நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Sundayபிரபாகரனின் தத்துப்பித்துவங்கள் ஒரு அதிரடி அலசல்பிரபாகரனின் தத்துபித்துவங்கள் ஆச்சரியமான பெயரில் ஒரு வலைப்பூ. பிரபாகரனின் தத்துபித்துவங்கள் எனும் பெயருக்கும் Wine Shop பானருக்கும் ஏற்ப பெரும்பாலான பதிவுகளும் மசாலா, சினிமா போன்றவற்றிகு அதிக இடம் கொடுக்கும் ஜனரஞ்சக  பதிவுகளாக இருக்கின்றன. எது எதெற்கெல்லாமோ துரோகிப்பட்டம் கொடுக்கும் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் நம்ம ஈழத்தமிழ் உறவுகள் யாரும் பதிவர் பிரபாகரன், "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்" என்று பெயரிட்டு Wine Shop பனரிட்டு இந்தமாதிரி பதிவுகளை போட்டு நம்ம தலைவரையும் கொள்கைகளையும் நாறடிக்கிறானே என்று  இதுவரை போர்க்கொடி தூக்காததும், துரோகிப்பட்டம் கொடுக்காததும் ஆச்சரியம்தான்.

வலைப்பூவின் Wine Shop பானர் அவரது வலைப்பூ பெயருடனும் அவரது கலந்துகட்டிய எழுத்தில் அமைந்த பதிவுகளுடனனும் ஒன்றிப்போகும் அளவிற்கு முகப்பு படமாக கொடுத்திருக்கும் முட்டிக்கு முட்டி மோதிக்கொள்வதுபோன்ற தோற்றப்பாட்டைக்கொடுக்கும் ஆளவந்தான்  பானர் வலைப்பூவிற்கு நல்ல பொருத்தமானதாக தோன்றவில்லை

நித்யா  http://philosophyprabhakaran.blogspot.com/2011/11/blog-post.html


நான் படித்தவரையில் நண்பர் பிரபா ஒரு கதை முயற்சி செய்திருக்கிறார். நித்யா பிரபாகரனது முதலாவது சிறுகதை முயற்சி. அது ஒரு சிறுகதை என்பதைவிட I.T. இளைஞன் ஒருவனது ஆரம்பகால  அலுவலக அனுபவப் பகிர்வு என்றே சொல்லலாம். I.T. வேலையிடம் ஒன்றின் அன்றாட நிகழ்வுகளை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்திருப்பது பாராட்டிற்கு உரியது.
ஆரம்பத்தில் சுவாரசியமாக தொடங்கும் கதை போகப்போக தமிழ் பாடப்புத்தகத்தில் வரும் ஈர்ப்புத்தராத எதோ ஒரு பாடம்போல சுவாரசியம் குறைந்து செல்வதுபோல் தெரிகிறது. ஒரு நல்ல படைப்பானது வாசகனை அதை படிக்கும் ஒருசில நிமிடங்களாவது அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பவிடாது கட்டிப்போடவேண்டும். எனக்கு ஏனோ இக்கதையுடன் பூரணமாக ஒன்றிப்போக முடியவில்லை.
கதைக்கு முக்கியம் வார்த்தைப்பிரயோகம். எவ்வளவு நல்ல கதையையும் சொதப்பலான எழுத்து நடை மோசமானதாக்கிவிடும். பிரபா சாதாரண விடயங்களை பதிவிடும்போது கைவசப்படும் அளவிற்கு இங்கு வார்த்தைகளும் வாக்கியங்களும் கதையில் அவருக்கு கைகொடுக்காதது துரதிஸ்டமே.
அவர் இக்கதைமூலம் எதைக் கூறவருகிறார் என்பது புரியாமலே கதை நிறைவடைகிறது. நித்யா போன்ற பெண்கள் அடுத்தவரது பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதை சொல்லவருகிறாரா? அல்லது மேலதிகாரிகள் கைதேர்ந்த மேய்ப்பர்களாக மனோதத்துவம் தெரிந்தவர்களாக ஆடுகிற மாட்டை ஆடி பாடுகிறமாட்டை பாடி பால்கறப்பதுபோல வேலைவாங்குவதில் வல்லவர்கள் என்று கூறுகிறாரா? புரியவில்லை. கதை எழுதுவதில் அவர் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க கடந்துவரவேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்றே கூறலாம்.

ஞாநியின் கொலவெறியும் செல்வராகவனின் அறிவுதிருட்டும்...!http://philosophyprabhakaran.blogspot.com/2011/11/blog-post_30.html

நான் படித்தவற்றில் பிரபாவினது ஜனரஞ்சக பதிவுகளில் "ஞாநியின் கொலவெறியும் செல்வராகவனின் அறிவுதிருட்டும்...!" சுவாரசியமானதாக இருந்ததுபோதிலும் அடிக்கடி ஞானியின் கருத்துக்களுடன் தன் பதிவுகளின் கருத்துக்களும் ஒத்துப்போவதாக குறிப்பிடுவதன்மூலம்  தானும் ஞானி போல திறம்படச் சிந்தித்து எழுதுகிறேன் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்வது போன்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.


கேரக்டர் – ப்ளேபாய் பரந்தாமன்  http://philosophyprabhakaran.blogspot.com/2011/09/blog-post.html


"கேரக்டர் – ப்ளேபாய் பரந்தாமன்" எனும் பதிவில் பரந்தாமன் எனும் கரக்டரை ரொம்ப இயல்பாக அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியதுபோல இருந்தது. இந்தப்பதிவு அவரது நித்யா கதையைவிட நன்றாக இருக்கிறது.

 பெரும்பாலான பதிவுகளிலும் அதிக விடயங்களை சொல்ல முனைந்திருக்கிறார். இது சாதா வாசகர்களிற்கு அனைத்துவிடயங்களையும் கிரகித்துக்கொள்ளாதுவிடும் சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கலாம். சினிமா விமர்சனப்பதிவுகள் அவரது வலைப்பூவின் சிறப்பு அம்சமாக இருக்கிறது.

அவரது பதிவுகளையும் வலிப்பூவிற்கு வரும் பின்னூட்டங்களையும் வாசகர் வட்டத்தையும் பார்க்கும்போது ஒருவிடயம் நன்கு புரிகிறது. "புத்தகங்களை படிப்பதை விட மனிதர்களை படிப்பதில் அதிக விருப்பம்" என பிரபா தனது சுயவிபரத்தில் குறிப்பிட்டு உள்ளதுபோல அவர் வாசகர்களின் நாடி பிடித்து மனநிலை அறிந்து அவர்களைக் கவரும் வண்ணம் எழுதுவதில் வல்லவர் என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கிறார். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை.நேசமுடன் அம்பலத்தார் 

No comments: