாம் எப்படி இந்த வயதிலும் அவரால் சாதிக்க முடிகிறது என்று

சிந்தித்ததில்................

மனத்தளவில் என்றும் இளைஞனாக இருந்த அவருக்கு என்றும் இருந்த தேடுதல் வேட்கையும்!
ஏவுகணைத் தொழில் நுட்பம் முதல் ஆழ்வார் பாசுரங்கள்வரை அவருக்கு இருக்கும பரந்த அறிவும்!
அப்துல்கலாம் முதல் இராப்பிச்சை இராமசாமிவரை தான் காணும் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு சம்பவத்தையும் ஆழ்ந்து நோக்கும் பண்புமே என்பேன்.

ஆதலினால்
எழுத்தாளன் ஆகவேண்டும் என்ற கனவுடன் வலம் வரும், அல்லது எழுத்தாளன் என்ற போதையில் மயங்கியிருக்கும் என் உறவுகளே!

உங்கள் கனவுகள் பலிக்க!
உங்களுக்குத் தெரிந்த விடயங்களின் எல்லையைப் பெருக்கிக் கொள்ளுங்கோ!
பல மொழிகளிலும் உள்ள வித்தியாசம் வித்தியாசமான படைப்புக்களை நிறையப் படியுங்கோ!

அதற்குரிய வசதியும் வாய்ப்பும் இல்லாதவை நம்ம சுஜாத்தாவைப் படியுங்கோ அவர் காட்டிய யுக்திகளே வற்றாத கடலாயிருக்கு. எங்கட வீட்டு நூலகத்திலையே அவரின்ரை நாற்பது ஐம்பதுக்கு மேற்பட்ட வேறுபட்ட படைப்புக்கள் இருக்குதெண்டால் .............

உலக அறிவை வளர்த்துக் கொள்ளுங்கோ!
உங்களைச் சுற்றியிருக்கிறவையை உற்று நோக்குங்கோ!
மெல்லக் கனவு நனவாகத் தொடங்கும்.



அம்பலத்தார்

23 comments:

SURYAJEEVA said...

அருமை.. ஆனால் சுஜாதா பிற எழுத்தாளர்களை போல் என்னை ஏனோ ஈர்க்கவில்லை...

சென்னை பித்தன் said...

நன்று.

கோகுல் said...

சுஜாதா-என்றும் தமிழின் என்சைக்ளோபீடியா!
நல்ல பகிர்வு!

Unknown said...

இந்த பதிவு என்ன நடை என்று எனக்கு சந்தேகம்??

Unknown said...

அருமையான பதிவு !!

M.R said...

எழுத்தாளனோ,படைப்பாளனோ அவர்களின் படைப்பு நீங்கள் சொல்வது போல் நெஞ்சில் நிற்க வேண்டும் .

சுஜாதா நாவல்கள் நான் விறும்பி படிக்கும் புத்தகங்களில் ஒன்று

Mathuran said...

அசத்தலான பதிவு

சக்தி கல்வி மையம் said...

எனக்கும் சுஜாதா நாவல்கள் என்றால் ரொம்ப பிடிக்கும்..
//உலக அறிவை வளர்த்துக் கொள்ளுங்கோ!
உங்களைச் சுற்றியிருக்கிறவையை உற்று நோக்குங்கோ!// நன்றி..

Unknown said...

சூப்பர் பாஸ்! தலைவர் சுஜாதா பற்றிக் கூறியதில் மிக்க மகிழ்ச்சி!

கவி அழகன் said...

அருமை வாழ்த்துக்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

கருத்துகள் சூப்பர்... சுஜாதா பற்றிய பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

எனக்கும் சுஜாதா நாவல்கள் என்றால் ரொம்ப பிடிக்கும்...வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

அவனது ஆக்கமொன்றை வாசகன் படிக்கத் தொடங்கினால் படிப்பவனது சிந்தனை அந்தப்பக்கம் இந்தப் பக்கம் போகக்கூடாது!

அதைப் படித்து முடிக்காமல் புத்தகத்தை மூட மனம் வரக்கூடாது!
படித்து முடிச்சிட்டால் அந்தப்படைப்பு அடிக்கடி ஞாபகத்தக்கு வந்து மனசு அதைப்பற்றி அசை போட வேணும்!//

மிகச்சரியான உவமைகள்... நான் விரும்பும் எழுத்தாளர்களில் உயரிய எழுத்தாளர் சுஜாதா அவர்கள்... பகிர்வுக்கு நன்றி சகோ

குறையொன்றுமில்லை. said...

உலக அறிவை வளர்த்துக் கொள்ளுங்கோ!
உங்களைச் சுற்றியிருக்கிறவையை உற்று நோக்குங்கோ!
மெல்லக் கனவு நனவாகத் தொடங்கும்.


எழுத நினைப்பவர்கள் நிறைய படிக்கனும் என்று தெளிவா சொல்லி இருக்கீங்க. அது உண்மைதான்.

kobiraj said...

கருத்துகள் சூப்பர்.அசத்தலான பதிவு

நிரூபன் said...

வணக்கம் ஐயா,
நலமா?

ஒரு படைப்பாளியின் படைப்புக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதனை அழுத்தமாகச் சொல்லி நிற்கிறது உங்களின் இப் படைப்பு./

K.s.s.Rajh said...

வணக்கம் உங்களின் தளத்திற்கு இன்றுதான் முதன் முதலில் வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றன் இனி தொடர்ந்துவருவேன்

அம்பலத்தார் said...

சிவா இது ஒரு நடையுமில்லை. இன்னும் நடக்க ஆரம்பிக்காத சிறுகுழந்தை தவழுகின்றது

அம்பலத்தார் said...

எனது மகன்போல எப்பொழுதும் அக்கறையாக அன்புடன் நலன்விசாரித்து கருத்திடும் நிரூபா உனக்கு என் நன்றிகள் மகனே.

அம்பலத்தார் said...

முதன்முதலாக வருகைதந்த கK.S.S.Rajh உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

அம்பலத்தார் said...

வணக்கம் நண்பர்களே,
அடேங்கப்பா எனது நண்பர்களிலேயே சுஜாதாவிற்கு இத்தனை ரசிகர்களா? உண்மையிலேயே என்னை எழுதத் தூண்டியதும் எனது மனதில் பாதிபை உண்டுபண்ணியதும் சுஜாதாவின் எழுத்துக்கள்தான்.
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கூறமுடியாதமைக்கு மன்னிக்கவும்.

மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கும்வரை.....

நேசமுடன் அம்பலத்தார்

சீனுவாசன்.கு said...

நீங்கள்ளாம் கருத்து சொல்லாட்டி எப்புடி பாஸ்!நம்ம சைட் வாங்க நல்லாப் பழகுவோம்!

HOTLINKSIN.com said...

//பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ//

தட்டியும் கொடுப்போம்... பக்குவமா நாலு வார்த்தை எடுத்தும் சொல்லுவோம்...
----------------------------
உங்கள் பதிவுகளை www.hotlinksin.comல் பதிவு செய்ய மறக்காதீர்கள்...