நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Wednesday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 5

வேறு பல அலுவல்களிலும் கடந்த சிலநாட்களாக blog பக்கம் தலைகாட்டமுடியவில்லை அதுதான் மிகுதிக் கதையைச் சொல்லக்கொஞ்சம் தாமதமாகிவிட்டது, திட்டுவதற்குமுதல் தொடர்ந்து படியுங்கோ அதற்குப்பிறகு சொல்லவேண்டியதை சொல்லிவிட்டுப்போங்கோ. என்ன deal ok. தானே

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 5

நான் வந்து ...........செல்லம்மா .......

நீங்கள் வந்திட்டியள் அது தெரியும்.நீங்கள் புறப்பட்டுக் கொஞ்ச நேரத்திலை உங்கட friend தொலை பேசினவர் என்று கடுகடுப்பாக் கத்தத் தொடங்க

பதட்டத்திலை நான், என்ன போன் எடுத்தவளோ?

என்ன கதை மாறுது. இப்ப வள்ளெண்டிறியள். சாயங்காலம் வேற என்னவோ சொன்னமாதிரிக் கிடந்தது. இது அவள்.

அது செல்லம்மா நான் friend கூப்பிட்டவள் என்றுதான் சொல்ல வந்தனான்.

நீ வள்ளெண்டு பாய நான் பயத்திலை வள்ளை விட்டிட்டு வன் அது இதெண்டு எதோ உளறிப்போட்டன். இப்ப அதுகளைக் குத்திக்காட்டுறதை விடு.

இப்பிடி ஒரு சிக்கலிலை மாட்டுவனெண்டு கனவிலையும் நினைக்கேல்லை. உன்னை ஏமாற்றப் பார்த்தன் பார் எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணுமென்டுகொண்டு தேம்பித் தேம்பி அழத்தொடங்கினன்.

சரி சரி பெண்டுகள் மாதிரி அழுகிறதைவிட்டிட்டு விசயத்தைச் சொல்லுங்கோவன்.

அவள் பாவி ஜெனி போறதுக்கு முந்தி, ஆர் குத்தினது என்று எதுவும் போனிலை சொன்னவளே?

என்ன இது புதுக்கதையாக் கிடக்கு அவள் கடிச்சதென்றெல்லோ சொன்னவள்.

அடிபாவி, குத்தாமல் இப்பிடி கடிச்சுக் குதறி இருக்கிறானெண்டால் அவனொரு ராட்சதனாத்தான் இருக்கவேணும். கடிபட்டுச்சாக வேணுமெண்டு அவளின்ரை தலையிலை எழுதியிருந்தால் ஆராலை என்ன செய்ய இயலும் என்று நான் சோகமாகச் சொல்லவும்.

என்னப்பா விசர் கதை கதைக்கிறியள். அவளெண்டால் நாயை நாய் கடிச்சுப்போட்டுது, அவசரமா மிருக ஆசுப்பத்திரிக்குப் போறன் என்றதைச் சொல்லத்தான் எடுத்ததெண்டாள்.

நாயை நாய் கடிச்சதோ என்ன உளறுறாய் என்றன் பதட்டமாக,

நாயை நாய்கடிச்சா, நாயை நாய் கடிச்சுப்போட்டுது என்றாமல் பேய்கடிச்சுதெனறே சொல்லுறது, அவளின்ரை நாயை பக்கத்துவீட்டு அலிசேசன் கடிச்சுக் குதறிப்போட்டுதாம். எக்கச்சக்கமான காயங்களாம். அது சரி நீங்கள் எங்கைபோய் என்ன சிக்கலிலை மாட்டினியள் என்றதைச் சொல்லுங்கோவன்...... என்று என்னென்னவோ எல்லாம் சொல்லிக்கொண்டு நின்றாள் எனக்கென்றால் அதுக்குப் பிறகு ஒன்றுமே மூளையுக்கை ஏறேல்லை.

ஜெனி வீட்டிலை என்ன நடந்திருக்கும் எனேஅது எல்லாம் காட்சியும் கானமுமாக ஓடத்தொடங்கிச்சுது. நாயை நாய் கடித்து இரத்த்ம்..... சீ இதுக்குப்போய் அந்தப் பயம் பயந்து,
 
செய்த வேலையளை நினைச்சு வெக்கமாவும் போட்டுது.

செல்லம்மாவை எப்படி வழிக்குக் கொண்டு வாறதெண்டு தெரியாமல்.

நீ, என்னை என்ரை ஆசைக்கு ஒன்றையுயும் செய்ய விடாததிலைதானே இப்பிடி இசகுபிசகாச் எதையாவது செய்து வம்பிலை மாட்டுப்படுறன்.

இதை கேட்ட செல்லம்மா ஐசாக உருகி அண்டைக்கு இரவுகூட ஆசையா எதோ சொல்லவந்தியள்........... என்றுகொண்டு ஆசை ஆசையாக் கிட்ட வரமுந்தி, சுடுதண்ணி குடிச்ச நாய்மாதிரிப் பாய்ஞ்சியள் என்று செல்லமாச் சிணுங்கிக்கொண்டு கிட்டவரவும்........

அட இண்டைக்கு ஐயாவின்ரை காட்டிலை மழைதான் என்ற சந்தோசத்திலை,

இனியும் என்னாலை பொறுக்க இயலாது செல்லம். வலு கெதியிலை ஒரு BMW. இறக்கப்போறன் என்றன்.

சீ போங்கோ நீங்களும் உங்கட ஆசையளும், நான் என்னவோ ஏதோ என்று நினைச்சன், என்றாலும் எனக்கும் ஆசையாத்தானப்பா கிடக்கு. சனங்களை நினைச்சால்தான் கொஞ்சம் பயமாக்கிடக்கு.

ஒண்டு செய்வமே? எதுக்கும் எங்கட பழைய காரை விக்காமலுக்கு வீட்டு வாசலிலை நிறுத்திவைப்பம். ஆரும் என்ன புதுக்கார் என்று கேட்டால்,

எங்கட கார் பழுது திருத்த விடவேணும், அதுதான் இது..... வாடகைக்கு எடுத்தது என்று கொஞ்ச நாளைக்குச் சமாளிப்பம்.

என்ரை செல்லம் என்றால் செல்லந்தன், வீட்டு வாசலிலை என்ன அந்த பான்கோவ் (புகையிரதநிலையம்) வாசல்லையே நிக்கட்டும் அந்தச் சனியன்.

நாளைக்கே ஒரு BMW. இறக்கிறனோ இல்லையோ பாரன் என்று பாய்ஞ்சு கழுத்தைக் கட்டி அணைக்கவும்..........

என்னவோ போங்கோ இருபத்திஐந்து வருசமாகியும் எந்த நேரத்திலை என்ன செய்வியள் என்கிறதுமட்டும் புரியாதாம் என்று செல்லம்மா செல்லமாக் காதைக் கடிக்கவும்,

ஐயா, செல்லத்தை அணைத்ததை விட்டிட்டு எட்டி லைற்றை அணைக்க...........

பிறகென்ன, இனி நடக்கிறது எதுவும்தான் உங்களுக்குத் தெரியாதே!

Hi Hi Goodnight!

பொன்.அம்பலத்தார்

ந.பரணீதரன்
அருமை அருமை
எதிர்பர்க்காத முடிவு. வாழ்த்துக்கள்
இன்னும் தாருங்கள்
என் இயந்திரவாழ்விற்கு உங்கள் ஆக்கம் இதமாக இருக்கின்றது.
நன்றி
நட்புடன் பரணீதரன்

 
நளாயினி தாமரைச்செல்வன்.
பயங்கர சிரிப்புத்தான்.ஆனாலும் அந்த வள் தான் நன்றாக சிரிக்க வைத்தது.
பதட்டத்திலை நான், என்ன போன் எடுத்தவளோ?
என்ன கதை மாறுது. இப்ப வள்ளெண்டிறியள். சாயங்காலம் வேற என்னவோ சொன்னமாதிரிக் கிடந்தது. இது அவள்.
அது செல்லம்மா நான் friend கூப்பிட்டவள் என்றுதான் சொல்ல வந்தனான்.
நீ வள்ளெண்டு பாய நான் பயத்திலை வள்ளை விட்டிட்டு வன் அது இதெண்டு எதோ உளறிப்போட்டன். இப்ப அதுகளைக் குத்திக்காட்டுறதை விடு.

சரி சரி குட்நைற்.

நளாயினி தாமரைச்செல்வன்.

13 comments:

angelin said...

கதையில் எதிர்பாராத திருப்பம் மற்றும் முடிவு .ஜெர்மனியில் bahnhoff கிட்ட வண்டியை விட்ட மாதிரி இங்கே விட்டா அவ்ளோதான் பார்ட் பார்ட்டா கழட்டி வித்ருவாங்க ..

நிலாமதி said...

ஹா ஹா ஹா

மாய உலகம் said...

கதையின் முடிவின் மாற்றம் அருமை... வாழ்த்துக்கள் சகோதரரே

ரெவெரி said...

முத்தாய்ப்பு...
ரெவெரி

அம்பலத்தார் said...

Angelin,
இங்கு நாங்கள் பழைய காரை அப்புறப்படுத்துவதற்கும் பணம் கொடுத்துத்தானே அப்புறப்படுத்தவேண்டியுள்ளது.

அம்பலத்தார் said...

Hi,hi nilamma

அம்பலத்தார் said...

ரெவெரி
மாய உலகம்
உற்சாகம் தரும் உங்க பின்னூட்டங்களிற்கு thanks.

Anonymous said...

வணக்கம் அம்பலத்தார், எல்லாம் வரிசையா எழுதிறியள், ஆனா எங்கட வீட்டு கொம்பியுடரில சொல்லாதே யாரும் கேட்டால் .......... 2, மட்டும் வரதாம்.:(
போட்டிரிப்பியள், எண்டாலும் ஒருக்கா எண்ணி பாருங்கோ, வரிசையா வருதோ எண்டு.
எப்பிடியோ உங்களை 1,2,3,4,5, எண்டு எண்ண வைச்சிட்டன் என்ன!
செல்லம்மாவிண்ட விசர்க்கேள்வியலை மன்னிக்கிற மாதிரித்தான் இதையும் வாசித்து......... கோவிக்காதையுங்கோ.

அம்பலத்தார் said...

Anonymous said... //வணக்கம் அம்பலத்தார், எல்லாம் வரிசையா எழுதிறியள், ஆனா எங்கட வீட்டு கொம்பியுடரில சொல்லாதே யாரும் கேட்டால் .......... 2, மட்டும் வரதாம்//
எனக்கு எப்பவுமே இரண்டிலை ஒரு சிக்கல்தான். இந்த இரண்டாவதாலை நான் படுகிறபாடு கொஞ்சநஞ்சமல்ல.

Anonymous said...

ஜெனிக்கு தலையை கோதி விடும் போது மச்சான் வந்திடுவான் சட்டையை பிடிக்க, அக்கம் பக்கம் பார்த்து அம்பலதாரே......

அம்பலத்தார் said...

Anonymous
பெயரிலி கொஞ்சம் விவகாரமான ஆளோ? முதலிலை ""1,2,3,4,5 (கம்பி) எண்ண..." என்றார். இப்ப "மச்சான் வந்திடுவான் சட்டையை பிடிக்க......" என்று சொல்லுறார். போட்டுக்குடுத்திடுவாரோ? எதுக்கும் ஜாக்கிரதையாக இருக்கவேணும்.

Anonymous said...

எனக்கு 2 வராதது சிக்கல் , அம்பலத்தாரே உங்களுக்கு 2 வந்ததால் சிக்கல்......

அம்பலத்தார் said...

//எனக்கு 2 வராதது சிக்கல் , அம்பலத்தாரே உங்களுக்கு 2 வந்ததால் சிக்கல்.....//
சரியாகச் சொன்னியள் பெயரிலி 2 வந்தாலென்ன வராட்டிலென்ன பிரச்சனை வாறது நிச்சயம்.