நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

சொல்லாதே யாரும் கேட்டால் .......... 9



முன்னைய பகுதிகளை படிக்க
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 8
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 7
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 6
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 5
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 4
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 3
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 2 
சொல்லாதே யாரும் கேட்டால் .......... 1


 சொல்லாதே யாரும் கேட்டால் .......... 9


"இஞ்சருங்கோ என்ன அதுக்குள்ள............... நான் பக்கத்திலை வந்ததுகூடத் தெரியாமலுக்கு......."

"காலமை எழும்பினதிலையிருந்து அரக்கப்பரக்க வேலை செய்த அலுப்பிலை ஒரு ஐஞ்சு நிமிசம் கண் அயரமுதல் இப்ப என்ன நடந்ததென்று உந்த உலுப்பு உலுப்புறீர்."

"அது வந்தப்பா ..... நானும் என்ரை ஆசையளை உங்களிட்டைச் சொல்லாமல் வேற யாரட்டைத்தான் சொல்லுறது......" என்று செல்லம்மா தொடங்க

"அட உம்முடைய ஆசையெண்டால் அது என்ரை ஆசைமாதிரித்தானே" என்று கொண்டு கன்னத்திலை ஆசை ஆசையாக ஒன்றுகுடுக்க

"ஒரு சொல்லுச் சொல்ல முந்தி இப்படி வழிஞ்சுகொண்டு வாற உங்களோட யாரும் கதைக்க இயலுமே" என்று மனுசி செல்லமாக சிணுங்க..................




"சரி சரி சிணுங்கினதை விட்டிட்டு விசயத்தைச் சொல்லுமன்" என்றன் சோகமா,

இதுகள் எதையும் கவனிக்காத செல்லம்மா..............

"கடவுளே என்று இப்ப எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. பணத்துக்கு ஒரு குறையில்லாதது மட்டுமில்லாமல், எந்தச் சபை சந்திக்குப்போனாலும்
என்ன செல்லம்மா அக்கா எங்கை வாங்கினனிங்கள், உந்தப் புதுச் சேலை உங்களுக்கெண்டு செய்ததுபோல எடுப்பாக்கிடக்கு, எப்படியக்கா ஒவ்வொரு பங்சனுக்கும் ஒரு புதுச்சேலையிலை வாறியள் அப்பிடி இப்பிடியெண்டு நல்லமாதிரிக் கதைக்குதுகள். நீங்களும் நாலைஞ்சு நாடகம் அது இதெண்டு நடிச்சுப் பேரும் புகழுமா இருக்கிறியள்............"

முடிக்கமுந்தியே நான். "உதைச் சொல்லுறதுக்கு உமக்கு இந்த நடுச்சாமத்திலை இப்பவே நேரம் கிடைச்சுது" என்று சினந்து விழுந்ததைக்கூட காதிலை வாங்கிக் கொள்ளாமலுக்கு,

"எல்லாம் இருந்தும் கொஞ்சக்காலமா எனக்கொரு சின்னக்குறையாக் கிடக்கு" என்று சொல்லவும்,

துடிச்சுப் பதைச்சு எழுந்து "உமக்கு என்ன குறை வைச்சனான். மாசத்தக்கு ஐந்தாறு புதுச்சீலை, வாற புதுப்படத்துக்கெல்லாம் கூட்டிக் கொண்டுபோறன். இன்ரனெற் ஈமெயில் என்று எதிலை குறைஞ்சுபோச்சுது."

"அதில்லையப்பா எத்தனை காலத்துக்குத்தான் நீங்கள் அவை இவையளின்ரை........... " இது மனுசி.

முடிக்க முந்தி, "நான் அதுதானே கண்டவன் நிண்டவனுக்கு எல்லாம் கை கட்டி வாய் பொத்தி வேலை செய்ய ஏலாதென்று இருந்த வேலையைத் தூக்கி எறிஞ்சுபோட்டு வந்தனான்."

"எப்பதான் சொல்லவந்த விசயத்தை முழுசாக் கேட்டிருக்கிறியள். அவரிவர் சொல்லுறதைக் கேட்டு நீங்கள் நடிக்கிறதை விட்டிட்டு நாங்கள் சொந்தமா ஒரு படம் எடுப்பமெண்டு சொல்ல வந்தால்...."

"நீர் சொல்லுறதும் நல்லதுதானப்பா ஆனாலும் உது காசைத் தின்னுற தோழில். எனக்கும் ஒரு ஆசைதான் சின்னதா ஒரு குறும்படம் எடுத்துப் பெரிய அவோர்ட்டா வாங்க வேணுமெண்டு...."

"என்னது குறும்படமோ? அது அழுதுவடிஞ்சு கொண்டு...... வடிவேலு பகிடிமாதிரி ஒண்டும் இருக்காதாம். வசனமே மொத்தத்திலை ஒரு நாலைஞ்சு தேறாதென்று சனம் கதைச்சது. அதோட சுவிஸ் பரிஸ் பிராங்பொட் என்று இடத்துக் ஒருத்தரா உந்தக் கண்றாவியளை எடுத்து ஆளாளுக்கு அவார்ட்டுகளை வேற கொத்திக் கொண்டு போட்டானுகள் என்று கேள்வி. இனி உதிலை செய்யுறதுக்குப் பெரிசா ஒன்றும் இல்லை. நாங்கள் உவன் கமலைப்போல இரண்டு பாட்டு இரண்டு பைற்றோட நல்ல ஒரு கொமடிப் படமா எடுப்பம் இஞ்சை கிட்டக்கிடையிலை எங்கட ஆக்கள் ஆரும் இந்தமாதிரி எடுத்ததாவும் தெரியேல்லை. நல்ல பேர் எழும்புமப்பா.
வசனம் எழுதுறதோட நில்லாமல் நீங்களே கதாநாயகனாவும் நடியுங்கோ. நல்ல வடிவானதொரு இளம் பிள்ளையாப் பார்த்துச் சோடியாப் போடுங்கோ. நானொண்டும் மற்றப் பொம்பிளையள்மாதிரி உதுக்கெல்லாம் கோவிக்கமாட்டன். ஆனால் அதுக்காக கதாநாயகியை கண்ட கண்ட இடத்திலை தொட்டு நடிக்கிற வேலையெல்லாம் வைச்சுக்கொள்ளாதையுங்கோ பிறகுதான் தெரியும் நான் ஆரெண்டது," என்று செல்லம்மா பெரிய மனசோட சொல்லி முடிச்சாள்.

"நீர் சொல்லுறதும் நல்லதாத்தான் படுகுது. ஒரு பாட்டு ஒரு பைற்றோட சின்னதா ஒரு கொமடிப்படம் எடுப்பம்" என்றன் ஐயா பந்தாவா.

"எங்கட சாந்தியக்கான்ரை மனுசன் எப்பவும் நல்ல பகிடியாச் சிரிச்சுக் கதைக்கிறவர் இந்தாளைக் கேட்டுப் பார்பமே நல்ல ஒரு பகிடிக் கதையா எழுதித் தரச்சொல்லி."

"உமக்கு என்ன விசரே நாங்கள் கஸ்டப்பட்டுப் படம் எடுக்க அவன் நாலு வசனத்தை எழுதிப்போட்டு பேரெடுத்துக் கொண்டு போடுவான். உந்த வேலை எல்லாம் வேண்டாம் நான் நாலுநாள் நெற்றிலை மேஞ்சனென்றால் Super கதையா சுட்டிடுவன்" என்றன்.

"சும்மா சொல்லக்கூடாது. உங்களுக்கும் இடைக்கிடை நல்லாத்தான் புத்தி வேலை செய்யுது" என்று மனிசி ஆசையா என்ரை தாடியைத் தடவ......................

எனக்கென்றால் அப்பத்தான் ராத்திரி ஆசை பத்திக்கிட்டுது.........................


"என்ன என்ன யன்னல்லை எதோ நிழலாடுது. செல்லம் முதல்லை யன்னலைக் கொஞ்சம் இழுத்து மூடுமப்பா....கொஞ்சம் ஆசையா அப்படி இப்படி கதைச்சதிலை உடனை ஆளாளுக்கு இந்தப் பக்கமாச் சுத்தத் தொடங்கிவிட்டாங்கள்."

"நம்ப இயலாது எவனாவது பொலிவூட்காரன் என்ரை கதையைச் சுட்டுக்கொண்டு போய் தன்ரை கதையெண்டு படம் எடுத்து எனக்கு முன்னாலை ரிலீஸ் பண்ணினாலும் பண்ணிப்போடுவான். முதல்லை கதையைப் பதிவுசெய்து படத்துக்குப் பூசையைப் போட்டிட்டுத்தான் கதையை வெளியிலை சொல்லவேணும் இப்ப பேசாமல் படுப்பம்" என்று செல்லம்மாவை அணைத்துக்கொண்டு லைற்றையும் அணைத்தன். 


Please.... Don´t disturb us!........ Please....   என்ன சொல்லுறது கேட்குதோ?

அப்புறமாக வந்து மிகுதிக்கதையை சொல்லுறன்.

25 comments:

HOTLINKSIN.COM said...

நண்பரே உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்திரை பதிக்கின்றன. உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

Admin said...

ஆமாம்..முதலில் கதையை பதிவு பண்ணிடுங்க..அப்புறம் ரிலீஸ் நேரத்துல என்னோட கதைன்னு சட்டம் பேசஒரு குழுவே இருக்கு..சரி மீதிக் கதையை அப்புறமா சொல்றீங்களா..சரி விளக்க அணைச்சாச்சு தொந்தரவு பண்ன விரும்பல..

பி.அமல்ராஜ் said...

வணக்கம் அம்பலத்தார்,

இன்றுதான் இந்த தொடரை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இந்தப் பகுதி சூப்பர்..

நீங்கள் என்னதான் கதை, படம், அது, இது எண்டாலும் உங்க காரியத்தில கண்ணத்தான் இருக்கிறியள்.. ஹி ஹி ஹி.. ஓகே ஓகே. உங்கள டிஸ்ரப் பண்ணல.. என்சாய்.......

நிலாமதி said...

புது வருடத்தில் வசந்தம் வீச வாழ்த்துக்கள் என்ன இருந்தாலும் குசும்புக்கு உங்களை கேட்டுத்தான் .................

ஹேமா said...

அம்பலத்தார்...பாவமெல்லே செல்லம்மாக்கா.அவவின்ர ஆசையை எல்லாம் செய்தனீங்க.இந்த ஆசையையும் செய்துபோடுங்கோ.அப்பத்தான் உருப்படுவீங்கள்.சரி சரி நான் உங்களைக் குழப்ப வரேல்ல.சுவிஸ்ல இப்ப பின்னேரம் 19.05 தான்.போய்ட்டு வாறன் !

தனிமரம் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!
கதையை மிகவும் சுவாரசியமாக கொண்டு செல்கின்றீர்கள் புதுச் சேலை வாரவாரம் வேண்டும் என்று நோண்டும் செல்லம்மாக்காவை எப்படித்தான் சமாளிக்கின்றீர்களோ!
குறும்படம் பற்றியும் நம்மவர்கலையை வளக்கனும் என்ற ஆதங்கத்தையும் தாங்கி தொடர்கின்றது கதை!

தனிமரம் said...

சமகாலத்தில் சினிமாமீது நடக்கும் கதைத் திருட்டையும் சாடிச் செல்கின்றீர்கள் பாரிசில் படம் எடுத்தால் தனிமரமும் நடிக்க
வரும் கூலிப்படை அடியாளாக இப்ப அப்படித்தான் பலர் வெளிக்கிட்டுவிட்டினம்! இதுக்கு மேல நான் உங்க டிஸ்ரப் பண்ணவில்லை நல்லநாள் பால்பழங்கள் பாடல் அருகில் ஒலிக்கவிடுகின்றேன்!ஹீஹீ

சுதா SJ said...

அம்பலத்தார் ஐயா... பேச்சுவழக்கை அப்படியே எழுத்தில் வடிச்சு இருக்கீங்கள்.
நல்லாத்தான் இருக்கு..... நான் எல்லா பகுதியும் இன்னும் வாசிக்கல்ல.....
வார சண்டே லீவுதானே... பொறுமையா எல்லாவற்றையும் படிச்சுட்டு அடுத்த பதிவில் பேசுறேன்.... :)))

சரி சரி.... நானும் பேசி பேசி உங்கள டிஸ்ரப் பண்ணல.... :))))
பாய் பாய்

காட்டான் said...

வணக்கம் அம்பலத்தார்!
என்ன ஊரெல்லாம் ஒப்பாரி வைக்கிற மாதிரி இருக்கு..?
அக்கா சொல்லுறதெல்லாம் நல்லதுக்குதானே அப்புறமென்ன வேண்டி கிடக்கு சட்டு புட்டுன்னு அக்கா ஆசைய நிறைவேத்த வேண்டியதுதானே.. இல்லாட்டி என்ன நடக்குமெண்டு நான் சொல்லித்தான் தெரியோணும் என்டில்ல..!!

அம்பலத்தார் said...

மதுமதி said...
//..சரி மீதிக் கதையை அப்புறமா சொல்றீங்களா..சரி விளக்க அணைச்சாச்சு தொந்தரவு பண்ன விரும்பல..///

மதுமதி மீதிக்கதையை அப்புறமா கேட்கிறேன் என்று சொல்லிட்டு தொந்தரவுதராமல் போனதற்கு நன்றி.

அம்பலத்தார் said...

HOTLINKSIN.COM said...
//நண்பரே உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்திரை பதிக்கின்றன. உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.//

தகவலிற்கு நன்றி நண்பா

அம்பலத்தார் said...

பி.அமல்ராஜ் said...
//நீங்கள் என்னதான் கதை, படம், அது, இது எண்டாலும் உங்க காரியத்தில கண்ணத்தான் இருக்கிறியள்.. ஹி ஹி ஹி.. ஓகே ஓகே. உங்கள டிஸ்ரப் பண்ணல.. என்சாய்.......//

ஆகா என் கஸ்டதை புரிஞ்சுகிட்ட ஒரே ஆளு நீங்கதான் அமல்!

அம்பலத்தார் said...

நிலாமதி said...
//புது வருடத்தில் வசந்தம் வீச வாழ்த்துக்கள் என்ன இருந்தாலும் குசும்புக்கு உங்களை கேட்டுத்தான்.//
தங்கையே அண்ணனின் குசும்பை ரசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றியம்மா! உங்களுக்கும் உங்க குடும்ப உறவுகளிற்கும் அன்பான ஆங்கில புதுவருட மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

எஸ் சக்திவேல் said...

பெரிசா என்ரை பெயரைப் போடுவீர்கள் என்றால், நான் google செய்து ஒரு கதை ஆக்கித்தருகிறேன் :-)

நிரூபன் said...

வணக்கம் ஐயா, மண் வாசனையோட நல்லதோர் பதிவு தந்திருக்கிறீங்க. படம் எடுக்கும் போது என்னையும் கூப்பிடுங்கோ. ஒரு சீன் நடிச்சுத் தர நான் ரெடி
ஹே...ஹே..

புங்கையூரன் said...

எங்களது ஆசைகள் விரிந்து கொண்டே போகின்றன, என்பதை அழகாக வடித்துள்ளீர்கள், அம்பலத்தார்!

அம்பலத்தார் said...

ஹேமா said...
//அம்பலத்தார்...பாவமெல்லே செல்லம்மாக்கா.அவவின்ர ஆசையை எல்லாம் செய்தனீங்க.இந்த ஆசையையும் செய்துபோடுங்கோ.அப்பத்தான் உருப்படுவீங்கள்.//
ஹா ஹா, ஹேமா நீங்க பெண் உரிமைபற்றி சிந்திப்பவராச்சே! நீங்க எப்படியாவது செல்லம்மவிற்காகத்தான் குரல்குடுப்பியள் என்பது தெரிந்ததுதான்

அம்பலத்தார் said...

Blogger தனிமரம் said...
...//குறும்படம் பற்றியும் நம்மவர்கலையை வளக்கனும் என்ற ஆதங்கத்தையும் தாங்கி தொடர்கின்றது கதை!//
உங்களிற்கும் புதுவருட வாழ்த்துக்கள் நேசன். நேசன் உங்க அபிமான இயக்குனர் விக்ரமன் போல உங்களாலும் எப்பொழுதும் எந்தவிடயத்திலும் ஆக்கபூர்வமாகவே பார்க்கமுடிவது உங்க நல்ல மனதை காட்டுகிறது.

மாலதி said...

பொங்கல் வாழ்த்துக்கள்.

அம்பலத்தார் said...

துஷ்யந்தன் said...
//அம்பலத்தார் ஐயா... பேச்சுவழக்கை அப்படியே எழுத்தில் வடிச்சு இருக்கீங்கள். நல்லாத்தான் இருக்கு .....//
எங்க தனித்துவங்களை நாங்கதானே பாதுகாத்துக்கொள்ளவேணும்.

அம்பலத்தார் said...

காட்டான் said...
//வணக்கம் அம்பலத்தார்!
என்ன ஊரெல்லாம் ஒப்பாரி வைக்கிற மாதிரி இருக்கு..?
அக்கா சொல்லுறதெல்லாம் நல்லதுக்குதானே அப்புறமென்ன வேண்டி கிடக்கு சட்டு புட்டுன்னு அக்கா ஆசைய நிறைவேத்த வேண்டியதுதானே..//
என்ன காட்டான், அக்காவை விட்டுக்கொடுக்கமாட்டிங்களே! அக்காவுக்காக குரல் கொடுக்கிறதில் முதல் ஆள் நீங்கதான்போலிருக்கே.

அம்பலத்தார் said...

எஸ் சக்திவேல் said...
// பெரிசா என்ரை பெயரைப் போடுவீர்கள் என்றால், நான் google செய்து ஒரு கதை ஆக்கித்தருகிறேன் :-)//
எப்படியாவது பெய்ரெடுத்திடலாம் என்று பாக்கிறியளோ. உங்க எழுத்துக்கள் உங்களுக்கு நிச்சயம் பெயர் வாங்கித்தரும்

அம்பலத்தார் said...

நிரூபன் said...
//...படம் எடுக்கும் போது என்னையும் கூப்பிடுங்கோ. ஒரு சீன் நடிச்சுத் தர நான் ரெடி ஹே...ஹே.//
உங்களுக்கேற்ற கதாநாயகி தேடிட்டு இருக்கிறன் கிடைத்ததும் எடுத்திடலாம்

அம்பலத்தார் said...

புங்கையூரன் said...
//எங்களது ஆசைகள் விரிந்து கொண்டே போகின்றன, என்பதை அழகாக வடித்துள்ளீர்கள்,//
உண்மைதான் மனிதரது ஆசைகள் எல்லையற்றவை மரணம்வரை நீண்டுகொண்டே செல்லும்.

அம்பலத்தார் said...

மாலதி said...

//பொங்கல் வாழ்த்துக்கள்.//
நன்றி, உங்களுக்கும் எனது அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.