நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Wednesday

ஒட்டகத்தோடு குடித்தனம்.


விடுமுறை நாளும் அதுவுமா பொழுதே போகாதாம்
எதாவது படிக்கலாம் என்ற எண்ணத்தில
அலுமாரியிலை இருந்த புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தன்.
ஏதோ ஆளரவம் கேட்குதென்று மெல்லத் திரும்பினால்
என்னகாணும் கொஞ்சமென்றாலும் பொறுப்பில்லாமல் வாசக்கதவை ஆவென்று திறந்துவிட்டிட்டிருக்கிறீர்.


எவனாவது புகுந்து எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போகப்போகிறான் என்றபடி ஒட்டகம்.
இங்கை உம்மைவிட்டால் வேற யார் வரப்போகிறான். அதுபோக என்ன இந்த நேரத்தில?
சும்மா கண்டுகனகாலம். இந்த வெயில் காலத்திலைகூட தெரு திண்ணையிலை
கண்ணில படக்காணம் வயசுக்கு வந்த பொண்ணுபோல வீட்டிற்கையே
அடைந்துகிடக்கிறீர்போல அதுதான் எதாவது வருத்தம் துன்பமோ என்று
ஒரு எட்டுவிசாரிப்பம் என்று வந்தனான் என்றபடி சுற்றுமுற்றும்
நோட்டம்விட்ட ஒட்டகம் நெடுகவும் கேட்கவேணும் கேட்கவேணும் என்று நினைக்கிறனான்
பிறகு கதைப்பராக்கில மறந்துபோடுது,
இது படிக்கிற அறை
பக்கத்தில அது படிக்கையறை
அந்தப் பக்கமாக எப்பவுமே சாத்தியிருக்கிறது அது என்ன சாமி அறையே?
சீ சீ அப்படியொன்றும் இல்லை
எனக்கெதற்குத் தனி ஆளிற்கு இத்தனை அறையள் அதுதான் அதிலை தேவையில்லாத தட்டுமுட்டு சாமான்களை போட்டு வைத்திருக்கிறன்.
விசேடமா ஒன்றுமில்லை. எதற்குக் கேட்டனீர்.
சும்மாதான். அது சரி இது சொந்த வீடே?
வீடு வாங்குகிற அளவிற்கொன்றும் வசதியானவன் இல்லை என்றபடி...
ஒட்டகத்தின்ரை கதை போற போக்கு புரியாமலுக்கு நான் பேந்தப்பேந்த முழிக்கிறதையும் கவனிக்காமல் அது பாட்டுக்கு
அப்ப நீர் ஒரு சரியான வாத்து மடையன் காணும்.
அளவிற்கு மிஞ்சின பெரியவீட்டைத் தேவை தேவையில்லாமல் வாடகைக்கு எடுத்து,
எவனோ ஒரு பணக்கார முதலாளிக்கு வாடகையை அள்ளிக் கொடுத்து,
பணக்காரனை மேலும் பணக்காரனாக்கி முதலாளித்துவத்தை வளர்க்கிறீர்.
நீர் ஒரு பெரிய முதலாளியை வளர்க்க! நான் குட்டிமுதலாளியை வளர்க்க!
இப்படியே ஆளாளுக்குச் செய்துகொண்டிருநதால் எப்படிச் சோசலிசம் வரும்,
சமத்துவம் எப்ப வரும் ?
அதுதான் நான் ஒரு முடிவு எடுத்திட்டன்.
நான் புரியாமலுக்கு என்ன என்றமாதிரிப் பார்க்க.
உந்தத் துடைப்பக்கட்டை மற்றச் சுத்தம்பண்ணுகிற சாமானுகளை எல்லாம்
எடுத்துக்கொண்டு வாரும். அந்த அறையில கிடக்கிற தேவையில்லாத
சாமானுகளை தூக்கி எறிந்து சுத்தம் பண்ணுவம்.
எனக்கென்றால் ஒட்டகத்தின்ரை கதையள் ஒன்றுமாப் புரியாமல்
ஒட்டகத்தார் சொல்லுறதை ஒழுங்காச் சொல்லவேணும்.
வீட்டுவாடகை கட்டுறதுக்கும்
அறையைச் சுத்தம் செய்கிறதற்கும்
சோசலிசத்துக்கும் என்ன காணும் தொடர்பு,
விடுமுறைதானே என்று வேளைக்கே எதாவது பெரிய போத்தலா ஊத்திப்போட்டு அலம்புறீரோ?
என்னைப்பற்றி வடிவாகப் புரிந்துகொள்ளவில்லை.
நான் எப்பவும் எந்த நேரத்திலையும் நிதானம் தப்புகிறதில்லை.
துடைப்பத்தை எடுத்துக்கொண்டுவாரும்,
கதைச்சுக் கதைச்சு நேரத்தை வீணாக்காமல்
வேலையைச் செய்து செய்து கதைப்பம் என்று சொல்லிக்கொண்டு
சாத்தியிருந்த கதவைத் திறந்த ஒட்டகம்
என்ன இது பிச்சைக்காரன் சேர்த்துவைச்ச சொத்துப்போல
ஐந்து சதம் பெறாத லொட்டு லொடுக்கு சாமானுகளா நிறைச்சு வைத்திருக்கறீர்.
காலுடைந்த கதிரை சில்லு இல்லாத சைக்கிள் பிஞ்சு தொங்குகிற மெத்தை உம்மைக் கட்டாயம் ஒருக்கால் விசர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகவேணும் இப்படிக் கண்டநிண்ட குப்பைகளைச் சேர்க்கிறதும் ஒருவித வருத்தமாம் கட்டாயம் நல்லதொரு டாக்டரட்டைக் காட்டவேணும்.
இது என்ரை வீடு
என்ரை அறை
இங்கை எதையும் எப்படியும் வைப்பன்
அது உனக்குத் தேவை இல்லாத விசயம்
பக்கத்து வீட்டுக்காரன் என்றுபார்த்தால் என்ரை சொந்த விசயங்களில
கண்டபடி தலையிடாதை, எனக்குக் கெட்ட கோபம் வரும்.
எதுக்கு இப்ப என்ரை அறையைச் சுத்தம் பண்ணத்தொடங்குகிறாய்
என்றதை முதலிலை சொல்லு என்று நான் கத்தவும்.
பிறசர் குளிசை எடுக்க மறந்துபோச்சோ என் இந்தக்குதி குதிக்கிறீர்?
சொல்லுறதை வடிவாகக் கேளும் நீர் எப்படியும் இந்தப்பெரிய வீட்டை விடப்போறதுவும் இல்லை வாடகை கட்டாமல் விடப்போறதுவும் இல்லை. அதுதான் இந்த அறையை சுத்தம்பண்ணி.........ஒட்டகம் முடிக்கமுதல்
என்ன வாடகைக்கு விடலாம் என்று சொல்லவாறியோ? என்று கேட்டன்.
சீ சீ அதாலை ஒரு பிரயோசனமும் இல்லை இஞ்சை நீர் வாடகையைக் கட்ட அங்கை நான் வாடகையைக் கட்ட இரண்டு முதலாளிகளும் வளரப்போறாங்கள். இதை விடக்கூடாது.
கொம்யுனிசம் வரவேணும் என்றால் முதலிலை ஒரு முதலாளிக்கு என்றாலும் மொட்டை அடிப்பம்.
நீர் இப்ப கட்டுறதுபோல வாடகையைக் கட்டிக்கொண்டு இரும்
நான் என்ரை வீட்டை விட்டிட்டு இந்த அறைக்குக் குடிவாறன்
இதற்காக நீர் ஒன்றும் மேலதிக வாடகை கட்டப்போறதில்லை.......
என்ரை வீட்டுக்காரன் கோவிந்தா கோவிந்தா நான் அவனுக்கு வாடகை கொடுக்கப்போறதில்லை. நல்லா யோசியும் என்ன விளங்குகிறதே?
ம்... ஒரு அறை எனக்குக் கொஞ்சம் மட்டுத்தான் பரவாயில்லைச் சமாளிக்கிறன்..........
ஒட்டகம் நிறுத்தாமல் சொல்லிக்கொண்டு போனதில்
எனக்கு இதற்குமேல் எதுவும் காதிலை கேட்கவில்லை.
தலைசுற்றிக்கொண்டு ஒரு மாதிரி மயக்கம் வருகிறாப்போல................

10 comments:

போளூர் தயாநிதி said...

polurdhayanithi.blogspot.com
veri nice

குறையொன்றுமில்லை. said...

நல்ல பதிவு. ஒட்டகங்கள் பேச ஆரம்பித்தால் இது
வும் பேசும் இன்னமும் பேசும். அவங்க ஊர்லதானே
நம்ம மக்கள் பிழைப்பு தேடி போராங்க.

vidivelli said...

nalla pakirvu..
paaraaddukkal..

Anonymous said...

Kommentar veröffentlichen...
இது எந்த மொழி நண்பரே...
உங்கள் பதிவு அருமை...

அம்பலத்தார் said...

polurdhayanithi, thanks for the comments.

அம்பலத்தார் said...

ஆமா லஷ்மி, நிச்சயமாக என்னோட ஒட்டகம் இன்னமும் பேசத்தான்போகின்றது

அம்பலத்தார் said...

thanks for the visit & comment vidivelli

அம்பலத்தார் said...

வேறு என்ன இதுதான் அசல் அக்மார்க் யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் நண்பனே! உற்சாகம்தரும் பாராட்டிற்கு நன்றிகள்........

ஆமினா said...

அருமையோ அருமை.........

வேர்ட் வெரிபிகேஷன எடுத்துடலாமே.... சிரமமா இருக்கு :-(

அம்பலத்தார் said...

ஆமினா உங்க கோரிக்கை நிறைவேறிடிச்சு