நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Friday

ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம்

இரகசியமாக உங்களுக்குமட்டும்

 ஒட்டகம் புகுந்த வீடு 2





பகலெல்லாம் நல்ல வெயிலடிச்சு மரங்களெல்லாம் வாடிப்போய்கிடக்கிறதே என்று
முற்றத்தில நின்ற மரங்களுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு நின்றன்.
எதிர்வீட்டு முற்றத்திலையும் நடமாட்டம் தெரிந்ததும் நேற்றுப்பட்ட அவஸ்த்தை ஞாபகத்திற்குவர
கொஞ்சம் சுதாகரித்துக்கொணடு கண்டும் காணாததுபோல மற்றப்பக்கமாகத் திரும்பித் தண்ணீர் ஊற்றுவதில் தீவிரமானன்.
சில நொடி தாண்டியிருக்காது.
அண்ணை! அண்ணை!


என்ன கண்டும் காணாததுபோல நிக்கிறியள்?
எதிர் வீட்டிலிருந்து குரல் வந்தது.
அது.... எதோ யோசனையில கவனிக்கேல்லை என்று சமாளிச்சன்.
பரவாயில்லை. நான் வீட்டிற்குப் புதுத் தொலைபேசி இணைப்பு எடுத்திட்டன்
அதுதான் உங்களுக்கும் இலக்கத்தைத் தருவம் என்று கூப்பிட்டனான்.
தெருவைத்தாண்டி வந்து இந்தாங்கோ பத்திரமாக வைச்சிருங்கோ
எந்தநேரமும் எடுக்கலாம் கோபிக்கமாட்டன் என்றவாறு அட்டையை நீட்டினார்.
வாங்கிப் பார்த்தால்
ஒட்டகத்தார் தொலைபேசி: 0900.......
வடிவா வெளிச்சத்தில பிடித்துப் பார்த்தன் 0900....தான்
சந்தேகமா வேலையிடத்து இலக்கத்தை மாறித்தந்திட்டியளோ?
சீ! சீ! சரியான இலக்கம்தான் படிச்சுப்பாத்திட்டத்தானே தந்தனான். 0900...
நானும் விடாமல்
பொதுவா இந்தமாதிரி 0900 என்று தொடங்குகிற இலக்கங்களை தொழில் நிறுவனங்கள்தானே வைத்திருக்கிறவை.
பேசுவதற்கு அதிக கட்டணம் வாங்கும் இலக்கமென்று நினைக்கறன்.
ஓம்! ஓம்! அது சரிதான்.
ஆனால் நான் அவ்வளவு கூட வாங்கவில்லை
உள்நாட்டு இணைப்புக்களுக்கு நிமிடத்துக்கு 59 சதம்தான்
என்ன 59 சதமோ?
சந்தேகமென்றால் ஒருக்கால் அடித்துப்பாரும்.
உது எனக்குக் கட்டுபடியாகாது.
ஒருக்கால் அடிச்சுப்பாருமன்
சந்தேகத்தோடு கைத்தொலைபேசியை எடுத்து இலக்கங்களை அழுத்தினன்.
இரண்டுதடவை மணி அடித்ததும்.
வணக்கம் நீங்கள் இப்பொழுது ஒட்டகத்தாரின் வீட்டுத்தொலைபேசியுடன்
இணைப்பில் உள்ளீர்கள்.
ஒட்டகத்தார் வேறொருநபருடன் பேசிக்கொணடிருப்பதனால்
அடுத்ததாக அவருடன் பேசுவதற்கான சந்தர்ப்பம் உங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுவரை காத்திருக்கவும்.
டன்ன நன்ன நன்ன... ஒட்டகத்தைக்கட்டிக்கோ......டண்ட..
...................
பாடல் வந்தது
சிறிது நேரத்தில்
இன்னும் சில நொடிகள் இணைப்பிலிருக்கவும் அடுத்த சந்தர்ப்பம் உங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நான் சட்டென்று கோபமா இணைப்பைத் துண்டித்தன்.
கோபப்படாதையுங்கோ! இதிலை ஒன்றும் பகிடி, விளையாட்டு இல்லை.
நான் சொல்லுகிறதைக் கேட்டுப்போட்டு பிறகு சொல்லும் சரி, பிழை.
கொஞ்சக்காலத்துக்கு முதல் இழப்பீடு ஒன்று பெறுகிறவிடயமா காப்புறுதி நிறுவனத்துக்கு
தொலைபேசியிலை தொடர்புகொண்டன். அவங்கள் சொன்னாங்கள்
நிமிடத்திற்கு 89 சதமென்று நானும் இப்படித்தான் கோபப்பட்டு தொடர்பில்வந்தவனைக் கண்டபடி திட்டிக் கேட்டனான்.
அதுக்கு அவன் நேரம் பொன்னானது போனால் வராது பெறுமதி மிக்கது.
அதோட ஒப்பிடும்போது நீங்க தாற காசு வெறும் தூசுமாதிரி, என்று சொன்னான்.
அப்பத்தான் எனக்கு நேரத்தின்ரை அருமை புரிந்தது.
அவன்ரை நேரம் மட்டும்தானோ பெறுமதியானது என்ரையும்தானே?
உடனே என்ரை இலக்கத்தையும் மாற்றிப்போட்டன்.
இப்ப எனக்குக் காசுக்குக் காசுமாச்சு. அதோட சும்மா பொழுதுபோகாமல் எடுத்துக் கதைக்க
வந்த விசயத்தைச் சட்டென்று கதைத்து முடிக்காமல் காலிலை ஒட்டின சுவிங்கம்போல
இழுபடுகிற தொலை பேசியளும் இப்ப வாறேல்லை வந்தாலும் சட்டென்று கதைத்து முடித்திடுவினம்.
அதோட கண்ட கண்டு நிறுவனங்களின்ரை விளம்பர அழைப்புக்களும் வாறதே இல்லை.
நீரும் வேணுமென்றால் இந்த மாதிரி மாத்திப்பாரும் சுகம் தெரியும்.
அதுபோக காசென்று எடுக்காமல்விடாதையும் எந்தநேரத்தில
ரெலிபோன் எடுத்தாலும் கோபிக்கமாட்டனென்றவாறு ஒட்டகத்தார் திரும்பி நடந்தார்.
ஒட்டகம் மீண்டும் வரும்..............

1 comment:

Anonymous said...

ஒட்டகத்துக்கு இடத்தை கொடுத்தா மடத்தை பிடித்துப்போடும் ......பார்த்து....... கவனம்.
என்னத்தை சொன்னாலும் எங்கட கதை (பேச்சு வழக்கு) நல்ல பகிடி