நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Saturday

எழுத்துலக வியாபாரியே மாற்றுக்கருத்துக்களையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.



மனுஷ்யபுத்திரன் மீது எனக்கு அண்மைக்காலம்வரை மிகவும் மதிப்பு இருந்தது ஆனால் அவரது அண்மைய கருத்துப்பதிவுகள், அவரும் வெறும் புகழும் வோட்டும் விரும்பும் அரசியல்வாதி போன்றவர்தான் என்பதாக இருக்கிறது. இவரும் எழுத்தை விற்கும் சுத்த வியாபாரிதான் என்பதை நிரூபித்துவிட்டார். இதுபோல எழுத்துலக வியாபாரிகள் சிலர் பரபரப்பிற்காகவும், தமது பெயர் பல இடங்களிலும் அடிபடவேண்டும் என்பதற்காகவும் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்.

அண்மையில் மனுஷ்யபுத்திரன் "பிராபகரன் கேம்பில்...." எனும் முகப்புத்தக குறிப்பொன்றில் விடுதலைபுலிகளையும் கவிஞர் காசியானந்தன் போன்றவர்களையும் கிண்டலடித்து எழுதியிருந்தார்.
பலரும் இந்தவிடயத்தை தீவிரமாக எதிர்த்து எழுதினர். நானும் இந்த விடயத்தில் ஆணித்தரமான பல கருத்துக்களை மிகவும் நாகரிகமான முறையிலேயே தெரிவித்திருந்தேன். அங்கு அவரது அடிவருடி ஒருவர் வந்து ரசிகர் ரவுடிகள்போல காட்டுக்கத்தல் கத்துபவர்களிற்கெல்லாம் பதில் கூறத்தேவையில்லை என்ற தொனியில் எழுதினார். அவருக்கும்கூட பக்குவமாக அனைவரையும் கேவலமானவர்களாக ஒரேதட்டில் வைக்கவேண்டாம் எத்தனையோபேர் தீர்க்கமான கருத்துக்களையே முன்வைத்திருக்கிறார்கள் என விளக்கம் கொடுக்கப்பட்டது.

அங்கு பலரும் முன்வைத்த கருத்துக்களுக்கு எல்லாம் எதிர்கருத்துக் கூறமுடியாத மனுஷ்யபுத்திரன் எதிர்கருத்து தெரிவித்த பலரையும் முகப்புத்தக நண்பர் வட்டத்திலிருந்து (ப்ளாக்) - தடை செய்துவிட்டார். அவருக்கு கருத்துக்களை கருத்துக்களால் மோதும் திறமையும், மனப்பக்குவமும் இல்லை என்பதையே அவரது இந்த செயல் எடுத்துக்காட்டுகின்றது.

மனுஷ்யபுத்திரன் சார் உங்களுக்கு எந்த ஒரு கருத்தையும் அல்லது செயலையும் ஆதரிக்கவும் அல்லது எதிர்க்கவும் உரிமை இருக்கிறது. அதில் மாற்றுக்க் கருத்திற்கு இடமில்லை. ஆனால் அதேபோன்று உங்களது கருத்துக்களை ஆதரிக்கவும் எதிர்க்கவும் மற்றவர்களுக்கும் உரிமை உள்ளது.

சென்னை புத்தக கண்காட்சியில் உங்களைப்போன்ற இரு கிறுக்கு கவிஞர்கள் மூன்றாவது ஒருகவிஞரைபற்றி விவாதிக்கிறோம் என பைத்தியக்காரர்போல ஒருவரை ஒருவர் கடித்துக்கொண்டதை விடயத்தை கண்டித்து கருத்துக்கூறவும் உங்களுக்கு போராட்டம் என்ற விடயம்தானா கிடைத்தது? உங்களது வார்த்தைப்பிரயோகம் தமிழகத்தில் நடக்கும் கூடங்குள அணு உலைகளுக்கு எதிரான மக்கள் எழுச்சிப்போராட்டம், முல்லைப்பெரியாறு போராட்டம், சாதிய எதிர்ப்பு போராட்டம் போன்றவறில் ஈடுபட்டிருக்கும் போராட்டக்காரரையும்கூட கேலிசெய்வதாகவும் கொள்ளலாம் அல்லவா?

சார் ஒருவிடயத்தை புரிந்துகொள்ளுங்கள். உங்களது அண்மையகால கருத்துக்கள், உங்களையும் எதற்கெடுத்தாலும் விடுதலைப்புலிகளை கிண்டலடிக்கும், திட்டித்தீர்க்கும் ஷோபாசக்தியின் லெவலிற்கு கொண்டு செல்கின்றன.  உங்களிற்கு எந்த ஒரு விடயத்தை கிண்டலடிப்பதற்கும் போராட்டம் என்ற ஒருவிடயம்தானா கிடைத்தது. உங்களது இத்தகைய எழுத்துக்களால் நீங்கள் மிகப்பெரியதொரு வாசகர் கூட்டத்தின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொள்கிறீர்கள். தீவிர விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மட்டும்  உங்களை வெறுக்கப்போவதில்லை. அவர்களையும் தண்டி ஈழத்தமிழரின் உரிமைப்போராட்டத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில் போராளிகள் விட்ட தவறுகளிலிருந்து பாடங்கள் கற்றுக்கொண்டு எம்மை நாமே திருத்திக்கொள்ளவேண்டும் என குரல்கொடுக்கும் என்போன்ற மற்றுமொரு மக்கள்கூட்டத்தினதும், தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளிற்கு எதிராக போராடுபவர்களினதும் வெறுப்பை தேவையின்றி சம்பாதித்துக்கொள்கிறீர்கள்.

சமூக மாற்றங்களை நாடி எழுதத்தொடங்கிய நீங்கள் தடம் புரண்டது ஏன்?
பேனா தூக்கியவன் எல்லாம் உண்மையான விழிப்புணர்வுப்போராளி இல்லை. நீங்களும் பெயருக்கும் புகழுக்கும் வெறும் காகிதக்கத்திதான் சுழற்றுகிறீர்கள் என்பதை புரிந்துகொண்டோம்.

உங்களுக்கு இருக்கும் எழுத்துச் சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் உங்கள் கருத்திற்கு மாற்றுக்கருத்து கூறுபவர்களுக்கும் இருக்கு என்பதை புரிந்துகொள்ளுங்கள். எதிர்கருத்துக்களை அழித்துவிடுவதாலும் எதிர்ப்பவர்களை நண்பர் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவதாலும் உங்களிற்கு எதிர் கருத்துகளிற்கு பதிலளிக்கும் வல்லமையும் திறனும் இல்லை என்பதையே மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள். உங்களை புரிந்துகொள்ள வைத்ததற்கு நன்றிகள்.


நேசமுடன் அம்பலத்தார்


27 comments:

அனுஷ்யா said...

இதனை தனிப்பட்ட முறையில் அவருக்கு மின்னஞ்சலில் தெரிவித்து இருக்கலாமே ஐயா..
இப்படியொரு பதிவு வேண்டாமே...
தவறெனில் மன்னிக்கவும்...

பி.அமல்ராஜ் said...

வணக்கம் அம்பலத்தார் ஐயா,
சம்பவத்தை தாண்டி உங்கள் கருத்து நியாயமானது, சரியானது. மிகவும் ஆளுமையான கருத்து ஐயா.

//உங்களுக்கு இருக்கும் எழுத்துச் சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் உங்கள் கருத்திற்கு மாற்றுக்கருத்து கூறுபவர்களுக்கும் இருக்கு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.//

பி.அமல்ராஜ் said...
This comment has been removed by the author.
அம்பலத்தார் said...

மயிலன் said...
//இதனை தனிப்பட்ட முறையில் அவருக்கு மின்னஞ்சலில் தெரிவித்து இருக்கலாமே ஐயா..
இப்படியொரு பதிவு வேண்டாமே...
தவறெனில் மன்னிக்கவும்... //
எனக்கும் இந்தவிடயத்தை இவ்வாறு எழுதுவது கவலைதான். அனால் அவரது மனநிலை மற்றவர்களது கருத்துக்களை ஏற்பதாகவோ புரிந்துகொள்வதாகவோ இல்லாததாலேயே வேதனையுடன் இவ்வாறு எழுதவேண்டி உள்ளது. அவரது மன நிலையை அறிந்துகொள்ள பின்வரும் பதிவையும் படித்துப்பாருங்கள்.
http://truetamilans.blogspot.com/2012/01/blog-post_13.html

அம்பலத்தார் said...

பி.அமல்ராஜ் said...
//வணக்கம் அம்பலத்தார் ஐயா,
சம்பவத்தை தாண்டி உங்கள் கருத்து நியாயமானது, சரியானது. மிகவும் ஆளுமையான கருத்து ஐயா.//
உங்கள் புரிதலிற்கும் உற்சாகம்தரும் வார்த்தைகளிற்கும் நன்றி அமல்.

அனுஷ்யா said...

அந்த இணைப்பும் நான் ஏற்கனவே வாசித்துவிட்டேன் ஐயா..
இந்த வெளிப்படையான சவுக்கடி தேவை என்று தங்களுக்கு தோன்றியதால் எழுதியுள்ளீர்..
சரியானதாக கூட இருக்கலாம்..
நன்றி ஐயா..

வலையுகம் said...

பகிர்வுக்கு நன்றி சகோதரரே

//அங்கு பலரும் முன்வைத்த கருத்துக்களுக்கு எல்லாம் எதிர்கருத்துக் கூறமுடியாத மனுஷ்யபுத்திரன் எதிர்கருத்து தெரிவித்த பலரையும் முகப்புத்தக நண்பர் வட்டத்திலிருந்து (ப்ளாக்) - தடை செய்துவிட்டார். //

மனுசபுத்திரன் இந்த அளவுக்கு மோசமானவரா?

எலக்கிய வியாதி என்று சுயதம்பட்டம் வேறு

Yaathoramani.blogspot.com said...

சரியான பதிவுதான்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழர்
திரு நாள் வாழ்த்துக்கள்

காட்டான் said...

வணக்கம் அம்பலத்தார்!
இந்த விடயத்தை பற்றி இப்போதுதான் அறிகிறேன்.. மிகச்சிறந்த ஒரு இலக்கியவாதி என்று நாங்கள் நம்பும் அவர் கருத்தை கடுத்துக்களால் எதிர் கொள்ள முடியாதவரா? வேதனைப்படுகிறேன்..!!

மகேந்திரன் said...

வணக்கம் அம்பலத்தார் ஐயா,

மதிப்பும் மரியாதைக்குமுரிய எழுத்தாளர்தான்.
ஆனால் கருத்துக்களை திணிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
ஏற்றுக்கொள்வது அவரவர்கள் இயல்பை பொறுத்தது.
மாற்றிக்கொள்வார் என நம்புவோம்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல்
திரு நாள் வாழ்த்துக்கள்

அம்பலத்தார் said...

ஹைதர் அலி said...
//மனுசபுத்திரன் இந்த அளவுக்கு மோசமானவரா?
எலக்கிய வியாதி என்று சுயதம்பட்டம் வேறு//
ஒரு படைப்பளியாக சிறப்பான படைப்புகள் பல அவரால் தரமுடிந்தது. அதற்காக அவரை மதிக்கிறேன். அதேநேரத்தில் முகப்புத்தகத்தில் தனது பதிவுகளில் பலதடவைகள் முன்னுக்குப்பின் முரணாக எழுதுவதையும் தான் கூறவரும் கருத்தில் தானே தெளிவற்று இருப்பதையும் எதிர்க்கிறேன்.

அம்பலத்தார் said...

Ramani சார் உங்களுக்கும் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

அம்பலத்தார் said...

காட்டான் said...
//.....மிகச்சிறந்த ஒரு இலக்கியவாதி என்று நாங்கள் நம்பும் அவர் கருத்தை கடுத்துக்களால் எதிர் கொள்ள முடியாதவரா? வேதனைப்படுகிறேன்..!!//
காட்டான் அவரை நினைத்து நானும் வேதனைப்படுகிறேன்.

அம்பலத்தார் said...

மகேந்திரன் said...
//.... கருத்துக்களை திணிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.//
வணக்கம் மகேந்திரன், கருத்தை திணிப்பது மட்டுமல்ல. தனது கருத்தை அல்லது தான் விரும்பும் கருத்தை மட்டும் மக்களிடம் கொண்டு செல்வதும் மாற்றுக்கருத்துக்களை மறைத்து இருட்டடிப்பு செய்வதுவும் பெரும் தவறுதான். சிங்கள அரசு தனது கருத்துக்களை அனைத்து இலங்கை மக்களிடமும் திணிப்பதற்கும் மாற்றுக்கருத்தினரை கொலை செய்தோ மிரட்டியோ பணபலத்தாலோ இருட்டடிப்பு செய்வதற்கும் இவரது செயலிற்கும் எனது பார்வையில் வேறுபாடு தெரியவில்லை.

எஸ் சக்திவேல் said...

எனக்கும் அதே மாதிரித்தான். முன்பு இவரில் மரியாதை இருந்தது. இப்ப இல்லை.

ம.தி.சுதா said...

ஐயா முடிந்தால் அவரது முக நூல் குறிப்பை தனிமடலுக்கு அனுப்பி வைக்க முடியுமா?

அதையும் படித்து விட்டு பதிவுக்கு பின்னூட்டம் இடலாம் என நினைக்கிறேன்...

ம.தி.சுதா said...

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.

மு.வரதராசனார் உரை :

நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து சொல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.

அம்பலத்தார் said...

எஸ் சக்திவேல் said...
//எனக்கும் அதே மாதிரித்தான். முன்பு இவரில் மரியாதை இருந்தது. இப்ப இல்லை.//
பின்னூட்டம் உங்க புரிதலை உணர்த்துகிறது.

அம்பலத்தார் said...

♔ம.தி.சுதா♔ said...
//ஐயா முடிந்தால் அவரது முக நூல் குறிப்பை தனிமடலுக்கு அனுப்பி வைக்க முடியுமா?//
மதி என்னையும் அவர் Block செய்துவிட்டார். என்னால் இப்பொழுது அவரது முகப்புத்தகத்தை பார்க்கமுடியாது. இது சம்பந்தமான அவரது அண்மைய நிலைகள் இரண்டிற்கும் 200 பேரிற்குமேல் காட்டமான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். ஆனபடியால் அவரது வழமைப்படி எதிர்ப்பைக்கண்டு அவற்றையெல்லாம் இப்பொழுது அழித்திருப்பார் என நினைக்கிறேன்.

அம்பலத்தார் said...

♔ம.தி.சுதா♔ said...
// நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து சொல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.//
மிகவும் சரியாக சொன்னீர்கள் மதி. ஆனால் இது சிலரிற்கு புரியமாட்டேன் என்கிறதே.

sarujan said...

மனுஷ்யபுத்திரன் எழுது உண்மைகள் என மற்றவர்கள் ஏற்றுகொள்ள வேண்டும் என நினைக்கும் ஒருவகை மனநோயே!

MaduraiGovindaraj said...

////
அம்பலத்தார் said...
இன உணர்வுகளைத் தூண்டிவிட்டு தமதுத் இருப்புக்களை நிலைநிறுத்திக்கொள்ளமுனையும் ஈனத்தனமானவர்களின் போலி முகத்திரைகளை கிழித்துப்போட்டிருக்கிறீர்கள். இனவெறியின் அதியுச்ச அழிவுகளை ஈழத்தில் பெற்றுவிட்டோம். மீண்டும் இன்னொருதடவை வேண்டாம் இந்த இனவெறி. மனிதநேயத்துடன் வாழக்கற்றுக்கொள்வோம்./////

"வைகோ உங்களுக்கு போலிகளா?
ஈழ தமிழர்களுக்காக தனது அரசியல் வாழ்வை அற்பனிதவர் வைகோ"

எழுத வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதுவீர்களா?

MaduraiGovindaraj said...

http://josephinetalks.blogspot.com/2011/12/blog-post_20.html

அம்பலத்தார் said...

கோவிந்தராஜ்,மதுரை. said...
////அம்பலத்தார் said...
இன உணர்வுகளைத் தூண்டிவிட்டு தமதுத் இருப்புக்களை நிலைநிறுத்திக்கொள்ளமுனையும் ஈனத்தனமானவர்களின் போலி முகத்திரைகளை கிழித்துப்போட்டிருக்கிறீர்கள். இனவெறியின் அதியுச்ச அழிவுகளை ஈழத்தில் பெற்றுவிட்டோம். மீண்டும் இன்னொருதடவை வேண்டாம் இந்த இனவெறி. மனிதநேயத்துடன் வாழக்கற்றுக்கொள்வோம்./////

"வைகோ உங்களுக்கு போலிகளா?
ஈழ தமிழர்களுக்காக தனது அரசியல் வாழ்வை அற்பனிதவர் வைகோ"

எழுத வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதுவீர்களா?-------------------

ஐயா கோவிந்தராஜ் முதலில் உங்க வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் நன்றிகள். ஐயா நீங்க மேலே குறிப்பிட்டிருக்கும் எனது கருத்துக்கள் இந்தப்பதிவுடன் சம்பந்தப்பட்டது இல்லையே. சக பதிவர் ஒருவர்ன் பதிவிற்கு நான் எழுதிய பதில் அல்லவா? அதை ஏன் இந்த விடயத்துடன் இணைத்து விவாதிக்க முன்வருகிறீர்கள். இந்தப் பதிவு சம்பந்தமான கருத்துக்களை இங்கு விவாதிக்கலாம்.அந்த அந்த விடயத்தை அதற்குரிய இடத்தில் விவாதித்தால்தான் படிக்கும் ஏனைய வாசகர்களாலும் விடயத்தை பூரணமாக புரிந்துகொள்ள முடியும்.

ஐயா உங்களுக்கு ஒன்றுமட்டும் சொல்லுகிறேன். நீங்கள் எமது அழிவுகளை பக்கத்து நாட்டிலிருந்து அனுதாபத்துடன் பார்த்தவர்கள். உங்க மனநிலைவேறு. நாங்க போராட்டத்துள் வாழ்ந்தவர்கள். அழிவுகளையும் இழப்புகளையும் அனுபவித்தவர்கள் எமது மனநிலை வேறு.
தமிழக மக்களில் பெரும்பான்மையினர் எமது போராட்டத்தை இதய சுத்தியுடன் ஆதரித்தவர்கள்.
ஆனால் உங்க மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் தமிழக அரசியல்வாதிகளில் எத்தனைபேர் எமது போராட்டத்தை இதயசுத்தியுடன் அணுகி ஆதரித்தார்கள். எத்தனை தமிழக அரசியல்வாதிகள் எமது போராட்டத்தையும் இழப்புகளையும் தமக்கு தேவைப்படும் சந்தர்ப்பங்களில் தமது நலனிற்கு ஏற்றவகையில் பயன்படுத்திக்கொண்டார்கள்.

ஐயா மேலும் விளக்கங்கள் தேவையெனில் உரிய பதிவின்கீழ் கேள்வியை முன்வையுங்கள் நான் அங்கு வந்து உங்களிற்கு பதில் தருகிறேன். அதற்குரிய இடத்தில் அந்த விடயங்களை விவாதிப்பதே நல்லது.

MaduraiGovindaraj said...

ஐயா வணக்கம் அதே இடத்தில் வந்து எனது கேள்வியை பதிவு செய்கிறேன் நன்றி

Unknown said...

எல்லோரும் பாராட்டுவதை வைத்தே ஒரு மனிதனை எடை போட்டு விட்க்கூடாது என புரிகிரது ஐயா...

J.P Josephine Baba said...

தமிழக தற்கால சூழலின் தாக்கமாக கூட இருக்கலாம். இங்கு விவாதிக்கும் எழுத்தாளர்கள்,இலக்கியவாதிகள், அரசியல்-சமூக சிந்தனனையாளர்கள் ஆகட்டும் சமூக மாற்றம் என்பதையும் தாண்டி சுயநலனில் பணம் ஈட்டுவதில் மூழ்கி விட்டனர். மனுஷபுத்திரனின் சபீபத்திய கூட்டு சக்திகள் அவரை அப்படி மாற்றி விட்டிருக்கலாம். ஈழப்பிரட்சனை ஆகட்டும் முல்லைப்பெரியார் கூடன்க்குளம் எல்லாவற்றிலும் அடிதட்டு அல்லது அங்கு வாழும் மக்களின் குரல் நசுக்க்ப்படுகின்றது அவர்களுக்கு என பேசுகின்றவர்கள் தங்கள் தேவைக்காக குரல் கொடுக்கின்றனர். முல்லைப்பெரியார் அணைகட்டு சமீபம் 23 வருடம் குடியிருந்தவள் என் பிறந்த ஊர் என்பதால் நான் சில விடயங்கள் கதைத்த போது திருநெல்வேலியில் இருக்கும் சமூக அக்கரையாளரால் சகிக்கவோ புரியவோ இயலவில்லை. ஆனால் விஜயகாந்த் போல் கைநீட்டி நாக்கு நீட்டி பேசி நம்மை அடக்கவே துணிகின்றனர். இதனால் உண்மை குரல் மறைக்கப்படுகின்றது!!!