1971 மார்ச் மாதம். தெலுந்தனியாவில் உள்ள மறைவிடம் ஒன்று.
தோழர்களே நான் தலைவர் றோகணவை சந்திக்க அம்பாந்தோட்டை செல்கிறேன். நான் வரும்வரை தோழர் சகோதரி பிரேமாவதி இந்த முகாமிற்கு பொறுப்பாக இருப்பார் அவர் கூறும் கட்டளைகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டு செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கிளர்ச்சிக்குரிய நாள் குறிக்கப்பட்டுவிட்டது. உங்களால் முடிந்தவரை அதிகளவான வெடிபொருட்களை தயார் செய்யுங்கள். மேலதிக விபரங்களை பிரேமாவதியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
தலைவர் வாழ்க சேயின் பாதையில் புரட்சி ஓங்குக.
அண்ணன் போட்டார்தானே என்று ஜாலியாக இருக்காமல் வேலைகளை தொடங்குவம்.
பெரேராவின் லேத் பட்டறைக்கு போதுமான அளவு 5 அங்குல விட்டமுள்ள இரும்புக்குழாய்கள் அனுப்பப்பட்டுள்ளது. சரத் நீங்கள் அங்கு சென்று அதில் ஒரு அடி நீளமுள்ள வெடிகுண்டிற்கான கோதுகளை தயார் செய்யுங்கள். ஞாபகம் இருக்கட்டும் நீங்கள் சென்றதடவை செய்த கோதுகளில் தயாரித்த குண்டுகளில் 3 பரீட்சித்து பார்க்கப்பட்டது குழாயில் ஒட்டிய மூடித்தகடுகள் சரியாக ஒட்டப்படாததால் வெடிக்கும்போது அதிக அமுக்கம் கிடைக்காமல் சேதம் குறைவாகவே இருந்தது. ஒட்டும்போது அதிக கவனம் எடுத்து ஒட்டுங்கள்.
இல்லை பிரேமா அக்கா நான் வடிவாத்தான் ஒட்டினனான்.
காரணங்கள் சொல்லுறதைவிட்டிட்டு இனிமேல் அக்கறையெடுத்து வேலையை கவனியுங்கோ. ஹேரத் நீக்கள் பின் அறையில் இருக்கும் கோதுகளுள் வழமைபோல இரும்புத்துண்டுகள், கண்ணாடித்துண்டுகள் வெடிமருந்து ஆகியவறை கலந்து நிரப்புங்கள். தேவையான டெட்டினேற்றர்குச்சிகள் இல்லாவிடில் சொல்லுங்கோ தருகிறேன். நிரப்பும்போது ஒரு மரக்குச்சியினால் மெதுவாக அழுத்தி பூரணமாக நிரப்புங்கள் மருந்தை அளவுக்கு அதிகமாக அழுத்தி இடித்து தள்ளவேண்டாம். வெடித்துவிடக்கூடும்.
சந்திரிகா நீ வெற்று சோடாபோத்தல்களினுள் கண்ணாடித் துண்டுகளையும் பெற்றோலையும் நிரப்பி மூடி ஒட்டு.
ஜலத் நீ தயாரான பொருட்களை மீன் அனுப்பும் பெட்டிகளில் அடுக்கி குலுங்காதவாறும் மேலே தெரியாதவாறும் மரத்தூளினால் நிரப்பி அனுப்புவதற்கு தயார் செய்துவை. நாளை காலை அவற்றை எடுத்துப்போக மீன் லாரி வரும்.
நான் ஊருக்குள் சென்று காலை உணவிற்கு பாண் வாங்கி வருகிறேன். இந்தப்பகுதியில் வெளி ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம்.
நங்கி மட்ட சிகரட் பக்கற் எக்காக் அறங் எண்ட.( தங்கச்சி எனக்கொரு சிகரட் பக்கற் வாங்கிவாங்கோ.)
ஹேரத் உனக்கு எத்தனைதடவைதான் சொல்லுறது இங்கு சிகரட் பத்துவது ஆபத்தானது என்று.
நங்கி அத வித்தறாய் (தங்கச்சி இன்றைக்குமட்டும்.....)
முடியாது
ங்கொய்யாலே இவளும் இவளின்ரை சட்டங்களும். சீக்கிரமா நாட்டை பிடிச்சிட்டமென்றால் தலைவரைக்கேட்டு ஊரில ஒரு ஐஸ்வாடி கட்டிக்கொண்டு செற்றிலாகிவிடுவன். மச்சான் தீப்பெட்டி இருக்கே தா ஒரு சிகரட் பத்துவம்.
ஹேரத் உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியே. ஒருநாள் இல்லையென்றால் மற்றொருநாள் கூண்டோட கைலாயம் போறதென்று முடிவு எடுத்திருக்கிறியே? பேசாமல் மருந்து அடையிற வேலையை பார்.
போடா புறம்போக்கு அட்வைஸ் பண்ணுறானாம் அட்வைஸ். சிகரட்டில கஞ்சா கலந்து இழுத்தால்தான்டா எனக்கு பதட்டமில்லாமல் வேலை நடக்கும்.
லஸ்சன லஸ்சன மல் பிப்பிலா லா லலா.... (அழகான அழகான பூக்கள்...
பூத்திருக்கு....)
கோவிச்சுக்கத்துறது ,பாடுறது, ஆடுறதென்று, நீ எந்த நேரம் என்ன செய்வாய் என்று புரிஞ்சுக்கவே முடியது ஹேரத்.
டமால் டமால்.... என குண்டு வெடிக்கும் சத்தங்களும்.
தொடர்ந்து அணே மகே அம்மே....(ஐயோ அம்மா...)என்ற கத்தலும்....
இந்தச்சம்பவம் JVP கிளர்ச்சியை சீக்கிரமே ஆரம்பிக்க காரணமாக இருந்த வெடிவிபத்து சம்பவத்தை பின்னணியாக கொண்டு புனையப்பட்ட நிஜம் கலந்த கற்பனை கதை
ஐஸ்வாடி - பிடித்த மீன்களை பழுதடையாமல் ஐஸ் போட்டு பாதுகாத்து வைக்கும் இடம்
இந்தச்சம்பவ பின்னணியுடன் தோற்றவர்களின் கதை தொடர்கிறது.
களம் காணாமலே கைதான JVP தலைவரும் கடைசிவரை களத்தில் நின்ற எங்கள் தலைவரும்
எங்கள் தலைவர் பிரபாகரன் பேசுவது குறைவது செய்வது அதிகம். இதற்கு நேர்மாறானவர் JVP தலைவர் றொகண விஜயவீர.
றோகண தனது பேச்சுவல்லமையினால் அவர் முதலில் சேர்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரப்பிரிவில் பணியாற்றியவர். இந்த பேச்சு வல்லமையால் அவரால் இலகுவாக இளைஞர் மனதை கவர்ந்து தனது பக்கம் இழுக்கமுடிந்தது.
இலங்கையின் தென்மாகாணத்தை அண்டிய பகுதிகள் சிங்கள ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளப்படாமல் மிகவும் பின் தங்கிய நிலையலேயே இருந்தது. இப்பகுதியில் பெரும்பான்மையினராக கரவா என்று அழைக்கப்படும் கடற்தொழில் செய்யும் பிற்படுத்தப்பட்ட சாதியினரே வாழ்ந்து வந்தனர். ஆனால் பிரபல சிங்கள அரசியற்கட்சிகள் உயர் சாதி மத்திய பிரதேச சிங்களவர் ஆதிக்கத்திலேயே இருந்தது. இதுவே இந்தப் பிரதேசங்களின் பின் தங்கிய நிலைக்கு முக்கிய காரணமாகும்.
றோகண இப்பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், வேலையில்லாத இளைஞர்கள் மத்தியிலேயே தனது கட்சியை வளர்த்தார்.
JVPயில் இணையையும் இளைஞர்கள் 25 முதல் 30 பேர் கொண்ட குழுக்களாக்கப்பட்டு அவர்களுக்கு இரகசிய இடங்களில் ஒருவாரகால பயிற்சி வழங்கப்பட்டது.
இங்கு அவர்களுக்கு
1. அன்றைய இலங்கையின் பொருளாதார பிரச்சனைகள்
2.இலங்கையிலுள்ள கம்யூனிஸ்ட்டு கட்சிகளின் செயற்பாட்டு தோல்வி.
3.ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்க விரிவாக்கமும் அதனை தடுக்கவேண்டியதன் அவசியமும்.
4.அமெரிக்க எகாதிபத்தியமும் அதை எதிர்க்கவேண்டிய தேவையும்.
5.இலங்கையில் ஒரு புரட்சியின் தேவை
ஆகிய தலைப்புக்களில் அரசியல் வகுப்புக்களும் சிறிய அளவு இராணுவப் பயிற்சியும் கொடுக்கப்பட்டது.
பெரும்பான்மையான இலங்கை தமிழரும் இந்தியாவை தமது தாய்நாட்டைவிட அதிகமாக நேசித்தனர். இவ்வறு இருக்கையில் JVPயின் 5 முக்கிய கொள்கைகளில் ஒன்றாக
ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்க விரிவாக்கமும் அதனை தடுக்கவேண்டியதன் அவசியமும் என்ற விடயமே அக்கட்சியில் தமிழ் இளைஞர்கள் அதிகம் இணையாமைக்கு முதற்காரணமாக அமைந்தது.
1971 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு வெடி விபத்து நடந்தது. கேகால மாவட்டத்தில் உள்ள நெலுந்தெனிய என்னும் இடத்திலுள்ள மறைவிடம் ஒன்றில் வைத்து JVPயினர் குண்டுகள் தயாரித்துக்கொண்டிருந்த நேரத்திலேயே இந்த விபத்து இடம் பெற்றது. இதனை விசாரிக்கத்தொடங்கிய பொலிசாருக்கு ஆச்சரியமான செய்தியொன்று கிடைத்தது. வெடிவிபத்தின் பின்னணியும், JVPயின் கிளர்ச்சிக்கான ஏற்பாடுகள் சம்பந்தமான தகவல்களே அது.
சுதாகரித்துக்கொண்ட இலங்கை அரசு உடனடியாகவே றோகணவை கைது செய்து அதிகூடிய பாதுகாப்பு கருதி யாழ்ப்பாணத்தில் தடுப்புக்காவலில் வைத்தது. விசாரணைகளையும் தேடுதல்களையும் முடுக்கிவிட்டது.
இவ்வாறான பிரச்சனைகளினால் ஏற்பட்ட நெருக்கடி நிலைமையில் தப்பி தலைமறைவாகியிருந்த முக்கிய JVP தலைவர்கள் திட்டமிட்ட நாளிற்கு முன்னதாக ஏப்பிரல் 5ம் திகதி இரவு 11 மணிக்கு அரசுக்கு எதிரான கிளர்ச்சியை ஆரம்பிப்பது என முடிவு செய்தனர்.
தோற்றவர்களின் கதைமேலும் தொடரும்.....
படங்கள் நன்றியுடன் கூகிள் தேடலில் பெற்றுக்கொண்டவை.

டெட்டினேற்றர்குச்சி - வெடிப்பை உண்டுபண்ண தேவையான ஒரு பொருள்

30 comments:
ஸ்டாட்டிங் டயலொக் நல்லா இருக்கு ( இது என்ன படமா???)
நல்ல பதிவு சின்னவனுக்கு பழைய தகவல்களை தெரியப்படுத்தியமைக்கு
எழுத்து நடை சுவரஸ்யமாக இருக்கு தொடருங்கள் பல தகவல்களை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்
பகிர்வுக்கு நன்றி
தொடரனும்னு முடிவு பண்ணிடீகே.. தொடரவும்... தொடருவோம்.
அங்கிள் அந்த குழந்தைப் படம் ரொம்ப கஷ்டமா இருக்கு ...
வணக்கம் அம்பலத்தார்!
இந்தப்பதிவில் அதிகம் கதைக்க ஆசையிருந்தும் நீங்கள் தொடர்வதால் விலகியிருக்கின்றேன்.
ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கட்டும் வடக்கில் எப்படி சாதியம் முன்னின்றதோ அதே அளவு சாதியம் தென் இலங்கையிலும் இன்றும் உயிருடன் இருக்கு பாத்த ரட்ட,உடரட்ட எப்போதும் விட்டுக்கொடுக்காது அதை இன்றைய இலங்கைப் பாராளுமன்றம் வரை கண்டுகளிக்கலாம்.அப்பி கோவி வம்சயோ என்று விடாத கூட்டம் ம்ம்ம் இன்னும் நீங்கள்தொடரனும் எங்கள் சில விசில் குஞ்சுகளுக்கு இன்னொரு முகம் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் சரியான புரிதல் முக்கியம் சகோதர மக்களின் அன்றாட வாழ்வு பற்றி!
ரோகன போன்ற பேச்சாற்றல் நிகால்கலப்பத்திக்கு இருந்தது சிறிதளவு ஆனால் அதை வாக்காக மாற்றும் திறமையில்லை சோமவம்ச வெறும் புஸ்வாணம் .
கேகாலை,அம்பந்தோட்டை,தெல்தெல்தெனிய,இங்கிரியாகல திஸ்ஸமகாராம,,பதுளையின் மகியாங்கன ,அவர்களின் ஆதரவு தளம் இருந்தது உண்மைதான்.தொடருங்கள் இன்னும் பின்னால் விவாதிக்கலாம்.தோற்றுப்போனவர்களின் மாணவர் இயக்கத்தில் பல தமிழர்களும் பின்னாட்களில் இருந்தார்கள் இந்திய ஏகாபத்தியத்திற்கு எதிராக அணி திரண்டு!
சிட்டுக்குருவி said...
ஸ்டாட்டிங் டயலொக் நல்லா இருக்கு ( இது என்ன படமா???)
நல்ல பதிவு சின்னவனுக்கு பழைய தகவல்களை தெரியப்படுத்தியமைக்கு//
பாராட்டிற்கு நன்றி சிட்டுக்குருவியாரே. எமது நாட்டில் இடம்பெற்ற பல நிகழ்வுகளும் பெரும்பாலான மக்களுக்கும் தெரியாமலே உள்ளது. அவற்றை இயன்றவரை அதிகமானவர்களிடம் எடுத்துச்செல்லவேண்டும் என்பதுவும் அவற்றிலிருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதுவுமே எனது விருப்பம். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.
ஹைதர் அலி said...
எழுத்து நடை சுவரஸ்யமாக இருக்கு தொடருங்கள் பல தகவல்களை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.//
நன்றி ஹைதர் உங்களைப்போன்றவர்களின் உற்சாகம் தரும் வார்த்தைகள்தான் மேலும் எழுதத்தூண்டுகிறது.. எனக்கு தெரிந்தவற்றை முடிந்தவரை பதிவிட முற்சிக்கிறேன்.
மனசாட்சி™ said...
தொடரனும்னு முடிவு பண்ணிடீகே.. தொடரவும்... தொடருவோம்.//
ஹி ஹீ மனச்சாட்சி எப்பவும் அனைவருடனும் தொடர்ந்துகொண்டுதானே இருப்பார். தொடருகிறேன் தொடருங்கள்.
கலை said...
அங்கிள் அந்த குழந்தைப் படம் ரொம்ப கஷ்டமா இருக்கு ...//
வணக்கம் கலை உங்கள் மனதிற்கு கஸ்டம் தந்தததற்கு மன்னித்துக்கொள்ளுங்கோ. பெரும்பான்மையான நேரங்களிலும் உண்மைகள் கசப்பானதாகவும் துன்பம் தருவதாகவுமே இருக்கிறதே.
தனிமரம் said...
வணக்கம் அம்பலத்தார்!
இந்தப்பதிவில் அதிகம் கதைக்க ஆசையிருந்தும் நீங்கள் தொடர்வதால் விலகியிருக்கின்றேன்.//
வணக்கம் நேசன், முதலில் நீங்கள் தமிழ்மணத்தில் மகுடம் ஏறியதற்கு வாழ்த்துக்கள். நான் பதிவை தொடரவேண்டும் என்பதற்காக நீங்கள் உங்கள் கருத்துக்களை கூறாமல் இருக்கவேண்டியதில்லை. சமூக விடயங்களை பதிவிடும்போது அதிகமான கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்று நாங்கள் தெளிவு பெறவேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பு சாதகமான பாதகமான கருத்துக்கள் எதுவானாலும் எவரும் தாராளமாக முன்வையுங்கள். கருத்துகளால் மோதி ஆரோக்கியமான சிந்தனை வளர்ச்சி அடைந்த சமுதாயமாக மாறுவோம்.
தனிமரம் said...
ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கட்டும் வடக்கில் எப்படி சாதியம் முன்னின்றதோ அதே அளவு சாதியம் தென் இலங்கையிலும் இன்றும் உயிருடன் இருக்கு//
உண்மைதான் தமிழருக்கு சற்றும் குறைவில்லாமல் சிங்களவர்கள் மத்தியிலும் சாதியமும் வர்க்கபேதமும் இன்னமும் நிறைந்திருக்கிறது.
வணக்கம் ஐயா,
எனக்குத் தெரியாத பல விஷயங்கள் இந்தப் பதிவில்
அடங்கி இருக்கிறது. இது போன்ற செய்திகள் அடங்கிப்
போய்விடாமல் ஏட்டினில் ஏற வேண்டும்..
இளைய சமுதாயத்தினருக்கு உங்களால் இந்த
செய்திகள் பகிரப்படவேண்டும்..
பொதுவாக சாதியம் எல்லா நாட்டினரிடையும்
பரவலாக புற்றீசலாய் காணப்படுகிறது ..என்றே நினைக்கின்றேன்.
JVP பற்றிய தெளிவான செய்திகளை உங்களின் மூலம்
தெரிந்துகொள்கிறேன்.
நல்ல தெரியாத தகவல்களை தெரிந்துகொண்டேன்
இன்றைய பதிவு நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்
ஒரே பரபரப்பாக தொடர்கிறது, அரசியலில் உள்ள நெளிவு சுளிவு எல்லாமே தெரிந்து வைத்திருக்கிறீங்கள். வாசிக்கும் போது இன்னும் கொஞ்சம் கூட எழுதியிருக்கலாமே என்று எண்ணும் வகையில் எழுத்து நடை அமைந்துள்ளது மறுக்கமுடியாதது. இறுதிப்பகுதியில் 'தோற்றவர்களின் கதை' என்கிற சொற்றொடர் தான் மனதை உலுக்குகிறது.
எதுவும் தெரியாத செய்திகள்.நேற்றும் இன்றும் வாசிக்கிறேன்.நான் சொல்லக்கூடியதாக ஒன்றுமில்லை அம்பலம் ஐயா.இன்னும் தெரிந்துகொள்ளத்தான் ஆசை !
மகேந்திரன் said...
வணக்கம் ஐயா,
எனக்குத் தெரியாத பல விஷயங்கள் இந்தப் பதிவில்
அடங்கி இருக்கிறது. இது போன்ற செய்திகள் அடங்கிப்
போய்விடாமல் ஏட்டினில் ஏற வேண்டும்........//
வணக்கம் மகேந்திரன் உங்கள் வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.
Sathish said...
நல்ல தெரியாத தகவல்களை தெரிந்துகொண்டேன்//
இலங்கை வரலாற்றில் மறைக்கப்பட்ட விடயங்கள் நிறைய உள்ளன.
பராசக்தி said...
ஒரே பரபரப்பாக தொடர்கிறது, அரசியலில் உள்ள நெளிவு சுளிவு எல்லாமே தெரிந்து வைத்திருக்கிறீங்கள்.//
சகோ. பராசக்தி எனது பொது வாழ்வுக்கு வயது கிட்டத்தட்ட 35 வருடங்கள்
பராசக்தி said...
வாசிக்கும் போது இன்னும் கொஞ்சம் கூட எழுதியிருக்கலாமே என்று எண்ணும் வகையில் எழுத்து நடை அமைந்துள்ளது மறுக்கமுடியாதது. இறுதிப்பகுதியில் 'தோற்றவர்களின் கதை' என்கிற சொற்றொடர் தான் மனதை உலுக்குகிறது.//
ஏன் இவ்வளவு எழுதினான் என வாசகர் மனதிற்குள் திட்டுவதைவிட இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே என சொல்லும்விதமாக நிறுத்திக்கொள்வது நல்லதுதானே. எனது வார்த்தை பிரயோகங்கள் உங்கள் மனதிற்கு கஸ்டம் தந்திருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கோ பரா.
ஹேமா said...
எதுவும் தெரியாத செய்திகள்.//
மற்றவர்களுக்கு தெரியாதவிடங்களை சொல்லவேண்டியது ஒருவித கடமையும்தானே
அரசால் புரசலாய் நிறைய விஷயங்கள் (JVP)கேள்விப்பட்டிருந்தாலும்....படித்திருந்தாலும்...ஒரு தொடராக உங்கள் பார்வையில் வாசிக்க காத்திருக்கிறேன் அம்பலத்தாரே...படங்களை தவிர்க்க முடிந்தால் நலம்...Just a thought...
வணக்கம் ஐயா
மண் வாசனை கலந்த அம் மக்களின் உரை நடையினையும் இடையிடையே கொடுத்து, நல்லதோர் வரலாற்று மீட்டலைப் பதிவாகத் தந்திருக்கிறீங்க.
அடுத்த பாகம்...சிறை மீட்டலாக இருக்கும் என நினைக்கிறேன்.
ஆவலா இருக்கேன்!
Jvp thalaivarai kilinochchi skanthapuram enda idaththil ulla schoolil kathu panni vaithathaaka kelvippaden. Jalppanaththilum irunthullara. Athodu koddaiyai pidikka iyakkaththukku kadal valiya jvp kaarararai anuppiran endu solli kadasila anuppelayaam. Iyakkamum jvp oda thodarpu vachirinthirukku pola . Ethukkum orukka palayaakalidda vissarichchu parunko ampalam anne
வணக்கம் அம்பலத்தார்!தாமத வருகைக்கு மன்னிக்கவும்.பார்க்கக் கிட்டியிருக்கவில்லை.மேலும்,எங்கள் ஊர் அண்ணா ஒருவர்,ஆரம்ப கால உறுப்பினர்!இன்று வரை............................?
எனது பொது வாழ்வுக்கு வயது கிட்டத்தட்ட 35 வருடங்கள்./////அப்படிஎன்றால் கிட்டத்தட்ட .....................................(நானும் வீட்டுக்கு நேரே புள்ளடி கீறியிருக்கிறேன்.)
>பெரும்பான்மையான இலங்கை தமிழரும் இந்தியாவை தமது தாய்நாட்டைவிட அதிகமாக நேசித்தனர்
அப்பட்டமான உண்மை. இதுதான் 1987 வரை நிலமை.
நன்றி நண்பரே!
வலை வந்து வாழ்த்தினீர்!
தங்கள் பதிவைக் கண்டேன்,பல,
நான் அறியாத செய்திகள். தகவலுக்கு நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் அண்ணே! தெரியாத தகவல்...தொடர்வேன்.....
Post a Comment