நான் லைற்றை அணைக்க,
செல்லம்மா என்னை அணைக்க,
என்ரை வாய் சும்மா கிடக்கமாட்டாமல்
செல்லம், எனக்கு அப்பவே சந்தேகமா கிடந்தது.
என்னப்பா.
அதுதானே பார்த்தன் உவள் ஜெனியின்ரை வடிவுக்கு அவளைக் கொல்ல எவனுக்கெண்டாலும் மனசு வருமே.
பதிலுக்கு, என்ன என்ன சொன்னனிங்கள்? என்றவாறு
தள்ளிவிட்ட தள்ளிலை அய்யா கட்டிலாலை விழுந்து (carpet) கார்ப்பெற்றிலை கிடந்தன்.
நான் சுதாகரிச்சுக்கொள்ள முந்தியே.
ஓகோ! அய்யாவுக்கு நாங்களெல்லாம் வடிவாகத் தெரிவில்லையோ? வெள்ளைக்காரிதான் கேக்குதோ?
செல்லம் ஒரு பேச்சுக்குச் சொல்ல வந்தால்...........
பேச்சுக்கும் வேண்டாம் பேசாமலுக்கும் வேண்டாம். ஒரு கிழமைக்குக் கிட்ட வரக்கூடாது. வெறும் நிலத்திலைதான் படுக்கை, போர்வையும் கிடையாது ஒன்றும் கிடையாது என்று சொல்லிக்கொண்டு மற்றப் பக்கமாத் திரும்பி இழுத்து மூடிக்கொண்டு படுத்துவிட்டாள்.
என்ரை கெஞ்சலுகளுக்கு ஒன்றும் மசியிறமாதிரித் தேரிவில்லை. ஐந்து நிமிசத்திலை பார்த்தால் கொர், கொர் என்று குறட்டை வேறு. எனக் கெண்டால் நிலமொருபக்கம் போர்வை இல்லாமல் குளிரொரு பக்கமென்று புரண்டு புரண்டு படுக்கிறன் நித்திரையுமென்றால் வராதாம். கடைசியிலை எப்ப நித்திரையானனோ தெரியேல்லை.
யன்னலுக்காலை வெளிச்சம் கண்ணுக்கை அடிச்சதிலை நித்திரை கலைஞ்சு கண்ணைக் கசக்கிக் கொண்டு கட்டிலைப் பார்த்தால் செல்லம்மாவை காணம்.
மெல்லவா, இஞ்சருமப்பா செல்லம்......... பதிலைக்காணம்.
சரி இன்னும் கோபம் தணியேல்லைப்போல கிடக்குது என்ற எண்ணத்திலை,
தம்பி ராசா அம்மா எங்கையடா?.............
உம் என்று கூட ஒரு சத்தத்தையும் காணம்.
எடி பிள்ளை சின்னவள் எல்லாரும் என்னடி செய்யிறியள் என்றதுக்கும் மூச்சுப் பேச்சைக் காணம்.
என்னடா இது வீட்டிலை ஒரு சத்தம் சந்தடியையும் காணம் என்று அரக்கப் பரக்க எழும்பி,
பெடியளின்ரை அறையள் அடுக்களை என்று எட்டிப் பார்த்தால் வீட்டிலை ஒரு ஈ காக்கையும் இல்லை.
என்னடா இது வம்பாப்போச்சுது என்று நினைத்துக்கொண்டு சோகமாப் போய் சோபாவிலை உட்கார்ந்தால் T.V. யிலை பெரிய ஒரு துண்டு எழுதி ஒட்டிக்கிடக்குது.
விருப்பம் எண்டது வடிவாத் தெரிஞ்சுது. கண்ணாடி போடாததிலை மிகுதி வடிவாகத்தெரியாட்டிலும், விருப்பம் என்றதை கண்ட சந்தோசத்திலை, என்னதான் திட்டினாலும் செல்லம்மாவுக்கு என்னிலை நல்ல விருப்பம்தான் அதுதான் விருப்பம் என்று ஆசையா ஏதோ எழுதி வச்சிட்டுப் போயிருக்கிறாள் போலக்கிடக்கு என்று நினைச்சுக்கொண்டு கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு,
வடிவா படித்தால்........
அந்தத் துண்டிலை........
பசித்தால்.......
விருப்பம் என்றால்........... (Deepfreezer) டீப் பிறீசருக்கை கோழி கிடக்கு எடுத்து இளகவச்சு சமைச்சுச் சாப்பிடுங்கோ, நாங்கள் தம்பி வீட்டைபோறம். வர லேற்றாகும். என்று எழுதிக்கிடக்குது.
அட சீ! அந்த ஒரு வசனத்தாலை இவ்வளவு விசயம் நடக்குமென்று வேளைக்கே தெரிஞ்சிருந்தால்.................. பேசாமலுக்கு வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாம். இப்ப என்ன செய்யிறது என்று யோசிச்சுக்கொண்டு T.V. ஐ போட்டால்.......
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.................
சீ! இஞ்சை மனுசன் படுகிற பாட்டுக்கை, உந்த அறுவானுகளுக்கு எந்த நேரத்திலை எந்தப் பாட்டைப் போடுறதென்றே தெரியவில்லை என்று சினத்தோட ரீ.வீ. ஐ நிறுத்திப்போட்டு, இழுத்துப்போர்த்திக்கொண்டு சோபவிலை படுத்தனான்.
கிணுகிணு என்ற மணிச்சத்தத்தைக்கேட்டுத் திடுக்கிட்டு எழும்பினால்,
அது அழைப்பு மணி...
ஆராக்கும் இந்த நேரத்திலை என்ற யோசனையோட கதவைத் திறந்தால்..........
அட ஜெனியே வா வா
குடன் மோர்கன் (காலை வந்தனங்கள்), சீ சீ குடன் ராக் (இனிய நாள்). என்ன சொல்லாமல் கொள்ளாமல் இந்தப் பக்கம், என்று இனி உளறுறதுக்கு இல்லையென்ற அளவுக்கு ஏதேதோ உளறினன்.
அவளெண்றால் சோகமா உள்ளை வந்து என்ரை கையைக் கெட்டியாப் பிடிச்சு.....
அம்பல் மறுக்காமலுக்கு எனக்கொரு உதவி செய்யவேணுமென்று கெஞ்சலாக் கேட்டது, எனக்குக் கொஞ்சலாகக் கேட்டதில்,
ஐயா விலாசமா, சொல்லு ஜெனி உனக்குச் செய்யாமல் வேற யாருக்குச் செய்கிறது.
என்ரை நாயிற்கு அவசரமா ஒரு ஒப்பிரேசன் செய்தால்தான் தப்புமாம் அதுக்கு.......... கனக்கச் செலவாகுமாம். அதுதான்...... எனக்கு உன்ரை ஞாபகம்தான் வந்தது......... என்று கதைக்க முடியாமலுக்கு விக்கி விக்கி அழுதுகொண்டு என்ரை தோளிலை சாய,
என்ன இது ஜெனி சின்னப்பிள்ளையாட்டம் அழுதுகொண்டு முதலிலை அழுகிறதை நிறுத்து என்று கெஞ்சலாச் சொல்லிக்கொண்டு பாசமாத் தலையைத் தடவிவிடவும், சாத்த மறந்த வாசற்கதவுப் பக்கமா நிழலாடவும் சரியா இருந்தது.
சட்டென்று ஜெனியைத் தள்ளிவிட்டிட்டு எட்டிப் பார்த்தால்
வாசலிலை மச்சான்.
தட்டுத்தடுமாறி என்ன மச்சான் இந்தப்பக்கம் அக்கா உன்ரை வீட்டுப்பக்கம்.........
தொடங்கமுந்தியே.
ஓம் அவதான் வீட்டைபோய் அத்தானின்ரை காரை எடுத்துக்கொண்டு கமல் படத்துக்குப் போவம் என்றவ, அதுதான் இஞ்சை வந்தால், இஞ்சை அதைவிட நல்ல படம் ஓடுதுபோலகிடக்கு என்று நக்கலோ கோபமோ என்று புரியாதமாதிரிக்கு சட்டென்று கோபமாகக் கத்தினான்..........
பாவம் இவள் ஜெனியின்ரை நாயிற்க்கு ஒப்பிரேசனாம், அதுதான் விக்கி விக்கி அழுகிறாள், சோகமாச் சொல்லி நான் சமாளிக்கப் பார்க்க.........
அவன் விடாக்கண்டனா...
வாசலிலை வரேக்கை, அவள், எனக்கு உன்ரை ஞாபகம்தானென்று......... எதோ டயலக் பேசினமாதிரிக் கேட்டுது.
அட போடா நீயும் உன்ரை ஞாபகமும் என்று நான் கோபமாக் கத்த, stop stop. அம்பல், இப்ப நீ 500 euro ஈரோ தாறியோ இல்லையோ சீக்கிரமாச் சொல்லிப்போட்டு உன்ரை சண்டையைப் பிடி என்று ஜெனி கத்தினாள்.
அந்தச் சத்தம் ஓயமுந்தியே,
ஓகோ! 500, 1000 என்று குடுத்து கண்டவளை எல்லாம் வீட்டுக்குக் கொண்டுவாற அளவுக்கு முன்னேறியிட்டியளே. இனி ஒரு நிமிசம் கூட என்னாலை இந்த வீட்டிலை இருக்க ஏலாது. வாடா தம்பி கெதியிலை என்று கத்திக்கொண்டு வீட்டுக்கை வந்த செல்லம்மா திரும்பி வாசலுக்கு ஓட,
அவள் ஓட,

பின்னாலை, நில்லு செல்லம்மா நில்லு என்று கத்திக்கொண்டு நான் ஓடினனோ,
இல்லை பேய் அறைஞ்சதுபோல நிண்டனோ,
போகட்டும் நல்லாப் போகட்டும்
அப்படி எங்கைதான் போவாள், என்று பேசாமலுக்கு நிண்டனோ எண்டதே ஞாபகத்துக்கு வராதாம்.
வந்தால் பிறகு சொல்லுறன்.
பொன். அம்பலத்தார்

Submitted by இராஜன் முருகவேல் (not verified)
சுப்பரோ சூப்பர்... நகைச்சுவை சிலருக்குத்தான் கைவரும்.. அது அம்பலத்தாருக்கு அல்வாமாதிரி வருது..வாழ்த்துக்கள்!
Submitted by N.paraneetharan (not verified)
வணக்கம் அம்பலத்தார் ஐயா !
உடலின் எந்தப்பாகத்தில் நகைச்சுவையை வைத்துள்ளீர்கள். எல்லாமே இனிக்கின்றனவே !
அருமை அருமை
சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைப்பதில் உங்களிற்கு நிகர் யாருமிலர்.
இன்னமும் தாருங்கள்.
ஆனாலும் செல்லம்மா ஆச்சி ரொம்பவும்தான் மோசம். ஒரு சின்ன கோபத்திற்காய் கட்டிலால் தள்ளி கீழே படுக்கவைப்பதா ?

Submitted by பாலன் (not verified)
பந்திகள் சரியாக பிரிக்கப்படாமையால் வாசிக்க கஸ்ரமாக உள்ளது.
நல்ல நகைச்சுவை விடயம்.
நல்ல நகைச்சுவை விடயம்.
18 comments:
நன்றாக எழுதியுள்ளீர்கள்
வித்தியாசமாக ரசனையாக இருக்கிறது!
அட அழகான கத சொல்லி நீங்க...
உண்மையிலே இப்பிடி இருக்கிறதவிட ஜென்னியின் நாயா இருக்கலாம் போல...!!!!!!!!!!ஹி ஹி ஹி அட எனக்கும் புரியல இவங்க இஞ்ச நாய்க்கு குடுக்கிற மரியாதைய...!!!
ஞாபகத்துக்கு வந்தால் பிறகு சொல்லுறன்..-:)
ஆஹா!போச்சா!வாயக்கொடுது வாங்கிகட்டிக்கொண்டதும் இல்லாம ஜென்னியின் நாயாலையும் அவஸ்தையா!சிரிப்புதான் போங்க!
அடக்கோதாரி விழுந்த ஜெனிண்ட தொடர்பாள இப்படி அவஸ்த்தை படுரீரே அம்பலத்தார் உது தான் சொல்லுறது போற போற இடத்தில பொத்திக்கொண்டு இருக்கொனுமெண்டு
இப்ப அவள் பறந்து போனாலே என்ன மறந்து போனாலே பாடும் பாடும் நல்லா பாடும்
மதுரன், மருதமூரான் உங்கள் கருத்துப்பகிர்வுகளிற்கு Thanks
என்ரை கஸ்டத்தை உங்களிற்குச் சொல்லவெளிக்கிட்டன் எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் கடைசியிலை நாயாக நடுத்தெருவிலை விட்டிட்டியள் காட்டான்
என்ன ரெவெரி ஞாபகம் வந்ததா?
ஐயோ பாவம்!
வித்யாசமான எழுத்து, நல்லாதான் சொல்லி இருக்கீங்க சுவாரசியமா இருந்தது.
நன்றாக இருக்கிறது. ஆனால் இலங்கைத் தமிழ் படிக்க கொஞ்சம் கடினமாக இருக்கிறது. படிக்கப் படிக்க சரியாகிவிடும் என நினைக்கிறேன்.
கோகுல், நம்மவீட்டிலை அம்மா ஆட்சிதான் ஒத்துக்கிறேன்.
நான் படுகிற அவஸ்த்தை உங்களிற்கு சிரிப்பாகக்கிடக்கோ? ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒருகாலம் வராமலாபோகும் கவி அழகன்
என்ன சென்னை பித்தன் சார் தப்பிக்க எதாவது வழிசொல்லாமல் பாவம் என்றதோட நின்றால் எப்படி.
உங்க பாராட்டுகளிற்கு நன்றிகள் லட்சுமி அம்மா
ஆமா கவிப்ரியன் பழகப் பழக இலகுவாகப் புரிஞ்சுக்குவிங்க
//அவள் ஓட, பின்னாலை, நில்லு செல்லம்மா நில்லு என்று கத்திக்கொண்டு நான் ஓடினனோ,இல்லை பேய் அறைஞ்சதுபோல நிண்டனோ,//
என்னத்தை சொன்னாலும் உங்கட செல்லம்மா வடிவு என்ன....நளபாகமும் அந்த மாதிரி எண்டு சொல்லுறியள், பிறகேன் அந்த ஜெனி....
கண்டவளுக்கு பின்னால இனியும் ஓடாதேங்கோ.....உங்கட நன்மைக்குத்தான் சொல்லுறன்
Post a Comment