நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Friday

பயோடேட்டா புலம்பெயர் தமிழர்கள்

பெயர்                                  :புலம்பெயர்தமிழர்கள்
இயற்பெயர்                       :இலங்கைத்தமிழர்
நிரந்தர தலைவர்             :வேலுப்பிள்ளை பிரபாகரன்
துணைத் தலைவர்கள்    :உருத்திரகுமார், நெடியவன்
இணைத் தலைவர்கள்    :வை.கோ, சீமான் போன்ற தமிழக தலைவர்கள்
வயது                                   : ஓய்வு எடுக்கும் வயது


தொழில்                              : தாயக உறவுகள்மீது தமது விருப்பு வெறுப்புகளை திணிப்பது

உபதொழில்                        :புலம்பித்திரிவது
பலம்                                    : ஒற்றுமை & தமிழர் பாரம்பரியங்களை காக்க முற்படுவது.
பலவீனம்                            :எப்பொழுதும் அடுத்தவர் செய்வார் என நம்பி காத்திருப்பது
நீண்ட கால சாதனை       :தனி தமிழீழத்திற்கு ஆதரவாக இருப்பது
சமீபத்திய சந்தோசம்      :அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானம்
நீண்ட கால எரிச்சல்        : கருணா, டக்ளஸ் 
சொத்து மதிப்பு                  :போதுமான அளவிற்குமேல்
நண்பர்கள்                           :இதுவரை யாரும் இல்லை. இப்பொழுது தேடிக்கொண்டிருப்பது.
எதிரிகள்                              :தமிழீழத்திற்கு எதிரான அனைவரும்
ஆசை                                   : தமிழீழம்
நிராசை                                : தமிழீழம்
பாராட்டுக்குரியது             : நிரந்தர ஒற்றுமை
பயம்                                     : சக்கரைவியாதி, மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் ....
கோபம்                                 : ராஜபக்ச குடும்பம்
காணாமல் போனது          :உற்சாகம்
புதியவை                              : நாடுகடந்த தமிழீழ அரசு
சொந்த கருத்து                    : இதுவரை எதுவும் இல்லை75 comments:

கலைவிழி said...

ஐயா வித்தியாசமான சோசனை........ சில தரவுகளில் எனக்கு உடன்பாடில்லை

கலைவிழி said...

எதிரிகள் தமிழீழத்திற்கு எதிரான அனைவரும் ஆனால் நண்பர்கள் யாரும் இல்லை இது என்ன நியாயம் ?

துஷ்யந்தன் said...

அம்பலத்தார்.. எல்லாமே ரசிக்கும் படி நிஜமாவே இருக்கு.. ஆனால்!!!!! இணைத்தலைவர் , துணைத்தலைவர், தொழில் போன்ற மூன்றும் உண்மைக்கு புறம்பானது போல் இருக்கு... என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. :(

Anonymous said...

நண்பர்கள் :இதுவரை யாரும் இல்லை. இப்பொழுது தேடிக்கொண்டிருப்பது//

திருஷ்டிப்பொட்டு...

NAAI-NAKKS said...

WHAT TO SAY...

கனக்கும் மனது....

காட்டான் said...

வணக்கம் அம்பலத்தார்.!
ம் அப்பிடியா.?

ஜீ... said...

கலக்கல்ஸ்! :-)

Ideamani - The Master of All said...

பயம் : சக்கரைவியாதி, மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் ....///////

கொஞ்சம் கூட மனசில ஈரமே இல்லாமல் சொல்லப்பட்ட கருத்து! :-(

:-(

:-(

Ideamani - The Master of All said...

இணைத் தலைவர்கள் :வை.கோ, சீமான் போன்ற தமிழக தலைவர்கள் :///////

அவர்களின் ஆதரவை நாம் மதிக்கிறோமே ஒழிய, தலைவர்களாக கருதியதும் இல்லை! வழிபட்டதும் இல்லை! அவர்களும் இதை எதிர்பார்க்கவும் இல்லை!!

Ideamani - The Master of All said...

தொழில் : தாயக உறவுகள்மீது தமது விருப்பு வெறுப்புகளை திணிப்பது ////////

ஒருபோதுமே இல்லை! எமது பேச்சைக் கேட்காவிட்டால், ப்ளேன் ஏறிப்போய், அங்குள்ள மக்களை என்ன நந்திக் கடலிலா தள்ளிவிடப் போகிறோம்??

மேலும் அங்குள்ள மக்களுக்கு சுய அறிவு, சொந்த அறிவு, படிப்பறி, பட்டறிவு முதலிய பலவகையான அறிவுகள் உள்ளன! அவர்களை நாம் வழிநடத்த வேண்டியதில்லை!!

Ideamani - The Master of All said...

உபதொழில் :புலம்பித்திரிவது //////

ம்..........உண்மைதான்! இப்பதிவுகூட வெறும் புலம்பல்தான்! :-(

Ideamani - The Master of All said...

பலம் : ஒற்றுமை & தமிழர் பாரம்பரியங்களை காக்க முற்படுவது. //////

கடமையைச் செய்கிறோம்!

Ideamani - The Master of All said...

பலவீனம் :எப்பொழுதும் அடுத்தவர் செய்வார் என நம்பி காத்திருப்பது //////

அப்பட்டமான பொய்! அப்போ இங்கே பனியிலும் குளிரிலும், மழையிலும் நனைந்து, ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் முதலியவற்றைச் செய்வது, என்ன ரோபோக்களா?
இல்லை கூலிக்கு அமர்த்தப்பட்ட வெள்ளைக் காரர்களா?

Ideamani - The Master of All said...

நீண்ட கால சாதனை :தனி தமிழீழத்திற்கு ஆதரவாக இருப்பது //////

இதனைச் சாதனையாகவோ, பெருமையாகவோ நாம் கருதவில்லை! “ மானம் ரோஷம், வெட்கம், சூடு சொரணை” உள்ள ஒவ்வொருதமிழனும் இப்படி இருக்கவே விரும்புவான்!!

Ideamani - The Master of All said...

சமீபத்திய சந்தோசம் :அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ////////

கொத்துக் கொத்தாக கொன்று குவித்த கொடியவனுக்கு, யாரோ ஒருவர் சின்னதாக ஒரு தண்டனை கொடுத்தாலும், “ நெஞ்சில் ஈரம்” உள்ள ஒவ்வொரு தமிழனும் கொஞ்சமேனும் மகிழவே செய்வான்! இது கல் நெஞ்சக் காரர்களுக்குப் புரியாது! :-(

Ideamani - The Master of All said...

நீண்ட கால எரிச்சல் : கருணா, டக்ளஸ் ///////

செத்த பாம்பைக் கூட பார்த்தால் ஒரு பயம் வரும்! ஆனா இவர்கள் இருவரும் அழுகி, உக்கிப் போன பாம்புகள்! இவர்களால் எமக்கு எரிச்சல் எதுவுமே இல்லை!

எமக்கு எரிச்சல் தருபவர்கள் மெல்ல மெல்ல அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள்! - இறுதியாக கிடைத்த தகவல் - ஜெர்மனியில் ஒருவர் இருக்கிறாராம்!\

Ideamani - The Master of All said...

நண்பர்கள் :இதுவரை யாரும் இல்லை. இப்பொழுது தேடிக்கொண்டிருப்பது. ///////

ஏன் இல்லை??? சில தமிழர்களைத் தவிர மிகுதி அனைவரும் எமக்கு நண்பர்கள் தான்!!

Ideamani - The Master of All said...

காணாமல் போனது :உற்சாகம் ///////

மிக மோசமான கருத்துருவாக்கம்!

எப்போதும் வீதியில் இறங்கி நின்று தொண்டை கிழியக் கத்த வேண்டும் என்றும், அப்படிக் கத்துவதுதான் உற்சாகம் என்றும் கருதுபவர்களின் கண்டுபிடிப்பு இது!!

இராஜதந்திர நடவடிக்கைகளிக்கு உற்சாகம் தேவையில்லை! அவை இரகசியமாகச் செய்யப்படுபவை!!!

Ideamani - The Master of All said...

சொந்த கருத்து : இதுவரை எதுவும் இல்லை ////////

ஒவ்வொருவரும் ஆளுக்கொரு சொந்தக் கருத்து வைத்திருந்தால், நடுத்தெரிவில் நி நின்று பிச்சை தான் எடுக்கோணும்!

சொந்தக் கருத்துக்களைத் தள்ளி வைத்துவிட்டு, பொது நோக்கில் ஒற்றுமையாக செயல்படுவதால் தான், சொந்தக் கருத்துக்கள் இல்லாதது போலத் தோன்றுகிறது!!

Ideamani - The Master of All said...

மிகவும் மோசமான பதிவு!

எங்களின் வற்றாத கண்ணீர் இதற்குப் பதில் சொல்லும்! :-((((((

சிட்டுக்குருவி said...

என்ன ஐயா புது வருடம் கொண்டாடவில்லையா....??

சிட்டுக்குருவி said...

மொத்தத்துல...இப்படித்தானா ??? சொந்த கருத்தே இல்லாம.....

yathan Raj said...

Valthukkal

தனிமரம் said...

வணக்கம் அம்பலத்தார்!
மெளனம் காப்பாதா?பதில் சொல்வதா?இல்லை பின்னூட்டம் மொய்க்கு மொய் எதைச் சொல்ல???
கோபம்-இதில் பலர் இருக்கின்றார்கள் ஒருவரை மட்டும் சாடுவது??   
எரிச்சல்-??பலர் இருக்கின்றார்கள் சிலதை சொல்ல விருப்பம் இல்லை அதில் நீங்க குறிப்பிட்டவர் ஒருவர் மீதாத  என் பார்வை 
முரன் இப்படி அடுக்க எனக்கும் விருப்பம் ஆனால் விசில் குஞ்சுகள் ஓடிவிடும்!
புதியவை-இன்னும் பல வரலாம் எதிர் காலத்தில்.நம்மதான் பிரித்தாண்டால் ஒன்றுபடமாட்டோம்!
ஆசை-கிடைத்தால் சந்தோஸம்!ஆனால் பல அன்னக்காவடிகள் இருக்கின்றாத்கள்!

நிரூபன் said...

Hi idea mani, are you a senator of the migrant Tamil's?

அம்பலத்தார் said...

ம்... உங்கள் எல்லோரதும் ஆதங்கம் புரிகிறது. நான் இதை எழுதத்தூண்டிய விடயங்கள்.
1. ஒருசில நாட்களிற்குமுன் ஜேர்மன் பிராங்பர்ட் நகரில் வாழும் ஒருவருடன் கதைத்தபோது அறிந்த ஒருவிடயம்.
வரும் 15.04.2012 திகதியன்று அவர்கள் வாழும் பிரதேசத்தில் அன்னை பூபதி நினைவுதினம் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. 14.04.2012 திகதி அதாவது ஒருநாள் முன்பு அப்பிரதேச மக்களால் கோடைகால ஒன்றுகூடல் ஒன்று ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்னை பூபதி ஏற்பாட்டுக்குழுவினரால் மிகவும் பரிதாபகரமான ஒரு வேண்டுதல் ஒன்றுகூடல் ஏற்பாட்டர்களிடம் முன்வைக்கப்பட்டது. அதாவது உங்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளில் பங்குபற்ற இளையோர் அதிகம் ஆர்வம் காட்டுவதால் எமது நிகழ்வுக்காக நிகழ்ச்சிகள் எதுவும் செய்ய முன்வருகிறார்கள் இல்லை. பெற்றொரும் இந்த விடயத்தில் அதிக அக்கறை காட்டவில்லை ஆதலால் தயவு செய்து உங்கள் ஒன்றுகூடலை நடத்தாமல் ஒத்திவையுங்கள் என்பதாகும்.
இந்தச்சம்பவம் தெரிவிக்கும் கருத்து என்ன? 2009 ம் ஆண்டுவரை இருந்த எமது எழுச்சி எங்கேபோனது.
தியாகி அன்னைபூபதியின் தியாகத்தைவிட இளையோருக்கும் பெரியவர்களுக்கும் கோடைகால ஒன்றுகூடல் முக்கியமானதாகிவிட்டதா? அல்லது புலம்பெயர்மக்களுக்கு எமது போராட்டம்பற்றிய சரியான புரிதல் உண்டுபண்ணப்படவில்லையா?

2.தினசரி லங்காசிறி மரண அறிவித்தல்களை படித்தால் புரியும் 40முதல் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களின் மரணங்கள் எத்தனை?
இங்கு நான் வாழும் பிரதேசத்தில் வழும் 40 வயதிற்கு மேற்பட்ட நம்மவரில் ஏறக்குறைய 50% இனர் சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எனது உறவினர், நண்பர்கள் வட்டத்திலேயே இளவயதில் மாரடைப்பு வந்து இறந்தவர்களதும், சிகிச்சையின் பின்
தப்பித்துக்கொண்டவர்களதும் பட்டியல் நீண்டது.

3.2009 ஆண்டுவரையான காலத்தில் எமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய நாடுகள், அமைப்புக்கள் எத்தனை. கடந்த 2 வருடங்களில்தான் ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா என பலபகுதிகளிலிருந்தும் பல நாடுகளும் எமக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.

4.இங்கிருந்து போதிய பணத்தை நாங்கள் கொடுத்தால் போதும் மிகுதி அனைத்தையும் தலைவர் கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் போராட்டத்தின் இறுதிநேரம்வரை தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் போதிய அரசியல் நகர்வுகள் செய்யாமல் இருந்ததுவும் இறுதிநாட்களில்கூட அமெரிக்க கப்பல்கள் போகும் அமெரிக்காவும் ஐநாவும் எதாவது செய்யும் என்று நம்பிய நம்மவர் எத்தனைவீதம்?

இந்த ஆதங்கங்கள் அத்தனையும் சேர்ந்துதான் என்னை இந்த பதிவை எழுதத்தூண்டியது.

Yoga.S.FR said...

இரவு வணக்கம் அம்பலத்தார்!நாங்கள் ஒன்று இலங்கையில் இல்லையே?தனி மனித சுதந்திரம்,பத்திரிகைச் சுதந்திரம் எல்லாம் இருக்கும் நாடுகளில் தானே வாழ்கிறோம்?உங்கள் பதிவுக்கு யாரையாவது "வெற்றிலை" வைத்து அழைக்கிறீர்களா,என்ன?புத்தாண்டு பிறந்திருக்கும் நேரத்தில்.......................!உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

கடைசிநேரத்தில் கொடுத்த ஈரோவின் பெறுமதியின் அளவு மட்டும் அதிகம்!! ஆனால் இந்த பதிவுலக மேதைகள் தெரியாத சங்கதி ஐயா! ,

Ideamani - The Master of All said...

Hi idea mani, are you a senator of the migrant Tamil's? ///////

ஓம்!

Ideamani - The Master of All said...

மேலே உள்ள பதிவுக்கும், பதிவு எழுதத் தூண்டிய காரணங்கள் என்று சொல்லப்பட்டிருப்பவைக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை!

அது ஜெர்மனியில் நடந்த ஒரு சிறிய சமப்வம்! அந்தச் சம்பவம் பற்றி இந்த இடத்திலோ, அன்றி நாற்று குழுமத்திலோ எழுதப்பட்டிருக்காவிட்டால், அந்தச் சமபவே வெளீயே தெரிந்துருக்காது! ஆக எமது ஊத்தைகளை நாமே கிண்டிக் கிளறி வெளியே கொட்டும், அதே வரலாற்றுப் பிழை இங்கும் நடந்துள்ளது! இப்பதிவு மகா மட்டம் என்றால், அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் அதை விட மடமாக உள்ளது!

ஜெர்மனியில் நடந்த ஒரு சிறிய சம்பவத்துக்காக, ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களையும் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்த வேண்டுமா?

ஏற்கனவே புலம்பெயர் தமிழர்கள் மீது பலர் கடுப்பிலும் வெறுப்பிலும் இருக்கிறர்கள்! அவர்கள் அனைவரும் இன்று கெக்கே பிக்கே என்று சிரித்திருப்பார்கள்!

மேலே சில கமெண்டுகளிலும் அவர்களின் மகிழ்சியை வெளிப்படுத்திவுட்டுப் போயிருக்கிறார்கள்!

உண்மையில் புலம்பெயர் சமூகத்தின் தற்போதைய பலம் என்ன? எமது பெறுமதி என்ன? நாம் எந்த வைகையில் பிறருக்குச் சவாலாக விளங்குகிறோம் என்பதை இம்மியளவும் அலசி ஆராயாமல், அல்லது எமது பலத்தை நாமே அளவிடாமல், எம்மை நாமே கொச்சைப்படுத்திய இந்தப் பதிவைப் போல ஒரு கீழ்த்தரமான பதிவை சமீப காலத்தில் நான் படித்ததே இல்லை!

தொடர்கிறேன்...........!

அம்பலத்தார் said...

நிரூபன் said...

Hi idea mani, are you a senator of the migrant Tamil's?//
நிரூ, மணியை தடுக்க வேண்டாம் அவருக்கும் தனது கருத்துக்களைசொல்லுவதற்கு உரிமை இருக்கு. நாங்கள் ஒன்றும் எதோ இனவெறி, மதவறி அல்லது மொழிவெறி கொண்ட அறிவற்ற மூளைச்சலவை செய்யப்பட்டகூட்டம் கிடையாது. எமது உரிமைகளுக்காக போராடும் விபரம் புரிந்த கருத்து சுதந்திரமுள்ள ஒரு மக்கள் தொகுதியினர். கருத்துக்களை விவாதித்து தெளிவுபெறும் நம்பிக்கையும் புரிதலும் எமக்கு உண்டு. Let mani comment on this matter.

Ideamani - The Master of All said...

இப்போதைய சூழலில், நாம் பிரகடனப்படுத்தப்படாத ஒரு ஒற்றுமையின் கீழ் ஒன்றுபட்டு செயலாற்றி வருகிறோம்! புலம்பெயர் சமூகம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பேரெழுச்சி மிக்க சமூகமாக உருவெடுத்து வருகிறது!

வள்ளுவனே சொல்லியிருக்கிறான், தன் வலி அறிதல் பற்றி!

இங்கு பல மர மண்டைகளுக்கு தன் பெறுமதியும் தெரிவதில்லை! தான் சார்ந்த சமூகத்தின் பெறுமதியும் தெரிவதில்லை! ஆ..... ஊ.... என்றால், இன்னொரு இனத்தவனைக் குறிப்பிட்டு அவன் அன்பானவன்,. அவன் பண்பானவன் என்று அடிமைத்தனமாகக் கருத்துக் கூறத்தான் பலரால் முடிகிறதே ஒழிய, பலருக்கு தன் பெறுமதியும் தெரிவதில்லை! தன் சமூகத்தின் பெறுமதியும் தெரிவதில்லை!!

இப்போதைய சூழலில் எமக்கு முன்னால் உள்ள, கடமை, நாம் எம்மை நாமே மேலும் மேலும் உற்சாகப்படுத்திப் புடம் போட வேண்டும் என்பது! அதற்கு இதுபோன்ற எதிர்மறைக் கருத்துக்களை விதைக்கும் பதிவுகள் ஒரு போதுமே உதவாது!

இதைப் படிக்கும் ஒருவருக்கு மேலும் உற்சாகம் குன்றி, ஒருவகை ஏமாற்றமான மனோ நிலையே உருவாகும்! அதனால் தான் இப்படியான பதிவுகளை அடியோடு வெறுக்கிறேன்!

மாறாக, எமது புலம்பெயர் சமூகத்தின் மத்தியில் காணப்படும் சில குறைகளைக் களையவேண்டும் என்கிற விருப்பம் நிஜமாகவே இருந்தால், நக்கல் நையாண்டி செய்வதை விடுத்து, இப்படிச் செய்யலாம், அப்படிச் செய்யவேண்டும் என்று ஆலோசனைகள் சொல்வது சாலவும் நன்று!

எல்லோருடைய வீடிலும் தான் பிரச்சனைகள் நடக்குது! தனது மகனோ / மகளோ விட்ட ஒரு தவறை திருத்த நினைக்கும் ஒரு தந்தை அவர்கள் விட்ட பிழையை, சந்தியிலே நின்று எள்ளாலாகவும், ஏளனமாகவும் கூறுவாரா? அல்லது காதும் காதும் வைத்தபடி ரகசியமாக கூறி திருத்துவாரா????

அந்த ஜெர்மன் சம்பவம் மனதிலே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், அதனை நிவர்த்தி செய்ய பல வழிகளும் ஐடியாக்களும் இருக்கு! அல்லது அது போன்ற சம்பவங்கள் நடை பெறாது இருக்க வேண்டுமென ஆசைப்பட்டு ஒரு பதிவு போடப்படுமாக இருந்தால், அதனைக் கூறுவதற்கு வழி முறை இருக்கு!

நடந்து முடிந்த சம்பவம் பற்றி எழுதி மானத்தைக் கப்பல் ஏற்றாமல், மறைமுகமாகக் குறிப்பிட்டு எழுதியிருக்கவோ, திருத்தியிருக்கவோ முடியும்!

ஆக, பதிவை எழுதியவருக்கு ஐடியா பஞ்சமே ஒழிய, மற்றுபடி இப்பதிவில் ஊடக சுதந்திரமோ அல்லது வேறெந்த சுதந்திரமோ நிலைநாட்டப்படவில்லை!!!

சரியான புத்திசாலி, ஒரு பிரச்சனை வரும் போது, அதனை எப்படிக் கையாள்வான் என்பது குறித்து, நான் இன்னொரு விளக்கம் எழுத வேண்டியுள்ளது! - இப்பதிவு அதனைச் செய்யவில்லை!!!

Ideamani - The Master of All said...

அடுத்து ஊடக சுதந்திரம் பற்றிக் கதைத்தவருக்கு - ஓம், 25 வருஷத்துக்கு முன்னர், ஊரில இருந்து போராடுவம் எண்டு இல்லாமல், இடறிக்கொண்டு ஓடி வந்து உல்லாசமாக் குந்தி இருந்து கொண்டு, ஊடக சுதந்திரம் பற்றிக் கதைக்க நல்லாத்தான் இருக்கும்!

ஊடக சுதந்திரம் என்றால் என்னவென்று எங்களுக்கும் தெரியும்! முதலில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு மார்பிலே துப்புவது போல துப்புவதற்குப் பேர் ஊடக சுதந்திரம் இல்லை!

மேலும், ஊடக சுதந்திரம் மிக்க நாட்டிலே வாழ்கிறோம் என்று சொல்கிறாரே, எப்படி வாழ்கிறொம் என்பதை மறந்துவிட்டார் போலும்! என்ன தான் பச்சை நிறத்தில் நஷனலிட்டி கார்ட் வைத்திருந்தாலும், அகதி அகதி தான்!

ஒரு அகதிக்கு - ஊடக சுதந்திரமாவது! புடலங்காயாவது!!

மேலும், நாம் இப்போதும் போராடிக்கொண்டு இருக்கும் ஒரு இனம்! இனமும் எமது போராட்டம் முடிந்துவில்லை! இந்நிலையில், நாம் ஊடலசுதந்திரத்தை கொஞ்சம் மதிக்காவிட்டல், ஒன்றும் கரந்துவிடாது!

இதைத்தான் சொல்வார்கள் ஆடு அறுக்க முதல் ....... ஐ அறுக்கிறதெண்டு!!

முதலில் நாம் ஒரு நிலைக்கு வரவேண்டும்! அது எது? என்பதே இப்போது குழப்பமா இருக்கு??

நான் தெரியாமல் தான் கேட்கிறேன், உலகில் எந்த ஊடகம் நடுநிலைமையோடு இயங்குது எண்டு அந்த மெத்தப் படித்த அறிவுக் கொழுந்தைக் காட்டச் சொல்லுங்கோ!

எனக்கும் அறிய ஆசை? பி பி சி யா? சி என் என் ஆ? அல் ஜசீராவா? எது?? எது??

உலகில் உள்ள அத்தனை ஊடகங்களும் ஏதோ ஒன்றைச் சார்ந்தே இயங்குகின்றன! ஆனால், இன்னமும் அகதியாக வாழும் தமிழனுக்கு மட்டும், அதிலும் கொஞ்சம் படித்துவிட்டல் போதுமே, உடனே ஊடக சுதந்திரம், நடுநிலைமை, மயிர் மட்டை என்று கிளம்பி விடுவார்கள்!

இவர்கள் செய்யும் மிகப் பெரிய பணியே எமது ஊத்தைகளை, ஒன்றும் மிச்சம் விடாமல், அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து, அதனை நடு வீதியில் நின்று புசத்துவதுதான்!!!!

பெருஷா பேச வந்திட்டார், ஊடக சுதந்திரம் பற்றி?? நான் ஃபிரான்ஸ்ல 2 வருஷமாத்தான் இருக்கிறன்! ஆனா இஞ்ச எந்த ஊடகம் ஆருக்கு வக்காலத்து வாங்குதெண்டு எனக்கு நல்லாவெ தெரியும்! எங்க ஏலுமெண்டா ஃபிரான்ஸ்ல ஒரு நடு நிலமை ஊடகத்தைக் காட்டச் சொல்லுங்கோ பார்ப்பம்????????????

தமிழனுக்கு மட்டும் ஏன் தான் இந்த வியாதியோ தெரியேலை! வாழுறது உலகம் முழுக்க அகதியா! அதுக்குள்ள பெரிசா முறுக்கியடிப்பினம்! ஊடக சுதந்திரம்! அது இது எண்டு????

இந்தப் பதிவு எம்மை மிகவும் கேவலமாக அவமதித பதிவு! அதில் மாற்றமே இல்லை! - இப்படி எம்மை நாமே கேவலப்படுத்துவதற்குப் பேர் தன் ஊடக சுதந்திரம் என்றால், அப்படி ஒரு ஊடக சுதந்திரம் இந்த உலகில் இருந்தே அழிந்து போகட்டும்!!!!!!!!!!!!!!

Anonymous said...

தொழில் : தாயக உறவுகள்மீது தமது விருப்பு வெறுப்புகளை திணிப்பது////

எந்த வகையில் இப்படியான ஒரு கருத்தை சொல்கிறீர்கள்???

Anonymous said...

துணைத் தலைவர்கள் :உருத்திரகுமார், நெடியவன்////

கருணாநிதியை கூட தான் அவரின் வாலுகள் தமிழின தலைவர் என்று சொல்லித்திரிகிரார்கள்,அதற்காக அதை தமிழ் சமூகத்தின் கருத்தாக ஏற்றுக்கொள்ளலாமா? அதே போல இதையும் எவ்வாறு புலம்பெயர் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் கருத்தாக சொல்கிறீர்கள்?

Anonymous said...

சொத்து மதிப்பு :போதுமான அளவிற்குமேல்//
இந்த கருத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. சில தசாப்தங்களாக புலம்பெயர் மண்ணில் இருக்கும் உங்களுக்கு இங்குள்ள சாமானியர்களின் நிலை தெரியாதா? இந்தியா ஒரு பணக்கார நாடு என்று அம்பானிகளை உதாரணமாக வைத்து சொல்லமுடியுமா?

Anonymous said...

///உலகில் உள்ள அத்தனை ஊடகங்களும் ஏதோ ஒன்றைச் சார்ந்தே இயங்குகின்றன! ஆனால், இன்னமும் அகதியாக வாழும் தமிழனுக்கு மட்டும், அதிலும் கொஞ்சம் படித்துவிட்டல் போதுமே, உடனே ஊடக சுதந்திரம், நடுநிலைமை, மயிர் மட்டை என்று கிளம்பி விடுவார்கள்!

இவர்கள் செய்யும் மிகப் பெரிய பணியே எமது ஊத்தைகளை, ஒன்றும் மிச்சம் விடாமல், அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து, அதனை நடு வீதியில் நின்று புசத்துவதுதான்!!!!///

நன்றாக சொன்னீங்க மணி ...தம்மை தாமே பெரிய மனிதர்கள் ,நடுநிலையாளர்கள் என்று காட்டிக்கொ(ள்)ல்வதற்க்கு இவ்வாறான செயல்கள்...

நம் நாத்தங்களை கிளறி நடு சந்தியில் கொண்டு வந்து விட்டுட்டு சொல்வார்கள் பாருங்கள்.. "விமர்சனங்கள் தான் நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்" என்று....! அப்படிப்பட்ட அடுத்த கட்டத்தை சாக்கடையில் தான் வைக்க வேண்டும்.

Yoga.S.FR said...

"மேதைகளுடன்"விவாதிப்பதற்கில்லை ,மெத்தப் படித்தவர்கள்,படிப்பவர்களுடனும் கூட,ஹ!ஹ!ஹா!!!!!

துஷ்யந்தன் said...

மணி ரியலி கிரேட்.. முதல் கருத்தாக நான் தயங்கி தயங்கி சிலதை மட்டும் விமர்சித்தேன் (இப்போ எல்லாம் சண்டை என்றாலே எனக்கு பயமா இருக்கு.. அதான், அனுபவம் அப்படி:( ஆனால் நீங்கள் புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்..

நீங்கள் சொல்வது போல் நம்மல நாமே நாற வைப்பதுதான் நடு நிலமை என்றால் அப்படிப்பட்ட ஒரு நடு நிலமை நமக்கு வேண்டவே வேண்டாம் -:(

மணி இந்த நிமிஷம் மணி என் ப்ரெண்ட் என் சொந்தம் என்று சொல்ல அவ்ளோ ஆசையாகவும் பெருமையாகவும் இருக்கு...
ரியலி கிரேட் மணி ^_^
 

Yoga.S.FR said...

Ideamani - The Master of All said...

அடுத்து ஊடக சுதந்திரம் பற்றிக் கதைத்தவருக்கு - ஓம், 25 வருஷத்துக்கு முன்னர், ஊரில இருந்து போராடுவம் எண்டு இல்லாமல், இடறிக்கொண்டு ஓடி வந்து உல்லாசமாக் குந்தி இருந்து கொண்டு, ஊடக சுதந்திரம் பற்றிக் கதைக்க நல்லாத்தான் இருக்கும்!

மேலும், ஊடக சுதந்திரம் மிக்க நாட்டிலே வாழ்கிறோம் என்று சொல்கிறாரே, எப்படி வாழ்கிறொம் என்பதை மறந்துவிட்டார் போலும்! என்ன தான் பச்சை நிறத்தில் நஷனலிட்டி கார்ட் வைத்திருந்தாலும், அகதி அகதி தான்! /////நன்றி!நன்றி!நன்றி!!!!!!!

Yoga.S.FR said...

காலை வணக்கம்,அம்பலத்தார்!வெறுவாய் சப்புவோருக்கு அவல் கிடைத்தால் எப்படியிருக்கும்?நல்ல வேளை,நாங்கள் ஒன்றும் இணையப் பத்திரிக்கை நடத்தவில்லை.ஊர் வாயை உலை மூடி கொண்டா மூடிவிட முடியும்?இன்றைய உலகில்,பல்லாயிரம் அச்சு,மற்றும் இணைய ஊடகங்கள் வெளியாகின்றன.ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு!நான் சொல்வது பத்திரிகைச் சுதந்திரம் பற்றி.பக்கச் சார்பு குறித்து அல்ல!இங்கே ஐரோப்பாவில் கூட ஒரு அச்சுப் பத்திரிக்கை"உண்மையின் முன் நடுநிலை என்பது இல்லை"என்று தான் கூறுகிறது.அந்த "உண்மை"யும் "நடுநிலை"யும் அவர்களுக்கே வெளிச்சம்!இன்றைய சூழலில்,இன்றைய சூழலில் என்கிறார்களே,அப்படிஎன்றால் என்னவோ?எனக்குக் கொஞ்சம் புரிதல் ,கொஞ்சமென்ன முற்று முழுதாகவே எதுவும் புரிவதில்லை(அறளை பேர்ந்து விட்டதோ,என்னவோ?)தவறுகள் சுட்டப்படக் கூடாது,அவ்வாறாயின் திருந்தி விட வாய்ப்பு உண்டு என்று நினைக்கிறார்களோ?அப்போதும் அப்படியே!இப்போதும் இன்னுமின்னும் இலட்சக்கணக்கில் இறந்தால் தான் இலட்சியம்?!நிறைவேறும் வாய்ப்புண்டோ?தலைமை யாருக்கு என்ற சிண்டு முடிப்பிலேயே அங்கும் சரி,இங்கும் சரி பொழுது போய் விடும்,அவர்களுக்கு!மக்கள் மயப்படுவது என்றால் என்னவென்று இறுதி இன அழிப்புக் காலத்தில் ஐரோப்பாவில்,குறிப்பாக பிரான்சில் பார்த்து,கேட்டு,விவாதித்து நன்றாக,மிக,மிக நன்றாகவே தெரிந்து கொண்டேன்!மீண்டும் சந்திப்போம்;அம்பலத்தார்!

Ideamani - The Master of All said...

இப்போதெல்லாம் இலங்கை அரசும், அதற்குச் சார்பான ஊடகங்களும் அடிக்கடி, புலம்பெயர் மக்கள் பற்றி எதையாவது சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்! புலம்பெயர் மக்கள் மத்தியில் ஒற்றுமையைச் சிதைப்பதற்கும், குழப்பங்களை உருவாக்குவதற்கும் எதையெதையோ ஏவிவிடுகிறார்கள்!, என்னென்னமோ செய்ய விளைகிறார்கள்!!

நாம் ஏதோ ஒரு வகையில் அவர்களுக்குச் சவாலாக இருக்கப் போய்த்தானே, அவர்கள் எம்மீது இப்படி ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்!

நாம் எந்தவகையிலும் அவர்களுக்குச் சவாலாக இல்லை என்றால், அவர்கள் எம்மைக் கணக்கஎடுக்கவே மாட்டார்கள்! - ஆகவே, புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் இருக்கும் அந்த ஒன்று / அந்தப் பலம் எது?

இதனை நாம் உணர வேண்டாமா? அல்லது இதனை நாம் மெருகூட்ட வேண்டாமா?

ஏற்கனவே கொழும்பு உள்ளிட்ட சில இடங்களில் வாழும் தமிழர்களும், சில முஸ்லிம்களும் ( இதில் மறைத்துப் பேச எதுவுமே இல்லை ) புலம்பெயர் தமிழர்கள் மீது செம கடுப்பாக இருக்கிறார்கள்! - ஒரு வகையில் இங்கு நாம் முன்னெடுக்கும் போராட்டங்கள் / இதர செயல்பாடுகள் அனைத்தையும் கோமாளீத்தனம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் - இலங்கை அரசோடு சேர்ந்து!

இந்நிலையில் நாமும் எமது ஊத்தைகளை, கிண்டிக் கிளறி, சந்தியில் போட்டு விற்போமேயானால், அவர்களுக்கு எப்படிக் கொண்டாட்டமாக இருக்கும் ? மேலே சில பின்னூட்டங்களில் அவர்களின் அடி மனசும், அதில் இருக்கும் வக்கிரமான மகிழ்ச்சியும் வெளீப்பட்டிருப்பதைப் பார்த்த போது, தாங்கவே முடியாமல் போயிற்று! - இந்த ஏளனத்துக்கு வழி சமைத்தது, இந்தப் பதிவு தானே??

இவ்வாறாக, எம்மை நாமே ஏளனம் செய்து, கேவலப்படுத்துவதற்கு வழிகோலிய ஒரு பதிவைப் போட்டுத்தானா, நாம் நடுநிலைமையாளர்கள் என்று காட்ட வேண்டும்??? - இப்படிக் காட்டுவதால் எமக்கு ஒஸ்கார் விருதா தரப் போகிறார்கள்????

நேற்றைய வருஷப் பிறப்பு எனக்கு நரகமாகவே அமைந்தது! நேற்றைய மகிழ்ச்சியும் தொலைந்தே போனது!! நான் இந்தப் பதிவைப் படித்திருக்கவே கூடாது!

புலம்பெயர் மக்கள் மத்தியில் இருக்கும் சில குறைபாடுகளைக் களைவதற்கு வழி இது கிடையாது! நாம் நிச்சயமாக மாற்றியோசிக்க வேண்டும்!

இப்பதிவு என் உறக்கதைக் கெடுத்து, நிம்மதியைப் பறித்தது உண்மையே என்றாலும், இதனால் ஒரு நன்மையும் உண்டு!

- நிகழ்கால நிலமைகள் குறித்து நாம் அதிகம் பதிவுகள் இடவேண்டியுள்ளது என்கிற அவசியம் ஏற்பட்டுள்ளது! - மொக்கை, கும்மிகளை ஓரமாக வைத்துவிட்டு.........!!!!!

Ideamani - The Master of All said...

மேலே மிஸ்டர் - ஊடக தர்மத்தார் சொல்லியிருக்கும் கருத்துக்கள் நிஜமனவையே!

அவரின் ஆதங்கம் பலருக்கு இருப்பது உண்மையே! நாம் ஒன்றும் அதனை மறுக்கவே இல்லையே?

ஆனால் அதற்கு தீர்வு - இப்படியான பதிவுகள் போடுவது அல்ல என்கிறேன்!!

இப்பதிவு முழுக்க முழுக்க நெகடிவானது! இதில் எந்தவிதமான பாடங்களயும் கற்றுக்கொண்டு, அடுத்தகட்டம் நோக்கி நகர வாய்ப்பில்லை!!

எமது மூத்த தலை முறை ஏன் தான் இப்படி இருக்கிறதோ தெரியவில்லை! இப்பதிவை ஒரு யாழ்ப்பாண நண்பனுக்கோ, அன்றி தமிழக நண்பனுக்கோ படித்துக் காட்டிவிட்டு,

“ மச்சி, புலம்பெயர் தமிழர்கள் பற்றி என்ன நினைக்கிறாய்?”

என்று கேட்டால், அவன் சொல்லப் போகும் பதிலைக் கற்பனை செய்யவே மனம் நடுங்குது!

என்னப்பனே, எங்களை நாமே கேவலப்படுத்துவதில் அவ்வளவு ஆர்வமா? அதற்கு இப்படி ஒரு வக்காலத்தா?

என்னைப் பொறுத்தவரை - புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியில் காணப்படும் குறை + நிறை களைச் சீர்தூக்கின் - நிறைகளே அதிகம் தெரிகின்றன!

சிலரின் கண்களுக்கு ஏன் அந்த நிறைவு தெரியாமல் இருக்கிறது என்பதுதான் எனது கேள்வி??????

நல்ல கண்ணாடி வாங்கி மாட்டுங்கப்பா!!!!

Ideamani - The Master of All said...

தவறுகள் சுட்டப்படக் கூடாது,அவ்வாறாயின் திருந்தி விட வாய்ப்பு உண்டு என்று நினைக்கிறார்களோ?அப்போதும் அப்படியே!இப்போதும் இன்னுமின்னும் இலட்சக்கணக்கில் இறந்தால் தான் இலட்சியம்?!நிறைவேறும் வாய்ப்புண்டோ? -

இது வெறும் புலம்பலே தவிர வேறொன்றும் இல்லை! அன்று தவறுகளை எடுத்தெண்ணாது, அழிவை நோக்கி நாம் சென்றது போன்றதொரு தோற்றமிருப்பினும், இன்றைய எமது பயணம் அப்படியன்று!

இப்போதெல்லாம் ஈழத்தில் மீண்டும் சண்டை வரவேண்டுமென ஆசைப்படுபவர்களின் எண்ணிக்கை குறந்துவருகிறது! மாறாக மேற்குலகோடு ஒட்டியுறவாடி,இராஜதந்திரக் காய்நகர்த்தல்களில் சாதிக்கமுடியும் என்ற கருத்தே மேலோங்கி வருகிறது!

தற்போதைய சூழ்நிலையை இன்னமும் அப்டேட் செய்யவில்லைப் போலும்..!!

இப்போது எமது பயணம் இன்னொரு முள்ளிவாய்க்காலை நோக்கி அன்று!

அருண்டவன் கண்ணுக்கு............!!!!

♔ம.தி.சுதா♔ said...

ஐயா... நான் தை 1 எடுத்த முடிவை நீங்க இப்ப எடுத்திட்டிங்கள் போலா இருக்கே... (சர்ச்சைகளை நினைக்கமல் மனதில் பட்டதைச் சொல்வது)

Yoga.S.FR said...

நேற்றைய வருஷப் பிறப்பு எனக்கு நரகமாகவே அமைந்தது! நேற்றைய மகிழ்ச்சியும் தொலைந்தே போனது!!////எனக்கும் கூட,பின்னூட்டங்களைப் படித்ததால்!!!!!////ஓம், 25 வருஷத்துக்கு முன்னர், ஊரில இருந்து போராடுவம் எண்டு இல்லாமல், இடறிக்கொண்டு ஓடி வந்து உல்லாசமாக் குந்தி இருந்து கொண்டு...////?????////என்ன தான் பச்சை நிறத்தில் நஷனலிட்டி கார்ட் வைத்திருந்தாலும்,அகதி,அகதி தான்!////???????///மேற்குலகோடு ஒட்டியுறவாடி,இராஜதந்திரக் காய்நகர்த்தல்களில் சாதிக்கமுடியும் என்ற கருத்தே மேலோங்கி வருகிறது! ///அடடே,அப்படியா????

Yoga.S.FR said...

ஃபிரான்ஸ்ல ஒரு நடு நிலமை ஊடகத்தைக் காட்டச் சொல்லுங்கோ பார்ப்பம்????????????////அதைத்தான் அண்ணை நானும் கேக்கிறன்.அம்பலத்தாரை "மட்டும்"தான் கரிச்சுக் கொட்டுறீங்கள்!உங்களுக்குத் தான் "பயோ டேட்டா"எண்டாலே???????????

Yoga.S.FR said...

ம.தி.சுதா♔ said...

ஐயா... நான் தை 1 எடுத்த முடிவை நீங்க இப்ப எடுத்திட்டிங்கள் போல இருக்கே... (சர்ச்சைகளை நினைக்கமல் மனதில் பட்டதைச் சொல்வது)////வணக்கம் ம.தி.சுதா!அம்பலத்தார் கொஞ்சம் லேட் தான்!வயது போட்டுதெல்லோ?ஹி!ஹி!ஹி!!!!

Ideamani - The Master of All said...

மேற்குலகோடு ஒட்டியுறவாடி,இராஜதந்திரக் காய்நகர்த்தல்களில் சாதிக்கமுடியும் என்ற கருத்தே மேலோங்கி வருகிறது! ///அடடே,அப்படியா???? :////////

ஓம், அப்படித்தான்! ஏன் தெரியாதோ? ஏன் அகதியா இருந்தா, மேற்குலகோட ஒட்டி உறவாடக் கூடதோ? அல்லது எமது தேவைகளை உரிய முறையில் எடுத்துச் சொல்லி, தேவையானதைப் பெற்றுக்கொள்ளேலாதோ??

அதான் சொன்னனே, உங்களுக்கப்பா, தாழ்வு மனப்பான்மை! தன் வலி தெரியாது! சும்மா புலம்பத்தான் தெரியும்! நான் நினைக்கிறன், அம்பலத்தார் அண்ணர் உங்களைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார் போல - புலம்பெயர் மக்கள் புலம்பித் திரியினம் எண்டு...........!!!!

Ideamani - The Master of All said...

ஃபிரான்ஸ்ல ஒரு நடு நிலமை ஊடகத்தைக் காட்டச் சொல்லுங்கோ பார்ப்பம்????????????////அதைத்தான் அண்ணை நானும் கேக்கிறன்.அம்பலத்தாரை "மட்டும்"தான் கரிச்சுக் கொட்டுறீங்கள்!உங்களுக்குத் தான் "பயோ டேட்டா"எண்டாலே??????????? :///////

ஓம், எனக்கு பயோடேட்டா எண்டாலே அலர்ஜி போலத்தான் கிடக்கு! சரி அது ஒரு பக்கம் கிடக்கம்! உங்களுக்கேன் பயோடேட்டா எண்டவுடன, “ வால்” புடிக்கத் தோணுது?

“ ஆர்” போட்டாலும்.....?????

Ideamani - The Master of All said...

ஐயா... நான் தை 1 எடுத்த முடிவை நீங்க இப்ப எடுத்திட்டிங்கள் போலா இருக்கே... (சர்ச்சைகளை நினைக்கமல் மனதில் பட்டதைச் சொல்வது) ////////

பெரிய கண்டறியாத முடிவு! சுதா வேண்டுவாய் சொல்லிப் போட்டன்! மனசில பட்டதை சொல்லுறதெண்டால், அப்ப, எங்கட வீடுவழிய ஆயிரெத்தி எட்டுப் பிரச்சனையள் நடக்கும்! அதெல்லாத்தையும் “ மனசில படுது” எண்டிப்போட்டு, ப்ளாக்குல எழுதலாமோ? இல்லைக் கேட்கிறன்?

மச்சி, உன்ரை அக்காவோ, தங்கச்சியோ, அல்லது தம்பியோ ஒரு பிழை விட்டா, “ மனசில படுது” எண்டு, பகிரங்கமா எழுதுவியோ?

அதேன் மச்சி, எங்கட குடும்பம், எங்கட உறவுகள் எண்டவுடன, ஒண்டுக்குப் பத்து தரம் யோசிச்சு, வார்த்தைகளை விடுறம்! ஆனா எங்கட சமூகம் எண்டவுடன, கண்ட பாட்டுக்கு அள்ளிக் கொட்டுறம்??

அப்ப, எங்கட சமூகத்தை நாங்கள் மதிக்கெலை எண்டு அர்த்தமோ?? ஆனா சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டுறதும் ஒரு நல்ல ஆரோக்கியமான சமூகத்துகுரிய பண்பு எண்டு எனக்கு நல்லாவே தெரியும் மச்சி! ஆனா அதுக்கு ஒரு வரை முறை வேண்டாமோ?

அண்ணரின், இந்த பயோடேட்டா, எல்லாத்தையும் அடிச்சு, நொருக்கி, கருக்கியெல்லோ வைச்சிருக்கு! இதைப் படிச்சா, இஞ்ச எல்லாமே முடிஞ்சு, சேடம் இழுக்குது எண்டெல்லோ எல்லாரும் நினைப்பினம்! - இப்படியான கருத்துருவாக்கங்களின் பின் விளைவு மோசமா இருக்கும்! அதான் நேற்றில இருந்து கடுப்பா இருக்கிறன்!

மற்றது மச்சி, இப்ப இஞ்ச முந்தி மாதிரி இல்லையடா, முந்தி வன்னியில சண்டை முடிஞ்ச கையோட, இஞ்சத்த சனம் சொல்லிக்கொண்டு இருந்தது “ தலைவர் இருக்கிறார், திரும்ப வருவார், திருப்பி அடிப்பம், வெட்டுவம், கொத்துவம்” எண்டு!

ஆனா, இப்ப சனங்களின்ர கருத்துக்கள் மாறி வருது! இப்ப பெரும்பாலும் இலங்கையில் சண்டை வரும் / வரவேணும் எண்டெல்லாம் ஆரும் கதைக்கிறேலை! ஆனா எங்களுக்கு ஒரு தீர்வு வேணும்! அதை எப்படிப் பெற்றுக்கொள்ளுறதெண்டுதான் இப்ப எல்லாரும் சிந்திக்கினம்!

முந்தி மாதிரி அடியடா, புடியடா இல்லை!

அப்ப சனம், பழசெல்லாத்தையும் மறந்து, நிதானமா, ஒரு நல்ல வழியில நடக்க முற்படுற நேரத்தில, இவையள் ரெண்டுபேரும் அதைத் தட்டிக்குடுத்து, உற்சாகப்படுத்துவம் எண்டில்லை, எல்லாம் முடிஞ்சு போய்ச்சு! வயசு - ஓய்வெடுக்கிறவயசு எண்டு, அவநம்பிக்கை ஊட்டிக்கொண்டிருந்தா, கடுப்பு வருமோ, வராதோ சொல்லு பார்ப்பம்???????

மற்றது, வெளிநாட்டில நாங்கள் பனியிலையும், குளிரிலையும் காய்ச்சு, நனைஞ்சு உடம்பை வருத்தி வேலை செய்யிறம்! அப்ப வருத்தங்கள் வரத்தானே செய்யும்! அதைப் போய் நக்கல் அடிச்சிருக்கிறார்/ அதான் எனக்கு ஆக கடுப்பானது! - இது சரியில்லைத்தானே! படிக்கிறவன் என்ன நினைப்பான் சொல்லு??????

அம்பலத்தார் said...

Ideamani - The Master of All said...
ஓம், அப்படித்தான்! ஏன் தெரியாதோ? ஏன் அகதியா இருந்தா, மேற்குலகோட ஒட்டி உறவாடக் கூடதோ? அல்லது எமது தேவைகளை உரிய முறையில் எடுத்துச் சொல்லி, தேவையானதைப் பெற்றுக்கொள்ளேலாதோ??//

மணி, இப்ப நீங்க சொல்லின இந்தவிடயம் மிகவும் சரி. இதை நான் 15 வருசங்களுக்கு முதலே இங்கு இருந்த அமைப்பின் கோட்ட, பிராந்திய பொறுப்பாளர்களுக்கு சொல்லினனான். வாங்ககோ நாங்கள் எமது மக்கள் மத்தியில் மட்டும் பிரச்சாரம் செய்வதைவிடுத்து இங்குள்ள அரசியல்கட்சிகளுடனும் பொது அமைப்புகளுடனும் உறவுகளை வளர்த்துக்கொள்ள்வோம் அவர்களிடம் எமது பிரச்சனையின் நியாயங்களை எடுத்துக்கூறி அவர்களை எமதுபக்கம் திருப்புவோம். பொது இடங்களில் info table வைத்து இந்தநாட்டு மக்களிடம் நேரடியாக எமது பிரச்சனைகளை எடுத்து செல்வோம் என. ஆனால் அப்பொழுது பொறுப்பில் இருந்தவர்களால் சொலப்பட்டது. எமது பிரச்சனைகள் வெள்ளைக்காரனுகளுக்கும் இந்த நாட்டு அரசுகளிற்கும் எமது பிரச்சனைகள் புரியாது அவர்கள்மத்தியில் நாங்கள் ராஜதந்திர நகர்வுகள் செய்ய வேண்டியது இல்லை என.
அன்றே நாங்கள் இந்த நடவடிக்கைகளை செய்திருந்தால் முள்ளிவாய்க்காலில் அநியாயமாக பல ஆயிரம் போராளிகளையும் பொதுமக்களையும் பலிகொடுக்கவேண்டி இருந்திராது போயிருக்கலாம்.

அம்பலத்தார் said...

இந்த பதிவில் பின்னூட்டம் இட்டவர்களில் 90% மேலும் இளைஞர்களே. அதிலும் அவர்கள்தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பதி கொடுத்திருக்கிறியள். ஐம்பதாம் ஆண்டுகளில் இருந்து இதுதான் நடந்து வருகிறது. நாங்கள் இளைஞராக இருந்தபோது எங்களுக்கும் இதேபோல மூர்க்கமான கோபம் வந்தது. எமக்கு முன்னைய சந்ததி எமக்கு அடுத்த சந்ததியென இதே கோபம் தொடர்கிறது. வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பினால்மட்டும் எதையும் சாதித்துவிடமுடியாதென்பதற்கு எமது 4 சந்ததி சாட்சி. மூத்தோர் என்று சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகள் பலரும் சரியான செயற்திட்டங்கள் இல்லாமல் வெறுமனே இளையோரை உணர்ச்சிவசப்படுத்தி தமது இருக்கைக்களை உறுதி செய்துகொண்டனர்.

அம்பலத்தார் said...

கந்தசாமி. said...

தொழில் : தாயக உறவுகள்மீது தமது விருப்பு வெறுப்புகளை திணிப்பது////

எந்த வகையில் இப்படியான ஒரு கருத்தை சொல்கிறீர்கள்???//

கந்து, எது எப்படியோ புலம்பெயர் சமூகம் இலங்கை அரசியலில் தாக்கத்தை உண்டுபண்ணுவது உண்மை. தாயகத்தில் உள்ள அனைத்து தமிழ்கட்சிகளும் புலம்பெயர் எம் சமூகத்துடன் சுமூக உறவை ஏற்படுத்தமுனைவது இதனால்தான்.ஒவ்வொரு எலக்சன் நேரத்திலும்
எணை அம்மா நீ கட்டாயம் அவருக்கு வோட்டு போடு....
அப்பா இந்தமுறை வோட்டுபோட
போகாதையுங்கோ....
அந்தக்கட்சிக்கு போடுங்கோ...... இப்படி எத்தனை தொலைபெசி அழைப்புக்கள் புலம்பெயர்தெசங்களில் இருந்து தாயகத்துக்கு எடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் சுற்றி இருக்கும் நம்மவருடன் பேசிப்பார்த்தியள் எனில் புரியும்

அம்பலத்தார் said...

அமெரிக்க ஜனாதிபதியிலிருந்து ஒசாமா பின்லேடன்வரை பலரையும் கிண்டல்பண்ணி கேலிச்சித்திரங்களும் பயோடேட்டாக்களும் பல ஊடகங்களிலும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்காக அவற்றில் கேலிசெய்யப்பட்டவர்கள் ஓடி ஓடி ஒப்பாரிவைக்கவில்லை. மேலை நாடுகளில் வாழும், மேலைத்தேச பண்புகள், வாழ்வியல்முறைகளை பலதையும் புகழும் இளைஞர்களான மணி மது, கந்து ... உங்களுக்கு இந்த பயோடேட்டாமட்டும் அவ்வளவு சீரியஸ் ஆகதோன்றியது எதனால்?

அம்பலத்தார் said...

நீங்கள் எல்லோரும் மதிக்கும் எமக்கு தேவையென போராடும் சுதந்திரத்தில் இந்த கருத்து சுதந்திரமும் அடங்குகிறதுதானே. எனக்கு கருத்து சுதந்திரம் வேண்டும் என எதிர்பார்க்கும் நான், அதுபோல எல்லோருக்கும் அதே கருத்துசுதந்திரம் இருக்கவேண்டும் என்பதாலேயே எனது பின்னூட்டபெட்டியை யாரும் பின்னூட்டம் இடக்கூடியவாறு திறந்தே வைத்திருக்கிறேன்.

அம்பலத்தார் said...

நான் என்றும் தனிப்பட்ட நட்புக்களையும் கருத்துக்கள், கொள்கைகள், கருத்துமுரண்படுகள் இவற்றையெல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து குழப்பிக்கொள்வதில்லை. நட்பு வேறு கருத்துக்கள், கொள்கைகள் வேறு. இங்கு பின்னூட்டம் இட்ட ஒவ்வொருவரதும் ஆணித்தரமான துணிவாக எடுத்துச்சொன்ன வாதங்களையும் தங்கள் கொள்கைகளில் உள்ள பற்றையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறன்.

தனிமரம் said...

இந்த பதிவில் பின்னூட்டம் இட்டவர்களில் 90% மேலும் இளைஞர்களே. அதிலும் அவர்கள்தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பதி கொடுத்திருக்கிறியள். ஐம்பதாம் ஆண்டுகளில் இருந்து இதுதான் நடந்து வருகிறது. நாங்கள் இளைஞராக இருந்தபோது எங்களுக்கும் இதேபோல மூர்க்கமான கோபம் வந்தது. எமக்கு முன்னைய சந்ததி எமக்கு அடுத்த சந்ததியென இதே கோபம் தொடர்கிறது. வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பினால்மட்டும் எதையும் சாதித்துவிடமுடியாதென்பதற்கு எமது 4 சந்ததி சாட்சி. மூத்தோர் என்று சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகள் பலரும் சரியான செயற்திட்டங்கள் இல்லாமல் வெறுமனே இளையோரை உணர்ச்சிவசப்படுத்தி தமது இருக்கைக்களை உறுதி செய்துகொண்டனர்.
// சரியான நடுநிலைப்பார்வை அம்பலத்தார் இந்த உணர்ச்சிவசப்படும் அரசியல் விளையாட்டை ஆரம்பித்தவர் மு.க தாத்தா!  இது எங்கே போய் முடியும் என்று அப்போதே கேட்ட பொன்னத்துரைக்கு பொல்லு வீசியது பொண்ணம் பலம் என்ற சட்டமேதை ! இந்த நிலை எப்போது மாறும் ???எல்லாம் கொதிநிலையில் தான் !

தனிமரம் said...

இந்த பதிவில் பின்னூட்டம் இட்டவர்களில் 90% மேலும் இளைஞர்களே. அதிலும் அவர்கள்தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பதி கொடுத்திருக்கிறியள். ஐம்பதாம் ஆண்டுகளில் இருந்து இதுதான் நடந்து வருகிறது. நாங்கள் இளைஞராக இருந்தபோது எங்களுக்கும் இதேபோல மூர்க்கமான கோபம் வந்தது. எமக்கு முன்னைய சந்ததி எமக்கு அடுத்த சந்ததியென இதே கோபம் தொடர்கிறது. வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பினால்மட்டும் எதையும் சாதித்துவிடமுடியாதென்பதற்கு எமது 4 சந்ததி சாட்சி. மூத்தோர் என்று சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகள் பலரும் சரியான செயற்திட்டங்கள் இல்லாமல் வெறுமனே இளையோரை உணர்ச்சிவசப்படுத்தி தமது இருக்கைக்களை உறுதி செய்துகொண்டனர்.
// சரியான நடுநிலைப்பார்வை அம்பலத்தார் இந்த உணர்ச்சிவசப்படும் அரசியல் விளையாட்டை ஆரம்பித்தவர் மு.க தாத்தா!  இது எங்கே போய் முடியும் என்று அப்போதே கேட்ட பொன்னத்துரைக்கு பொல்லு வீசியது பொண்ணம் பலம் என்ற சட்டமேதை ! இந்த நிலை எப்போது மாறும் ???எல்லாம் கொதிநிலையில் தான் !

அம்பலத்தார் said...

Ideamani - The Master of All said...
ஏற்கனவே கொழும்பு உள்ளிட்ட சில இடங்களில் வாழும் தமிழர்களும், சில முஸ்லிம்களும் ( இதில் மறைத்துப் பேச எதுவுமே இல்லை ) புலம்பெயர் தமிழர்கள் மீது செம கடுப்பாக இருக்கிறார்கள்!//
இது வேறொருவிடயம் இதற்கு அவர்கள் புரிந்துகொள்ளும்விதமாக எமது செயற்பாடுகளால் பதில்கொடுப்போம்.

Yoga.S.FR said...

உங்களுக்கேன் பயோடேட்டா எண்டவுடன, “ வால்” புடிக்கத் தோணுது?

“ ஆர்” போட்டாலும்.....?????////தனி மனித தாக்குதல்கள் வரவேற்கப்படுகின்றன!!!!!அந்த நீக்கரிய நஞ்சு கலந்த வார்த்தைப் பிரயோகங்களும் கூட!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Yoga.S.FR said...

Ideamani ----------- அதான் சொன்னனே, உங்களுக்கப்பா, தாழ்வு மனப்பான்மை! தன் வலி தெரியாது! சும்மா புலம்பத்தான் தெரியும்! நான் நினைக்கிறன், அம்பலத்தார் அண்ணர் உங்களைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார் போல - புலம்பெயர் மக்கள் புலம்பித் திரியினம் எண்டு...........!!!!///இருக்கும்,இருக்கும்!அம்பலத்தார் அண்ணரின் தொழிலே அது தானே?உங்கள் ஞானக்கண்ணைத் திறந்து எனக்கு ஒளி பாய்ச்சியதற்கு நன்றி!!!!!!!

Yoga.S.FR said...

இதற்கு மேலும் உங்கள் "அறிவு" பூர்வமான விமர்சனங்களுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தால்............................(ஏலவே நிரூபன் பதிவில் உங்கள் "பொன்னான"வார்த்தைகளை அனைவரும் அனுபவித்தோம்,ஆயுள் வரை போதும் அது!)

துஷ்யந்தன் said...

Ideamani - The Master of All said...

ஐயா... நான் தை 1 எடுத்த முடிவை நீங்க இப்ப எடுத்திட்டிங்கள் போலா இருக்கே... (சர்ச்சைகளை நினைக்கமல் மனதில் பட்டதைச் சொல்வது) ////////

மனசில பட்டதை சொல்லுறதெண்டால், அப்ப, எங்கட வீடுவழிய ஆயிரெத்தி எட்டுப் பிரச்சனையள் நடக்கும்! அதெல்லாத்தையும் “ மனசில படுது” எண்டிப்போட்டு, ப்ளாக்குல எழுதலாமோ? இல்லைக் கேட்கிறன்?

மச்சி, உன்ரை அக்காவோ, தங்கச்சியோ, அல்லது தம்பியோ ஒரு பிழை விட்டா, “ மனசில படுது” எண்டு, பகிரங்கமா எழுதுவியோ?

அதேன் மச்சி, எங்கட குடும்பம், எங்கட உறவுகள் எண்டவுடன, ஒண்டுக்குப் பத்து தரம் யோசிச்சு, வார்த்தைகளை விடுறம்! ஆனா எங்கட சமூகம் எண்டவுடன, கண்ட பாட்டுக்கு அள்ளிக் கொட்டுறம்??<<<<<<<<<<<

இதான் நடு நிலைவாதிகளின் போலி முகம்..... ஹா ஹா....

உண்மையில் நடு நிலை வாதிதான் நான் என்றால் மணி சொன்னது போல் அவர்கள் அவர்கள் வீடுகளில் நடக்கும் "பொட்டுக்களை" ஒரு ப்ளாக் திறந்து எழுத தயாரா???? கண்டிப்பாய் எழுத மாட்டீங்க...... :) போங்கப்பா நீங்களும் உங்க நடு நிலைமையும் :(

அம்பலத்தார் said...

வீட்டில பக்குவமாக பேசித்தீர்க்கமுடியாத விடயங்களை நீதிமன்றத்துக்கு கொண்டுபோய் வழக்கு வாதாட்டம் என செய்வதுவும் நடைமுறையில இருக்குத்தானே. இப்ப ராஜபசவோட பேசி தீர்க்கமுடியது என்றுதானே ஐநாவில் விவாதிக்கவேணும் தீர்ப்பு எழுதவேண்டும் என்கிறம்.

Ideamani - The Master of All said...

அன்றே நாங்கள் இந்த நடவடிக்கைகளை செய்திருந்தால் முள்ளிவாய்க்காலில் அநியாயமாக பல ஆயிரம் போராளிகளையும் பொதுமக்களையும் பலிகொடுக்கவேண்டி இருந்திராது போயிருக்கலாம். ://///////

அண்ணர், இதை அப்படியே ஏற்கிறேன்! எமது பக்கத்தில் நடந்த சில தவறுகளும், எமது வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை நான் ஏற்கிறேன்! குறித்த அந்தத் தவறுகள் களையப்படவேண்டும் எனப்திலும் எனக்கு மாற்றுக் கருத்தள் ஏதுமில்லை!!

ஆனால், நாம் சோர்ந்துவிட்டோம் என்றும், எம் கதை முடிந்துவிட்டது என்றும் சொல்வதைத்தான் ஏற்க முடியவில்லை!!

எத்தனையோ, நாடுகளில், எத்தனையோ மொழி பேசப்படும் வித்தியாசமான வாழ்க்கைச் சூழலில் வாழும் எமது புலம்பெயர் உறவுகளை ஒரே குடையின் கீழ் அணிதிரட்டுவது எவ்வளவு பெரிய சிரமாமான காரியம் எனப்தை அனைவரும் உணர்வர்!

ஆக, இந்தப் பெரிய நடவடிக்கையில் சில தவறுகள் இடம்பெறவே செய்கின்றன!! அவற்றை நிவர்த்திபதற்கு - இது வழியல்ல என்பதே என் அபிப்பிராயம்

Yoga.S.FR said...

காலை வணக்கம்,அம்பலத்தார்!

Anonymous said...

தமிழீழமாம்! நாடு கடந்த தமிழ் ஈழமாம்! :-)

பவுத்தம், கிறித்தவம், இஸ்லாம், இந்து மதங்களை அரவணைத்து ஒன்று பட்ட இலங்கையை கட்டி யெழுப்ப புறப்படுங்க அப்பு.

அம்பலத்தார் said...

வணக்கம் யோகா நலமா? அநுபவம் பேசுகிறதுபோல

நிலவன்பன் said...

இதில் ஒற்றுமை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை

Yoga.S.FR said...

அம்பலத்தார் said...

வணக்கம் யோகா நலமா? அநுபவம் பேசுகிறதுபோல?////நலம் அம்பலத்தார்!"தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்"ஹி!ஹி!ஹி!!!!!

Yoga.S.FR said...

இனிய காலை வணக்கம்,அம்பலத்தார்!!

Ideamani - The Master of All said...

தமிழீழமாம்! நாடு கடந்த தமிழ் ஈழமாம்! :-)

பவுத்தம், கிறித்தவம், இஸ்லாம், இந்து மதங்களை அரவணைத்து ஒன்று பட்ட இலங்கையை கட்டி யெழுப்ப புறப்படுங்க அப்பு. ////////

அரவணைக்கிறதுக்கு அது என்ன ஹன்ஸிகாவா? அதுபோக, நாங்கள் ஏதோ மத ரீதியாக சண்டை போட்டு, பிரிந்துள்ளது போல அல்லவா, ஒற்றுமையாகச் சொல்கிறார்?

ஹி ஹி ஹி அனானியாகக் கமெண்டு போட்டாலும் அவரின் “ மனசு” ம் “ மார்க்கமும்” நன்றாகவே தெரிகிறதே?

அன்பை தேடி,,அன்பு said...

:தமிழீழத்திற்கு எதிரான அனைவரும் எனக்கும் எதிரிகளே

Bob said...

Hi idea mani, are you a senator of the migrant Tamil's?