நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Monday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 2



வளுமோ விடாமல் உங்கட ஆசையளுக்குக் குறுக்காலை நான் எப்பவாவதுநின்றிருக்கிறனே என்று கொஞ்சலாகக் கிசுகிசுத்தாள். இதுபோதுமே பிறகென்ன ஐயா வழமைபோல.........................  அதுக்கடையிலை ரெலிபோன் வேற கிணுகிணுக்கத் தொடங்கிச்சுது.ஆரடா இது சிவபூசையுக்கை கரடி பூந்த மாதிரி ஏமசாமத்திலை என்று எரிச்சலாப் போனை எடுத்தால்.

Raskut speaking என்று பந்தாவாகவும் அதட்டலாகவும் தொலைபேசி உறுமியது.
குரலைக் கேட்ட உடனையே இந்த நேரங் கெட்ட நேரத்திலை ராசுக்குட்டியன் எடுக்கிறான் எண்டால் எதுவும் விவகாரமான விசயமாத்தான் இருக்குமெண்ட நினைப்பிலை எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு பேச்சே வரேல்லை. ரெலிபோனெண்டால்
ஓய் அம்பலம். அம்பலத்தார் என்ன பேச்சு மூச்சையே காணேல்லை என்று கரகரக்குது.
ஒருமாதிரியாச் சமாளிச்சுக்கொண்டு
என்ன ராசுக்குட்டியர் என்னவும் விசேசமே இந்த நேரத்திலை..............என்று முடிக்க முந்தியே
நீர் செய்யுறது உமக்கே நல்லா இருக்குதே கத்தவும்
நான் பயத்திலை சொல்ல வேணுமெண்டுதான் நினைச்சனான் பாரும், செல்லம்மாதான் அவசரப்பட்டு ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாமெண்டு............ என்று உளறத் தொடங்கவும்.
என்ன விசயத்தை போட்டு உடைக்கிறதெண்டு முடிவு எடுத்திட்டியளே என்று செல்லம்மா காதுக்கை சிடுசிடுக்கத்தாள்.
இதுகளையெல்லாம் கவனிக்காமல் அவனெண்டால் அங்கால
மனசில பாலகுமாரன், சுஜாதா என்ற நினைப்புப்போல....... என்று பொரிஞ்சு தள்ளினான்.
என்னடா இது ஒண்டுமாப் புரியேல்லை என்று நைசா விசயத்தை அவனிட்டையே கேட்டால்
எழுதுறதெண்டால் ஒழுங்கா எழுத வேணும். அவன் எழுதுறான் இவன் எழுதுறான் விட்டனோ பார் என்று கன்னாபின்னா என்று எழுதும் பிறகு முடிக்கத்தெரியாமல் கதையைப் பாதியிலை அம்போ என்று விட்டிடும் சனம் சிரிக்குது.
உப்பிடித்தான் வாணிவிழா மேடையிலை அம்பலத்தார் அது இது எண்டு ஒரு கதைவிட்டீர் பிறகென்னடா என்றால் கப்சிப் மிச்சக் கதையைக் காணம்.
அட உதே விசயம் நான் என்னவோ ஏதோ எண்டு பயந்தெல்லே போனன். அது வந்து............ அந்த விசயத்தைச் சொன்னனெண்டால் கன சிக்கல் பாரும் பிறகு நான் வீட்டிலை இருந்தபாடில்லை அதுதான்...........
என்ன கண்டறியாத சிக்கலோ?.
அதிலை என்னத்துக்குக் காணும் என்னையும் இழுத்தனீர்? சனங்களும் எத்தனை நாளைக்குத்தான் பொறுக்குங்கள் சலிச்சுப்போய் கடைசியிலை
என்ன ராசுக்குட்டியர் அம்பலத்தார் சொல்லுற மாதிரித் தெரியேல்லை. நீரெண்டாலும் மிச்சக்கதையைச் சொல்லுமன் அண்டைக்கு வாணிவிழா மேடையிலை நிண்டது ஆரப்பா? என்று கண்டவன் நிண்டவனெல்லாம் கேக்கத் தொடங்கிவிட்டாங்கள் தெருவிலை தலைகாட்டமுடியேல்லை.
இனிமேல் எதாவது கதை அது இதெண்டு என்ரை பேரை இழும் பிறகு தெரியும் ராசுக்குட்டியன் ஆரெண்டு என்று வெடிச்சுத் தள்ளிப்போட்டு டொக்கெண்டு போனை வச்சிட்டான்.
இந்தக் கதையளோட வந்த ஆசையெல்லாம் பொசுக்கெண்டு அடங்கிப்போய் இழுத்து மூடிக்கொண்டு பேசாமல் படுத்தால், அடுத்தபக்கத்தாலை
என்னப்பா அதுக்குள்ள படுத்திட்டியளே? செல்லம் செல்லம் என்று ஆசையா எதோ சொல்ல வந்தியள்..............என்றவும்
ஆசையோ மனுசன் படுற பாட்டுக்கை இப்ப அது ஒன்றுதான் குறைச்சல் என்று எரிஞ்சு விழுந்தன்.
அவளுமோ விடாமல் உங்கட ஆசையளுக்குக் குறுக்காலை நான் எப்பவாவது நின்றிருக்கிறனே என்று கொஞ்சலாகக் கிசுகிசுத்தாள்.
இதுபோதுமே பிறகென்ன ஐயா வழமைபோல வழியத் தொடங்கினன்...................
எனக்குத் தெரியும் இந்தமாதிரி விசயங்களைப் பார்த்தால் கனபேருக்குப் பொறுக்காது வயித்தெரிச்சல் தொடங்கிவிடும் என்று, ஆனாலும் அவையளோட எல்லாம் மல்லுப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறதுக்கு இப்ப எனக்கு நேரமும் இல்லை பொறுமையும் இல்லை. பிறகு வந்து கவனிச்சுக்கொள்ளுறன். 

அம்பலத்தார்

7 comments:

கவி அழகன் said...

ஐயா அம்பலத்தார் முதல் முதல் வாறன் உங்க வீட்டு பக்கம்
சுக நலன்கள் எப்படி

நல்லா கதைக்கிறியள் கோதாரி விழுந்த தொலை பேசியால ஒரே தொல்லை பேச்சு தான்

இது தான் என்டா வீட்டு விலாசம் நேரம் கிடச்சா வாங்கோ

http://kavikilavan.blogspot.com

அம்பலத்தார் said...

உங்கவீட்டுப்பக்கம் வந்திருந்தேனே ரொம்ப ஜோராக இருக்கு

shanmugavel said...

vaalththukkal.

அம்பலத்தார் said...

வாழ்த்திற்கு நன்றி

Anonymous said...

உங்கட புண்ணியத்தில ஒண்டு ரண்டு ஜேர்மன் சொல்லும் படிக்கிறம், தொடர்ந்து எழுதுங்கோ....

பராசக்தி said...

அண்டைக்கு வாணி விழாவிலே என்ன நடந்ததென்று - உங்கள் உளறல் - நேரில் வராத எங்கட சனங்களுக்காக திரும்பவும் உளறலாமே, அல்லது ஒலி ஒளி பதிவேனும் கிடைக்குமா?

அம்பலத்தார் said...

பராசக்தி said...
//அண்டைக்கு வாணி விழாவிலே என்ன நடந்ததென்று - உங்கள் உளறல் - நேரில் வராத எங்கட சனங்களுக்காக திரும்பவும் உளறலாமே, அல்லது ஒலி ஒளி பதிவேனும் கிடைக்குமா?//

வாணி விழாவிலை..........
வாணிவிழாவிலை .... என்ன நடந்ததென்றால்............
அதுதானே எனக்கும் மறந்துபோட்டுது.
அம்மாதாயே பராசக்தி இயற்கையிலை நான் கொஞ்சம் சோம்பேறி. பழைய வீடியோ கசற்றுகளை தேடி எடுத்து you tube இல் இணைத்து... இந்த ஜென்மத்திலையோ இல்லை அடுத்த ஜென்மத்திலையோ......... முயற்சிபண்ணுறன்