நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Friday

வாழ்க கூகிள். ஜாலிதான் நான் கடலைபோடுற குட்டியளின்ரை விபரமெல்லாம்.........இஞ்சருங்கோ சொல்ல மறந்துபோனன் புறோக்கர் தொலைபேசினவரப்பா,

உவள் எங்கட மூத்தவளுக்குப் பேசின மாப்பிளைவீடடுக்காரர் ஊரில வடிவா விசாரிக்கவேணுமென்று உங்கட பேரன் பேத்தியின்ரை பெயர் ஊர் மற்ற விபரமெல்லாம் கேட்கினமாம்.

என்னது ஊரிலை விசாரிக்க வேணுமாமோ?

ஓமப்பா பொன்னர், அம்பலத்தார் என்று உங்கட பெயரைப்ப் பார்க்க நாங்கள் தங்கட சாதி ஆக்களில்லையோ என்று யோசிக்கினமாம்

அதுதான் வடிவா விசாரிக்கவேணுமென்று சொல்லுகினமமாம். அதுதான்.........

என்ரை அப்பா விசுவர் பொன்னர்.

அப்பைய்யா.........

பொறும் பொறும் ஞாபகம் வருகுது..........வீரகத்தி விசுவர்.

சொல்லி முடிக்கமுதல் செல்லம்மா....
உதென்ன உந்தப் பெயருகளைகளைக் கேட்க எனக்கே ஒருமாதிரியாக்கிடக்கு அவர்கள் கேட்கிறதும் நியாயம்தான் என்று சொல்லவும்

எனக்குக் கோவம் பத்திக்கோண்டு வர சும்மா விசர்கதையளைக் கதைத்து உருவேத்தாமல் இரும்பாப்பம் என்று கத்தின படி

அப்பாச்சியின்ரை பெயர்தான் ஞாபகம் வராதாம்.

அம்மா சின்னத்தங்கம்.... அப்பாச்சி.............சீ அவசரத்துக்கு ஞாபகம்வராதாம்....

என்னங்கோ இதுகூட.......

என்று செல்லம்மா நக்கலாக எதோ சொல்லத் தொடங்கவும்

பொறும் பொறும் கூகிள்ளை அப்பைய்யான்ரை பேரைக்கொடுத்துத் தேடிப் பார்ப்பம்

என்று சொல்லிக்கொண்டு கொம்பியூட்டரை இயக்கத் தொடங்கினன்

Google Search _வீரகத்தி விசுவர்.

தேடத்தொடங்கினன்


வீரகத்தி விசுவமடு.......


வீரகத்தி வில்லியம்
Jaffna Toranto ...............


தொலைந்த இளமையை மீண்டும் பெற சித்த வயகரா.....
தொடர்புகளுக்கு பரம்பரை ஆயுள்வேத வைத்தியகலாநிதி வீரமாமுனி வீரகத்தி கைலாசம்
  Jeya Traders La Chapel Paris ........

உங்கள் எந்தவித தேவைகும் அவசர கடனுதவி ஆலோசகர் விசுவர் அண்ணா ஜேர்மனி ....


அட இது ஒரு பெரிய தொல்லையாப்போட்டுது எங்கைபார்த்தாலும் எதைத்திறந்தாலும் ஒரே விளம்பரமாகிவிட்டது.

சலிப்பாக முணுமுணுத்தபடி தொடர்ந்து தேடினன்


வில்லங்க வீரகத்தி M.A. பிரபல அரசியல் ஆய்வாளர்........லண்டன்


வீரகத்தி விசுவர் வட்டுக்கோட்டை........


இவராகத்தான் இருக்கவேணும்

பிறந்த நாள்: தெரியாது

தொழில்: விவசாயம்

விருப்பங்கள்: தியாகராசபகவதர் பாடல்கள், சின்னமேளம், நாட்டுக்கூத்து,

மனைவிபெயர்: மரகத நாச்சியார்

பிள்ளைகள்: தங்கராசு, பொன்னர்.


இது என்ரை அப்பைய்யாதான் நல்லகாலம் கூகிளிலை விபரம்கிடக்கிறது.

கொஞ்சம் சந்தோசப்பட விடாமல் இதுக்கிடையில் செல்லம்மா..

இந்தாங்கோ புறோக்கர் உங்களோட கதைக்கவேணுமாம் என்று தொலைபேசியை நீட்ட

அதை வாங்கி

வணக்கம் அம்பலத்தார்

................

ஓமோம் அதுதான் இப்ப கூகிளிலை தேடிக்கொண்டிருந்தனான் புறோக்கர்.

.....................

நல்லாகாலம் கூகிளிலை விபரம் கிடந்தது. சொல்லுறன் குறிச்சு வையும்.வீரகத்தி விசுவர்......................

தனிமனித விபரப் பாதுகாப்பு எக்கேடு கெட்டால் எனக்கென்ன.......

விரைவில் வரப்போகிறதாம் புதிய தொழில்நுட்பம் கைத்தொலைபேசியிலை படத்தை எடுத்துக் கொடுத்தாலே படத்துக்குரியவரின் தகவல் எல்லாம் காட்டப்போகுதாம் கூகிள்.

இனி எல்லாம் ஜாலிதான் நான் கடலைபோடுற குட்டியளின்ரை விபரமெல்லாம் கைவசம்.வாழ்க கூகிள்


நேசமுடன் அம்பலத்தார்


24 comments:

காந்தி பனங்கூர் said...

கதையோடு ஒரு அழகான கருத்தை சொல்லிட்டு போற விதம் அருமை. வாழ்த்துக்கள்.

ரெவெரி said...

உங்கள் Accent சில நேரங்களில் புரிய கஷ்டப்படுறேன்...ஒரு வகையிலே நல்லது ரெண்டு தடவை படிக்கலாமில்ல...:)

நல்லாயிருந்தது...

கவி அழகன் said...

அசதிட்டிங்க போங்க

சென்னை பித்தன் said...

நல்ல கருத்தை நச் னு சொல்லியிருக்கீங்க!

Riyas said...

ம்ம்ம்ம் சொன்னவிதம் அழகு ஊர் பேச்சு நடையில்

கவிப்ரியன் said...

ம்...கலக்குறீங்க அம்பலத்தார்!

கோகுல் said...

வாழ்க கூகிள்.பேச்சு நடையில் எழுதுவது நல்லாருக்குங்க!

அம்பலத்தார் said...

பதிவுகள் அதிக வோட்டுக்களையும், பின்னூட்டங்களையும் எதிர்பார்பவையாக மட்டும் அமைவதைவிட ஒரு சிறிய கருத்தையாவது வாசகர்களிடம் எடுத்துச் செல்வது நல்லதுதானே காந்தி அந்தவகையில் உங்கள் பாராட்டுக்களிற்கு நன்றிகள்.

அம்பலத்தார் said...

ரெவெரி, உங்களிற்கு எங்க ஊர் பேச்சுவழக்கு புரியவில்லையா? அல்லது எழுதும் பாணி புரியக் கஸ்டமாக உள்ளதா? கூறினீர்களானால் மாற்றிக்கொள்ள முயற்ச்சிக்கலாம்

அம்பலத்தார் said...
This comment has been removed by the author.
அம்பலத்தார் said...

கவி அழகன், சென்னை பித்தன் உங்களது தொடர்ந்த பின்னூட்டங்களும் உற்சாகம் தருகின்றன

மாய உலகம் said...

வாழ்க கூகுள்...

angelin said...

நகைசுவையுடன் கூகிள் விபரங்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி

அம்பலத்தார் said...

சென்னை தமிழ், கோயம்புத்தூர் தமிழ் மதுரைத்தமிழ்,T.V. அறிவிப்பாளர் பேசுகிற தமிங்கிலீஸ், நாடார் பேசுகிறது என எத்தனைவிதமான தமிழை நாம் புரிஞ்சு ரசிக்கிறதுபோலத்தானே இந்த யாழ்ப்பாணத்தமிழும். ரியாஸ், கோகுல் நீங்கள் அதனை ரசிப்பது மகிழ்ச்சிதருகிறது.

அம்பலத்தார் said...

கவிப்பிரியன் உங்க உற்சாகமான வார்த்தைகளிற்கு thanks

vidivelli said...

ஆகா அழகாக கதையுடன் கூகிளின் பயன் சிலவற்றை அருமையாக சொன்னீங்க.நல்லயிருக்கு எங்க பேச்சு வழக்கில் கலக்கியிருக்கிறீங்க.பகிர்வுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்.

காட்டான் said...

ஐயா வணக்கமுங்கோ நான் காட்டான் வந்திருக்கேன்யா.. இந்த பதிவு வீதியில உங்கள அடிக்கடி சந்திக்கிறேன்யா பேசதான் முடியல அதுதான் உங்கட வீட்டுப்பக்கம் போய் ஒரு கும்பிடு வைச்சிட்டு வருவம்ன்னு வந்தேங்க நான் கும்பிடு போட்டத்துக்காக என்ர வீட்டுப்பக்கம் ஓடி வராதீங்கோ நான் பதிவு போட்டே ஒரு மாதத்துக்கு மேலாகுதுங்கோ.. நீங்க எங்கட பேச்சு வழக்கில கோகுலபற்றி அருமையா எடுத்து விடுறீங்க..  இனிமேல நான் உங்கட வீட்டுப்பக்கமும் குழ போட வருவேங்க....

காட்டான் குழ போட்டான்..

நிரூபன் said...

வணக்கம் ஐயா,நலமாக இருக்கிறீங்களா?

உங்கள் பதிவுகளை மிஸ்ட் பண்ணி விட்டேன்,
மன்னிக்கவும்,

எங்களின் மண் வாசனையை மனதிலிருத்தி தனி மனித விடயங்கள் இணையத்திலேறி எப்பாடு படுகின்றன என்பதனை அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

அம்பலத்தார் said...

வாழ்க மாயா உலகம்

அம்பலத்தார் said...

Angelin உங்கள் தொடர்ந்தவரவும் பின்னூட்டங்களும் உற்சாகம் தருகின்றன.

அம்பலத்தார் said...

vidivelli - செண்பகம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி

அம்பலத்தார் said...

காட்டான், உங்க பெயர் பயமுறுத்துவதுபோல இருங்தாலும் மனசு தங்கமானது புரிந்துகொண்டேன். தொடர்ந்து வந்து கருத்துக்களை சொல்லுங்கோ

அம்பலத்தார் said...

வணக்கம் நிரூபன், நான் நலம். நீங்க? உங்களைப் போன்ற ஒருசிலரால்தான் பதிவுலகம் உயிரோட்டத்துடன் இருக்கிறது

Parasakthy said...

"kaspersky internet security" போட்டு விட்டியள் என்றால் ஒரு நாளும் உந்த விளம்பரம் கண்ணில் படாது.
என்னக்கென்னமோ சலிப்பும் முணுமுணுப்பும் பதிவில், வாசகர்களின் முன்பாக ஒரு கண்துடைப்பு தானே!
போகிற போக்கில்,"தனிமனித விபரப் பாதுகாப்பு எக்கேடு கெட்டால் எனக்கென்ன" என்று வேறு பயங்காட்டி விட்டியள், வாழ்க! வாழ்க! கூகிள் வாழ்க!