
ஆறு மாதமாக காலமாக தன்னைத்தானே கோமாவில கிடத்தின அம்பலத்தார் தப்பிப்பிழைத்து முகப்புத்தகம் மற்றும் பதிவுலகம் வந்துசேர்ந்தார்.
கோமாவில கிடக்கிறதும் ஒரு திறிலான அனுபவம்தான் கனபேர் ஐயோ அம்பத்தாருக்கு என்ன ஆச்சுதோ என்று பதைபதைக்க சிலபேர் அப்பாடா சனிதொலைந்துதென்று ஜாலியா இருக்க, பலரும் நான் கோமாவுக்கு போனதுக்கு தங்களது கற்பனைத்திறனுக்கேற்ப சுவாரசியமான பல கதைகளை கண்டுபிடிக்க இதுகளையெல்லாம் பார்த்துக்கொண்டும் அறிந்துகொண்டும் ரசித்துக்கொண்டும் கவலைப்பட்டுக்கொண்டும் இருந்ததும் ஒரு வித்தியாசமான அனுபவம்தான். கோமாவில கிடந்த காரணத்தை பிறகு ஆறுதாலக சொல்லுறன்.

இப்ப முதலில மச்சான் அடுத்து நிரூபன், நேசன், நம்ம மணி, துசி, கந்து, ஹேமா, சுதாரஞ்சினி, குழந்தை நிலா, கலைவிழி, கலை,பராசக்தி, அதிரா, யோகா, மதிசுதா, ரெவெரி, அமல்ராஜ், அஞ்ஜெலின் ......... இதில்லை குறிப்பிட்ட மறந்து, எழுத சோம்பேறித்தனத்தில குறிப்பிடாத நண்பருங்க, எதிரிங்க எல்லாரும் ஓடிவந்து மறக்காம உங்க ஆதங்கம் கவலை கோபம் எல்லாத்தையும் சேர்த்து நல்லாத்திட்டித்தீர்த்திடுங்கோ.
நேசமுடன் அம்பலத்தார்
படங்கள் நன்றியுடன் கூகிள் தேடலில் பெற்றவை
29 comments:
ஆஆவ்வ்வ்வ்வ் வாங்கோ அம்பலத்தார் வாங்கோ.. கோமாவில இருந்து போட்டு எழும்பினாலும், எல்லோரின் பெயர்களையும் மறக்காமல் எழுதியிருக்கிறீங்க.. என்னா உங்கட கிட்னிப் பவர்.. வட் எ பவர்:) வட் எ பவர்:))
கவனமா வச்சிருங்கோ.. இங்கின சிலர் கிட்னி களவெடுக்க வென்றே திரிகிறதாக கேள்வி:))
இரண்டாவது படத்தில கை கூப்பிக் கொண்டு நிற்பது நீங்கதானோ?..:).. பருங்கோ கோமாவில் இருந்தாலும் ஒரு நன்மை:)) உங்களுக்கு 30 வயசைக் குறைச்சுக் காட்டுது.. ஓடிப்போய் இதை ஆன்ரிக்குச் சொல்லிடுங்கோ:).. கொஞ்சம் நில்லுங்கோ.. நான் ஓடிப்போ எங்கட கட்டிலுக்குக் கீழ ஒளிக்கோணும் முதல்ல:))..
இதில.. நிரூபன் ரேடியோவுடன் காணாமல் போயிட்டார்ர்.... நேசன் சிங்கப்பூர் சுற்ருலாவில இருக்கிறார்:)..
நம்ம மணி, அதை ஏன் கேட்கிறீங்க.. ஒரு சங்கிலிக் களவில கைதாகி:) இப்போ ஆறு மாதமா.. ஒளிச்சுத் திரிகிறார் பிணையில:)..
ஹேமாவும் குழந்தை நிலாவும் ஒன்றெல்லோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் குழப்புறீங்க என்னை.. அவ சுற்ருலா போனவ இன்னும் காணேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
கலை அப்பப்ப வருவா..
யோகா அண்ணனைக் காணேல்லை தேடியும் கிடைக்கேல்லை அவர்:(.
அஞ்செலின்.. இருக்கிறா.. கடல்ல:))..
அதிரா பிரசெண்ட்:).
மிச்சாக்களைப் பற்றி நான் சொல்லேல்லை.. வெயிட் வருவினம்:).
Welcome back அம்பலத்தார்...
நலமா?....
கடைசியா ஜே மோ வை சவைச்சுட்டு போனீங்க...
மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி....
அண்ணா ஆஆஆஆஆஆஆ :<<<<<<<<
ஒண்ணுமில்லை சந்தோஷத்தில் சத்தம்போட்டு கூப்பிட்டேன்
..இன்றுதான் நேசனிடம் உங்களைப்பற்றி கேட்ட்க்கலாம்னு இருந்தேன் ...
ரொம்ப சந்தோசம் உங்க பதிவை பார்த்ததில் ..
வணக்கம் அம்பலத்தார் ஐயா
நலமா...
நீண்ட நாட்களாக தங்களை காணாமல்
மனம் புழுங்கிப் போயிருந்தோம்...
வான் மழைகண்ட வாடிய பயிரைப்போல
எம் அகம் குளிர்ந்து...
வாழ்க வளமுடன் ஐயா ...
என்னத்த.. சொல்ல!, வர வர நிறைய medical miracle நடக்குது. நடக்கட்டும் நடக்கட்டும், அம்பலத்தார், எல்லாம் நன்மைக்குதான் எண்டு வாழுறம் கண்டியலே
Blogger athira said...
//ஆஆவ்வ்வ்வ்வ் வாங்கோ அம்பலத்தார் வாங்கோ....//
அடேங்கப்பா அதிரா என்ன ஸ்பீடு முன்னாடி ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்திங்களோ. எல்லாரையும் முந்திக்கொண்டு முதலாவதாக வந்திருக்கிறியள்.
Blogger athira said...
இரண்டாவது படத்தில கை கூப்பிக் கொண்டு நிற்பது நீங்கதானோ?..:).. பருங்கோ கோமாவில் இருந்தாலும் ஒரு நன்மை:)) உங்களுக்கு 30 வயசைக் குறைச்சுக் காட்டுது..//
என்னங்க படத்தில 30 வயசு குறைச்சுத் தெரியுதோ? நிஜமாலுமே எனக்கு வயசு 32, 30 கழிச்சால் ஐயா 2 வயசுப் பாப்பா. Thanks Athira Aunty.
athira said...
ஹேமாவும் குழந்தை நிலாவும் ஒன்றெல்லோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் குழப்புறீங்க என்னை..//
இப்படியா தோழியைப் போட்டுக்கொடுக்கிறது.
முகப்புத்தகத்தில் என்ரை பிரண்ட் குழந்தை நிலா, பிளாக்கில அப்பப்ப என்னை மிரட்டிட்டு இருக்கிறது மீசை வைக்காத பாரதி ஹேமா
ரெவெரி said...
Welcome back அம்பலத்தார்...
நலமா?....//
Hai Reveri thanks for the visit.
angelin said...
அண்ணா ஆஆஆஆஆஆஆ :<<<<<<<<
ஒண்ணுமில்லை சந்தோஷத்தில் சத்தம்போட்டு கூப்பிட்டேன்//
அட நம்ம அஞ்ஜலினா இந்தக் கூச்சலிட்டது. பக்கத்தில்லதூங்கிட்டிருந்த செல்லம்மா திடுக்கிட்டு எழும்பி உட்கார்ந்திட்டான்னா பாருங்க அஞ்ஜலின்ரை Power ஐ.
வருக... தொடர்க...
மகேந்திரன் said...
நீண்ட நாட்களாக தங்களை காணாமல்
மனம் புழுங்கிப் போயிருந்தோம்...
வான் மழைகண்ட வாடிய பயிரைப்போல
எம் அகம் குளிர்ந்து...
வாழ்க வளமுடன் ஐயா ...//
வணக்கம் வாங்க மகேந்திரன் உங்க எல்லோரையும்போன்ற அன்பான நட்புக்களின் பாசத்தில் நலமே இருக்கேன்.
பராசக்தி said...
என்னத்த.. சொல்ல!, வர வர நிறைய medical miracle நடக்குது. நடக்கட்டும் நடக்கட்டும்....//
அம்மாடி பரா medical miracle உம் என்ரை டார்லிங் செல்லம்மாவின்ரை அன்பான அரவணைப்பும் சேர்ந்துதான் ஐயா கோமாவில இருந்து எழும்பினனான். என்ரை Darling செல்லத்திற்கும் ஒரு சின்ன Thanks சொல்லுங்கோ....
என்ர பேர் இல்லாததால நான் கமன்ட் போட மாட்டன். அட சீ இதுவும் ஒரு கமன்ட் தானே அவ்வ்வ்வ்
நீங்கள் கோமாவில் கிடக்கேக்க உங்கட டார்லிங் செல்லம்மா பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும். இனிமேல் கோமா கதை கதைக்கப்படாது கண்டியளோ. அவாவின்ட இதயம் நொருங்கிப்போச்சு, அவவிற்கு heart attack வராமல் சுகமாய் இருக்கவேண்டுமென்றால் கோமாவில அம்பலத்தார் கிடக்கவோ கிடத்தப் படவோ கூடாது
வாங்க ஐயா
பெரிய இடைவெளிக்கும் பிறகு பதிவு கண்டதில் களிப்பு
உங்கள் வருகை மகிழ்ச்சி வாங்க வாங்க அம்பலத்தாரே....நடந்தது என்ன?
திண்டுக்கல் தனபாலன் said...
வருக... தொடர்க...//
வணக்கம் தனபால் நலமா?
Muhunthan Rajadurai said...
என்ர பேர் இல்லாததால நான் கமன்ட் போட மாட்டன். அட சீ இதுவும் ஒரு கமன்ட் தானே அவ்வ்வ்வ்//
இப்படியெல்லாம் யோசிக்க எங்கைதான் படிச்சிங்க முகுந்தன்
பராசக்தி said...
நீங்கள் கோமாவில் கிடக்கேக்க உங்கட டார்லிங் செல்லம்மா பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்.,,,//
செல்லம்மாவில நீங்க எல்லோரும் வைத்திருக்கிற அன்பைக்காணும்போது எனக்கு கொஞ்சம் பொறாமையாக கிடக்கு.
நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும்..... என்பதுபோல செல்லம்மாவாலை ஐயாவுக்கும் பல நல்லதும் கிடைக்குது. உங்க அன்புக்கு நன்றியென்று சொல்லி அதை சிறுமைப்படுத்த விரும்பவில்லை.
சிட்டுக்குருவி said...
வாங்க ஐயா
பெரிய இடைவெளிக்கும் பிறகு பதிவு கண்டதில் களிப்பு//
நன்றி சிட்டுக்குருவியாரே
முத்தரசு said...
உங்கள் வருகை மகிழ்ச்சி வாங்க வாங்க அம்பலத்தாரே....நடந்தது என்ன?//
ஹி ஹி முத்தரசு என்னத்தை சொல்லுறது.......
எது நடந்ததுவோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறது அதுவும் நன்றாகவே நடக்கிறது
எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
you are saying like Vadivelu. Come Come come & hit me
அமபலம் ஐயா....வாங்கோ...வாங்கோ.வந்ததே சந்தோஷம் தேடாத இடமில்லை உங்களை.வந்து பதிவும் போட்டுப்போட்டீங்கள்.ஏன் கோமாவெண்டு பொய்...மாமியோட எங்கேயோ சுற்றுலாப் போனீங்கண்டெல்லோ உங்க முகப்புத்தகத்தில சனம் சொல்லினது !
நலம் நலம் அறிய ஆவல் .......
.நானும் உங்கள் நிலை யில் தான் இருந்தேன்.
கோமா என்று பொய் சொன்னாலும் நான் கோபித்தேன் எப்போதும் திரட்டி ,வாக்கு கடந்து நேசிக்கும் ஒரு வழிப்போக்கன் எனக்கு நீங்கள் ஓரு உந்து சக்தி ஐயா!ம்ம் நல்லா நீங்கள் வாழ வேண்டும் என்றுவலையுலகு கடந்து என் ஐயனிடம் எப்போதும் வேண்டுவேன் அவர்தான் இப்படியான உறவை எனக்கு தருகின்றார்!தனிமரம் கடந்து போக நினைத்தாலும் சில அன்பை கட்டிவைக்கின்றார்!ம்ம்
Post a Comment