நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Friday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 4

ஐயோ! இதென்ன கடவுளே நிலமெல்லாம் ஒரே ரத்தம், கட்டிலெல்லாம் தோஞ்சுபோய்கிடக்கு.

எவன் எவளைக் கொண்டானோ, நான் பாவி வசமா வந்து மாட்டுப்பட்டிட்டனே, கடைசியிலை ஒன்றையும் அனுபவிக்காமலுக்கு இப்பிடி அற்ப ஆயுசிலை ஜெயிலுக்கை போய்க் கிடக்கவேணுமே என்று பதறத்தொடங்கினன்.

சும்மா சொல்லக்கூடாது அந்தப் பதட்டத்திலையும் என்ரை மரமண்டை பயங்கரமா வேலை செய்யத் தொடங்கிது.......
உள்மனமெண்டால்,
அம்பலம் கஸ்டகாலத்திலையும் ஒரு நல்லகாலமா நீ உள்ள வந்ததை யாரும் பார்த்ததா தெரியேல்லை, ஆரும் வாறதுக்கிடையிலை இடத்தைக் காலிபண்ணு என்றது. எனக்கும் அதைவிட்டா வேற வழி தெரியாததிலை............
நைசா மாற வெளிக்கிடத்தான் பொலிசுக்காரன் கதவிலை கிடந்து என்ரை கை அடையாளத்தை எடுக்கிறமாதிரியும், பெரிய அலிசேசன் நாயொண்டு மோப்பம் பிடிச்சு என்னைத் துரத்திக்கொண்டு வாறமாதிரியும் இங்கிலீசுப் படங்களிலை வாற சீனுகளெல்லாம் கண்ணுக்குமுன்னாலை ஓடத் தொடங்கிது.............
பதட்டத்திலை எங்கையெல்லாம் தொட்டன் என்றதுகூட ஞாபகத்துக்கு வராதாமே என்றுகொண்டு வாசக்கதவு, கைபிடி, மேசையெண்டு ஞாபகத்துக்கு வந்த வராத இடங்களையெல்லாம் பொக்கற்றுக்கை கிடந்த லேஞ்சியை எடுத்துத் துடைக்கத் தொடங்கினன்...............
சட்டென்று கீழ பார்க்கேக்கைதான் கண்டன், கை அடையாளத்தைத் துடைக்கிறனெண்டு கன்னாபின்னா என்று நடந்து ரத்தத்தையெல்லாம் மிதிச்சு அறைமுழுக்கக் காலடையாளத்தை வைச்சிட்டனென்று..............
இதென்ன இழவாப்போச்சு இப்ப இதை என்ன செய்யிறதெண்டு சட்டென்று சோபாவிலை கிடந்த சின்னத் தலையணையை எடுத்து பக்குவமா நிலத்தைத் துடைக்கத் தொடங்கத்தான்.
அடகருமமே தலையணையை வெறுங்கையாலை எடுத்துப்போட்டனே என்றது ஞாபகத்துக்கு வந்தது..........................
ஒருமாதிரியாக எல்லாத்தையும் முடிச்சு கடைசியிலை தலையணையையும் பக்கத்திலை கிடந்த ஒரு பையுக்கை அடைஞ்சுகொண்டு பக்குவமா வாசக்கதவைச் சாத்திப்போட்டு திரும்பவும் ஒருக்கா கைபிடியையும் லேஞ்சியாலை நல்லாத் துடைச்சுப்போட்டு, பயத்திலை படிக்கட்டு லைற்றைக்கூடப் போடாமலுக்கு இருட்டுக்கை தடவித் தடவி ஒருமாதிரியா வாசலுக்கு வந்து சேர்ந்தன்.
அந்தக் குளிருக்கையும் பயத்திலை வேர்த்ததிலை சட்டையெல்லாம் தெப்பமா நனைஞ்சுபோச்சு.
மனசெண்டாலோ, அம்பலம், பதட்டப்படாதை பதட்டத்திலை கோட்டைவிட்டிடாமல் எல்லாத்தையும் மறைச்சிடு, ஒருதடயத்தைக்கூட விட்டிடாதை என்றபடி.
முதல்லை இந்தச் சனிப்பிடிச்ச பையைத் தொலைச்சாத்தான் நிம்மதி என்று யோசிச்சுக்கொண்டு, சுற்றும் முற்றும் ஆரும் பார்க்கிறானுகளோ என்று நோட்டம்விட்டபடி மெதுவாகக் காரிலை ஏறி ஓடத்தொடங்கினன்.
பையைக் கொழுத்தினாத்தான் நல்லது, 
ஆனால் இப்ப இந்த இரவிலை நெருப்பைக் கண்டிட்டு ஆரும் ஓடியந்திட்டானெண்டால் வம்பாப்போயிடும், அதைவிட ஆத்திலை தூக்கிப்போடுறதுதான் நல்லது என்று முடிவெடுத்தன்.
இந்த நேரத்திலை காரிலைபோய் ஆத்தங்கரையிலை இறங்கிப் பையை ஆத்திலை போடுறதை வேலையில்லாத கிளடுகட்டையள் ஆராவது பார்த்திட்டுச் சந்தேகத்திலை கார் நம்பரை நோட்பண்ணினாலும் எதுக்குச் சிக்கலையென்று காரை ரெயில்வே ஸ்டேசனுக்குப் பக்கத்திலை நிறுத்திப்போட்டு ரெயினிலை ஏறி அடுத்த ஊருக்குப்போய் கனகச்சிதமாக் காரியத்தை முடிச்சுப்போட்டு அப்பாடா என்று கையை வீசிக்கொண்டு காரடிக்கு வந்து, தொலைஞ்சுது சனி, காருக்கை ஏறுவமெண்டு பொக்கற்றுக்கை கையை விட்டால்............
சாவியைக் காணம்.
அப்பத்தான் ஞாபகத்துக்கு வந்தது, பதட்டத்திலை காரைப் பூட்டிச் சாவியை பையுக்கை போட்டது. அட நாசமாப்போக சாவியைப் பூட்டிப் பையுக்கை போட்டு பையைத் தூக்கி ஆற்றிலை போட்டிட்டனே....................
அன்று என்ரை மூளையுமெண்டால், நேற்று வந்த புதுமொடல் கொம்யூட்டர்போல வலுவேகமாத்தான் வேலை செய்தது. வேகமெண்டால் வேகம் அப்படி ஒரு வேகத்தை என்ரை வாழ் நாளிலை ஒருநாளும் காணேல்லை.
சட்டென்று ரெலிபோன்கூட்டைத் தேடிப்பிடிச்சு பூட்டுத் திறக்கிற கொம்பனிக்காரனுக்கு அடிச்சன் போன். அவனும் கூவிக்கொண்டு ஓடியந்து சட்டுப்புட்டென்று கதவைத் திறந்துபோட்டு நீட்டின பில்லுக்குக் காசைக் கொடுத்தனுப்பிப்போட்டு காருக்கை ஏறத்தான் ஞபகத்துக்கு வந்தது.........
கார்க்கதவைத் திறந்தது சரி ஸ்ராட் பண்ணுறதுக்குமெல்லோ சாவி வேணுமெண்டு.......
வேற வழி இல்லாமலுக்கு ஒரு TAXI பிடிச்சன். சாரதி விலாசத்தைக் கேக்கத்தான் முழிபிரண்டுது, அட மாட்டப் போறனே எண்டு, சட்டென்று சுதாகரிச்சுக்கொண்டு என்ரை ஊருக்கு அடுத்த ஊரிலை இருக்கிற தெருவொண்டைச் சொன்னன். அவனும் வடிவாக்கொண்டுபோய் இறக்கிவிட்டடான்.
இனி மெள்ள மெள்ள நடந்து வீட்டுக்குப் போவமெண்டு நடக்கத் தொடங்கினன்...............
கொஞ்சத் தூரம் நடக்கிறதுக்கு இடையிலை இருட்டைக் கிழிச்சுக்கொண்டு எதிர்த்தாப்போல வந்த காருகள் முகத்திலை அடிச்ச வெளிச்சத்தைப் பார்க்கத்தான் யோசனை வந்தது, எதிர்த்தாப்போல போற கார்க்காரன் எவனாவது, இந்தச் சாமத்திலை ஆரவன் கறுவல் ஒருத்தன் தனிய நடந்துபோறான் என்று சந்தேகத்திலை பொலிசுக்கு அறிவச்சுவிட்டானெண்டால் வேற வினையே வேண்டாமென்று....................
சட்டென்று திரும்ப ஊருக்கை நடந்போய் இன்னொரு TAXI பிடிச்சுக்கொண்டு என்ரை வீட்டுக்கு நாலு தெருத் தள்ளிப்போய் இறங்கி கிறுகிறெண்டு நடந்து வீட்டுவாசலுக்குப் போயச் சேர்ந்தன்.
சாவிக்கொத்து இல்லாததிலை அழைப்புமணியை அடிச்சுப்போட்டு நின்றன்.
செல்லம்மாதான் கதவைத் திறந்தாள்.
போன இடத்திலை கொஞ்சம் சுணங்கிப்போச்சுது என்று தொடங்கமுந்தியே.............
பார்ட்டிக்குப் போனமாதிரியே கிடக்கு, முழிக்கிற முழி எதோ திருடன், கொலைகாரன் மாதிரியல்லோ கிடக்கெண்டாள் நக்கலா.
இதென்னடா கஸ்டகாலம் அங்கை ரத்தம் காயுறதுக்கிடையிலையே இஞ்சை விசயம் வெளிச்சுட்டுதோ என்று இன்னும் வேர்த்து ஊத்தத் தொடங்கியது...................
அதுசரி நான் படுகிற பாட்டைப் பார்த்திட்டு உதவிக்கு வாறதை விட்டிட்டு உந்தச் சிரிப்புச் சிரிக்கிற உங்களுக் என்னத்துக்கு மிச்சக் கதையைச் சொல்ல வேணும். நான் மாட்டன் முடிஞ்சா ஊகிச்சுப் பாருங்கோவன்.......................
திட்டிப்போட்டானே அம்பலத்தார் என்று ஒடாமல் இடைக்கிடை வந்து எட்டிப் பாருங்கோ மனசு மாறினால் மிச்சக்கதையையும் சொல்லுறன்.

ஆக்கம்: பொன்.அம்பலத்தார்

போச்சுடா !
அம்பலத்தார் ஜயாவிற்கு செல்லம்மாக்கா நல்லவடிவா கொடுத்திருப்பார். முழி பிதுங்கினதெல்லே.......

அதுசரி என்ன இடையிலை நழுவிறியள். ....ஆசையாய் முடிவை பார்ப்பம் என்றால் இடையிலே ஓடுகின்றீர்கள். ஏன் அடி அதிகமோ
உண்மையில் நகைச்சுவையுடன் கதையை நகர்த்தியதற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தினமும் பல தடவைகள் வாசித்து சிரித்துக்கொள்வேன்.
நட்புடன் பரணீதரன்

23 comments:

காந்தி பனங்கூர் said...

நல்ல கதை, அடுத்த பகுதி எப்போ?

சென்னை பித்தன் said...

அம்பலத்தாரே! முடிவைச் சீக்கிரம் சொல்லுங்கய்யா!

Dr.எம்.கே.முருகானந்தன் said...

உங்களுக்கு "..வேர்த்து ஊத்தத் தொடங்க..." நாங்கள் விசயம் புரியாமல் முழிக்கிறம். என்ன நடந்தது..?

மைந்தன் சிவா said...

என்னது இப்பிடி போட்டு வாங்குறீங்க!!??

Anonymous said...

சீக்கிரம் தொடருங்க...

மாய உலகம் said...

பதட்டத்தை நகைச்சுவை கதையாக சொல்லியவிதம் அருமை நண்பரே...அடுத்த பதிவுக்காக காத்திருப்பு வாழ்த்துக்கள்

Lakshmi said...

நல்லா போயிட்டு இருக்கு அடுத்து என்ன சார்./
சீக்க்ரமா சொல்லுங்க.

அம்பலத்தார் said...

உங்களுக்கு என்ன காந்தி சுலபமாக கேட்டிட்டிங்க. நான்படுகிற அவஸ்த்தை யாருக்குப் புரியும். அடுத்த பகுதியை எந்த ஜெயிலில் இருந்து எழுதப்போறனோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

அம்பலத்தார் said...

சென்னை பித்தன் சார் இப்பபோதான் கதை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதற்குள் முடிவைக் கேட்டால் எப்படி?

அம்பலத்தார் said...

டாக்டர், உங்களிற்குப் பரவாயிலை முழிக்கிறதோட சரி. ஆனால் இங்கு வேறு சிலபேரிற்கு பயத்திலை நெஞ்சு பட்டுப்பட்டென்று அடிக்கிறதுபோல இருக்கு எதற்கும் உங்கள் Steth ஐ தயாராக எடுத்து வைத்திருங்கோ முதலுதவிக்கு வரவேண்டியருக்கும்.

மருதமூரான். said...

அம்பலம் ஐயா....!


கதையில் ஈழத்துத்தமிழ் கொஞ்சி விளையாடுது. கதை கொஞ்சம் நீளமாய் போன மாதிரியும் இருக்கு. தொடர்ந்து எழுதுங்கோ. வாழ்த்துக்கள் அண்ணே!

நிரூபன் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

வணக்கம் ஐயா,
திரிலிங் ஆக நீங்கள் நொந்து போன கதையினை எழுதியிருக்கிறீங்க.
கிரைம் கதை படிப்பது போன்று இருந்தாலும், உங்களின் நகைச்சுவை வசனங்கள் மனதினுள் சிரிப்பை வரவைக்கின்றது.

அம்பலத்தார் said...

சும்மா ஒரு ஜாலிக்குத்தான் சிவா

அம்பலத்தார் said...

என்னத்தைத் தொடருறது. இப்பவே பயத்திலை வெலவெலத்துபோய் இருக்கிறன் ரெவெரி

அம்பலத்தார் said...

மாயா.... என்ரை பதட்டம் உங்களுக்குச் சிரிப்பாக்கிடக்கு ம்.......... காலம் ரொம்பக் கெட்டுப்போச்சுது

அம்பலத்தார் said...

லக்சுமியம்மா, அவசரப்பட்டு விசயத்தைப்போட்டு உடைச்சிடக் கூடாது நிதானமாகத்தான் சொல்லவேணும்

அம்பலத்தார் said...

ஆக்கபூர்வமான கருத்துக்களிற்கு நன்றிகள் மருதமூரான்

அம்பலத்தார் said...

நகைச்சுவை உணர்வு மனிதரிற்குமட்டுமே கிடைத்த கொடை. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்று சொல்வார்கள் நிரூபன்

எஸ் சக்திவேல் said...

நல்ல ஆக்கம். ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள். கொஞ்சம் பந்தி பிரித்து எழுதுங்கோ :-)

அம்பலத்தார் said...

வணக்கம் சக்திவேல் உங்கள்முதல் வரவிற்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி.

Anonymous said...

ஒரு நூல் கிடைச்சாப்போதும், கயிராக்கும் திறமை உங்களைபோலொரு எழுத்தாளனுக்கு மட்டுமே முடியும்

அம்பலத்தார் said...

Anonymous said...

//ஒரு நூல் கிடைச்சாப்போதும், கயிராக்கும் திறமை உங்களைபோலொரு எழுத்தாளனுக்கு மட்டுமே முடியும்//
அட ஆரைச் சொல்லுறியள். உங்கட பின்னூட்டத்தைப் படிச்சு ஜலதோசம் வந்த கதையை இனி ஆரெட்டைச் சொல்லுறதோ தெரியேல்லை. வாழ்த்துக்கு நன்றி.