நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Sunday

ஆக்கும்போதே கிக்கு ஏத்தும் தேங்காய்சாதம்



 


அம்பலத்தார் அதை எழுதி இதை எழுதி கடைசியலை எழுத விசயம் இல்லாம அட்டில்கூடத்திலை(அதுதான் சமையல்கட்டை சொல்லுறன்) வந்து நிக்கிறான் என்று முணுமுணுக்கிறது கேட்குது.

உங்களுக்கு எல்லாம் பதில் சொல்லமுன்னம் நாங்க இப்ப செய்யப்போற தேங்காய்சாதத்துக்கு வீட்டிலை தேங்காய் இல்லாதவங்க சட்டென்று ஓடிப்போய் தென்னையிலை ஏறுங்கோ. தென்னையிலை தேள் இருக்கிறதென்று ஊரிலை கதைக்கிறவை. காய் பிடுங்கிற அவசரத்திலை கண்டபடி கையை வைச்சு தேள்கொட்டினால் அதுக்கு நான் பொறுப்பில்லை. வீட்டிலை முழுத்தேங்காய் இருக்கிறவங்க தேங்காய உரிக்கிற வழியைப்பாருங்கோ. உரிச்ச தேங்காய் இருக்கிறவங்க பட்டென்று உடைச்சு பக்குவமா துருவுங்கோ நான் மாற்றரை சொல்லுறன்.


என்ரை அம்பலத்தார் பக்கத்தை படிக்கிறவங்களிலை பாதிக்குப் பாதி பொண்ணுங்க. அதில கொஞ்சப்பேர் "என்ன அம்பலத்தார் எப்பபார்த்தாலும் ஆம்பளைங்க சமாச்சாரமாக எழுதிக்கொண்டு... நம்மளையும் கொஞ்சம் கவனிக்கமாட்டியளா" என்று சிணுங்கிக்கிக்கொண்டு இருக்கிறாங்கள் அதுதான் இன்றைக்கு  ஞாயிற்றுக்கிழமை லீவு நாளும் அதுவுமாக இந்த மாற்றரை எழுதுகிறன்.


"அட என்னைய்யா இது இப்படி முறாய்க்கிறிங்க." இதுவரை சொன்னதை கேட்டுகொண்டு நின்ற அம்பளைங்க கொஞ்சப்பேர் "அடடா அம்பலத்தார் உண்மையிலையுமே சமையல்கட்டிலைதான் நிற்கிறார்" என்று சொல்லினபடி எஸ்கேப் ஆகிறதுக்குத் தயாராகிறியள்.

அவசரப்படாதையுங்கோ நீங்க இப்படியெல்லாம் செய்கிறதாலைதான் ஆம்பளைங்க அவசரபுத்திக்காரங்கள் என்று சொல்லுறவை. காதை கொஞ்சம் கிட்ட கொண்டுவாங்கோ பொம்பளைங்க காதிலை விழாம உங்களுக்கு மட்டும் ரகசியமா சொல்லுறன்." இந்த தேங்காய்சாதத்தை வச்சே உங்க வீட்டுக்காரியை Girl Friend ஐ எல்லாம் கவிழ்த்து எப்படி உங்க பாக்கற்றிலை சீ..... காலடியிலை வைக்கிறதென்றுதான் சொல்லவாறன் ஓடாமல் நின்று விசயத்தை கேளுங்கோ.

கட்டினவங்களுக்கு Idea
சொல்லுறதைவிட்டிட்டு முதல்லை எங்களுக்கு ஒரு வழி சொல்லய்யா நாங்க Girl Friend, Lover கூட இன்னமும் இல்லாத இளவட்ட பசங்களும்தானே உங்க பக்கத்தை சுத்திச்சித்தி வந்திட்டிருக்கம் என்று கொஞ்சப்பசங்க அருவா தூக்கிறது தெரியுது. அவசரப்பட்டு வெட்டிச் சாய்ச்சிடாதையுங்கோப்பா! உங்களுக்கும் கைவசம் Idea இருக்கு அப்புறம் சொல்லுறன் முதல்லை கத்தியை தூரப்போடுங்கோ. முதல்லை கட்டினவங்களுக்கு சொல்லுறதை சொல்லிப்போட்டு உங்களிட்டை வாறன்.

உங்க அவ ஆத்துக்காரி, Girl Friend, டாவு, Lover சமைக்கும்போது ஐயோ Darling தனிய நின்று சமைக்கிறியே அடுப்பு Heat இல வெந்திடப்போறாய் நான் கெல்ப் பண்ணுறன் என்று சொல்லிக்கொண்டு அவ அடுப்பில சாதத்தை கிளறிட்டு இருக்கும்போது பின்னாடிபோய் செல்லமா கட்டிக்கிறது, சாதத்தை எட்டிப்பார்க்கிர சாட்டிலை பின்னாடி நின்று எட்டி காதோரம் பச்சென்று ஒரு இச் கொடுக்கிறது என்று இன்பத்தொல்லையளாக கொடுத்துப்பாருங்கோ. நீங்க எங்கையோ போயிடுவிங்க.  அப்புறம்உங்க காட்டில மழைதான்!

"அட போய்யா நீயும் உன்ரை தேங்காய் சாதமும் எங்களுக்கு இதுபோதும்" என்று திட்டக்கூட நேரமில்லாமல் கனபேர் Hai Darling Kitchen இல என்ன செய்திட்டிருக்கிங்க என்று சொல்லிக்கொண்டு escape ஆ
கிட்டாங்க.

என்ரை வீட்டிலையும் சமையல்கட்டிலை இருந்து எதோ நல்ல வாசனை வருகுது என்ன என்று பார்த்திட்டுவாறன்.
"Hai Chellam! come we will have some nice time."

என்ன செய்கிறதென்று தெரியாமல் முழிச்சுக்கிட்டு நிற்கிறவங்க இதோ இருக்கிற தேங்காய் சாத செய்முறையை எடுத்திட்டுபோய் செய்துபாருங்கோ. நான் அப்புறமாக வந்து Taste பண்ணிப்பார்க்கிறன்.


Bye.



Chellam´s  Special

தேங்காய் சாதம்



அரிசி ( பச்சை அரிசி / பாசுமதி அரிசி ) - 500 கிராம்
தேங்காய்த்துருவல் - 2 கப்
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 50g
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு (கஜு) அல்லது நிலக்கடலை(கச்சான் ) 15
நெய் -
1  டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணை -2   டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு 



செய்முறை:

அரிசியை சிறிது உப்பு போட்டு வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும்

அல்லது ரைஸ் குக்கரில் தனித்தனி சாதமாக வரும்படி
(உதிரியாக )வேகவிடவும் .
ஒரு  அகண்ட பாத்திரத்தில் சாதத்தைக் கொட்டி ஆறவிடவும்
ஒரு வாணலியில் எண்ணை (தேங்காய் எண்ணெய் கூடிய சுவை ஆனால்  நீங்கள் வழமையாக பாவிக்கும் எண்ணையையும் உபயோகப்படுத்தலாம்.) விட்டு, சூடானதும் அதில் கடுகு போட்டு வெடித்தவுடன், கடலைப்பருப்பு , உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும்.  பின்  அதை ஒரு தட்டில் எடுத்துவிட்டு  அந்த வாணலியில்  எண்ணெய் விட்டு  சிறிதாக வெட்டிய வெங்காயம் , நீளமாக    அரிந்த  பச்சைமிளகாய்   போட்டு வதக்கவும் . நெய்யில் முந்திரிப்பருப்பு, பெருங்காயம்,  கறிவேப்பிலைச் சேர்த்து, சிறிது வறுக்கவும். பின்னர் அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து, ஓரிரு வினாடிகள் வத‌க்கி, உப்பு சேர்த்து இறக்கி வைத்து, அதில் சாதத்தைக் கொட்டிக் கிளறவும்.


Special Tips: தேங்காய்சாதத்திற்கு உருளைக்கிழங்கு பிரட்டல் அப்பளம் நல்ல காம்பினேசன் :)

இருபத்தைந்து வருசத்துக்குமுன்னாடி என்ரை செல்லம்மாவின்ரை சமையலிலை மயங்கின நான் இன்னமும் எழுந்திருக்கவில்லை! என்ன ஒரு சின்ன சிக்கல் அவ மாதத்துக்கு ஒருவாட்டிதான் சமைப்பா! அவ சமைக்கும்போது செய்முறைகளை உருவி உங்களுக்கும் தர முயற்சிக்கிறன். அதுவரை செல்லத்துக்கு ஒரு சியர்ஸ்.






நேசமுடன் அம்பலத்தார்.



43 comments:

நிரூபன் said...

வணக்கம் ஐயா,
முதலாவது படம் சில எழுத்துக்களை மறைக்கிறது.
கொஞ்சம் மேலே கீழே அசைத்து சரிப்படுத்த முடியுமா?

நிரூபன் said...

என்ரை அம்பலத்தார் பக்கத்தை படிக்கிறவங்களிலை பாதிக்குப் பாதி பொண்ணுங்க. //

ஐயா, சமையல் அவசரத்திலும், ஒரு கிளு கிளுப்பைக் கூட்டிறாரு.

நிரூபன் said...

உங்க அவ ஆத்துக்காரி, Girl Friend, டாவு, Lover சமைக்கும்போது ஐயோ Darling தனிய நின்று சமைக்கிறியே அடுப்பு Heat இல வெந்திடப்போறாய் நான் கெல்ப் பண்ணுறன் என்று சொல்லிக்கொண்டு அவ அடுப்பில சாதத்தை கிளறிட்டு இருக்கும்போது பின்னாடிபோய் செல்லமா கட்டிக்கிறது, சாதத்தை எட்டிப்பார்க்கிர சாட்டிலை பின்னாடி நின்று எட்டி காதோரம் பச்சென்று ஒரு இச் கொடுக்கிறது என்று இன்பத்தொல்லையளாக கொடுத்துப்பாருங்கோ. நீங்க எங்கையோ போயிடுவிங்க. அப்புறம்உங்க காட்டில மழைதான்!
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஐயா, ஆத்துக்காரி இல்லாதவங்க என்ன பண்றது”?
எங்கே போய் புடிக்கிறது?

நிரூபன் said...

Chellam´s Special//

ஆள் வைச்சிருக்கிற பேரைப் பாருங்க,.
செல்லம் ஸ்பெசலாம்!

நிரூபன் said...

மாசத்திற்கு ஒருவாட்டி சமைச்சாலும் சூப்பர் சமையலா இருக்கே!
நன்றி ஐயா.

மாசத்தில 29 நாளும் வீட்டில உங்க கை ராசி தானே!

நான் சமையலிலை என்று சொல்ல வாறேன்.

அம்பலத்தார் said...

நிரூபன் said...
//வணக்கம் ஐயா,
முதலாவது படம் சில எழுத்துக்களை மறைக்கிறது.கொஞ்சம் மேலே கீழே அசைத்து சரிப்படுத்த முடியுமா?//
திருத்திவிட்டேன் இப்போ சரியா நிரூ

அம்பலத்தார் said...

நிரூபன் said..
//ஐயா, சமையல் அவசரத்திலும், ஒரு கிளு கிளுப்பைக் கூட்டிறாரு.//
கிளுகிளுப்பாக இருப்பது மனதுக்கும் உடம்புக்கும் நல்லாதாம்.....நிரூபன்

அம்பலத்தார் said...

நிரூபன் said...
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஐயா, ஆத்துக்காரி இல்லாதவங்க என்ன பண்றது”?
எங்கே போய் புடிக்கிறது?//

ஹா ஹா என்ன இது முழுப்பூசனிக்காயை சோத்திலை மறைக்கிற கதையாக இருக்கு. பக்கத்தில யாரோ உட்கார்ந்திருக்கிறது தெரியுதே

அம்பலத்தார் said...

நிரூபன் said...
//Chellam´s Special
ஆள் வைச்சிருக்கிற பேரைப் பாருங்க,. செல்லம் ஸ்பெசலாம்!//

ஆமா என்ரை ஸ்பெசல் எப்பவுமே செல்லம்தான்

அம்பலத்தார் said...

நிரூபன் said...
//.....மாசத்தில 29 நாளும் வீட்டில உங்க கை ராசி தானே!
நான் சமையலிலை என்று சொல்ல வாறேன்.//
No Noooo... 30 நாளும் சமைக்கத்தொடங்குவா ஆனால் ஒருநாள்தான் சமையல் முடியும். மற்றநாளெல்லாம் ஹீ ஹீ புரிஞ்சுதா

திண்டுக்கல் தனபாலன் said...

படத்தைப் பார்த்தாலே பசிக்கிறது சார் ! பகிர்வுக்கு நன்றி !

பராசக்தி said...

பதிவைப் படிக்கும் போது வாசிப்பது போலவேயில்லை. அம்பலத்தார் மேடையில் நின்று, தனியாக(stand-up comedy), ஒலிவாங்கியில் உளறியது - இல்லை இல்லை - அலறியது "என் செல்லத்தின் சமையல் பக்குவத்தை பாருங்கோவன்" என்று பறைசாற்றினாலும், ஒருவகையில் செல்லம்மாவிடம் எதற்காகவோ காக்கா பிடிக்கிறாரோ என்றும் சமசியமாய் இருக்கு. ஒருவேளை செல்லம்மாவை 30 நாளும் சமைக்க வைக்கப் போடும் பிளான் என்று நினைக்கிறேன். நமக்கு மெனு கிடைக்குதோ இல்லையோ அம்பலத்தாரின் நாவுக்கு நாளுக்கொரு ருசியான சாப்பாடு கிடைக்கும் தானே. கடைசியா ஒரு உண்மையை சொல்லவே வேணும், சமையல் செய்முறையை வாசிக்கும் போதுதான், "அடடா இது பதிவெல்லே" என மூளையில் உறைத்தது. அதுமட்டும் எங்கோ ஒரு மேடைக்கு முன்பாக இருந்து ஒலிவாங்கியில் செய்தியை உள்வாங்கிய பிரமை தான் இருந்தது. பேசாமல் அம்பலத்தார் மேடைப்பேச்சை, பதிவு செய்து வலையில் அலங்கரிக்கலாமே!

Riyas said...

தேங்காய சாதம் பார்க்கும் போதே பசிய கிளப்புதே..

நல்ல சமையல் குறிப்பு.. இவ்வளவு நாளும் பெண்கள்தான் போட்டாங்க இப்போ போட்டிக்கு நீங்களும்.. நல்லது.

Riyas said...

முதலில் உங்க நகைச்சுவையை ரொம்பவே ரசித்தேன்..

முன்பு இலங்கை வானொலியிலும் ரூபவாஹினியில் ஒளிபரப்பிய ஒரு சில நாடகங்களிலும் யாழ்ப்பாண உரைநடையுடன் கூடிய நகைச்சுவையை மிக விரும்பி கேட்பதுண்டு,,

//சாதத்தை கிளறிட்டு இருக்கும்போது பின்னாடிபோய் செல்லமா கட்டிக்கிறது, சாதத்தை எட்டிப்பார்க்கிர சாட்டிலை பின்னாடி நின்று எட்டி காதோரம் பச்சென்று ஒரு இச் கொடுக்கிறது//

ரொம்ப கிளு கிளுப்பான மேட்டரா இருக்கே..

ஹேமா said...

செல்லம்மா அக்காவுக்குத்தான் எல்லாப் பெருமையும்.தேங்காய் என்றாலே வாசனை அதிகம்.அதுவும் வெங்காயம் சேர்த்து பஸ்மதி அரியோட.சொல்லவே வேண்டாம்.அதுசரி...மாசம் முழுக்க சாப்பாடுக்கு என்ன வழி?
மாசத்துக்கு ஒருக்கா சமைச்சு குளிர் சாதனப் பெட்டிக்குள்ள வச்சிடுவா போல !

சமையல் பதிவுக்கு முன்னம் என்ன கொஞ்சல் வேண்டிக்கிடக்கு.
ஆம்பிளைகள் சமையலைப் படிச்சு சமைச்சுக் குடுக்கட்டும் எண்டு இல்லாமல் படிச்சு முடிக்க முன்னமே கொஞ்சப் போய்டுவினம் !

இங்க எங்க தென்னை மரம்.ஏறிப் பிடுங்கவும் உரிக்கவும் !

உங்கள் பக்கத்தில் geetha6 என்கிற ஒரு பதிவரின் பக்கம் கண்டேன்.இப்போ காணவில்லை !

shanmugavel said...

சமையல் குறிப்புக்கு வித்தியாசமான படம்.ஆக்கும்போது கிக் ஏத்தினால் சமையல் தீஞ்சு போகாதா?

The Chennai Pages said...

Coming Soon...
http://faceofchennai.blogspot.in/

தனிமரம் said...

அம்பலத்தாரின் சாப்பாட்டு நானும் பிரியன் என்ன தேங்காய் தான் அதிகம் கொழுப்பு என்று இப்ப தள்ளிவைக்கச் சொல்லுறாங்க.

தனிமரம் said...

பண்ணுறன் என்று சொல்லிக்கொண்டு அவ அடுப்பில சாதத்தை கிளறிட்டு இருக்கும்போது பின்னாடிபோய் செல்லமா கட்டிக்கிறது, சாதத்தை எட்டிப்பார்க்கிர சாட்டிலை பின்னாடி நின்று எட்டி காதோரம் பச்சென்று ஒரு இச் கொடுக்கிறது என்று இன்பத்தொல்லையளாக கொடுத்துப்பாருங்கோ. நீங்க எங்கையோ போயிடுவிங்க.  அப்புறம்உங்க காட்டில மழைதான்!//  
தனிமரமா இருக்கிறவங்களை இப்படி உசுப்பி விடலாமா??? 

தனிமரம் said...

பண்ணுறன் என்று சொல்லிக்கொண்டு அவ அடுப்பில சாதத்தை கிளறிட்டு இருக்கும்போது பின்னாடிபோய் செல்லமா கட்டிக்கிறது, சாதத்தை எட்டிப்பார்க்கிர சாட்டிலை பின்னாடி நின்று எட்டி காதோரம் பச்சென்று ஒரு இச் கொடுக்கிறது என்று இன்பத்தொல்லையளாக கொடுத்துப்பாருங்கோ. நீங்க எங்கையோ போயிடுவிங்க.  அப்புறம்உங்க காட்டில மழைதான்!//  
தனிமரமா இருக்கிறவங்களை இப்படி உசுப்பி விடலாமா??? 

தனிமரம் said...

பண்ணுறன் என்று சொல்லிக்கொண்டு அவ அடுப்பில சாதத்தை கிளறிட்டு இருக்கும்போது பின்னாடிபோய் செல்லமா கட்டிக்கிறது, சாதத்தை எட்டிப்பார்க்கிர சாட்டிலை பின்னாடி நின்று எட்டி காதோரம் பச்சென்று ஒரு இச் கொடுக்கிறது என்று இன்பத்தொல்லையளாக கொடுத்துப்பாருங்கோ. நீங்க எங்கையோ போயிடுவிங்க.  அப்புறம்உங்க காட்டில மழைதான்!//  
தனிமரமா இருக்கிறவங்களை இப்படி உசுப்பி விடலாமா??? 

தனிமரம் said...

"அட என்னைய்யா இது இப்படி முறாய்க்கிறிங்க." இதுவரை சொன்னதை கேட்டுகொண்டு நின்ற அம்பளைங்க கொஞ்சப்பேர் "அடடா அம்பலத்தார் உண்மையிலையுமே சமையல்கட்டிலைதான் நிற்கிறார்" என்று சொல்லினபடி எஸ்கேப் ஆகிறதுக்குத் தயாராகிறியள். //

வேலையே சமையல்கட்டில் பிறகு எப்படி ஓடிப்போறது.ஹீஹீ

அம்பலத்தார் said...

திண்டுக்கல் தனபாலன் said...
//படத்தைப் பார்த்தாலே பசிக்கிறது சார் ! பகிர்வுக்கு நன்றி !//
செய்முறையை அப்படியே கடைப்பிடிச்சியளென்றால் உங்க ஆத்துக்காறியும் அசத்தலான விருந்துபடைச்சிடுவா!

அம்பலத்தார் said...

பராசக்தி said...

//...ஒரு உண்மையை சொல்லவே வேணும், சமையல் செய்முறையை வாசிக்கும் போதுதான், "அடடா இது பதிவெல்லே" என மூளையில் உறைத்தது. அதுமட்டும் எங்கோ ஒரு மேடைக்கு முன்பாக இருந்து ஒலிவாங்கியில் செய்தியை உள்வாங்கிய பிரமை தான் இருந்தது. பேசாமல் அம்பலத்தார் மேடைப்பேச்சை, பதிவு செய்து வலையில் அலங்கரிக்கலாமே!//

ஹா ஹா என்ரை பேச்சை என்ரை வீட்டிலையே ஒருத்தருக் கேக்கிறது இல்லை. இந்தலட்சணத்தில பேச்சை பதிவு செய்து வலையில் பதிவேற்றச்சொல்லுறியளே. என்னை வைச்சு காமடிபண்ணுவதென்றே முடிவு எடுத்திட்டியளோ சகோ. பராசக்தி. Please மாதத்திற்கு ஒருதடவை கிடைக்கிற சாப்பாட்டிற்கும் வேட்டு வச்சிடாதையுங்கோ

அம்பலத்தார் said...

Riyas said...
//... நல்ல சமையல் குறிப்பு.. இவ்வளவு நாளும் பெண்கள்தான் போட்டாங்க இப்போ போட்டிக்கு நீங்களும்.. நல்லது.//

நான் எப்போ ரியாஸ் சமையல்குறிப்பு எழுதினது. நான் பாதி செல்லம்மா பாதி சேர்ந்த கலவைதானே இந்த அம்பலத்தார். அதுதான் இந்தப்பதிவிலை முன்பாதி நான் பின்பாதி செல்லம்மா......

அம்பலத்தார் said...

ஓகோ! புரிகிறது, ரொம்பநாள் முன்னாடியே இனிமை கொஞ்சும் இலங்கை தமிழிற்கு அடிமையாகிட்டிங்கள். பாராட்டுக்களிற்கு நன்றி ரியாஸ்

அம்பலத்தார் said...

ஹேமா, 30 நாட்களும் செல்லம்மா சமைக்கத்தொடங்குவா ஆனால் 29 நாட்களும் நான் சமையலில் உதவிசெய்யப்போறதாலை, சமைச்சுமுடிக்கிறதில்லை ஆனாலும் மாசம் பூராவும் பசியாறியாறிடுவம் ஹா ஹா... அதுதான் மாற்றர்.
ஓகோ உங்க வீட்டிலையும் செல்லம்மாவின்ரை சமையல் குறிப்பை செய்துபார்க்காமல் நான் சொன்ன சமையல் குறிப்பைத்தான் செயல்படுத்துறியளோ ரொம்ப நல்லது.
அட பொம்பளை நக்கீரா? உங்கவீட்டில தென்னைமரம் இல்லையோ? தவறென்றால் தவறுக்கேற்றால்போல எனக்கு ஒருசில பின்னூட்டங்களை குறைத்து எழுதுங்கோ. ஆனால் அதுக்காக ரொம்ப குறைச்சிடாதையுங்கோ, தாயகத்திலும், தமிழகத்திலும் இருக்கிற கனபேர் என்ரை கதையை கேட்டு தென்னையிலை ஏறினவை என்று கேள்விப்பட்டன்.
ஹேமா என்ரை வலைப்பூவில், பொம்பளைங்க சமாச்சாரங்களை பதிவிடுகிற கொஞ்சபேரை பிடிச்சு ஒரு பெட்டியிற்குள் போட்டு வைத்திருக்கிறன். அவர்களில் மிக அண்மையில் பதிவிட்ட 5 பேரின் பதிவுகள் வலப்பக்கத்திலை இருக்கிற 5 சின்ன யன்னலுகளிற்காலை தலையை நீட்டும். So geetha6 அண்மையிலை பதிவிடவில்லை என்பதுதான் அர்த்தம்.

அம்பலத்தார் said...

shanmugavel said...
//சமையல் குறிப்புக்கு வித்தியாசமான படம்.ஆக்கும்போது கிக் ஏத்தினால் சமையல் தீஞ்சு போகாதா?//
ஹீ ஹீ, சமையல் தீஞ்சுபோனாலும் நாங்க பசியாறிடுவமில்ல.

அம்பலத்தார் said...

The Chennai Pages said...

//Coming Soon....//

ஐயா or அம்மா கும்பிடறனுங்கோ. பின்னூட்டம் என்கிறது கருத்துக்களை சொல்லுவதற்கான இடம் விளம்பரப்பலகை இல்லை என்பது எனது எண்ணம்.

ஹேமா said...

பாத்தீங்களே உங்கட குணத்தை.என்னைப் பொம்பிளை நக்கீரா எண்டு சொல்லிப்போட்டு பொம்பிளைகளின்ர பதிவு லிஸ்ட்ல சேர்க்கவே இல்ல.
இருங்கோ இருங்கோ !

உங்கட பதிவைப் பார்த்திட்டு தாயகத்தில தென்னை மரத்தில ஏறுறதெண்டா நிரூதான் !

அம்பலத்தார் said...

ஆமா நீங்கள் சொல்வது சரிதான் நேசன் தேங்காயை பாவிப்பதை குறைத்துக்கொள்வது நல்லதுதான்.

அம்பலத்தார் said...

தனிமரம் தோப்பாவதில் தடை எதுவும் இல்லையே! சீக்கிரம் ஒன்று.. இரண்டு....மூன்றாகிற வழியைப் பாருங்கோ.

அம்பலத்தார் said...

ஹா ஹாஹா... என்ன நேசன் நீங்க மூன்றுதடவை சொன்னால்தான் ஒருதடவை சொன்னதாகுமா?

அம்பலத்தார் said...

உங்களை கட்டிக்கப்போறவ பாக்கியசாலி.

அம்பலத்தார் said...

நான், இதுவரை உங்களை மீசை வைக்காத வீரபாண்டியகட்டப்பொம்மன் என்றல்லவோ நினைத்துக்கொண்டிருந்தன். நீங்க பொம்பளைங்க சமாச்சாரத்திலையே இருக்கப்போறியள் என்று சொல்லுறியள். OK. உங்க ஆசை நிறைவேறிடிச்சு அடுத்த பதிவை போட்டுப்பாருங்கோ.

ஹேமா said...

பொம்பிளை நக்கீரன்.மீசை வைக்காத வீரபாண்டிய கட்டப்பொம்மன்.அட...அட...நல்லாயிருக்கு சொல்லக் கேட்க!

சரி சரி கொஞ்சமாச்சும் நானும் பொம்பிளையெண்டு ஒத்துக்கொள்ளுங்கோவன்.சொல்லித் தெரியவைக்கவேண்டிக்கிடக்கு.
லிஸ்ட்ல சேர்த்தபடியா இனி நம்புவினம் எல்லாரும்.நன்றி நன்றி !

பராசக்தி said...

உங்கள் எழுத்தாக்கம் மட்டுமல்லாமல் பேச்சுவழக்கும் நல்லவிதமாக இருப்பதனால் தான், மேடை நாடகம் போல தனி நடிப்பையும் பதிவில் அரங்கேற்றலாம் என்பது என் தாழ்மையான கருத்து. தவிர எழுதும் (தட்டச்சில் தட்டும்) நேரம் குறையும் அதனால் குசினியில் செல்லம்மாவுடன், இன்னும் அதிக செல்லம் கொஞ்சலாம். பிறகு உங்கள் வீடு மட்டுமல்லாமல் மற்ற வீடுகளிலும் சமையல் வாசனை............சொல்லி வேலையில்லை.
ஏதோ உங்கள் நன்மைக்காக பிரசங்கம் செய்யும் நிலைமைக்கு ஆளாகிவிட்டேன்.

J.P Josephine Baba said...

இன்னிக்கு தேங்காய் சாதம் வைக்க போறேன்...

அம்பலத்தார் said...

தமிழ்நாட்டுக்காரங்க போலில்லாமல் கேரளாக்காரங்களும் நம்ம ஊர்க்காரங்கபோல சமையலில் தேங்காய் அதிகம் சேர்த்துப்பாங்களே. நீங்களும் கேரளாப்பக்கம் நெடுநாடகள் வாழ்ந்ததால் அப்படித்தானோ?

ஆத்மா said...

எப்பிடித்தான் வேலையா இருந்தாலும் பரம்பரத்தொழில் தொடர்பா ஒரு பதிவு போடாட்டி ஐயாவுக்கு தூக்கமே வராது போல...

அருமையான பதிவு ஐயா பகிர்வுக்கு நன்றி

காட்டான் said...

வணக்கம் அம்பலத்தார்!
ம் அக்காவின் சமையலை வைச்சே பதிவு தேத்திட்டீங்க.. :-)

காட்டான் said...

ஒரே போட்டோவ எல்லா பதிவுக்கும் பாவிக்கிற மாதிரி இருக்கு.. அந்த படத்தில அவ்வளவு ஆசையா மச்சான்.?

Angel said...

அம்பலத்தார் ஐயா ,நலமா இருக்கீங்களா
உங்க செல்லம்மாவின் ரெசிப்பி இன்று ஐந்தாம் முறை செய்யும்போதுதான் நினைவு வந்தது உங்களுக்கு நன்றி சொல்லலையே நான். தாங்க்ஸ் .மிக அருமையா டேஸ்டா இருக்கு தேங்காய் சாதம் .