நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்
வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்
Wednesday
Tuesday
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 3
Saturday
பழிக்குப் பழி கொலைக்குக் கொலை
ஒரு ராஜீவ்காந்தியைக் கொன்றதற்கு மூவரிற்கு மரணதண்டனையென்றால்
பல ஆயிரம் அப்பாவிப் பொதுமக்களைக் கொல்ல அனுமதிகொடுத்த ராஜீவ்காந்திக்கு ஒரு மரணதண்டனை கொஞ்சம் கம்மிதான்.
சரி அவர்தான் ஏற்கெனவே போய்விட்டார் விட்டுவிடுவம்.
அந்த அழகிய பிறந்ததினப் பரிசுகள்!
எங்கள் மகள் சௌம்யாவையும்,சாராவையும் கூட்டிக்கொண்டு பாலர் பாடசாலை போகிற நாட்களிலெல்லாம் பிஞ்சு விரலைப் பிடித்து மண்ணில் 'அ ' எழுதிய காலங்கள் என் மனத்தில் மின்னி மின்னி மறையும். அதைப் பிள்ளைகளுக்குச் சொன்னால் "அப்ப நீங்கள் படித்த Kinder garden ல் 5,6 விளையாட்டுச்சாமான் கூட இல்லையா" என்று பிள்ளைகள் அனுதாபத்துடன் என்னை ஒரு பார்வை! பிறகு அண்ணணும் தங்கையுமாக ஏதோ குசுகுசுப்பு!
Wednesday
Monday
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 2
அவளுமோ விடாமல் உங்கட ஆசையளுக்குக் குறுக்காலை நான் எப்பவாவதுநின்றிருக்கிறனே என்று கொஞ்சலாகக் கிசுகிசுத்தாள். இதுபோதுமே பிறகென்ன ஐயா வழமைபோல......................... அதுக்கடையிலை ரெலிபோன் வேற கிணுகிணுக்கத் தொடங்கிச்சுது.ஆரடா இது சிவபூசையுக்கை கரடி பூந்த மாதிரி ஏமசாமத்திலை என்று எரிச்சலாப் போனை எடுத்தால்.
Friday
Mc Donalds & Dunkin coffeeshop
இன்றைய அவசர உலகில் உயிர்வாழத்தேவையான உணவைக்கூட ஆற அமர இருந்து சமைத்துச் சாப்பிட நேரம் ஒதுக்க எம்மிடம் போதிய நேரமில்லை. இதனால்தானே Mc Donalds, PIZZA HUT, Burger king, Kentuky chicken, Dunkin coffee shop உலகெங்கும் கொடிகட்டிப் பறக்கின்றன.
துரித உணவென்றாலே குழந்தைகள்முதல் அனைவருக்கும் ஞாபகத்திற்குவருவது Mc Donalds.
துரித உணவக உலகில் அதிக விற்பனைநிலையங்களுடன் முன்னணியில் நிற்பதும் Mc Donalds என்றுதானே நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உலகிலேயே மிக அதிக கிளைகளைக்கொண்ட
துரித உணவகம் Dunkin coffee shop என்று சொன்னால் நம்பமுடியவில்லையா? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். புள்ளிவிபரங்கள் அப்படித்தான்
தெரிவிக்கின்றன. Mc Donalds என்று
சொல்லும்போதுதான் இந்தச் சுவாரசியமான விடயகும் ஞாபகத்திற்கு வருகிறது.
நானும் தொழில்ரீதியாக அடிக்கடி பிரயாணங்கள் செய்யவேண்டியிருப்பதால் அவ்வப்போது துரித உணவகங்களே எனக்குத் தஞ்சம்.
ஜேர்மனியில் எந்த ஒரு Mc Donalds இற்குச்சென்றாலும் பெரும்பாலும் ஒரு ஈழத்தமிழராவது வேலை செய்வார்.
சிறிதுகாலத்திற்குமுன் அலைந்த அலுப்புடன் ஒரு Mc Donalds இற்குள் புகுந்தன். உணவை வாங்கலாமென்று போய் நின்றால் அரை கிரவுண்ட் நிலமளவிற்கு தலையில் பெரிய வெளியா மொட்டந் தலையோட........ அட நம்மவயசுதான்போல மூக்கும் முழியும் அந்த பால்கோப்பி நிறமும் நிச்சயமாக நம்மநாட்டுக்காரர்தான். சட்டென்று வணக்கம் அண்ணா 2 Burger ம் ஒரு கோலாவும் என்று தமிழிலை சொன்னன். அவர் புரியாதமாதிரி உங்களிற்கு என்ன வேண்டும் என ஜேர்மன் மொழியில் கேட்டார். சட்டென மார்பிலுள்ள பெயர்ப் பட்டியைப் பார்த்தன் திரு.சுப்பிரமணியம் என்றிருந்தது. கேட்கவில்லைப்போல என நினத்துக்கொண்டு மீண்டும் தமிழிலே விருப்பத்தைக் கூறினேன். அவரோ திரும்பவும் ஜேர்மன் மொழியில் என்ன வேண்டும் எனக்கேட்டார். சுதாகரித்துக்கொண்டு ஜேர்மன்மொழியிலேயே உரையாடி வாங்கிக்கொண்டுபோய் இருக்கையில் அமர்ந்தால் திரு.சுப்பிரமணியம் அந்தப்பக்கமாக மறைவாக நின்று வேலைசெய்துகொண்டிருந்த சக தொழிலாழியுடன் நல்ல யாழ்ப்பாணத்தமிழில் உரையாடிக்கொண்டிருந்தார். இப்படியான ஆட்கள் இருக்கும்போது எப்படி தமிழ் இனி மெல்லச் சாகும் என்று சொல்லுவது. தமிழ் இனி விரைவாகவல்லோ சாகும்.
இப்படித்தான் மற்றுமொரு தடவை இன்னுகொரு Mc Donald இல் பார்க்கிறதற்கு நல்ல அம்சமாக இளவயசும் துரு துரு கண்களும் கலரும் மூக்குமின்னியும் நிச்சயமாக பிள்ளை நம்ம நாடுதான். மார்புப்பகுதியை நோட்டம்விட்டால் பெயர்ப்பட்டியில் சிந்து ஷன்முகம் அட நம்மாள்தான் என்று தமிழிலை கதைத்தால் இங்கேயும் மீண்டும் அதே பல்லவி. நொந்துபோய் தேவையானதை வாங்கிக்கொண்டு தங்கச்சி நானும் இந்த நாட்டிலை சொந்தமாக ஒரு தொழில் நிறுவனம் வைத்திருக்கிறன். என்ரை நிறுவனத்திற்குத் தப்பித்தவறி தமிழ்வாடிக்கையாளர் யாராவது வந்தால் அவர்களுடன் தமிழிலைதான் உரையாடுகிறனான் என்று ஜேர்மன் மொழியில் சொல்லிப்போட்டு நடந்தன்.
இரண்டு ஜேர்மன்காரன் , இரண்டு ஜப்பான்காரன் அல்லது 2 சீனாக்காரன் சந்திக்கும்போது தங்கள் தாய்மொழியிலைதானே கதைக்கிறார்கள் எமக்குமட்டும் ஏன் இந்தக் கூச்சம் தாழ்வுமன்ப்பான்மை.
இன்னுமொருவிடயம் அமெரிக்காவின் கடனைத் திருப்பிக் கொடுப்பது சம்பந்தமான நம்பகத்தன்மை குறைத்து மதிப்பிடப்பட்டதன்பின் அமெரிக்கப் பங்குச்சந்தை மட்டுமன்றி ஐரோப்பியப் பங்குச் சந்தையும் ஆட்டம் கண்டது. இதைத் தடுத்துநிறுத்த ஜெர்மன் அதிபரும் பிரன்சு அதிபரும் கூடிப்பேசி எதோபெரிய முடிவு எடுக்கப்போவதாக பில்டப் கொடுத்தாங்கள் கடைசியிலை அவர்களின் கூட்டறிக்கையில் பெரிதாக ஒன்றையும்காணன். தங்கம் ராக்கெட் வேகத்தில் விலை ஏறிக்கொண்டிருக்கிறது. தங்கத்தில் முதலிட்டிருந்தவர்களிற்கு வெள்ளிதிசைதான் இதுவரை தங்கத்தை நம்பாதவை கண்டதிலும் முதலிட்டு மோசம்போகாதையுங்கோ. இப்பகூட உபரிப்பணத்தை தங்கத்தில் முதலிடுங்கோ, அல்லது நல்ல மலிவாகக்கிடைத்தால் நிலத்தில் அல்லது கட்டிடத்தில் முதலிடுங்கோ போட்டமுதலுக்கு மோசம்வராது.
கிரீஸ் மனிதரின்ரை பிரச்சனையாலை தாயகத்திலை சனங்கள் இசகு பிசகாக மாட்டித் தரும அடிகிடைக்குமோ என்ற பயத்தில் ஒரு அவசரத்திற்குக்கூட தெரியாத இடத்திற்குப் போகப் பயப்படுகிறார்கள். சீனா இந்தியா அமெரிக்கா ஐரோப்பா என ஒருவருக்கும் பிடிகொடித்து மாட்டுப்படாமல் வழுகிக்கொண்டு திரிகிற ராஜபகச குடும்பம்தான் கிறீசிலையே ஊறினவர்கள் தெரியுமோ?
ரொம்பவும்தான் அறுத்திட்டனோ நொந்து நூலாகிப்போனியளோ? தப்பினால்காணும் என்று ஓட்டம்பிடிக்காதையுங்கோ. இத்துடன் இன்றைக்கு முடிட்துக்கொள்கிறேன் மீண்டும் நாளை சந்திப்போம்
Wednesday
Monday
சொல்லாதே யாரும் கேட்டால் ..........
விழுந்திடிச்சு! விழுந்திடிச்சு!
செல்லம் ஏ! செல்லம்மா தண்டத்துக்கு வெட்டாதையுங்கோ! விழாது விழாது எண்டு கரிச்சுக் கொட்டினாய் இஞ்சை பார் ஐயாவுக்குப் பம்பரே விழுந்திட்டுது.
உங்கட புளுகு தெரியாதாக்கும் 10 ருபாக்கு வெட்டி 5 ருபா விழுந்தாலே ஊரைக் கூட்டுறனிங்கள்; இண்டைக்குப் 10க்கு வெட்டி 20 விழுந்திட்டுதாக்கும்.
Saturday
இந்த ஊருக்கு வயது 800 ஆண்டுகளிற்குமேலே.

வரலாற்றுச்சான்றுகள் இந்த ஊர் Idstein 1102 ம் ஆண்டில் தோற்றம்பெற்றதாக்க தெரிவிக்கின்றன. நகரின் பெரும்பாலான கட்டிடங்களும் புராதனச்சின்னங்களாக ஜேர்மனிய அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் இக்கட்டிடங்களை பேணிப்பாதுகாத்துப் பராமரிக்கமுடியாத உரிமையாளருக்கு அவறைப் பராமரிப்பதற்கு அரசாங்கம் பொருளாதார உதவி செய்கிறது.
நம்ம நாடுகளில் புராதன கட்டிடங்களில் இருந்து கதவுகள்,வேலைப்பாடுமிக்க தூண்கள், சிற்பங்கள் என எவை எவற்றையெல்லாம் பெயர்த்து எந்த நாட்டிற்குத் திருட்டுத்தனமாக எற்றுமதிசெய்து கொள்ளை லாபம் அடிக்கலாம் என்பதிலேயே பலரும் கண்ணாயிருக்கிறார்கள்.
Idstein இல் உள்ள மிகவும் புராதனக் கட்டிடமாக 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கண்காணிப்புக் கோபுரம் காணப்படுகிறது. இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை 1400 முதல் 1700ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவையாக இருக்கின்றன. இந்த ஊரிலேயே நான் பார்த்ததில் மிகவும் பழைய வீடு 1449 இல் கட்டப்பட்டது.
இந்த வீடுகள் ஒவ்வொன்றும் தமக்குள்ளே எத்தனை எத்தனை கதைகளையும் வரலாறுகளையும் கொண்டிருக்குமோ? இவற்றில் குடியிருந்தவர்கள் ஒல்லியோ குண்டோ, அழகோ, ஆண்டபரம்பரை வந்தவரோ, அடிமையோ,அந்நியதேசத்தை அடிமைகொள்ளச் சென்றவரோ, இங்கு ஆடவரும் பெண்டிரும் எப்படியெல்லாம் கொஞ்சிக்குலாவி மகிழ்ந்திருப்பரோ. இந்தவீடுகள் பேசினால் எத்தனை எத்தனை கதைகள் சொல்லியிருக்கும்.
ஊரின் அழகையும் கம்பீரத்தையும் கெடுக்கும்விதமாக இந்த இடத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாமல் தெருவோரம் தரித்திருக்கும் வாகனங்கள் எரிச்சல் தருகின்றன.
ஓ ரொம்பவும்தான் அறுத்திட்டனோ? கோவித்துக்கொள்ளாமல் பார்த்து ரசியுங்கோ.
Thursday
கொம்பியூட்டர் விற்பனைக்கு
ஆனாலும் நாலு பேருக்கெண்டாலும் சொல்லாட்டில் தலையே வெடிச்சிடும் போலக்கிடக்கு அதுதான் சொல்லவாறன்.
என்ரை அவகொஞ்ச நாளா ‘இஞ்சாருங்கோ
என்ரை அவகொஞ்ச நாளா ‘இஞ்சாருங்கோ
எங்களுக்கு முந்தி வந்ததுகளெல்லாம்
சொந்தவீடு, சிட்டிசன்சிப் எண்டு ஒரு பந்தாவோட இருக்குதுகள். முந்தநாள் வந்ததுகள்கூட இன்ரநெற், ஈமெயில் எண்டு பீத்திக்கொண்டு திரியுதுகள். ஒரு சபை சந்திக்குப்போனால் எனக்குச் சொல்லுறதுக்கு ஒரு விசயம்கூட இல்லாமல் வெக்கமாக்கிடக்கப்பா, இப்படியே போனால் ஒரு சனமும் எங்களை மதியாதுகள்.
Saturday
ஒட்டகத்தைத் தேடி
நேரம் 15.20
பஸ் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.
15.30 மணிக்குச் சந்திக்கிறன் என்றனான்.
எப்படியாவது நேரத்திற்குப் போய்ச் சேரவேணுமென்றால்,
ஒவ்வொரு சந்தியிலையும் சிவப்பில நாலுதரம் நின்று சொதப்புது.
குட்டிபோட்ட பூனைபோல நான் படுகிற அந்தரம் புரியாமல் பஸ்
ஆறித்தேறிப்போய் நின்றதும் நிற்காததுமாகப்
பாய்ந்து குதித்து இறங்கியபடி நேரத்தைப் பார்த்தன்.
Friday
எகிப்திற்குத்தான் போகமுடியவில்லை இதையாவது பார்த்து ரசிப்போமே.
நான் பார்த்த இந்த இடதைப்பற்றி
இந்தப் புராதன மேசை கதிரையில் உட்கார்ந்து
இப்படியான ஒரு புராதன தட்டச்சு இயந்திரத்தில் எழுதிப் பிரசுரித்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை தோன்றியது ஆனால் நிறைவேற்றத்தான் முடியவில்லை.
ஐரோப்பிய கூட்டமைப்பிலுள்ளா நாடுகள் ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்ட வருவாய்க்கான மூலாதாரங்களையும் தந்திரோபாயங்களையும் கொண்டிருக்கின்றன. இந்தவகையில் ஸ்பெயின் நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரமாக உல்லாசப்பயணத்துறை விளங்குகிறது. சும்மா சொல்லக்கூடாது ஸ்பெயின் சுற்றுலாப் பயணிகளை கவரும்விதமாக கவர என்னவெல்லாம் செய்து வைத்திருக்கிறதென நேரில் சென்று பார்த்தால்தான் புரியும்.
இந்த இரண்டுதுண்டுக் கல்லுகளுக்குத்தான் இந்தப்பெரிய எடுப்பெல்லாம்
ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம்
ஒட்டகம் புகுந்த வீடு 2
பகலெல்லாம் நல்ல வெயிலடிச்சு மரங்களெல்லாம் வாடிப்போய்கிடக்கிறதே என்று
முற்றத்தில நின்ற மரங்களுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு நின்றன்.
எதிர்வீட்டு முற்றத்திலையும் நடமாட்டம் தெரிந்ததும் நேற்றுப்பட்ட அவஸ்த்தை ஞாபகத்திற்குவர
கொஞ்சம் சுதாகரித்துக்கொணடு கண்டும் காணாததுபோல மற்றப்பக்கமாகத் திரும்பித் தண்ணீர் ஊற்றுவதில் தீவிரமானன்.
சில நொடி தாண்டியிருக்காது.
அண்ணை! அண்ணை!
Wednesday
இவர்களின் கதை சுவாரசியமானது 2
நிச்சயமாக ஒரு சில மணித்துளிகள் உங்களுடன் இணைந்து
இருப்பது எனக்கும் சந்தோசமே என்று நான் கூறியதும்

1982 ஆம் ஆண்டு இதே மட்ரிட் விமானநிலையத்தில் முதன்முதலாக வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகியதுதான் எனது இந்த அகதி வாழ்க்கை என்று கூறவும்.
அப்படியாயின் எங்கள் வாழ்வைப் புரிந்துகொள்வது உங்களிற்கு இலகுவாக இருக்கும்.
எண்பதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில்தான் ஐரோப்பாவில் போதைப்பொருட்களின் பாவனை உச்சத்தில் இருந்த்து. அந்த நாட்களில் ஐரோப்பாவில் வாழ்ந்த இளைஞர் யுவதிகளில் 60% வீதத்திற்குமேற்பட்டவ்ர்கள் ஒருமுறையேனும் போதைப்பொருட்களைப் பாவித்திருக்கிறார்கள் எனப் புள்ளிவிபரமொன்று தெரிவிக்கிறது.
இப்பொழுது இருக்கும் தோற்றத்திற்கு
முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் பின் இரவு நேரங்களில் காணப்படும்.
ஆமாம் நானும் அதைப் பார்த்திருக்கிறேன். விபச்சாரம் கொடிகட்டிப் பறப்பதையும் மதுபோதை நிறைந்த மக்கள்வெள்ளத்தையும் போதைப்பொருட்களில் தன்னிலை மறந்திருக்கும் மக்களையும் கண்டுவியந்திருக்கிறேன் என்று கூறவும்
நன்றாக அவதானித்திருக்கிறீர்கள்.
ஆமாம் நானும் அதைப் பார்த்திருக்கிறேன். விபச்சாரம் கொடிகட்டிப் பறப்பதையும் மதுபோதை நிறைந்த மக்கள்வெள்ளத்தையும் போதைப்பொருட்களில் தன்னிலை மறந்திருக்கும் மக்களையும் கண்டுவியந்திருக்கிறேன் என்று கூறவும்
நன்றாக அவதானித்திருக்கிறீர்கள்.
80 களில் இதைவிட மிக இலகுவாகவும்
மலிவாகவும் போதைப்பொருட்கள்
கிடைக்கும்.
இளைஞராக இருந்த எமக்கு குணா என்றொரு உங்கள் நாட்டவரின் நட்புக்கிடைத்தது. சில நாட்களில் அவர் போதைப்பொருட்களை மொத்தமாக விற்பனை செய்பவர் என்பது தெரியவர அவரிடமிருந்து அதை வாங்கி பாவனையாளரிற்கு விற்கத்தொடங்கினோம்.

இடையில் புகுந்து நானும் .ஆம் அன்றைய நாட்களில் நம்மவர் பாகிஸ்தானிலிருந்து இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளூடாகப் பெருமளவில் போதைப்பொருட்களை ஐரோப்பாவிற்குக் கடத்தியதை நானும் அறிந்திருக்கிறேன் என்றேன்.
பார்த்தீர்களா உங்களவர்களைப்பற்றி நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறீர்கள் என்ற மற்றவர் தொடர்ந்து,
நாளடைவில் எமக்குக் கீழ் ஒரு பெரிய குழுவே வேலை செய்தது. பணத்தில் மிதந்தோம் தினத்திற்கொரு அழகிய பெண்களுடன் நட்சத்திரவிடுதிகளில் உல்லாசம். புத்தம்புதுக் கார்கள் அடியாட்கள் என ஒரு சினிமாப்படம்போல எமது வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது.
இதே இந்தச் சந்தடிமிக்க தெருவில் போட்டிக்குழுக்களுடன் மோதிக்கொண்டதற்கு ஆதாரமாக இன்னமும் இருக்கும் இந்தத் தழும்புகளைப் பாருங்கள் என மற்றவர் தனது உடம்பிலிருந்தபல வெட்டுக்காயத் தழும்புகளக் காட்டினார்.
நாளடைவில் .....
இவர்களின்கதை தொடரும்...............
Tuesday
ஒட்டகம் புகுந்த வீடு 1
இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் அவர்தம் குணாம்சங்கள் கொண்டமாந்தரும்,
கருப்பொருட்களும் என்னகத்தும் என்னைச் சுற்றிலும்மட்டுமன்றி
உங்கள் ஒவ்வொருவரது எதிர்வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் இருக்கும்......
ஏன் உங்கள் வீடுகளிலும் காணப்படக்கூடிய சாதாரணமானவர்களாகவும;,
சந்திக்கும் சங்கதிகள் யாவும் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விடயங்களாகவுமே இருப்பதனால்!
இது என்ரை கதை மட்டுமல்ல ஒவ்வொரு மானிடரதும் கதையே!
உங்கள் ஒவ்வொருவரது எதிர்வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் இருக்கும்......
ஏன் உங்கள் வீடுகளிலும் காணப்படக்கூடிய சாதாரணமானவர்களாகவும;,
சந்திக்கும் சங்கதிகள் யாவும் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விடயங்களாகவுமே இருப்பதனால்!
இது என்ரை கதை மட்டுமல்ல ஒவ்வொரு மானிடரதும் கதையே!
இது ஜேர்மனியிலிருந்து வெளிவரும் தமிழ்நாதம் சஞ்சிகைக்காக சிலகாலங்களிற்குமுன் எழுதிய தொடர் படித்துப்பாருங்களேன் ...............
Subscribe to:
Posts (Atom)