காலையில எழுந்து சோம்பல்போகாதவனாக
சோபாவில் சாய்ந்தபடி ஜன்னலுக்கால தெருவில போறவாற சனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன்.
என்ன அது இன்றைக்கும் காலங்காத்தாலை சோபாவில உட்கார்ந்து காலை ஆட்டினபடி............
நக்கலாகச் சொல்லிக்கோண்டு ஒட்டகம் தன்ரை அறையிலிருந்து தலையை நீட்டியது.
நான் எப்படியும் இருப்பன் அதாலை உனக்கென்ன கேடுவந்தது என்றன் எரிச்சலோட
காலமை எழும்பினால் வீட்டு உடுப்புக்கூட மாத்தாமலுக்கு வேலைவெட்டி இல்லாமல் உந்தச் சோபாவிலை காலைஆட்டிக்கொண்டு இருக்கிறதே தொழிலாப்போச்சுது.
சும்மா இருக்கிறநேரத்தில என்னோட சேர்ந்து உந்த மலசலகூடம், சமையலறைச் சுத்தம் செய்யலாமே?
எனக்கென்றால் சும்மா பத்திக்கொண்டு வந்தது அடக்கிக்கொண்டு..
நானொன்றும் சும்மா பொழுதுபோகாமலுக்கு இருக்கேல்லை ஒரு கொள்கையோடதான் உட்காந்திருக்கிறன் என்று கத்தவும்,
அது என்ன அப்படி ஒரு கொள்கையாக்கும் என்று ஒட்டகம் முடிக்கமுதலே
நான் இன்றைக்கு முழுநாளும் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கிறதென்ற இலட்சியத்தோட இருக்கிறன்.
அட உதைத்தான் நேற்றும் சொன்னதுபோலகிடக்கு.........
ஒம்! ஒம்!
நேற்றுக்காலமையும் ஒரு அலுவலும் செய்யிறதில்லை என்ற குறிக்கோளோடதான் உட்கார்ந்தனான்.
பிறகென்னடா என்றால் தவிர்க்க இயலாமலுக்கு ஒரு சில வேலையளைச் செய்யவேண்டி வந்திட்டுது,
அதாலை சாயங்காலம் இலட்சியம் நிறைவேறாமல்போட்டுது என்ற கவலையோடதான் படுக்கப்போனனான்.
அதுதான் இன்றைக்கு என்னதான் நடந்தாலும் என்ரை கொள்கையைவிடுகிறதில்லை என்ற கொள்கையிலை ஒரேபிடியாக இருக்கிறன்.
அதை இதைச் சொல்லிப் பிறகு இன்றைக்கும் சாயங்காலம் என்னைக் கவலைப்பட வைத்திடாதை, நீயும் என்ரை கொள்கையை ஒருநாளுக்கென்றாலும் கடைப்பிடிச்சுப்பார் அப்ப தெரியும் அருமை என்று நான் சொல்லவும்,
ஒட்டகம் சட்டென்று நான் கொம்யுனிசம் சமத்துவம் என்றதைவிட்டு ஒருநாளும் விலகமாட்டன் என்று வீரமாச் சொல்ல
நானும் விடாமலுக்கு
அப்ப இன்றைக்கும்
முதலாளியளை ஒழிக்கிறன்,
அளவுக்கு அதிகமாக வச்சிருக்கிறவனை ஒழிக்கிறன்,
சமத்துவத்தை உண்டாக்கிறன் என்று அடுத்தவனைத் தட்டிச்சுத்தி ஓசிச்சீவியம் நடத்தப்போறாயென்று சொல்லு என்றன் நக்கலாக
இப்படியே கதைச்சுக் கதைச்சு வீணாக நேரம்போகுது. நானொரு புது ஆங்கிலப்பட DVD வாங்கிவந்தனான் பார்க்கப்போறன்.
அப்ப இன்றைக்கும்
முதலாளியளை ஒழிக்கிறன்,
அளவுக்கு அதிகமாக வச்சிருக்கிறவனை ஒழிக்கிறன்,
சமத்துவத்தை உண்டாக்கிறன் என்று அடுத்தவனைத் தட்டிச்சுத்தி ஓசிச்சீவியம் நடத்தப்போறாயென்று சொல்லு என்றன் நக்கலாக
இப்படியே கதைச்சுக் கதைச்சு வீணாக நேரம்போகுது. நானொரு புது ஆங்கிலப்பட DVD வாங்கிவந்தனான் பார்க்கப்போறன்.
Bad Teacher பெயரே தூக்கலா இருக்கு நல்ல கிளுகிளு காட்சியெல்லாம் இருக்கிறதாம்
super என்று net இல எல்லாம் கனபேர் comment எழுதியிருக்கிறாங்கள். விருப்பமென்றால் சேர்ந்து பாருமன் என்று ஒட்டகம் கேட்கவும்.
நானும் என்னை மறந்து, sex commedy படமென்றால் நல்ல ஜாலியும் பகிடியுமாக சும்மா இருக்கிறதுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கும்.
super என்று net இல எல்லாம் கனபேர் comment எழுதியிருக்கிறாங்கள். விருப்பமென்றால் சேர்ந்து பாருமன் என்று ஒட்டகம் கேட்கவும்.
நானும் என்னை மறந்து, sex commedy படமென்றால் நல்ல ஜாலியும் பகிடியுமாக சும்மா இருக்கிறதுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கும்.
சட்டென்று போடும் பார்ப்பம் என்றன்.
கொள்கைகள்...................................?
கொள்கைகள்...................................?
8 comments:
சும்மா இருப்பதுவும் ஒரு கொள்கை தான் என்பதனை, வெட்டியாய் இருப்போருக்கு உறைக்கும் வண்ணம் சொல்லியிருக்கிறீங்க.
நல்லா சொல்லியிருக்கீங்க. ஆமாம் இது எந்த ஊர் பாஷை நண்பா.
நிரூபன், ஊதுற சங்கை ஊதிட்டு இருப்பம். விழவேண்டியவங்க காதிலை விழுந்தாச் சரி.
காந்தி, தமிழ்நாட்டுச் சினிமாவிலை எல்லாம் அப்பப்ப சில காரக்டருங்களை பேசவச்சு நம்மளையெல்லாம் கொலைபண்ணிடிறாங்களே அந்த Ceylon தமிழ் என்கிற அசல் யாழ்ப்பாணத்தமிழ்தான் சார் இது.
சும்மா இருப்பதில் உள்ள சுகமே தனி...அவ்வவ்வ்வ்வ்...
ரெவரி சும்மா இருப்பது சுகம்தான். ஆனால் இப்ப அதற்கான நேரம் இல்லை. பொங்கி எழுந்து அந்த மூன்று உயிர்களைக் காப்பாற்றவேண்டும்.
சும்மா இருந்தா சோறாகுமோ? வாடா சித்தா காலாட்ட" ஓட்டகத்தார் சிலநேரம் நல்ல வேலை செய்வார்..
நீங்கள் இப்படி ஒட்டகத்தார் நல்லது செய்வார் என்கிறீர்கள். ஆனால் வேறு சிலர் ஒட்டகத்தார் கிறுக்கன் என்றும் சொல்லுகினம். அழகிய சொற்தொடருடனான பின்னூட்டத்திற்கு நன்றிகள் பரா.....
Post a Comment