நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

பயணம்.... பயணம்...... பயணம்.................... 2

 பயணம்.... பயணம்........ பயணம்....................... 2
குடிவரவுத்துறை அதிகாரி பேச்சுமூச்சில்லாமல் விசாவைக்குத்தி உள்ளேபோக அனுமதித்தார். அப்பாடா என்று மெல்ல நடந்து, அடுத்து வந்த சுங்கப் பரிசோதனைக்கான் வரிசையில் போய் நின்றன். எனது முறை வந்ததும் சுங்க அதிகாரியின்முன் போய் நின்றால். 
என்னை மேலும் கீழும் பார்த்த அவர் அந்தப்பக்கமாக ஓரமாக நில் என்றார். நானுமோ நிற்கிறன் நிற்கிறன் நின்றுகொண்டே இருக்கிறன். வரிசையிலை நின்றவனெல்லாம் போய்க்கொண்டே இருக்கிறான். எனக்கெண்டால் பயமாகவும்கிடக்கு, அப்பப்ப ஏக்கமா அந்த அதிகாரியைப் பார்த்தால் 
ஒரு முறாய்ப்பு, 
இடையிடையே மெதுவா சார்... சார்...... என்று கூப்பிட்டாலும் மனுசன் மசியிறதாய் இல்லை அதற்குமொரு முறாய்ப்புத்தான். 
இப்படியே வரிசையிலை நின்றவனெல்லாம் போய்முடிஞ்சுது. 
நான் பேசாமல் அதிகாரியின்முன்னாலை போய் நின்றன்.
என்ன?
சார் நான் போகலாமோ?
என்ன வச்சிருக்கிறாய்?
கையிலை வெற்றிலை, பையிலை உடுப்பு.
வெற்றிலை கொண்டுவர அனுமதியில்லை.
சார்....  என்று நான் மெதுவா தொடங்கமுன்னம்
அவர் கோபமா வெற்றிலையை இங்கை ஒப்படைச்சிட்டு பாஸ்போட்டிலை எழுதி வாங்கிக்கொண்டுபோ. நாட்டைவிட்டுத்திரும்பும்போது பாஸ்போட்டைக் காட்டி வெற்றிலையை திரும்பப் பெற்றுகொண்டு போகலாம்.
சார்  சார்... அது வந்து நான் சாப்பிடக் கொண்டு வந்தது.
பல்லைப் பார்த்தால் அப்படித்தெரியேல்லை.
சார்..
வச்சிட்டுப்போ.
போடாமல் இருக்க ஏலாது சார்.
ஓ அப்படியே?
வேறென்ன வச்
சிருக்கிறாய்?
வேறு... வேறு ....   பையிலை இரண்டுபோத்தல் விஸ்கி.
ஓ அது வேறையோ, வேறென்ன வைச்சிருக்கிறாய்.
ஒன்றும் இல்லை
நன்றாக யோசித்துச்சொல்.
இல்லை.
அப்ப திரும்பி நில்! சோதனைபண்ணவேண்டும் என்றார் அதட்டலாக.
பயத்திலை அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுச் சட்டென்று திரும்பி நின்றன்.
மெதுவாகப் பின்புறமாகத் தடவிக்கொண்டுவந்தவர்,
சட்டென்று இது என்ன என்றார்.
மணிப்பர்ஸ்
எடு வெளியிலை.
எடுத்தன்
உள்ளே என்ன இருக்கிறது காட்டு பார்க்கலாம்
அப்போதான் எனக்குப் புரிந்தது. ஓகோ! இதுதான் விசயமோ என்று நினைத்துக்கொண்டு பர்ஸ்சைக் கொஞ்சமாத்திறந்து ஒரு பத்து ரூபா நோட்டை எடுத்து நீட்டினன்.
No Rupee என்றார்.
ஒற்றை டாலர் நோட்டொன்றை எடுக்கவும் சட்டென்று பிடுங்கிச் சட்டைப் பையிலை போட்டவர் வெற்றிலைக்கட்டிற்காலை இரண்டு வெற்றிலையை உருவி வாயிலை திணிச்சுக்கொண்டு கவனம் வாசலிலை நிற்கிற கண்டவனிட்டையும் கொடுத்து ஏமாந்திடாமல் பத்திரமாக விடுதிக்குப் போய்ச்சேர் என்றார் நட்போடு.
இனிமேல்தான் பெரிய சோதனைகள் காத்திருக்கிறதென்று தெரியாமல் அப்பாடா வாழ்க்கையிலை முதல் முதலாக ஒரு விடயம் வெற்றிகரமாக முடிச்சிட்டன் என்ற பூரிப்போட மெதுவாக வெழியே நடந்தன்

 




பயணம் தொடரும்.............


2 comments:

நிலாமதி said...

பயணம் என்றாலே தொடர்கதை தான் காத்திருக்கிறோம் தொடருங்கள்.

அம்பலத்தார் said...

உங்கள் ஆர்வத்திற்கு நன்றிகள் நிலாமதி விரைவில் தொடர்ந்து எழுதுகிறேன்