நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

நாங்களும் எங்கட விலாசங்களும் படுகிறபாடு (பகுதி 2)



நண்பர் சொன்னதுபோல போனால் ....

மக்டொனால்ஸ் வந்தது ..

அப்புறம் ஆ.. அப்படியே கொஞ்சத்தூரம்  ஓட....

அப்படா ஒரு  சுப்பமார்க்கட் வந்தது ..

எல்லாம் சரியாகத்தான்  இருக்கே என்று இறங்கி அவன் சொன்னதுபோல பின்பக்கமாக  நடந்தால்...

ஒரு நீலக்கட்டிடடமும்   காணோம் !


அந்தப்பக்கம்

இந்தப்பக்கம்

முன்னாலை

பின்னாலை

எல்லா இடமும் எல்லாப்பக்கமும் சுத்தி சுத்தி தேடினாலும் நீலக்கட்டிடத்தைமட்டும் கண்டுபிடிக்கவே இல்லை.
இதற்கிடையில செல்லம்மா ரோட் பெயர்  கட்டிட நம்பர்  என்ன  என்று கேட்டு தொணதொணக்கத் தொடங்க

நான் சோகமாக அதைதான் அவன் தரவில்லையே ..

நீங்கள் எப்பொழுதுதான் எதைத்தான் ஒழுங்காக செய்திருக்கிறியள்.

எந்த இடத்துக்குத்தான் ஒழுங்காகப் போய்ச் சேர்ந்திருக்கிறியள் என்று அர்ச்சனை செய்ய  தொடங்கிவிட்டா.

பொறும் பொறும் இப்ப எதுக்கு எண்ணையில போட்ட அப்பளம்போல பொரியிறீர்... தேடிக்கொண்டுதானே இருக்கிறன்.. நீரும் நீல கட்டிடம் தெரியுதா பாரும் என்றபடி கொஞ்சம் எட்ட நழுவினேன்.

அப்படி ஒண்டுமே இல்லை...

இனி யாரவது புதிதாக நீல பெயின்ட் அடிச்சாத்தான் நீல கட்டிடம் வரும் என்ற  செல்லமாவின் கடியை கேட்காத மாதிரி சூப்பர் மார்கட்டை

கோவில் வெளிவீதி சுத்தி வாறமாதிரி சுத்தி வந்தும் அப்படி ஒரு கட்டிடமும் காணவில்லை!!!

செல்லம்மா கெதியா ஓடிவந்து காரில ஏறும்?

என்னப்பா காரிலை ஏறு ஏறு என்று கத்துறியள்.

கதைத்துக்கொண்டு நிற்க நேரமில்லை ஏறும் கெதியா.

உங்களுக்கு எப்பபாருங்கோ ஒரே அவசரந்தான் கதவை சாத்துறதுக்கிடையிலை ஏன் இப்படி காரை எடுக்கிறியள்.
என்ன வழமைபோல வயிற்றைக் கலக்குதே டாய்லெட்டுக்குபோகோணுமே

உந்த நக்கலைவிட்டிட்டு
முன்னலை போற அந்த பச்சைக்காரை பாரும்அதற்குள்ளை - காருக்குள்ளை இருக்கிற ஆட்களை ஆரென்றுபாருமன் விளங்கும் விசயம்.

ஏனப்பா எனக்கு வடிவாத்தெரியேல்லை. யாரென்றாலும் எங்களுக்கு தெரிஞ்ச ஆட்களே? ஆரென்று சொன்னால்தானே தெரியும்.

ஆரென்று தெரிஞ்சால்தானே சொல்லுறதுக்கு.

என்ன லூசுக்கதை கதைக்கிறியள்.

உமக்கு எப்ப என்ரை கெட்டித்தனம் புரிஞ்சுது.
பின்சீட்டில இருக்கிற ஆட்களைப்பாருமப்பா.
வடிவான சாரியோட ஒரு பொம்பிளை பக்கத்தில சுடிதார்போட்ட இரண்டு பெட்டையள்.

ஐயோ காமெரா.

இப்ப எதுக்கு காமெரா?
உமக்கு எப்பபார்த்தாலும் எதைக்கண்டாலும் படம் எடுக்கிறது படமெடுக்கிறதே தொழிலாப்போட்டுது.

இல்லையப்பா முன்னாலை கமெராகிடக்கு.

ஒருநாளென்றாலும் ஒழுங்கா கார் ஓடவிடுவீரே? எங்கே டாஸ்போர்ட்டுக்கையோ முன்சீற்றிலையோ வைச்சனீர்.
ஐயோ நாசமாபோக. லைற்றொன்று விழுந்தது உம்மட கதையளைக்கேட்டதில முன்னாலை வந்த கமெராவை கவனிக்காமல் ஸ்பீட்டா ஓடிப்போட்டன் போலகிடக்கு. வேகக்கட்டுப்பாட்டு காமெரா படம் பிடிச்சிட்டுதுபோல இப்ப அநியாயத்துக்கு 50 ஒயிரோ தண்டம் கட்டவேணும்.
சீ ஒரு செக்கன்ட் கவனியாமல் விட்டிட்டன் பச்சைக்காரையும் இப்ப காணேல்லை.

அதைத்தானேயப்பா இவ்வளவு நேரமாக கமெரா கமெரா என்று கத்தினனான் கேட்டால்தானே. இப்ப கட்டுங்கோ தண்டத்தை
அங்க முன்னாலை மூன்றாவதாக போகுது கார்.

உள்ளை கவனிச்சனியளே செல்லம் சேலை சுடிதாரோட அவையும் சிலோன் ஆட்கள்போலத்தான்கிடக்கு அவையும் நாடகத்துக்குத்தான் போகினம்.பின்னாலை போனால் நாங்களும் போய் சேர்ந்திடலாம்.

இன்றைக்குத்தான் உங்களுக்கு மூளை ஒழுங்கா வேலை செய்திருக்கு.
அவங்கள் காரை நிற்பாட்டுறாங்கள் முன்னாலை ஒரு இடம் கிடக்கு அதிலை காரை பார்க்க்பண்ணுங்கோ.

ஓமப்பா செல்லம் அங்கை அங்கை... அந்த மண்டப வாசலிலை 10- 15 மனுசனுகள் சிகரெட் பத்திக்கொண்டு நிற்கினம். இதுதானப்பா இடம் இடைஇவேளை விட்டிட்டாங்கள்போலக்கிடக்கு.
கெதியா இறங்கி நடவும்.

கண்டுபிடிச்ச சந்தோசத்தோட வாசல் கதவை திறந்துகொண்டு உள்ளை எட்டிப்பார்த்த நான்
அங்கை மேடையை பாருமப்பா செல்லம். சுப்பர் செற்றெல்லாம் போட்டிருக்கிறாங்கள் நாடகத்துக்கு.

செல்லம்மா என்றால் பதைபதைச்சுப்போய் பேசாமல் திரும்பி நடவுங்கோ காருக்கு என்று காதுக்கை கிசு கிசுத்தாள்.

என்ன செல்லம் நகைப்பெட்டியை மறந்துபோய் வீட்டிலை விட்டிட்டு வந்திட்டீரே.

விசர்கதை கதையாமல் கெதியா வாங்கோ உது யாரின்ரையோ கலியாணம். மணவறையெல்லோ போட்டுக்கிடக்கு ஐயர் வேற உக்கார்ந்து இருக்கிறார்.

நல்லவேளை உள்ளைபோய் உட்காரமுதல் கவனிச்சிட்டீர்.

இப்ப என்னப்பா செய்யலாம் செல்லம்.

வேற வேலையில்லாமல் சுற்றிச் சுற்றிவாறதைவிட்டிட்டு அந்தாளுக்கு அடியுங்கோ போனை
"ஒம்ம் ஒம்ம் அதுவும் சரிதான் ... " என்று சொல்லிக்கொண்டு வரச்சொல்லிக்கூப்பிட்ட நண்பன் சுதனின்றை கைத்தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தன்.

மறுமுனையிலிருந்து " அலோ ஆர் கதைக்கிறியள் " என்று பெண்குரல் கேட்டது!

நான் திடுக்கிட்டு தட்டுத்தடுமாறி சு... சுதன் சுதனோட..... என்று தொடங்கவும்

மறுமுனையில் உனக்கு வந்தனென்றல் இப்ப .... மூடு வாயை.....

தங்கச்சி ... நான் அப்புறம் எடுக்கிறன் என்று பதட்டத்துடன் நான் சொல்ல

இல்லை அண்ணை அது உவள் எங்கட சின்னவள் சியோனா போனைத்தா என்று அடம்பிடிக்கிறாள் அதுதான்.... அவளிட்டை குடுக்கிறன் ஒருக்கா கதையுங்கோ

நானும் எனக்கு வந்த சோதனையை  நினைத்தபடி ..

ஹலோ ஹலோ சியோனா

நா ஙே  நே ..

 சியோனாக்குட்டி உன்னோட பேரென்ன மாமாக்கு  சொல்லு பார்க்கலாம்?
மாம    நா ஙே  ஙே நே ..  ( ஏ லூசு ஏன் இப்படி கேனத்தனமான கேள்வியா கேட்கிறே ? என்று அவன் மொழியில சொல்லியிருப்பாளோ)

ஹலோ..  ஹலோ...
மாமாக்கு ஒரு உம்மா கொடுங்கோ.

அண்ணை அது நான் சொல்லுங்கோ அவள் ஓடீட்டாள்.

தங்கச்சி உந்த நாடகம்  நடக்கிற மண்டபத்தை கண்டுபிடிக்கமுடியேல்லை... ஒருக்கால் வடிவா வாறபாதை சொல்லுங்கோ?

எனக்கு தெரியாது அண்ணை சுதனை கேட்டியள் என்றால்  சொல்லுவார்.

அதுதான் தங்கச்சி சுதனோட கதைக்கவேணும்... அவரிடம் போனைக்கொடுங்கோ.....

அவர் வீட்டை இல்லை அண்ணை. மத்தியானமே புறப்பட்டிட்டார்.

என்னது  நீங்கள் மண்டபத்தில்  இல்லையா....

ஓம் நான் வீட்டிலதான் நிக்கிறன் ...உந்த விசர் நாடகம் பார்க்க நான் போகவில்லை ...

உங்கட அவரின்ரை கைத்தொலைபேசிதானே இது.  கைத்தொலைபேசியை கொண்டுபோகேல்லையே..."

இல்லையண்ணை அவர் பொதுவாக  கொண்டுபோறேல்லைத்தானே.

ஏன் தங்கச்சி

கண்ட கண்ட நேரத்திலையும் கண்டவனெல்லாம் எடுத்து
ஒரே தொந்தரவாகக்கிடக்கு என்று அவர் பொதுவாக  கொண்டுபோறேல்லை..

சட்டென்று நான், சரி தங்கச்சி நான் போனை வைக்கிறன் என்று டக் எண்டு லைனை கட் பண்ணியிட்டன் !

என்ன நடந்தது  என்று செல்லம்மா தொடங்க

 அடுத்ததாக என்ன நடந்தது என்றதை அப்புறம் சொல்லுறான்....

இப்ப செல்லம்மாவை கொஞ்ச....
என்ன இது கெட்ட பழக்கம் கொஞ்ச.... என்று தொடங்கமுதலே கதையை படிக்கிறதை விட்டிட்டு எனக்குப்பின்னாலை ஓடிவாறியள்.

கடையில இவ்வளவு நேரமாக தனியநின்று ஓடி ஓடி தொழிலைக் கவனிச்ச செல்லம்மாவை
கொஞ்சநேரம் ஓய்வு எடுக்கச்சொல்லிப்போட்டு. ..
நான் கடையைக் கவனிக்கவேணும் என்று சொல்லவந்தனான்.

சரி சரி அசடு வழிய நிற்கிறதைவிட்டிட்டு போய்
உங்க உங்க ஆத்துக்காரனையோ காரியையோ மடக்கி மடியில போடுற வழியை தேடுங்கோ.
முடியேல்லையென்றால் அதுக்கும் ஒருவழி இருக்கு அதையும் அப்புறம் ஒருதடவை சொல்லுறன்.

அனால் இப்ப இடத்தைகாலிபண்ணுங்க பிளீஸ்

இதைவிட சுப்பர் காமெடி ஒன்று இருக்கு.
அதை அடுத்ததடவை சொல்லுறன்.

விலாசம் தேடல்கள் தொடரும்......

நேசமுடன் அம்பலத்தார்

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பரபரப்பு... ஆவலுடன் தொடர்கிறேன்...

பராசக்தி said...

நவிகேட்டர் விலாசம் ஏதுமின்றி முன்பு பழக்கதிலிருந்த road directory கூட இல்லாமல் வெறும் பச்சை போர்டை மட்டும் நம்பி இங்கு எத்தனை சனம் காரோடுதென்று உங்களுக்குத் தெரியுமே அம்பலத்தார்?, நிற்க செல்லம்மாவிடம் பேச்சு வாங்கும் சம்பவமெல்லாம் உங்களுக்கு பழகிப்போன விஷயம். ஆனால் மழலை மொழி பேசும் குழந்தைகளிடமுமா நீங்கள் எக்குத்தப்பா மாட்டுப் பட்டு ஆன்டியிடம் 'மாமாவுக்கு' முத்தம் கேட்க வேணும்/? நல்ல சிரிப்புத்தான் போங்கோ

நிலாமதி said...

வணக்கம் அம்பலத்தார்....
...........இப்ப தானே கூகிள் வரை ப்படம் என்றுவந்து விட்டது ..( google map )ரோட்டு விலாசாம் வீட்டு விலாசம் கொடுக்க டக் என்று .. வாசலிலே கொண்டுபோய் விடும்....

...சும்மா செல்லம்மாவிடம் பேச்சு வா ங்கி கொண்டு ..

முற்றும் அறிந்த அதிரா said...

ஹா..ஹா..ஹா.. அம்பலத்தார் அண்ணன்... சூப்பராச் சொல்லுறீங்கள் கதை... அடிக்கடி செல்லம்மா ஆன்ரியிடம் ஏச்சு வாங்குறீங்கள்:))

இராஜ முகுந்தன் said...

காமடியா இருந்தாலும் மாமா செல்லமாட்ட வாங்கிற திட்டுகள் உண்மைய இருக்குது.

Anonymous said...

இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

எஸ் சக்திவேல் said...

>கண்ட கண்ட நேரத்திலையும் கண்டவனெல்லாம் எடுத்து
ஒரே தொந்தரவாகக்கிடக்கு என்று அவர் பொதுவாக கொண்டுபோறேல்லை

ஹீ ஹீ :-)