நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

தயவுசெய்து உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

எனக்கு நன்கு பரிச்சயமான உயர்வகுப்பு படிக்கும் ஒரு பையன் சொன்னார்.
" மாமா எனது முழுப்பெயரை google தேடுபொறியில் கொடுத்து தேடியபோது எத்தனையோ மனுக்களில் எனது விபரங்க
ள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எத்தனை விடயங்கள் எனது பெயரால் பகிரப்பட்டிருக்கிறது எனக் காட்டுகிறது. நான் படிப்பை முடித்துக்கொண்டு வேலை தேடும்போது தொழில் வழங்கமுன்வருபவர் எனது விபரங்களை google இல் தேடினால் முடிவு எப்படி இருக்கும்" என்று வேதனையாக கூறியது எனது மனதை குடைந்துகொண்டிருந்தது. 

அதன்விளைவே இந்த விடயத்தை எழுதத்தூண்டியது 

முகப்புத்தகத்தில் பலர் தங்கள் குழந்தைகளின் பெயர்களில் கணக்கை ஆராம்பித்து, அதில் தமது கருத்துக்களையும் எண்ணங்களையும் பகிர்ந்துவருகிறார்கள்.

எனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள் வட்டத்திலேயே பிள்ளைகளின் பெயரில் முகப்புத்தகத்தில் நடமாடுபவர்கள் 25 இற்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

உங்களுக்கு உங்கள் சொந்தப்பெயரில் முகப்புத்தகத்தில் இயங்குவதில் தயக்கம் இருந்தால் எதாவது ஒரு புனைபெயரில் இயங்குங்கள் அல்லது இயங்காமல் இருங்கள். தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் பெயர்களில் நடமாடாதீர்கள்.

முகப்புத்தகத்திலோ இணையத்திலோ எழுதப்படும் ஒவ்வொரு சொல்லும் எங்கெல்லாம் சேமித்துவைக்கப்படுகிறது என்பது தெரியுமா? தனிமனித தகவல் பாதுகாப்பு என்று ஒன்று இருக்கிறதே அதுவாவது தெரியுமா? நீங்கள் எழுதும் ஒவ்வொரு வரியினதும் பலாபலன்கள் நன்மை தீமைகள் எல்லாம் உங்கள் குழந்தைகளுக்கே சென்றடைகிறது என்பது புரியவில்லையா? உங்கள் குழந்தைகளை அதன் பாதிப்புக்களை எதிர்கொள்ளவேண்டியவர்களாக உண்டுபண்ணுகிறீர்கள் என்பது புரியவில்லையா? தயவுசெய்து உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.


4 comments:

Yaathoramani.blogspot.com said...

சரியான எச்சரிக்கை
பயனுள்ள அருமையான பதிவுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

முத்தரசு said...

ம்

சரியா ெசான்னீர்கள்

முற்றும் அறிந்த அதிரா said...

உண்மைதான்... இப்போ என்ன தேவையெனினும் கூகிளைத்தானே நாடீனம்...

தெம்மாங்குப் பாட்டு....!! said...

தேவையானக் கருத்து...