இன்றைய அவசர உலகில் உயிர்வாழத்தேவையான உணவைக்கூட ஆற அமர இருந்து சமைத்துச் சாப்பிட நேரம் ஒதுக்க எம்மிடம் போதிய நேரமில்லை. இதனால்தானே Mc Donalds, PIZZA HUT, Burger king, Kentuky chicken, Dunkin coffee shop உலகெங்கும் கொடிகட்டிப் பறக்கின்றன.
துரித உணவென்றாலே குழந்தைகள்முதல் அனைவருக்கும் ஞாபகத்திற்குவருவது Mc Donalds.
துரித உணவக உலகில் அதிக விற்பனைநிலையங்களுடன் முன்னணியில் நிற்பதும் Mc Donalds என்றுதானே நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உலகிலேயே மிக அதிக கிளைகளைக்கொண்ட
துரித உணவகம் Dunkin coffee shop என்று சொன்னால் நம்பமுடியவில்லையா? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். புள்ளிவிபரங்கள் அப்படித்தான்
தெரிவிக்கின்றன. Mc Donalds என்று
சொல்லும்போதுதான் இந்தச் சுவாரசியமான விடயகும் ஞாபகத்திற்கு வருகிறது.
நானும் தொழில்ரீதியாக அடிக்கடி பிரயாணங்கள் செய்யவேண்டியிருப்பதால் அவ்வப்போது துரித உணவகங்களே எனக்குத் தஞ்சம்.
ஜேர்மனியில் எந்த ஒரு Mc Donalds இற்குச்சென்றாலும் பெரும்பாலும் ஒரு ஈழத்தமிழராவது வேலை செய்வார்.
சிறிதுகாலத்திற்குமுன் அலைந்த அலுப்புடன் ஒரு Mc Donalds இற்குள் புகுந்தன். உணவை வாங்கலாமென்று போய் நின்றால் அரை கிரவுண்ட் நிலமளவிற்கு தலையில் பெரிய வெளியா மொட்டந் தலையோட........ அட நம்மவயசுதான்போல மூக்கும் முழியும் அந்த பால்கோப்பி நிறமும் நிச்சயமாக நம்மநாட்டுக்காரர்தான். சட்டென்று வணக்கம் அண்ணா 2 Burger ம் ஒரு கோலாவும் என்று தமிழிலை சொன்னன். அவர் புரியாதமாதிரி உங்களிற்கு என்ன வேண்டும் என ஜேர்மன் மொழியில் கேட்டார். சட்டென மார்பிலுள்ள பெயர்ப் பட்டியைப் பார்த்தன் திரு.சுப்பிரமணியம் என்றிருந்தது. கேட்கவில்லைப்போல என நினத்துக்கொண்டு மீண்டும் தமிழிலே விருப்பத்தைக் கூறினேன். அவரோ திரும்பவும் ஜேர்மன் மொழியில் என்ன வேண்டும் எனக்கேட்டார். சுதாகரித்துக்கொண்டு ஜேர்மன்மொழியிலேயே உரையாடி வாங்கிக்கொண்டுபோய் இருக்கையில் அமர்ந்தால் திரு.சுப்பிரமணியம் அந்தப்பக்கமாக மறைவாக நின்று வேலைசெய்துகொண்டிருந்த சக தொழிலாழியுடன் நல்ல யாழ்ப்பாணத்தமிழில் உரையாடிக்கொண்டிருந்தார். இப்படியான ஆட்கள் இருக்கும்போது எப்படி தமிழ் இனி மெல்லச் சாகும் என்று சொல்லுவது. தமிழ் இனி விரைவாகவல்லோ சாகும்.
இப்படித்தான் மற்றுமொரு தடவை இன்னுகொரு Mc Donald இல் பார்க்கிறதற்கு நல்ல அம்சமாக இளவயசும் துரு துரு கண்களும் கலரும் மூக்குமின்னியும் நிச்சயமாக பிள்ளை நம்ம நாடுதான். மார்புப்பகுதியை நோட்டம்விட்டால் பெயர்ப்பட்டியில் சிந்து ஷன்முகம் அட நம்மாள்தான் என்று தமிழிலை கதைத்தால் இங்கேயும் மீண்டும் அதே பல்லவி. நொந்துபோய் தேவையானதை வாங்கிக்கொண்டு தங்கச்சி நானும் இந்த நாட்டிலை சொந்தமாக ஒரு தொழில் நிறுவனம் வைத்திருக்கிறன். என்ரை நிறுவனத்திற்குத் தப்பித்தவறி தமிழ்வாடிக்கையாளர் யாராவது வந்தால் அவர்களுடன் தமிழிலைதான் உரையாடுகிறனான் என்று ஜேர்மன் மொழியில் சொல்லிப்போட்டு நடந்தன்.
இரண்டு ஜேர்மன்காரன் , இரண்டு ஜப்பான்காரன் அல்லது 2 சீனாக்காரன் சந்திக்கும்போது தங்கள் தாய்மொழியிலைதானே கதைக்கிறார்கள் எமக்குமட்டும் ஏன் இந்தக் கூச்சம் தாழ்வுமன்ப்பான்மை.
இன்னுமொருவிடயம் அமெரிக்காவின் கடனைத் திருப்பிக் கொடுப்பது சம்பந்தமான நம்பகத்தன்மை குறைத்து மதிப்பிடப்பட்டதன்பின் அமெரிக்கப் பங்குச்சந்தை மட்டுமன்றி ஐரோப்பியப் பங்குச் சந்தையும் ஆட்டம் கண்டது. இதைத் தடுத்துநிறுத்த ஜெர்மன் அதிபரும் பிரன்சு அதிபரும் கூடிப்பேசி எதோபெரிய முடிவு எடுக்கப்போவதாக பில்டப் கொடுத்தாங்கள் கடைசியிலை அவர்களின் கூட்டறிக்கையில் பெரிதாக ஒன்றையும்காணன். தங்கம் ராக்கெட் வேகத்தில் விலை ஏறிக்கொண்டிருக்கிறது. தங்கத்தில் முதலிட்டிருந்தவர்களிற்கு வெள்ளிதிசைதான் இதுவரை தங்கத்தை நம்பாதவை கண்டதிலும் முதலிட்டு மோசம்போகாதையுங்கோ. இப்பகூட உபரிப்பணத்தை தங்கத்தில் முதலிடுங்கோ, அல்லது நல்ல மலிவாகக்கிடைத்தால் நிலத்தில் அல்லது கட்டிடத்தில் முதலிடுங்கோ போட்டமுதலுக்கு மோசம்வராது.
கிரீஸ் மனிதரின்ரை பிரச்சனையாலை தாயகத்திலை சனங்கள் இசகு பிசகாக மாட்டித் தரும அடிகிடைக்குமோ என்ற பயத்தில் ஒரு அவசரத்திற்குக்கூட தெரியாத இடத்திற்குப் போகப் பயப்படுகிறார்கள். சீனா இந்தியா அமெரிக்கா ஐரோப்பா என ஒருவருக்கும் பிடிகொடித்து மாட்டுப்படாமல் வழுகிக்கொண்டு திரிகிற ராஜபகச குடும்பம்தான் கிறீசிலையே ஊறினவர்கள் தெரியுமோ?
ரொம்பவும்தான் அறுத்திட்டனோ நொந்து நூலாகிப்போனியளோ? தப்பினால்காணும் என்று ஓட்டம்பிடிக்காதையுங்கோ. இத்துடன் இன்றைக்கு முடிட்துக்கொள்கிறேன் மீண்டும் நாளை சந்திப்போம்
4 comments:
//இப்படியான ஆட்கள் இருக்கும்போது எப்படி தமிழ் இனி மெல்லச் சாகும் என்று சொல்லுவது. தமிழ் இனி விரைவாகவல்லோ சாகும்.//
உண்மை தான்...
ஆமினா, நாங்க சொல்லுறதைச் சொல்லிக்கொண்டிருப்பம் கேட்கிறவை புரிஞ்சுகொண்டால் சரி!
நொந்து நூலாகி மட்டுமில்லை , நொந்து நூடில்ஸ் ஆகியும் விட்டோம்,அமெரிக்கப் பங்குச்சந்தை பற்றி தனியொரு பதிவு போட்டிருக்கலாம்!Mc Donalds இல் தொடங்கி கிறீஸ் இல் முடித்தது தான்.......
வணக்கம் பராசக்தி, முதன்முதலாக இந்தப்பக்கம் வந்திருக்கிறியள் என நினைக்கிறன். நன்றி வலதுகாலை எடுத்துவச்சு வாங்கோ. பங்குச்சந்தையிலும் புகுந்துவிளையாட ஆசைதான். ஆனால் அதுதான் புரியாமல் கண்ணாமூச்சியாட்டம் ஆடுது.
கிறீஸ் மனிதனிலை முடித்ததிலை கடுப்பாகிவிட்டியள்போலத் தெரியுது.
Post a Comment